எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 28 நவம்பர், 2020

மனத்தின் பேராற்றல் - ஒரு பார்வை.

 மனத்தின் பேராற்றல் - ஒரு பார்வை.இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

புதன், 25 நவம்பர், 2020

ஜெகஜ்ஜாலப் புரட்டனும் இரிசி மட்டையும்.

 161. 1731. கமறுதல், காந்துதல், காய்வான்/ள்.. - தாளிக்கும் கார வாசனை பட்டுத்தொண்டையைச் செறுமுதல் கமறுதல் எனப்படும். தீயைக் கொறைச்சு வையி. கமறுது என்பார்கள். மிளகாய்த்துவையல் போன்றவற்றை அம்மியில் அரைத்தால் கை சுடுவதுபோல் காந்தல் = எரிச்சல் எடுக்கும். காய்ச்சல் அடிச்சாலும் தொட்டுப் பார்த்தால் உடம்பு சுடுவதைக் காந்துது என்பார்கள். சட்டியில் அடிப்பிடித்ததையும் காந்தல் என்பார்கள். அடுத்தவர் வாழப் பொறுக்காதவரை அவன்/ள் அடுத்தவுகளைப் பார்த்துக் காய்வான்/ள்( கடுப்பாவான்/ள், எரிச்சலாவான்/ள் , கோபப்படுவான்/ள்)  என்பார்கள். 

1732*நறுங்கிப் போய் - வயசுக்கேத்த வளர்ச்சி இல்லாமல் இருப்பவரை அது நறுங்கிப் போய்க் கிடக்கும் என்பார்கள். 

1733*பாய்ச்சுருட்டு - மெத்தைச் சுருட்டு பாய்ச்சுருட்டு . நான்கைந்து பாய்களை ஒன்றாக அடுக்கிச் சுருட்டிக்கட்டி வைப்பதுதான் பாய்ச்சுருட்டு. 

1734*சிலாகை - மரச்சாமான் பெயர்ந்து வந்தால் சிலாகை வந்திருச்சு என்பார்கள். முள்போல் குத்திவிடும் என்பதாலும் சாப்பாட்டில் விழுந்து விடலாம் என்பதாலும் அது பயன்பாட்டுக்கு ஆகாது என்று அர்த்தம். 

1735*வரட்டுவரட்டுன்னு - வரளித்தனமாக இருப்பது. வரட்டு என்று வெறிச்சோடி இருப்பது. இருப்பதை எல்லாம் சுரண்டி வரட்டி எடுப்பது. 

திங்கள், 23 நவம்பர், 2020

எண்ட்லெஸ் லவ் - சினிமா ஒரு பார்வை.

எண்ட்லஸ் லவ்


1981 இல் வெளிவந்த இந்த சினிமாவை நாங்கள் 1986 இல் கோவையில் பார்த்தோம். ஃப்ரான்கோ ஸெஃப்ரெலி இயக்கிய படம். 1979 இல் ஸ்காட் ஸ்பென்ஸர் என்பவர் எழுதிய நாவலை அடிப்படையா வைச்சு எடுக்கப்பட்ட படம். 

நண்டு

 நண்டு


கடற்கரையோர நகரம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்கள் மாலதியின் தம்பிகள். இன்னும் திருமணமாகவில்லை. அவர்களுக்கு சமைத்துப் போட அவர்கள் பாட்டி வீட்டில் இருந்து சிகப்பி அக்காவை அனுப்பி இருந்தார்கள். தன் பிள்ளைகளோடு கோடை விடுமுறைக்குத் தம்பிகள் வீட்டுக்கு வந்திருந்தாள் மாலதி. 

நண்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார் சிகப்பி அக்கா. ”வெள்ளையாத்தானேக்கா இருக்கு இந்த நண்டு. இது எப்பிடி சமைச்சோடனே சிவப்பா ஆகுது ” என்று கேட்டாள் பக்கத்தில் அமர்ந்து நண்டு சுத்தம் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாலதி.

