எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 11 ஜூன், 2026

ஒய்ஸ் மேனட்ஸ் க்ளப்பின் மகளிர் தினவிழாக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக


227.


4521.Smt TL Avl மாடு மேய்க்கும் பாடல் அருணா ஸ்ரீராம் பாடியது போலவே இருந்தது. நன்றி வாழ்த்துக்கள். PLRamanathan 👍

4522.சிறப்பான கேள்வி பதில்... கருத்துகள் பாராட்டுதலுக்குரியது. எதில் பிரசுரமானது...

4523."மான்குட்டிகளும் பருந்துகளும்" சுவாசம் பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்துள்ள இந்நூலில் 21 பெண் எழுத்தாளர்கள் கதைகள் எழுதியுள்ளோம் 25 நாட்களுக்குள் அவற்றைச் சேகரித்துத் தொகுத்து புத்தகமாக்கத்துக்கு அனுப்பி அதை வெளியிட்ட சாதனை அரசி ஜோசப்பின் அவர்களுக்கும் இதை பதிப்பித்த ஹரன் பிரசன்னா அவர்களுக்கும் நன்றி. இந்நிகழ்வை வீடியோவாக ஆக்கம் செய்து வெளியிட்டுள்ள பார்வதி முத்தமிழ் அவர்களின் மகனார்க்கும் நன்றி

இந்நூலை வாங்க:

https://www.swasambooks.com/products/maankuttigalum-parunthugalum/225301000105725537

4524.


 ✨ International Women’s Day Celebration – 2026 ✨
Theme:
💜 “Give to Gain – Women Supporting Women” 💜
🌷 Chief Guest Invitation 🌷
Dear Madam,
Warm greetings from **Y’s Menettes Club International – Karaikudi Diamond Club.
We are delighted to invite you as the Chief Guest for our International Women’s Day Celebration – 2026. Your inspiring presence and gracious words will greatly motivate our members and make this special occasion truly meaningful.
📅 Date: 15 March 2026 (Sunday)
⏰ Time: 5.30 PM – 8.30 PM
📍 Venue: Krishna Garden, Karaikudi
We would be truly honored by your presence and kindly request you to accept our invitation.
With warm regards,
Ymt. S. Lakshmi Soundararajan
President
Y’s Menettes Club of Karaikudi – Diamond Club
Event Coordinator
Y’sling Muthal Venkatachalam

4525.கதைகளைப் பற்றிய என் பார்வை - சுருக்கமாக. 

 நினைவுநாள் - மறுமணம் முடித்த ஒரு தம்பதியர் -  முதல் மனைவி, முதல் கணவன் நினைவிலிருந்து மீள முடியாமல் நீளும் நிகழ்கால வாழ்க்கை.

மான் குட்டிகளும் பருந்துகளும் & ‌‌‍மாயக்கண்ணன் - மிகுந்த மனக் கலக்கத்தை ஏற்படுத்திய கதைகள். இருளிலிருக்கும் துளசிக்கும் சுமித்திராவிற்கும் விரைவில் வெளிச்சம் கிடைக்குமா? கிடைக்க வேண்டும் இறைவா!

வீடு & சுட்ட மண் - இவ்விரு கதைகளிலும் வெளிநாட்டு மகன்களின் விருப்பு வெறுப்பால் மனம் குமுறும் இரு அன்னையருக்கு என்ன ஆறுதல் சொல்ல? ஆவினங்கள் இருக்கின்றன அல்லவா? வாயுள்ளவர்களுக்கு வாயில்லா உயிர்களின் அன்பு ஒன்றே  ஆறுதல்.

காயம் - உடல் குறித்த அறிவு குறைவால் சிறு பெண்கள் உயிர் நீத்தல் தவறு என்னும் கருத்தை இன்னொரு பெண்ணின் வாழ்வைச் சுட்டிக் காட்டி அறிவுறுத்தியுள்ளார் ஆசிரியை.

மூலம் - தெக்கத்திக்காரர்கள் அறியாத மண் வழக்கங்கள்.  பெண் கிடைப்பது பொன் கிடைப்பது போலல்லவா.  மூலம் என்றாலும் பொன் கொடுத்து பெண் எடுக்கலாம் என்ற மனப்பாங்கில் ஏற்பட்ட செலவுகள்.. முடிவு?

