செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

உள்ளங்கைக்குள் ஓவியம்.

மரக்கிளையிலிருந்து மிதந்து
மடிசேர்ந்த அதைக்
கவனமாகப் பற்றினேன்.
மெத்தென்ற தன்மை
அது இருந்த இடத்தின்
மென்மையைச் சொன்னது.
வெதுவெதுப்பு அதன்
உயிர்த்துடிப்படங்காததை உணர்த்தியது.

கவனமின்மையாலோ வேண்டாததாலோ
வெறுப்பாலோ காலம் தீர்ந்ததாலோ,
களையப்பட்ட அது களைத்தும் கிடந்தது.
வடக்கும் கிழக்கும் மேற்கும் தெற்கும்
மேலும் கீழும் ஒன்றுதான்.
போதும் பறந்தது என்று
பிசிறடித்துக் கிடந்தது
என் உள்ளங்கைக்குள் ஓவியமாய் ஒரு இறகு

2 கருத்துகள் :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Yarlpavanan Kasirajalingam சொன்னது…

சிறந்த பாவரிகள்
தொடருங்கள்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...