“இது கடல் நண்டு. சட்டில போட்டு வதக்குனவோடனே சூட்டுக்கு செவப்பாயிரும். அம்மாப்பொண்ணு இங்க உக்காராதே. சுத்தம் செய்யும்போது பார்த்தாச் சாப்பிட மாட்டே “ என்று சொல்லிக் கொண்டே நண்டின் கால்களைப் பிரித்து ஓட்டை உடைத்து மஞ்சள் பகுதியைக் கையால் தேய்த்துக் கழுவினார் சிகப்பியக்கா.

தண்டட்டிக் காது அசைய அமர்ந்திருந்த சிகப்பியக்கா பேருக்கேற்றாற்போல வெள்ளைச் சிகப்பு. மாலதியின் பாட்டி வீட்டில் கிட்டத்தட்ட 30 வருடமாக சமையல் வேலை செய்தவர். பாட்டி வீட்டுக்கு விடுமுறைக்கு வரும்போதெல்லாம் சிகப்பி அக்காளின் கைவண்ணத்தில் விதம் விதமான உணவுகளை ருசித்திருக்கிறார்கள் மாலதியும் அவள் தம்பிகளும். திடீரென எவ்வளவு பேர் வந்தாலும் அவ்வளவு பேருக்கும் உணவு தயாரிப்பதில் அசந்ததேயில்லை சிகப்பியக்கா.

வேலை ஓய்ந்த பகல்பொழுதுகளிலும் திருகையில் உப்புமாவுக்கு உடைப்பது, குந்தாணியில் சிவப்பரிசி போட்டு உரலால் புட்டு இடிப்பது , சாயங்காலமானால் பச்சரிசி மாவில் தேங்காய் திருகிப் போட்டு சீடை உருட்டுவது, கயிறில் கோர்த்து உப்புக்கண்டம் காயப்போடுவது, வற்றல் போடுவது  என ஏதாவது செய்து கொண்டே இருப்பார். ஒருநாள் கூட மதியத்தில் அந்த அக்கா ஓய்ந்து உறங்கிப் பார்த்ததேயில்லை மாலதி.

சனி, 21 நவம்பர், 2020

அண்ணாவின் ஆறு கதைகள் – ஒரு பார்வை

 


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

வியாழன், 19 நவம்பர், 2020

கொண்டோலா ரைட். பெகாஸஸ். வெனிஸ்.

 ஆறு பேர் செல்லக்கூடிய வெனிஸின் பாரம்பரியப்  படகுச் சவாரிதான் கொண்டோலா ரைட். யூரோப் டூரின் போது நான்காம் நாள் இத்தாலி வந்தோம். அங்கே இந்தத் தட்டையான நீளமான படகில் சவாரி செய்து என் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன். 

மர்ச்செண்ட் ஆஃப் வெனிஸ் படித்தபோதும் சரி, ஜேம்ஸ்பாண்ட் படங்களிலும் ஜாக்கி சான் படங்களிலும் இந்தக் கொண்டோலா போட்டைப் பார்த்தபோதும் சரி இதில் ஒருதரமாவது சவாரி செய்தே ஆகணும்னு அக உணர்வால் தூண்டப் பெற்றேன். 

எங்க குட்டிப் பையன் எங்களை எல்லாம் யூரோப் டூருக்கு அனுப்பும்போது கூட நாம கொண்டோலா போட்டில் வெனிஸில் சுத்தப் போறோம்னு தெரில. அதுனால ரொம்பவே த்ரில்லிங்கா இருந்தது இது. 

செவ்வாய், 17 நவம்பர், 2020

பே இட் ஃபார்வேர்ட் - ஒரு பார்வை.

 ஒருவர் நமக்கு ஒரு உதவி செய்கிறார். நாம் அதை மூன்று பேருக்குத் திரும்பிச் செய்வோம். இதுதான் கான்செப்ட். அந்த உதவி பெருகிப்பல்கி பலருக்கும் நன்மை அளிக்கும். இதை வைத்து எம் எல் எம் , பொருள் விக்கிறதுன்னு ( பலரை ஏமாத்துறதுல்ல) மேலும் பலர் இதில் இறங்கி நஷ்டமடைஞ்சிருக்காங்க. இது அதுவல்ல. ரியல் உதவி. உடம்பாலோ மனதாலோ தேவை ஏற்படின் பொருளாலோ உதவுதல்.இதை 2000 இல் வெளிவந்த இந்தப் படம் எப்பிடி அழகா சித்தரிக்குதுன்னு பார்ப்போம். ஆனா முடிவுதான் கொஞ்சம் இல்ல ரொம்பவே அழ வைச்சிடுச்சு. 