மனிதம் - அருமையான இரு நண்பர்களின் கதை. உடுக்கை இழந்தவன் கை போல் இடுக்கண் களைந்த நட்பின் கதை.

உவர் மண் - விளிம்பு நிலை   மக்களின் நலம் விரும்பும் ஒரு எளியவனின் கதை

பூரணக்குட்டி - செவக்காட்டு வரலாறு- ஒரு கனிந்த மாம்பழம்,ஒரு பெண்ணின் உயிர், ஓர் ஊரின் வரலாறு

யாசகம் - ஏதிலியானப் பெண்களை அரவணைக்கும் அவர்களைப் போன்ற  ஏழைகள். அவர்களுக்குப் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் எண்ணும் ஒரு பெண்ணின் மனது இதில் சொல்லப்பட்டுள்ளது.

ஓடுகாலி டீச்சர் & பாப(வ)நாசம் -

முதற் கதையில் பணியிலிருந்து வெளியேறும் ஓர் ஆசிரியை. இன்னொன்றில் 

வெளியேற்றப்பட்ட இன்னொரு ஆசிரியை. இரு ஆசிரியைகளின் இரு வேறு பணிச் சூழல்... எங்கே தவறு? 

மஞ்சாடி முத்துக்கள் - கோதம்புச் சோறு வீட்டிலிருக்க நெல்சோற்றைப் பிள்ளைகளுக்குக் கொடுக்க நெல் கேட்கும் பாட்டி, அவள் பேத்தி, அவர்களைக் கைதூக்கி விட நினைக்கும் ஒரு  பெண். அவர்கள் வாழ்வியல் எனப் போகும் கதை.

வெள்ளையாடைக்காரி - வில்லுப்பாட்டு செல்வியின் கண்ணீர், அம்மன் அருள் என்று சொல்லும் கதை. கொடை நிகழும் ஊருக்கே சென்று வந்த மகிழ்வு.

சுடு கஞ்சி - சோறு வடித்த நீரில் அவ்வப்போது காலம் கழித்த என்னைப் போன்றோருக்கு அக் கஞ்சி ஊட்டச்சத்து.‌ மாவிடிக்கும் பெண்ணின் குழந்தைக்கு அதை அளித்த அன்னைக்கு என் நன்றி.

இளதாக முள்மரம் கொல்க - தெய்வம் நின்று கொல்லும் என்ற அறத்தினை உணர்த்திய கதை. 

முத்துநகர் மீனவன் ஆர்வி - ஒரு சிறிய காதல் கவிதை (கதை)

திரிசங்கு சொர்க்கம் -  ஒரு சின்னஞ்சிறுமியின் பலவிதமான உணர்வுகளும் அத்தையின் மீதுள்ள அன்புமென

அழகிய இலங்கைத் தமிழில் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது.

தமிழரசி டீச்சர் -  மாண்புடமை என்பது என்ன எனச் சுட்டிக் காட்டும் ஒரு கதையிது.

அதிகாரத்தின் களிமண் பொம்மைகள் - விளக்கொளியை நோக்கி வரும் விட்டில் பூச்சிகளைப் பிடித்து உண்டு செரிக்கும் பல்லியைப் போன்ற ஒருவனை அடித்துத் தூக்கித் தூர எறிந்தவளின் கதை.

பல்வேறு நிகழ்வுகள். பல்வேறு களங்கள். பல்வேறு உணர்வுகள். இவற்றைக் கலந்து ஒரு புத்தகம் வெளியாகியுள்ளது என்பது மனத்திற்கு நிறைவைத் தருகிறது.

 இளம்பிறை அவர்கள் சொன்னதுபோல்

எழுதப்படாவிட்டால் மறையும் கதைகள் இன்னமும் காற்றில் மிதக்கின்றன.

-- நன்றி மன்சூரா பீவி மேம்.

