எனது பதிநான்கு நூல்கள்

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

தங்க மகளும் , அந்த வீடும்.

தங்க மகள்.:-


பொன் மகளைப் பூ நிலவைப்
பூமியிலே தந்தோம்
பூத்து விதை காய்த்துக் க(ன்)னியாய்
கனிந்து அவள் நின்றாள்.
கல்வியிலும் கணினியிலும்
சகலகலா வல்லி
கலைகளிலும் கனிவினிலும்
நிகரற்ற தேவி.
தன்னைக்காக்கத் தனக்குத்தானே
எல்லையிட்ட சீதை.
எந்த எல்லை தன்னின் எல்லை
என்றறிந்த சுயம்பு 
எல்லையற்ற அன்பைக் கொண்ட
எல்லைக்காளி அவளே
இருப்பதெல்லாம் மறுக்காத
காமதேனு அவளே.

சனி, 30 ஆகஸ்ட், 2014

கோவை இலக்கியச் சந்திப்பில் அன்னபட்சி பற்றி கவிஞர் அகிலாபுகழ்.

 கோவை இலக்கியச் சந்திப்பின் 45 ஆவது நிகழ்வு இன்று கோவையில் எஸ் பி நரசிம்மலு நாயுடு உயர்நிலைப்பள்ளி , (மரக்கடை.  ) யில் காலை 10 - 2 வரை நிகழ்கிறது.

# கவிஞர் தான்யாவின் சாகசக்காரி பற்றியவை குறித்து  பொன். இளவேனில், இளங்கோ கிருஷ்ணன், நறுமுகை தேவியும் , 

# காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் நாவல்கள் குறித்து தூரன் குணாவும்,

# தூரன் குணாவின் சிறுகதைகள்  நூல் திரிவேணி குறித்து கே. என். செந்திலும்,

# பாலசுப்ரமணியன் பொன்ராஜின் சிறுகதைகள் நூல் கனவு மிருகம் குறித்து நறுமுகை தேவியும், 

# தேனம்மைலெக்ஷ்மணனின் கவிதை நூல் அன்னபட்சி குறித்து கவிஞர் அகிலாவும் 

பேசுகிறார்கள். 

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

அன்னபட்சியும் அல்பட்ரோஸும் -- தமிழச்சி தங்கபாண்டியன் .(SOUND CLOUD )

அகநாழிகையில் அன்னபட்சியைப் பற்றி தமிழச்சி அவர்கள் நிகழ்த்திய அழகான உரையை நண்பர் திரு. கோ. மா. கோ. இளங்கோ அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

அதை சவுண்ட் க்ளவுடில் என் சின்ன மகன் சபாரெத்னம் லெக்ஷ்மணன் போட்டுக் கொடுத்தான். அதை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்.

https://soundcloud.com/sabalaksh/thamizhachchi-speech-on-anna-pachchi

புதன், 20 ஆகஸ்ட், 2014

ஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)

மதச்சார்பற்ற நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகளில் கூட சிறுபான்மையினரும் சில சமயம் பெரும்பான்மையினரும் தங்கள் மத வழிபாடுகளை நிம்மதியாக நிறைவேற்ற முடிந்ததில்லை.

ஆனால் சென்றவருடம்  நவம்பர் மாதம் துபாய் சென்றிருந்தபோது என் சகோதரன் எமிரேட்ஸ் பள்ளியில் நடைபெற்ற ஸ்கந்தர் சஷ்டி விழாவுக்கு அழைத்துச் சென்றிருந்தான்.

கிட்டத்தட்ட ஆயிரம்பேர் அமர்ந்து கண்டு களிக்கக்கூடிய  ஆடிட்டோரியம் . காவடி, கரகம், தமிழிசையில் இறைப்பாடல்கள், திருப்புகழ், யாகசாலை, தேரில் முருகன் உலா, கோயில் போன்ற கோபுர அமைப்பினுள்  தனித்தனியாக விநாயகர், முருகன் சன்னதி, சுவாமி புறப்பாடு, அழைப்பு, நீர்மோர், பானகம், உணவு போன்ற கோலாகலங்கள் ஒன்றுவிடாமல் சிரமேற்று நடத்தி இருந்தார்கள் விழாக்குழுவினர்.

சனி, 16 ஆகஸ்ட், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். ப்ரேமா வடுகநாதன். மெஹந்தியும் ரங்கோலியும்.

