எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 மார்ச், 2019

தேசாபும் தேமோரும்.

2121. தேசாப் என்றொரு படம் என் இரத்தநாளங்களைக் கொதிப்படையச் செய்தது. அதேபோல் சண்டைக்கோழி, டங்கல்.இதே போல் ஒரு பத்ரிக்கையின் வீடியோ பத்துநாட்களாக கோபம் உண்டாக்கிக் கொண்டே இருக்கிறது.  அந்தப் பெண்ணின் குரலும் அந்தப் பையனின் அம்மாவின் புலம்பலும் கூட இம்சிக்கின்றன.

முகநூல் & வாட்ஸப்புக்கும் தணிக்கை தேவை.

2122. மௌனியை நினைத்துக் கொண்டேன் :)

நாம் சாயைகள் தானா? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம். இங்கே ஒளிவீசிச் சுடரும் நட்சத்திரங்களாக. திகிலூட்டிய வால் நட்சத்திரங்களும் தோன்றுகின்றன. ஒன்றைத் தொட்டு ஒன்று என நினைவும் எழுத்தும்.. :)


2123. எதைக் கொடுத்தாலும் திரும்ப வாங்கிடலாம். ஆனால் வாசிக்கிறதுக்கு புக்ஸ் கொடுத்தா மட்டும் வாங்கமுடிலயே :(

நண்பர்கள்தானே & சொந்தக்காரர்கள்தானேன்னு நம்பி கொடுத்தது திரும்பவே வரலை. :( எங்கேயோ வைச்சிருக்கேன் எடுத்துத் தரேன்கிறாங்க. ஆனா... தர்றதேயில்லை. 🥶😭😭😭😭😭

2124. அஹா சொல்ல சொல்லவே ஒவ்வொருவரின் ஓவியமும் கண்ணுக்குள் விரியுது. படிக்கும்போது இது ம செ வா மாருதியா, கோபுலுவா, வினுவா, லதாவா ஜெயராஜா , மருதுவா என்று பார்த்து ரசித்துத்தானே படிப்போம். அதெல்லாம் ஒரு பொற்காலம். பைண்டிங் புக் தரும் சந்தோஷத்தை இன்றைய புதிய பிரிண்டிங் புக்குகள் தருவதில்லை.

2125. தமிழ் பற்று இருக்கு. வெறி கிடையாது. செகுலாரிஸம் என் தேசிய உணர்வு, மனிதாபிமானம் குறித்து ...ஃபேஸ்புக்கில் சில விஷயங்களைப் பதிவிடவில்லையானாலும் நிறைய விஷங்களில் மனம் குமுறும். ஆனால் சர்ச்சைகள் தவிர்க்க பதிவிடுவதில்லை.

2126. நல்லா சொன்னீங்க. என் பசங்களும் ஃபோன்ல சாப்பிட்டியான்னு கேட்டா சிலப்போ கத்துவானுங்க. அக்கறை கூட தொல்லையா இருக்கும் போல :( எல்லாம் சரிதான் அம்மாவா இருந்து பாருங்க. எங்க மனநிலை புரியும்.  புதிதாய்த் திருமணமான என் பையனும் சொல்றான்.  அக்கறை செலுத்துறேன்னு படுத்தாம இருங்க . பசிச்சா நானே கேட்டு வாங்கி சாப்பிட்டுடுவேன்னு

2127. கெடுதலுக்குத்தான் எவ்வளவு முகங்கள். ஈ புக் விக்குதோ இல்லையோ லைக்ஸாவது கிடைச்சிட்டு இருந்துச்சு. அதுல மண்ணள்ளிப் போட்டு உக்காந்து யாரோ வேடிக்கை பார்த்திட்டு இருக்காங்க. ஹ்ம்ம் இதுதான் உலகம்.

2128. யார்கிட்ட கோபமா இருக்கேன்னே தெரில. ஆனா கோபமா இருக்கேன்னு மட்டும் தெரியுது

2129. அன்பு வாழ்த்துக்கள். தொடர்ந்து இயங்குங்கள். நீங்கள் எங்கள் உற்சாகம். நீங்கள் எங்கள் உத்வேகம் :)

2130. தேமோர்னவுடனே தேன் மோர்னு நினைச்சேன். நல்ல வேளை தேங்காய்ப்பால் மோர். இந்த உஷா என்னை புளிச்ச மோரோட சேர்க்கலை அப்பாடா

2131. புத்தகங்கள் வருகின்றன போகின்றன. மனிதர்கள் எழுதுகிறார்கள் மரிக்கிறார்கள். எழுத்துக்கள் மட்டும் எஞ்சி இருக்கின்றன.