4526.Congratulations 👏💐👍

மகளிருக்கு செல்லும்
இடமெல்லாம் சிறப்பு
தேனம்மை லெட்சுமணன் எழுத்துலகில் சாதித்து
வருவதால் சிறப்பு மேடைகள் பெயரிலே
தேனைக் கொண்ட இனிய எழுத்தாளரைத்
தேடி வருவது கவிஞர்
கருப்பாயி ஆச்சியைப்
பெற்றதனாலும் ராமருக்கு தோள் கொடுத்த லெட்சுமணன் போல்
தேனம்மைக்கு தோள்
கொடுக்கும் திருவாளர்
லெட்சுமணனை கணவராக பெற்றதாலும்,மகளிரின் மனதை  அற்புதமாய் அறிந்து
ஓவியமான பெண்களைப் பற்றி
திறம்பட எழுதுவதால்
வருகின்றன. இறையருளாலும்
குருவருளாலும் இன்னும் பல மேடைகள் கிடைக்க
மனமார்ந்த வாழ்த்துகள்.  👍🙏

--நன்றி மெய்யம்மை ஆச்சி 

4527.எனது இலக்கியப் பரிச்சயங்கள் 

53

தேனம்மை லெக்ஷ்மணன் 

""ஆறாயிரம் பேர்கள் கற்கின்ற கழகத்தை அண்ணாமலை நாட்டினான்.
அவனோடு போட்டியிட அத்தனையும் தான் தந்து
அழகப்பன் முடி சூட்டினான் ""

கவியரசு கண்ணதாசன் 

ஆம், இரு கல்வி வள்ளல்கள் இருந்த பூமி, கவியரசு வாழ்ந்த பூமியில், இந்த கவிதாயினி தேனம்மை பிறந்தார்.

நான் அறிந்தவரை, இந்த பகுதியில் அதிகம் பெண் இலக்கிய வாதிகள் அதிகம் கண்டிலேன். 1970, 80 களில் 

பட்டி மன்றங்களைக் கலக்கி வந்த சரசுவதி ராமநாதன்,பள்ளத்தூர்  அறிவேன்.

தேனம்மை நிறைய கவிதை நூல்கள் எழுதியுள்ளார்.

சில மாதங்கள் முன்பு ஒரு சிறப்பான

சிறுகதைகள் நூல் ஒன்று எழுதினார்.

"ஒப்பிலா,உமையா, திரு நிலை....

.....""  என்று அந்தப் பகுதிப் பெண்களின் பெயரை நூலின் தலைப்பாக வைத்தார்.

அந்த நூலில் காரைக்குடி பகுதி பெண்களின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், பெண்களின் துயரங்கள்.

பொருள் வயிற் பிரிவில், ஆடவர்கள் கடல் கடந்து சென்ற ஆடவர்கள்,அங்கே இன்னொரு குடும்ப பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல்.அதனால் ஏற்படும் குடும்ப சிக்கல்கள் எல்லாம் எழுதியிருப்பார். இதையெல்லாம் எழுத்தில் வடித்த இவர் நேர்மைத் துணிவு பாராட்டுக் குறியது.

இவர் சமீபத்தில் காரைக் குடி 

அழகப்பா பல்கலைக் கழகத்தில்,

தமிழ்த்துறையில், உயிர் கல்வி பயிற்சிப் பட்டறையில் சிறப்பு அழைப் பாளாராக சென்று, தன் கவிதை,எழுத் தாளுமை அனுபவங்களை, மாணவ சமுதாயத்திற்கு பகிர்ந்து வந்தார்.

இவர் அனுபவங்களைக் கல்வி நிலையங்கள், கருத்தரங்கு, பயிற்சி அரங்குகளில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர்கிறேன்.

-- அன்பும் மகிழ்ச்சியும் நன்றியும் சபா சார் !