ப்ரேமா வடுகநாதன் என் முகநூல் தோழி. ஜாலி பந்து. பேசும்போதே குரலில் சந்தோஷமும் சிரிப்பும் துள்ளி வழியும்.

எனக்கு ரொம்பப்பிடித்த பர்சனாலிட்டி இவங்க. பல்கலை வித்தகி. வெளிநாட்டுக்காரங்ககூட இவங்க கிட்ட மெஹந்தி ஆர்ட் கத்துக்க வர்றாங்க. சமையல் ப்ரபலங்கள் தாமோதரன், மல்லிகா பத்ரிநாத் போன்றவர்களிடம் குக்கரி நிகழ்ச்சியில் பரிசும் விருதும் வாங்கினவங்க.


கோலமும் மெஹந்தியும் ஒன்றை ஒன்று போட்டி போடும் விதமா அமைந்திருக்கும். ஆர்ட்டிஸ்டிக் ஹாண்ட். அப்போ அப்போ ஃபோன் செய்தும் பேசுவாங்க. அன்பானவங்க.

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

ரம்பம்பம் ஆரம்பம்...ரம்பம்:- BIG BORE.

///இது என்ன என்று யாராலும் சொல்லமுடியுமா ? கண்ணாடி என்று சிலர் சொல்லுவார்கள். அது தவறு. கண்ணாடி என்றால் முகம்பார்க்கவா உதவுகின்றது. ஆனால் ஒரு வகையில் மற்றவர் முகத்தின் அழகைப் பார்க்க முடிகிறது. அகத்தின் அழகையல்ல. சிலர் இதனை ஸ்பெக்ஸ் என்று ஸ்டைலாக ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதுவும் தவறு. மேலும் சிலர் கூலிங் க்ளாஸ் என்பார்கள். கூலிங் க்ளாஸ் என்பது வெய்யிலில் நாம் செல்லும்போது நம் கண்ணில் வெளிச்சம் படாமல் குளுகுளுவென்று இருக்கும்படி அமைத்துக் கொடுப்பது. ஆகையால் இதை கூலிங்க்ளாஸ் என்றழைப்பது தவறு.

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

காரசாரம் வீடியோ

முக நூல் சகோதரர்களில் குறிப்பிடத்தக்கவர் சாந்தகுமார். 

அவர் என்னுடைய நிலைத்தகவலைப் பார்த்துவிட்டுக் காரசாரம் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் இருந்து கைபேசி மூலம் பதிவு செய்து அனுப்பி இருந்தார் அதுதான் இது.

///டிசம்பர் 13 2011.

இன்று இரவு 9-10 மணிக்கு டி டி பொதிகை காரசாரம் டாக்‌ஷோ பாருங்க. பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு இன்னும் தேவை என்ற பக்கத்தில் நானும், தேவையான விழிப்புணர்வு இருக்கு என்னும் பக்கத்தில் என் கணவரும் கலந்து கொண்டிருக்கிறோம்..//


இது முகநூல் சகோ சாந்தகுமார் அனுப்பியது. 

புதன், 13 ஆகஸ்ட், 2014

காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.


காவிரிப் பூம்பட்டினம் மழைமேக மூட்டத்தோடு கூடிய ஒரு விடுமுறைநாளில் சென்றுவந்தோம். கடல்கொண்ட மிச்சம்தான் இருக்கிறது.

ஒரு லைட் ஹவுஸும், சிலப்பதிகார நினைவுத்தூணும் நிறுவப்பட்டுள்ளது.

1973 இல் அமைக்கப்பட்ட கண்ணகி சிலை 1994 இல்  கடல் சூழ்ந்து அழிக்கப்பட்டு உள்ளது. கரை அரிப்பால் கண்ணகி சிலையை இடம் பெயர்த்து மாற்றி உள்ளார்கள்.

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

உள்ளங்கைக்குள் ஓவியம்.

மரக்கிளையிலிருந்து மிதந்து
மடிசேர்ந்த அதைக்
கவனமாகப் பற்றினேன்.
மெத்தென்ற தன்மை
அது இருந்த இடத்தின்
மென்மையைச் சொன்னது.
வெதுவெதுப்பு அதன்
உயிர்த்துடிப்படங்காததை உணர்த்தியது.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

இருபத்து நாலு மணி நேரமும்...

இருபத்து நாலு மணி நேரமும்.
********************************

கரண்ட் கட்..

இன்வர்டரும் கீ கீ என்று கத்தியபடி நின்றுவிட்டது.