2132. ப்லாகில் இருக்கும் போஸ்ட்களை மட்டும் காப்பி பேஸ்ட் செய்து வேர்ட் பேட் இல் போட்டு ஃபைல் செய்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் இது ரொம்ப நேரம் பிடிக்கும். ஒரு மாதம் கூட ஆகலாம். கமெண்ட்ஸை ஒண்ணும் பண்ண முடியாது. அதையும் சேர்த்தால் ஃபைல் கனத்துரும். :)

2133. தேனம்மையாய்...! தெய்வீகமாய்...! தெய்வீகத் தென்றலாய்...! தேனமுதம் சிறு கதைகளை தந்தவளே...! பத்திரிகையின் சுதந்திரமே...! படைப்பாளியே...! பண்முகத்தன்மை கொண்டவளே...! எழுத்துலக நாயகியே..! எம்பாரதியின் வாரிசே...! இலக்கியமே...! இலக்கிய திலகமே...! லட்சியமே...! தேனம்மை லட்சுமணனே...!!! கவியே..! காவியமே...! கவிதாயினியே...! கவிப் பெருந்தகையே...! முத்தமிழ் அன்னையின் முத்துப்பிள்ளையே..! அன்னைத் தமிழின் அன்பு பிள்ளையே...! ஆன்மீகத்தை ஆட்கொண்டவளே...! ஆண்டவன் அருளால் இதே இன்முகத்தோடும்.., இளமையோடும் ஈராயிரம் ஈராயிரம் ஆண்டுகள் இன்புற்று வாழ்ந்து இன்னும் பல ஆயிரம் படைப்புகள் படைத்திட இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் கவித்தாயே...!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்களுடன்... உங்கள் அன்பு எம்.ஏ.தாமோதரன்.🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

--- அஹா அன்பும் நன்றியும் மகிழ்ச்சியும் தாமோதரன் சகோ !!!

2134. பதின்பருவங்களில் மட்டுமல்ல. நாற்பதிலிருந்து ஐம்பத்தியைந்துவரை ( ஏஜ் லிமிட் இல்லை ) கூட இனக்கவர்ச்சிச் சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. அதிலும் மெனோபாஸைக் கடக்கும் பெண்களும் பதின்பருவப் பெண்கள் போல் ஹார்மோன்களின் அதிரடி ஆட்டத்தை எதிர்கொள்ள நேர்கிறது. அதை முறையாகக் கையாண்டு வழிப்படுத்திக் கொள்பவர்கள்தான் பலரும். ஹார்மோன்களின் கையகப்பட்டு குழப்பத்தில் ஆழ்ந்து தம்மையும் குடும்பத்தாரையும் நிம்மதி இழக்கச் செய்பவரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வெகு திறமைசாலியான பெண்களும் கூட காதல்/காமமெனும் கருப்பொருளைச் சுமந்து காண்பவர் கண்களுக்கு கேலிப்பொருளாகும் துர்ப்பாக்கியம் நிகழ்கிறது.

கண்களுக்கும் மனதுக்கும் என்றும் வயதாவதில்லைதான். ஆனால் உருவமும் நடைமுறை வாழ்வியலும்தான் அனைவருக்கும் புலனாகும் பருப்பொருள். இதை ஆன்மீகம் கொண்டு மடைமாற்றிக் கொண்டார்கள் முன்பு. பேரன் பேத்தியரின் வளர்ப்பு என்றும் தியாக தீபமாக்கிக் கொண்டார்கள் போன தலைமுறை வரை.

இன்று தனக்காகவும் வாழவேண்டும் என்று முடிவெடுக்கும் பெண்கள் அதிகமான சூழலில் தன்னைத் திசைதிருப்பும் சூழல்கள் உருவாகும்போது அதிலிருந்து வெளியேற தன்னுடைய திறமைகளை இன்னும் செதுக்கிக் கொள்ளவும், அடிமைப்படுத்தும் விஷயங்களை அலட்சியப்படுத்தவும், புதிதான கலைகளைக் கற்றுக் கொள்ளவும் வேண்டும்.

எழுத்தோ இசையோ கலையோ புதிதான வேலையோ சேவையோ உலகம் எவ்வளவோ விஷயங்களை நமக்காக வைத்துக் கொண்டு காத்திருக்கிறது. பூக்குழியா பூமாலையா என்பதைத் தீர்மானிக்கவேண்டியது முழுக்க முழுக்க நம்கையில்தான்.

2135. E commerce வந்த பிறகு கரன்ஸியின் உற்பத்தி புழக்கம் சுழற்சி குறைந்திருக்கிறதா. ANY SIGNIFICANT DIFFERENCE ?

2136.MTR masala dosa & Thavanakare benna dosa.. சாம்பார் இல்லாம ghee pizza மாதிரி இருக்கு.

2137.Dual time

2138. ALAGAPPA UNIVERSITY, PALANIYAPPA AUDITORIUM LUNCH HALL PORTRAITS

2139. ஆறு மனமே ஆறு.

HBA = HCU

2140. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவிகோவில்


டிஸ்கி :-
4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


2 கருத்துகள்:

  1. திரும்பி வராத புத்தகங்கள்! :) என்னிடமிருந்து அப்படிச் சென்ற புத்தகங்கள் நிறையவே!

    பதிலளிநீக்கு
  2. ஆம் வெங்கட் சகோ :(

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...