4528.வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

கற்றார்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.👏👏👏👏👏

4529.வணக்கம் தேனம்மை 

மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் தேனம்மை .தொடர்ந்த உங்கள் எழுத்துக்கும் இலக்கியப் பங்களிப்புக்கும் கிடைத்த மரியாதை .மேலும் பல சிறப்புகளைப் பெற வாழ்த்துகிறேன்

4530.சின்னமுத்துமாரிக்குப் பங்குனி உத்ஸவம்


4531.கற்றளிகள், கொடுங்கைகள், கற்தூண்கள், சாளரங்கள்




4532.பேரனின் அறை






4533.எங்கள் தோட்டத்துப் பலா



4534.மகிழ்வுடன் பகிர்கிறேன்

🙂 ஒய்ஸ் மேனட்ஸ் க்ளப்பின் பெண்கள் தினக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன்




4535.உங்கள் வாசிப்பனுபவத்தில் சிறந்த எழுத்தாளர் யார்?

4536.ஒய்ஸ் மேனட்ஸ் க்ளப்பின் பெண்கள் தினக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன்



4537.மனமார்ந்த வாழ்த்துகள் 👏💐

முத்தான தமிழில் சக்திமிகுந்த பெண்களைப் பற்றி சத்தான கருத்துக்களை ஒப்பற்ற தன் கதைகளில் பதிவு செய்ததற்கு சபா சார் தேனம்மை லெட்சுமணனுக்கு சூட்டிய மகுடம் அருமை.

மென்மேலும் மகுடங்கள் பல தங்கள்

படைப்புகளுக்கு கிடைக்கட்டும். 👍

4538.4.காயத்தில் வலியிருந்தாலும், வசந்தாவின் வாழ்வில் வந்தது வசந்தம்.

5. மெச்சியின்  சின்ன சின்ன தியாகங்களை மெச்சியே ஆகணும்.

** மேட்ரிமோனியில் வரன் பார்க்கும் சிரமங்களை அழகாய் அலசுகிறது "மூலம்"

4539.எனது செட்டிநாட்டுப் பெண்கள் நூல் பற்றிய ட்ராவிடியன் போல்சாக்கின் ஜூம் சந்திப்பு இன்ஸ்டாவில் 

https://www.instagram.com/p/DV_SzutCG90/?igsh=MWgwdHI1dnY0eGM5dg%3D%3D&fbclid=IwY2xjawQo5yBleHRuA2FlbQIxMABicmlkETE0RWZZcmN1enJOUlBrcFhLc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHvrIPCScBU_zKMU3RBT7YPdMZ6iAT1WwOEUpll0cln9QxRzjK49gzjZyESEP_aem_RfeQZLlTc4LLj-0wwkUtFg

4540.Porzity




டிஸ்கி:-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.




137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்


140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.

141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்

142. வாளை மீனும் விலாங்கு மீனும்

143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்

144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்

145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்

146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்

147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்

148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்

149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்

150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்

151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்

152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்

153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்

154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்

155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்

156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்

157.ஃபேஸ்புக் மின்னலா,  யூ ட்யூப் சிங்கரா

158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்

159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்

160.கருணை விழியும் அகத்தின் அழகும்

161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்

162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்

163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்

164.சொற்போரும் நத்தை உலகும்

165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்

166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்

167.சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்

168.சிம்மாசல நரசிம்மரும், நெற்குப்பை விசாகத் தோப்பும்

169.திருமண வேண்டுதல் பசுக்களும் காட்டுக்கருப்பரும்.

170.தென்சபாநாயகர் கோயிலும் சுதேசமித்திரனும்

171.ரேய்ச்சல் ஷோவும் மிஷன் இம்பாஸிபிளும்

172.மெர்ஸிடஸ் பென்ஸூம் டியர் ஈ-பைக்கும்

173.ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்

174.திருநெல்லை இதழ் மற்றும் திருக்குறள் கழகம்

175.பறக்கும் கண்டெயினரும் பட்டணத்தில் பூதம் ஜாடியும். 

176.குஹன் பிக்சர்ஸும் ரைன் தமிழ்ச்சங்கத்தில் எனது நூல் வெளியீடும்.

177.ஹெர்ஸ்டோரீஸ் வெளியீடுகளும் கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் எனது நூல்களும்

178.ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.

