எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 30 டிசம்பர், 2023

12.ஐவகைப் புற்றுநோய்களும் சிகிச்சைமுறைகளும்

 12.ஐவகைப் புற்றுநோய்களும் சிகிச்சைமுறைகளும்


மகளிர்க்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானவை மார்பகப் புற்றுநோய்களும், கருப்பைப் புற்றுநோய்களும் ஆகும். கருப்பைப் புற்றுநோய் ஏற்படுவதற்கு எது காரணம் என்று இனம் கண்டுபிடிக்கப்படவில்லை. மரபுரீதியான கோளாறுகள், ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன் போன்ற காரணங்களால் கர்ப்பப்பைக் கட்டிகள் உருவாகின்றன. கர்ப்பப்பை கட்டியின் அளவு, எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறுபடுகின்றன. இவற்றில் தீங்கற்ற கட்டிகளும், தீங்கு உருவாக்கும் புற்றுநோய்க் கட்டிகளும் அடக்கம்.

இளம்பெண்களை விட அறுபது வயதான பெண்களே கருப்பைப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாலூட்டும் தாய்மார்களுக்கு மார்பகப்புற்றும் கருப்பைப்புற்றும் ஏற்படுவது குறைவு என்கிறது ஒரு புள்ளிவிபரம். பொதுவாகத் தாய்ப்பால் ஊட்டும்போது கர்ப்பப்பையின் வாய் சுருங்கித் தசைகள் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன. உடலுறவின் போது ரத்தக்கசிவு, மாதவிடாய் முற்றிலும் நின்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு இரத்தப்போக்கு, மாதவிடாய்க்கு இடையே இரத்தப் போக்கு ஆகியன ஏற்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

யூ ட்யூபில் 2351 - 2360 வீடியோக்கள். சினிமா பார்வை.

2351.The Mummy l Alex Kurtzman l  ThenammaiLakshmanan

https://www.youtube.com/watch?v=MjCHwX3Og_A


#TheMummy, #AlexKurtzman, #ThenammaiLakshmanan,



2352.The Mule l Clint Eastwood l ThenammaiLakshmanan

https://www.youtube.com/watch?v=jnOY5CQ21Mo


#TheMule, #ClintEastwood, #ThenammaiLakshmanan,

செவ்வாய், 26 டிசம்பர், 2023

அறநெறி தவறியதால் அழிந்த கார்த்தவீர்யார்ஜுனன்

 அறநெறி தவறியதால் அழிந்த கார்த்தவீர்யார்ஜுனன்


பத்துத் தலை கொண்ட இராவணனைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆயிரம் கரங்கள் கொண்ட பராக்கிரமசாலியைப் பார்த்திருக்கின்றீர்களா ? அதுவும் பத்துத் தலை கொண்ட அந்த அசுரனைத் தோற்கடித்துக் கைதியாக்கி அடைத்தவன் ஆயிரங் கரங்கள் பெற்ற மனிதன் என்று சொன்னால் ஆச்சர்யமாயிருக்கும். அப்படி ஆயிரம் கரங்கள் பெற்ற கார்த்த வீர்யாஜுனனும் தன் அறநெறி கடந்ததனால் முடிவில் பரசுராமரால் அழிக்கப்பட்டான். இவர்களின் கதையைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

தன் பொங்கிச் சுழலும் அலைக்கரங்களால் கரையோரப் பூக்களைத் தாலாட்டியபடி தாய்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது நர்மதை நதி. அதன் மடிமேல் மாட மாளிகையும் கூடகோபுரமுமாகப் பொலிந்து திகழ்கின்றது மகிஷ்மதி நகரம். இதை இந்திரலோகம் போல் சமைத்து அரசாண்டு வந்தான் ஹைஹேய வம்சத்தின் அரசன் கிருதவீரியன்.

யூ ட்யூபில் 2341 - 2350 வீடியோக்கள்.

2341.பிள்ளையார் நோன்பு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/fEZT4eYqv_Y


#பிள்ளையார்நோன்பு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PILLAIYARNONBU, #THENAMMAILAKSHMANAN,



2342.ஓம் கணேச l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/Bv7MVga2HcM


#ஓம்கணேச, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#OMGANESA, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 25 டிசம்பர், 2023

ஹோட்டல் சந்திரா பார்க் இன்ன்

 சென்னை எக்மோரில் உள்ள சந்திரா பார்க் இன்னில் ஜெர்மனி சென்று திரும்பியதும் தங்கினோம். வசதியான ஹோட்டல்தான். ஆனால் ரிப்பேர் வேலைகள் நடந்து கொண்டிருந்தன.  எகனாமி ஸ்டே.