வேறு வழியில்லாமல் வாசல் கதவைத் திறந்து வைத்துவிட்டு கம்ப்யூட்டரில் ஒரு கதையை டைப் அடித்துக் கொண்டிருந்தாள் லதா. பாட்டரி இன்னும் தீராமல் இருந்தது. சீக்கிரம் முடிக்கவேண்டும்.

நிழலாடியது. பக்கத்து வீட்டக்கா கடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

சனி, 9 ஆகஸ்ட், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். வல்லி சிம்ஹன். இசையோடும் இசைபடவும் வாழ்தல்.

 முகநூல் வலைத்தள நட்புகளில் அனைவருடனும் நாம் பழகினாலும் சிலர் மட்டுமே சிறப்பிடம் பிடிப்பார்கள். ஏனென்று தெரியாது பார்த்த முதல் நாளே பாசமாகி விடுவோம். அந்த வகையில் எனக்குப் பிடித்தவர் வல்லிம்மா.

வல்லி சிம்ஹன் என்ற பெயரில் என் வலைத்தளத்தில் பின்னூட்டமிட்டிருந்தாலும் முகநூலில் அறிமுகமானபின்தான் அவரோடு உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அன்பு, அறிவு, இன்சொல், பாந்தம், பாசம், பரிவு, கம்பீரம், தாய்மை இவை எல்லாவற்றும் அர்த்தம் கொடுத்தவர். இன்னொரு அம்மா போல எல்லா வலைப்பதிவர்களையும் பாசத்தோடு விளிப்பார். கேட்கும்போதே( படிக்கும்போதே )  மடியில் தலை சாய்ந்து படுக்கும் குழந்தையாகிவிடுவோம். 

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

தேன் பாடல்கள்.. தலைவர்களும் தலைவிகளும் கெமிஸ்ட்ரியும்.

91. இனி நான் என்பது நீயல்லவோ தேவதேவி..

கமலும் நிரோஷாவும் பாடும் பாடல். வழக்கம்போல தலை கெமிஸ்ட்ரியில் நூத்துக்கு நூத்துச் சொச்சம் வாங்கும் பாடல். குட்டிக் குழந்தை போல் இருப்பார் நிரோஷா.

92. எங்கிருந்தோ ஆசைகள். எண்ணத்திலே ஓசைகள்.
சந்திரோதயத்தில் ஜெயாம்மா பாடும் பாடல். காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஜெயாம்மா, எம்ஜியார் காட்சி அழகு. இருவர் முகமும் கவர்ச்சியும் காந்தமும் பொருந்தியது.

93. இளமை கொலுவிருக்கும்.
சாவித்ரிம்மாவும் ஜெமினியும் நடித்த படம். அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ, அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ. என்ற வரிகள் எனக்குப் பிடித்தது.

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

சதுரங்க வேட்டை. சினிமா விமர்சனம்.

பணம்.. அச்சடித்த ஆயுதம்.

லேசாக THE WOLF OF WALL STREET  ஞாபகம் அவ்வப்போது அலைமோதியது. அதிலும் இதிலும் பணம் ஒன்றே வேதம். மதம் பிடித்தது போல மனிதர்களை ஆட்டி வைக்கும் பெருஞ்சுழல்.

இதுதான் சுற்றிச் சுற்றி மனிதர்களை வேட்டையாடும் ஆயுதம். ஆசை பேராசை கொண்டு துரத்த வைக்கும் பொறி.

சதுரங்க விளையாட்டில் ராஜாவுக்கு ஆபத்து நேரும்போது ராணி வந்து காப்பாற்றுவாள். ராணிக்குத்தான் எண்ட்லெஸ் பவர். எல்லாப் பக்கமும் போகலாம். இதில் அன்பு ராணியான இஷாரா தன்னுடைய அன்பு வியூகங்களால் தன்னையும் தவறான வழியில் சம்பாதிக்கும் தன் கணவனையும் அதிலிருந்து காப்பாற்றிக் கொள்கிறாள்.

புதன், 6 ஆகஸ்ட், 2014

பக்தர்களா.. பதர்களா.

மாங்காடு
திருவேற்காடு
சென்றவாரம் சென்னை சென்ற போது மாங்காடு திருவேற்காடு அம்மனைத் தரிசிக்கப் போனோம். ஆடிச்செவ்வாய் விசேஷ தினம் மேலும் ரம்ஜான் விடுமுறையானதால் கூட்டம் எக்கித் தள்ளிக்கொண்டிருந்தது.