179.மேன்மை கொள் நூலும் புத்தகக் கண்காட்சிகளும் 

180.சோமலெ நூலகத்துக்குப் பங்களிப்புச் செய்த நூல்கள்

181.இசை குடிமானமும் இருபது லட்சமும்

182.வட்டார மொழி வழக்கும் ஸ்பானிஷ் மொழியாக்கமும் 

183.வாழைப்பூ கெச்சையும் கொடிப்பாதையும்

184.பாலிதீன் சாக்கடையும் பூக்களின் காதலர்களும்

185.பெண் மொழியும் ஆண் எழுத்தும்

186.குபேரனும் யாளி வீரனும் 

187.மயில் பண்ணையும் மாரியம்மன் கோவிலும்

188.முத்தப்பர் கோட்டமும் மண்டலா ஆர்ட்டும்

189.மாம வேவும் சேமக் குதிரையும்

190.வாசகப் பார்வையும் ஒற்றுச் சேர்க்கையும்

191.இளவட்டக் கல்லும் கார்த்திகைப் புதுமையும்

192.பட்டறிவும் பாகம்பிரியாளும்

193.காளையார் கோவிலும் ஹம் காமாட்சியும் 

194.அன்னலெட்சுமியும் வரலெக்ஷ்மி பூஜையும்

195.ஆசை அலைகளும் ஆழ்கடல் அமைதியும்

196.பாவை விளக்குகளும் பல்லக்குகளும்

197.காவிரிப் பூம்பட்டினமும் முரண் நினைவுகளும்

198.கோட்டையம்மனுக்குத் திருமாங்கல்யமும் கல்யாணமாலையும்

199.பைரவர், குபேரர் ஹோமங்களும் பூஜையும். 

200.கொலோன் தமிழ்த்துறையும் டோர்ட்முண்ட் வள்ளுவர் சிலையும்

201.நவீன விருட்சமும் மற்றுமொரு நாவலும். 

202.பிள்ளையார் நோன்பும் புத்தாண்டு விருதும்

203.நன்றி தினமணி & திருப்பத்தூர் நியூஸ் 

204.சிவகங்கை மாவட்டப் படைப்பாளிகளும் மும்தாஜ் இல்லமும்

205.வளர்தமிழ் நூலகங்களும் வண்ண ஓவியங்களும் 

206.பேரையூர் நாகங்களும் காரைக்குடிக் கடல் கன்னியும் 

207.சாட் ஜிபிடியும் சிங்கைப் புத்தகத் திருவிழாவும்

208. செவ்வாயும் புரவி எடுப்பும் 

209.பாகம்பிரியாளும் பாரதியின் கடிதமும்

210.டோர்ட்முண்ட் திருவள்ளுவர் சிலையும் முனைவர் பட்ட ஆய்வில் எனது கவிதைகளும்

211.கும்மர்ஸ்பாஹ் குறிஞ்சி குமரன் கோயிலும் டோர்ட்முண்ட் ஸ்வீட் சில்லியும்

212.கோல்மார் மக்ரூன்ஸும் கொலோன் எலக்‌ஷனும்

213.ஸ்ட்ராபெர்ரீஸும் ஸ்பானிஷ் ஆம்லெட்டும்

214.கோல்மார் படகும் கொலோன் குதிரை லாயமும்

215.டைனோசர்களும் கொலோன் ரயில்வே ஸ்டேஷனும்

216.டால் டைனோசர்களும் யூ தியேட்டரும்

217.சிக்ரியும் சொல்வனமும்

218.மெமரி கார்டுஸும் பேரனின் கீட்டாவும்

219.திருப்பூட்டும் தாம்பாளமும் தன்வந்திரி கோயிலும்

220.கிறிஸ்துமஸ் குடிலும் மார்கழிக் கோலங்களும்

221.பத்துமலை முருகனும் சிங்கை மணியும்

222.ஜெர்மனியின் உறைபனியும் ரைன் நதியும்

223.வெற்றியூர் கும்பாபிஷேகமும் தைப்பூச விளக்கும்

224.கோல்மாரும் அந்தமான் புத்தகத் திருவிழாவும்

225.மாத்தூர் பிரம்மோத்ஸவமும் பரமனூர்க் காளியும்

226.அழகப்பா கலைக்கல்லூரியிலும் பல்கலையின் தமிழ்த்துறையிலும்

227.ஒய்ஸ் மேனட்ஸ் க்ளப்பின் மகளிர் தினவிழாக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...