வரவேற்பு ஹாலில் இண்டர்நேஷனல் டைம் தெரிய ஒவ்வொரு நாட்டின் நேரத்தையும் குறிக்கும் கடிகாரங்கள் மாட்டப்பட்டிருந்தது வித்யாசம்.  

யூ ட்யூபில் 2331 - 2340 வீடியோக்கள்.

2331.ஆற்றைக் கடப்போம் l வெளி ரங்கராஜன் l  அம்பை l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=TOJ4effBxqI


#ஆற்றைக்கடப்போம், #வெளிரங்கராஜன், #அம்பை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AATRAIKADAPOM, #VELIRANGARAJAN, #AMBAI, #THENAMMAILAKSHMANAN,



2332.பங்குச்சந்தை l முரட்டுக் காளையும் மிரளும் கரடியும் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=qB61i9Qf4eI


#பங்குச்சந்தை, #முரட்டுக்காளையும்மிரளும்கரடியும், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SHAREMARKET, #BULLISH, #BEARISH, #THENAMMAILAKSHMANAN,

சனி, 23 டிசம்பர், 2023

அமர்க்களம் அஜித்குமார்

 அமர்க்களம் அஜித்குமார்


“பிள்ளையார் பட்டி ஹீரோ நீதாம்பா கணேசா நீ கருணை வைச்சா நானும் ஹீரோப்பா” என்று பாடிய அஜித் இன்று தமிழ் சினிமாவின் உச்சபட்ச இரட்டையர்களில் ஒருவர்!. எந்தப் பின்புலமும் இல்லாமல் தன் நடிப்பால் மட்டுமே உயர்ந்தவர். தல தளபதி என ரசிகர்களுக்குள் போட்டி இருந்தாலும் முன் போல அது நடிகர் திலகம்மக்கள் திலகம் போட்டி அல்லஇருவருமே பக்கா கமர்ஷியல் ஹீரோக்கள்.

கச்சிதமான வடிவம்திருத்தமான முகம்சமயங்களில் சீரியஸ் லுக்பெரும்பாலும் சாக்லேட் பாய் புன்னகைசில சமயம் கோப முகம் எப்போதும் லூஸ் ஃபிட்டிங்காக ஒரு உடைமாதவன்அரவிந்தசாமி போன்ற ஹேண்ட்சம் தோற்றம்ஆனால் அவர்கள் பெறாத வீச்சை இவர் பெற்றார்சினிமாவுக்கு வரும்முகமாக  இரு விளம்பரங்களில் நடித்திருந்தாலும் சினிமாவில் பிரபலமான பின் விளம்பரப் படங்களைத் தவிர்த்தவர் இவர்.

ஜனா படத்தில் வந்த தீபாவளிதல தீபாவளி என்ற பாடலா அல்லது ஆசையில் வந்த கொஞ்சநாள் பொறு தலைவா பாடலா எனத் தெரியவில்லை இவரைத் தல ரேஞ்சுக்கு உயர்த்தியதுஇவரைத் தலஎன்றும்,அல்டிமேட் ஸ்டார் என்றும் ஏகே என்றும்அதிரடி நாயகன் என்றும்  ரசிகர்கள் அழைக்கிறார்கள்தமிழில் 62 படங்களில் நடித்திருக்கிறார். புன்னகை இவருக்கு ப்ளஸ் பாயிண்ட்.

புதன், 20 டிசம்பர், 2023

மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், தொடர் வெற்றியாளர் திரு சோம.வள்ளியப்பன்

மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், தொடர் வெற்றியாளர் திரு சோம.வள்ளியப்பன்



யூ ட்யூபில் 2321 - 2330 வீடியோக்கள்.

2321.காட்டுக் கருப்பையா l திருமதி முத்துசபாரெத்தினம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=ydfYIOcAF8U


#காட்டுக்கருப்பையா, #திருமதிமுத்துசபாரெத்தினம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KATTUKARUPPAIAH, #MUTHUSABARATHINAM, #THENAMMAILAKSHMANAN,



2322.ஜெய கணேச ஜெய கணேச ஜெய கணேச பாஹிமாம் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=tCbEDYXqylU


#ஜெயகணேச, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#JAYAGANESA, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 19 டிசம்பர், 2023

ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.

178.