முதலில் மாங்காடு. ப்ரகாரத்திலேயே அம்மனைப்  ப்ரதிஷ்டை செய்து சுற்றிலும் கும்பங்கள் அடுக்கப்பட்டிருந்தன. அம்மனுக்கும் வளையல்கள் அடுக்கிப் பரவசப்பட்டுக்கொண்டிருந்தார்கள் பெண்மயில்கள்.

அங்கே மூன்று விதமான க்யூ, பொது தரிசனம், 20 ரூ டிக்கெட், 50 ரூ டிக்கெட். மூன்று சுற்றுக்களாக சுற்றிச் சுற்றி வந்ததால் கூட்டத்தைக் கண்டு மலைத்து மயங்கி அமர்ந்து இருந்தபோது  பக்கத்தில் இன்னும் இரண்டு மூன்று கோயில்களுக்குச் சென்றுவிட்டுவந்த பெண் ஒருவர் குடும்பத்தோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

சித்திரைக் கவிதைகள் ( குழந்தைக் கவிதைகள் )1. முத்தங்களைப் பொறிக்கிறது குழந்தை
தன் எச்சிலில் பெயரெழுதிய
சிற்பமாக்குகிறது என்னை.

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

வேலை கிடைச்சுட்டுது..

அன்றையப் பொழுது ரொம்ப உற்சாகமாய் விடிவதாய்த் தெரிந்தது ரவிக்கு. 
 
இன்றைக்கு இருபத்தைந்தாவது இண்டர்வியூ. எம்ப்ளாய்மெண்ட் 
எக்ஸ்சேஞ்ச் மூலம் வந்தது.
 
நாலரைக்கே விழிப்பு வந்து விட்டது. எழுந்துபோய் பல் விளக்கிவிட்டு 
உள்ளே வந்தபோது ’முணுக், முணுக்’ கித்த சிம்னியில் அம்மா 
அடுப்புப் பற்ற வைக்க முயற்சிப்பது தெரிந்தது.
 
--- “ ஏம்பா ..! இப்பவே ஏந்திருச்சிட்டே..! கொஞ்சம் இரு 
டீ போட்டுத் தாரேன்..! “ என்றூ கூறிப் பின் வீட்டுக்குச் சென்று 
100 மில்லி பால் வாங்கி வந்தாள் பத்துப் பேருக்கு டீ கலக்க..! 
 
பௌர்ணமி இரவில் நட்சத்திரமே வானில் இல்லாததுபோல் 
அம்மாவும் இருந்தாள் மழுமழுவென்று, நகையணியாத பௌர்ணமி மாதிரி.!
 

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

ஆடி பதினெட்டும் முளைக்கொட்டும்.

ஆடிமாதம் என்றால் நமக்குத் தள்ளுபடிதான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு ஆடித் தள்ளுபடி, ஆடிக் கழிவு என்று பழைய சரக்குகளை எல்லாம் விற்றுவிடுவார்கள். ஆனால் ஈரோட்டில் தாமோதர் சந்துரு அண்ணன் குடும்பத்தார் பேத்தி ஆராதனாவுடன் ஆடி 18  ஐக் காவிரியில் கொண்டாடி முளப்பாரி கொட்டி இருக்கிறார்கள். .

குடும்பத்துடன் காவிரியில் நீராடி சாமிக்குப் படையல் இட்டு முளைப்பாரிகளையும் பூரண கும்பத்தையும் வைத்து 7 சாளக்கிராமங்களுக்கு மஞ்சள் குங்குமமிட்டு கருப்பண்ண சாமியையும் காவடியையும் வைத்து தீபம் காட்டி வணங்கி  முளைப்பாரியை ஆற்றில் விட்டிருக்கிறார்கள்.  

வளையல் காதோலை கருகமணி பூப்போட்டு சித்ரான்னம்  படைத்து வணங்கி இருக்கிறார்கள். வீட்டில் சில நாட்களுக்கு முன் ப்ளாஸ்டிக் பேசின்களில் மண் போட்டு பச்சைப் பயிறு அல்லது 21 வகையான தானியங்களைப் போட்டுத் தண்ணீர் ஊற்றி முளைக்கச் செய்கிறார்கள். இதற்குத் தினமும் பூஜை செய்வார்கள். அது நன்கு உயரமாக முளைத்து எழுந்தால் அந்த வருடம்வெள்ளாமை அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...