3541.கலைமகள் அறிவித்திருந்த புவன்ஸ்ரீ வசந்தா குமரன் அறக்கட்டளை இலக்கியப் போட்டியில் எனது கட்டுரைக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.



3542.நூல்குடில் பதிப்பகத்தில் எனது நூல் "செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள்"


ஞாயிறு, 17 டிசம்பர், 2023

வலைப்பின்னல்

 வலைப்பின்னல்

யோ பாம்பு பாம்பு என்று பதறித் துடித்து எழுந்தாள் முத்தழகி. எங்கே எங்கே என்று ஓடிவந்தார்கள் அவளது தந்தை செந்தில்நாதனும் தாயும். .

 

“அதோ.. அங்கே.. அங்கே..  பெரிய்ய்ய பாம்பு . இல்ல இங்கதான்”  என்று தன் காலடியைச் சுட்டிக்காட்டினாள். பந்துபோல் உருண்டிருந்த கம்பளியைக் காலடியில் இருந்து உருவினார் செந்தில்நாதன். இன்னும் பயம் நீங்காமல் அவள் உடம்பு விதிர்விதிர்த்துக் கொண்டிருந்தது.

 

”என்னம்மா இது. உல்லன் கம்பிளி இதைப் போய் பாம்புன்னு நினைச்சிட்டியா. கால்ல சுருண்டு சிக்கிருக்கு போல. என்று சிரித்தார். ”உங்களுக்கு எப்பவும் விளையாட்டுத்தான். எழுந்து இந்தத் தண்ணியக் குடிம்மா” என்று கொடுத்தாள் அழகியின் தாய். வாங்கிக் குடித்துவிட்டுப் போங்கப்பா என்று சிணுங்கியபடி எழுந்து சென்றாள் மகள்.

வெள்ளி, 15 டிசம்பர், 2023

ஹோட்டல் ராயல் ரீஜன்ஸியில் இரு நாட்கள்

 சென்ற வருடம் சென்னை சென்றிருந்த போது பூந்தமல்லி ஹைரோட்டில் இருக்கும் ராயல் ரீஜன்ஸியில் இருநாட்கள் தங்கி இருந்தோம். மிக வசதியான ஹோட்டல். 


கார் பார்க்கிங், வைஃபை, டிவி , ஏசி எல்லாம் உண்டு. 

யூ ட்யூபில் 2311 - 2320 வீடியோக்கள்.

2311.நோய் நீங்க ஓத வேண்டிய பதிகம் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=zxOJbtMBbro


#நோய்நீங்கஓதவேண்டியபதிகம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SIVA, #THENAMMAILAKSHMANAN,



2312.கொரோனா நோய் நீங்க சிறுவாபுரி முருகனை வேண்டல் l வள்ளியப்பன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=QSdMnMecSvE


#கொரோனாநோய்நீங்கசிறுவாபுரிமுருகனைவேண்டல், #வள்ளியப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SIRUVAPURIMURUGAN, #VALLIAPPAN, #THENAMMAILAKSHMANAN,

புதன், 13 டிசம்பர், 2023

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

11.பார்தோலின் (BAHR-toe-linz) சுரப்பி சீழ்க்கட்டிகளும் சிகிச்சையும்

 11.பார்தோலின் (BAHR-toe-linz) சுரப்பி சீழ்க்கட்டிகளும் சிகிச்சையும்


 

பெண் பிறப்புறுப்புப் பிரச்சனைகளில் முக்கியமானதில் ஒன்று பார்த்தோலின் சுரப்பி சீழ்க்கட்டி. யோனித் திறப்பின் இருபுறத்திலும் இந்த பர்த்தோலின் சுரப்பி உள்ளது. யோனியின் உதடுகளில் இவை கண்ணுக்குத் தெரியாத அளவில் அமைந்திருக்கும். இவை யோனியின் உதடுகள் ஈரப்பதமாய் இருக்கும் வண்ணம் ஒரு சிறிய திரவத்தை உருவாக்குகின்றன. இச்சுரப்பிகளில் ஒன்றின் திறப்புக்கு மேல் தோலில் மடிப்பு வளரும்போது இதில் சுரக்கும் திரவம் பின் வாங்கித் தடுக்கப்படுகிறது.


பர்தோலின் நீர்க்கட்டி அல்லது சீழ் என்பது பர்தோலின் சுரப்பியிலிருந்து ஒரு சிறிய திறப்பு தடுக்கப்படும்போது அழற்சித் திசுக்களால் உருவாகும் வீக்கம் அல்லது சீழ்க்கட்டி ஆகும். இது நீர்க்கட்டி போன்றதொரு வீக்கத்தை உருவாக்குகிறது. இந்த நீர்க்கட்டி ஒரு பைசா அளவிலிருந்து சிறிய ஆரஞ்சு அளவு பெரிதாக வளரும். இவ்வாறான கட்டிக்குள் தடுக்கப்படும் குழாயிலேயே திரவம் உருவாகிச் சேரும்போது தொற்று ஏற்படலாம். இது புண்ணாக மாறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இத்திரவம் உருவாகிறது.

யூ ட்யூபில் 2301 - 2310 வீடியோக்கள்.

2301.வேலுக்கு இடுவோமே பூசை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=i54pB8qJbv8


#வேலுக்குஇடுவோமேபூசை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKSHMANAN,



2302.கடன் தொல்லை நீங்குவதற்கு ஓத வேண்டிய பதிகம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=IqhlAlsPYsc


#கடன்தொல்லைநீங்குவதற்குஓதவேண்டியபதிகம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SIVA, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 8 டிசம்பர், 2023

கலைமகளில் “நான் சென்று வந்த இந்து திருத்தலம்”.

கலைமகள் அறிவித்திருந்த “நான் சென்று வந்த இந்து திருத்தலம்” என்ற போட்டிக்கு எனது  இந்தக் கட்டுரையை அனுப்பி இருந்தேன். அதற்கு மூன்றாம் பரிசும் 2,000/- ரூபாய் பரிசுப் பணமும் கிடைத்துள்ளது.  நன்றி கலைமகள். இதை எனக்கு அறியத்தந்த மங்கையர் சோலை குழுவில் உள்ள சகோதரி திருமதி கல்யாணி ஸ்ரீதர் அவர்களுக்கு நன்றி :)


ஸ்ரீ நரியங்குடி கருங்குளம் பூரண புஷ்கல சமேத ஸ்ரீ ஆதினமிளகி அய்யனார் காட்டுக் கருப்பர் கோயில்


குலதெய்வம் என்பது மனிதகுலத்தைக் காக்கும் தெய்வம் என்பதால் நாட்டாரும் நகரத்தாரும் சேர்ந்து வழிபடும் அய்யனார், கருப்பர் கோயில்கள் சிவகங்கைப் பகுதியில் அதிகம். வலசை வந்த நகரத்தார் தாம் வந்து தங்கியிருந்த ஊர்களில் கழனிகளையும் கம்மாய்களையும் காக்கும் ஊர்க்காவல் தெய்வமாக நாட்டார்கள் வழிபட்ட அய்யனாரையே தம் தலைமாடு காக்கும் குலதெய்வமாகக் கொண்டனர்.

பட்டமங்கலத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது நரியங்குடி.. ஊர் எல்லையில் கம்மாய்க்கரையில் கம்பீரமாகப் புது மணத்தோடும் வண்ண வண்ண நிறத்தோடும் காத்திருந்தார்கள் கையில் அரிவாளோடு சிங்கப்பற்களுடன் இரண்டு பூதங்களும் பாரிவேட்டைக்குத் தயாரான நிலையில் இரண்டு புரவிகளும். ஏனெனில் 31.5.23 அன்று அங்கே புரவி எடுப்பு.. 

யூ ட்யூபில் 2291 - 2300 வீடியோக்கள்.

2291.மருத்துவ விழிப்புணர்வு l புற்றுநோய் l சாந்தா மேம் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=NMEkfmA2qAc


#மருத்துவவிழிப்புணர்வு, #புற்றுநோய், #சாந்தாமேம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MARUTHUVAVILIPUNARVU, #CANCER, #SHANTHA, #THENAMMAILAKSHMANAN, 



2292.குழந்தைகளைப் புரிந்து கொள்ளுங்கள் l  வசந்திபாபு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=hOYLXiOlipg


#குழந்தைகளைப்புரிந்துகொள்ளுங்கள், #வசந்திபாபு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#UNDERSTANDYOURCHILD, #VASANTHIBABU, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 7 டிசம்பர், 2023

மறுபடியும் ரேவதி

மறுபடியும் ரேவதி



நேற்று இல்லாத மாற்றம் என்னது, கண்ணுக்கு மை அழகு, பொன்மானே கோபம் ஏனோ, காதல் வெண்ணிலா கண்ணில் வந்ததே, வந்ததே குங்குமம், பச்சைமலப் பூவு, பாடு நிலாவே தேன் கவிதை, பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு, காலகாலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம், பூமாலையே ஏங்கும் இரு தோள் சேரவா, சின்னச் சின்ன வண்ணக் குயில், நீபோகும் பாதையில் மனசு போகுதே மானே, ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ என எத்தனை எத்தனை மெலோடீஸ்.

நடிகையர் திலகம் சாவித்ரி, சரோஜாதேவி, கே ஆர் விஜயா என்ற வரிசையில் வைக்கக்கூடிய தகுதி வாய்ந்தவர் ரேவதி. இவருக்குக் கிடைத்த கதாபாத்திரங்கள் அனைத்துமே அழுத்தமானவை. பெண்ணின் பிரச்சனைகளைப் பல்வேறு கோணங்களில் பேசியவை. காஜோல் போன்ற குட்டி உருவம். க்ளோஸ் நெக் ப்ளவுஸ், தீர்க்கமான பெரிய கண்கள், திருத்தமான நாசி, அழகிய கூந்தல், வடிவான உடலமைப்பு, அந்தக் கண்கள் குறும்பில் உருளும்போது வெகு அழகாய் இருக்கும். உடலமைப்பால் அல்ல, நடிப்பால் மட்டுமே பேசப்பட்டவர்களுள் ரேவதி முக்கியமானவர்.  

புதன், 6 டிசம்பர், 2023

ஹெர்ஸ்டோரீஸ் வெளியீடுகளும் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் எனது நூல்களும்

 177.


3521.காரைக்குடிச் சிவன்கோவில் சிற்பங்கள்.






3522.அடேயப்பா என்று வியக்க வைக்கிறது. பல தளங்களில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

#பாராட்டுக்களுக்கு நன்றிகள் :)

யூ ட்யூபில் 2281 - 2290 வீடியோக்கள்.

2281.ஐயன் அருளுண்டு என்றும் பயமில்லை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Ex_5higC_Sc


#ஐயன்அருளுண்டுஎன்றும்பயமில்லை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AYYAPPA, #THENAMMAILAKSHMANAN,



2282.பன்னிரு திருமுறைப் பாடல்கள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Vh7jRh98YbY


#பன்னிருதிருமுறைப்பாடல்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SIVA, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 5 டிசம்பர், 2023

கழற்ற முடியாத கணையாழி

 கழற்ற முடியாத கணையாழி


றகைப் போலே அசைகிறேனே உந்தன் பேச்சைக் கேட்கையிலே..குழந்தை போலே தவழ்கிறேனே உந்தன் பார்வை தீண்டையிலே. “  தொலைக்காட்சியோடு பாடிக்கொண்டிருந்தான் ஸாம். அவனது இரு கைகளிலும் நந்தனும் நந்தினியும் எச்சில் ஒழுகும் பொக்கை வாயோடு சிரித்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் காலில் மாட்டியிருந்த மணித்தண்டையிலிருந்து ஜல் ஜல் என்ற ஒலி எழும்பிக் கொண்டிருந்தது.

 

”மானூத்து மந்தையிலே மான்குட்டி பெத்த மயிலே” என்று அடுத்த பாட்டை அவன் தொடரவும் கிக்கி கிக்கி என்றபடி இருவரும் அவனது கன்னத்தில் எச்சில் விரலால் தொட்டுச் சிரித்தார்கள். அவன் உடல் முழுதும் குழந்தை வாசம் அடித்துக் கொண்டிருந்தது. என்னவென்று விலக இயலாத மயக்கம் அவனை ஆட்கொண்டது.

 

தேவி அமர்ந்து இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். ஸாம் குழந்தைகளை தங்கத்தாலே பூட்டி இருந்தான். கழுத்துச் சங்கிலி, ப்ரேஸ்லெட், இடுப்புச்சங்கிலி என தகதகவென ஜொலித்தார்கள் இருவரும். அவள் மேலும் குழந்தைகள் வாசம் அடித்துக் கொண்டுதான் இருந்தது.

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

திரு சோம. வள்ளியப்பன் அவர்களின் பார்வையில் எனது நூல்கள்

 திரு சோம வள்ளியப்பன் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், நிதி ஆலோசகர். பல்வேறு துறைகளில் தன் முத்திரையைப் பதித்து வரும் திரு சோம. வள்ளியப்பன் அவர்கள் எனது நூல்கள் பற்றித் தனவணிகனில் எழுதிய கருத்துக்களை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன். 


கிரிக்கெட்டர் டோனி, கவியரசர் கண்ணதாசன் ஆகியோர் பற்றிக் கூறி என் முயற்சிகளுக்கும் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.


அவருக்கு மனமார்ந்த நன்றிகள். இதை வெளியிட்ட தனவணிகன் இதழுக்கும் அதன் ஆசிரியர் திரு. வி.என்.சிடி. வள்ளியப்பன் அவர்களுக்கும் நன்றிகள். 


சனி, 2 டிசம்பர், 2023

ஸ்பைக் பஸ்டர்

ஸ்பைக் பஸ்டர்

 

ஹேய் ஹேய் அண்ணனோட பாட்டு” என்று ரஜனி ஆடிக்கொண்டிருக்க முடி சிலும்பிச் சிலும்பி விழுந்தது. ஸாம் பெருமையோடு ராணியின் அருகிலும் ரூபாவதியின் அருகிலும் நின்று புகைப்படத்துக்குப் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தான். இரண்டு வாரங்கள் இங்குபேட்டரில் இருந்த அவனது குழந்தைகள் நாப்கினால் நன்கு சுற்றப்பட்டு ஸாம் கையிலும் ராணி கையிலும் இருந்தார்கள்.

 

அனைவரும் புகைப்படத்துக்காகப் புன்னகைத்து நகர்ந்ததும் அங்கே இருந்த தொட்டிலில் இருவரையும் படுக்க வைத்தார்கள் ஸாமும் ராணியும்.  ”எவ்ளோ தலைமுடி.” என்று. சிலும்பிக் கொண்டிருந்த தலைமுடியைத் தடவியபடி சொன்னார் நீலாக்கா.

 

“நந்தினியும் நந்தனும் அவர் கைகளுக்கருகில் குன்றிமணிக் கண்களைத் திறந்து நாக்கை உதப்பிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். முகமெல்லாம் சிவந்து ரோஸ் நிறக் கன்னங்கள் மிளிர்ந்தன.

யூ ட்யூபில் 2271 - 2280 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

2271.இதழில் எழுதிய கவிதைகள் l சதீஷ் சங்கவி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=kdEQCaTYs_c


#இதழில்எழுதியகவிதைகள், #சதீஷ்சங்கவி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ITHAZHILELUTHIYAKAVITHAIGAL, #SATHISHSANGAVI, #THENAMMAILAKSHMANAN,



2272.தேவானை திருநிலை ஒப்பிலாள் உண்ணா ஒமையா மற்றும் சில செட்டிநாட்டுக் கதைகள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=c4rPNCOWNTA


#தேவானைதிருநிலைஒப்பிலாள்உண்ணாஒமையாமற்றும்சிலசெட்டிநாட்டுக்கதைகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#CHETTINATTUKATHAIGAL, #THENAMMAILAKSHMANAN, 

வெள்ளி, 1 டிசம்பர், 2023

நிலை & ஜன்னலில் இயற்கை வண்ண ஓவியங்கள் , கடியாபட்டி

 கடியாபட்டியில் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது வீட்டைப் புதுப்பித்து இருந்தார்கள். அப்போது இந்த ஜன்னல் மற்றும் நிலை ஓவியங்கள் பளிச்சென்று தெரிந்தன.

கலைநோக்கில் அக்காலத்தில் வரையப்பட்ட இந்த ஓவியங்களின் பின்னணி தெரியவில்லை.ஆனால் நூறாண்டுகளுக்குமுன் இயற்கைச் சாயங்களால் வண்ணம் தீட்டப்பட்டவை.

இரட்டை மான்கள். சுற்றிலும் பூக்களும் இலைகளும். 

யூ ட்யூபில் 2261 - 2270 வீடியோக்கள்.

2261.பிள்ளையார்பட்டி l ஸ்ரீ கற்பக விநாயகர் துதி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=jsM2L50nUVI


#பிள்ளையார்பட்டி, #ஸ்ரீகற்பகவிநாயகர்துதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PILLAIYARPATTI, #SRIKARPAGAVINAYAGAMOORTHI, #THENAMMAILAKSHMANAN



2262.செல்வ முத்துக்குமரன் l அருண்வீரப்பன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=bDZrng3PZuM


#செல்வமுத்துக்குமரன், #அருண்வீரப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SELVAMUTHUKUMARAN, #ARUNVEERAPPAN, #THENAMMAILAKSHMANAN, 

Related Posts Plugin for WordPress, Blogger...