சென்னை சங்கமம் சில நினைவுகள்.

 சென்னை சங்கமம் சில நினைவுகள். 

ஆதி மூர்க்கம் 
விலா கொய்து செய்த 
பாதி மூர்க்கம் நான்.

என்றும் இருக்கும்
சாதிச் சண்டையில் 
சமரசப் பெண்சாதி நான். 

என்று ஆரம்பித்துக் கவிதை வாசித்தேன். 

திங்கள், 16 நவம்பர், 2020

ட்ரான்சிட்

 ட்ரான்சிட்


திஹாடின் டிவியில் 2, 4, 8, 16 என்று எண்களைச் சேர்த்துக் கொண்டிருந்தான் பக்கவாட்டில் அமர்ந்திருந்த ஜெர்மானியன். 2048 என்றோரு எண் விளையாட்டு. காகுரே சுடோகு போல் அகிலாவுக்குப் பிடித்த எண் விளையாட்டு. நூற்றுக்கணக்கான முறை விளையாடியிருப்பாள் அவள். முப்பத்திஐயாயிரத்துச் சொச்சம் மதிப்பெண்களோடு அவளின் செல்ஃபோனில் உறைந்திருந்துக்கிறது அந்த ஆன்லைன் விளையாட்டு. நேரே நின்று லைஃப்ஜாக்கெட்டை எப்படி அணிவது எனச் சொல்லத் தொடங்கி இருந்தாள் பணிப்பெண்.

ஞாயிறு, 15 நவம்பர், 2020

முன்னோர்களின் ஓவியங்களும் ஓவியப் படங்களும்.

 160. 1711. கோட்டையூரில் பனா ஆனா ஆனா சினா தானா வீரப்ப செட்டியார் அவர்கள் வீட்டை உலா வந்து கொண்டிருந்தோம். தொடர்ந்து பார்ப்போம் வாங்க. இந்த வீட்டாருக்கு 1712. ஆங்கிலேயர் கொடுத்த பட்டயம், அதுபோக ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி அம்மையார் ஆகியோரின் படத்தையும் பார்ப்போம் வாங்க. 


1713* டர்பன் கோட்டு சூட்டு அணிந்த ஐயாக்கள். 

சனி, 14 நவம்பர், 2020

பணிவிலும் கனிவிலும் உயர்ந்த கௌதமி வேம்புநாதன்.

 ராஜிக்கா சென்னை வந்தபோது அவங்களைப் பார்க்க எங்க வீட்டுக்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட் கௌதமி வேம்புநாதன். தொலைக்காட்சித் தொடர்களில் சூப்பர் வில்லியாகக் காட்சிதரும் இவர் நேரில் வெகு கனிவு, பாந்தம்.

எல்லாரும் கெஸ்டுக்கு ஐஸ்க்ரீம் கொடுப்பாங்க. எங்களுக்கு க்ரீமி இன்னின் ப்ளாக் கரண்ட் ஐஸ்க்ரீம் மெகா சைஸ் கப்போட வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தவர் இவர். இது பற்றி முன்னேயே எழுதி இருக்கேன்.  


வெள்ளி, 13 நவம்பர், 2020

தடங்கள் – ஒரு பார்வை

 தடங்கள்ஒரு பார்வை


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

வியாழன், 12 நவம்பர், 2020

பிஸாவுடன் ஒரு செல்ஃபி.

 யூரோப் டூரின் ஏழாம் நாள் இரவு ஜெனிவாவுக்குப் போனோம். பகலில் பிஸா டவரைப் பார்த்தோம். பார்த்தவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டோம். பின்னே இது பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பதிநான்காம் நூற்றாண்டில் நிறைவடைந்த பெல் டவர் ஆச்சே !. ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சர்ச்சுடன் இணைந்து பெல் டவர் ஒன்றும் காணப்படுகின்றது. ஏழு நூற்றாண்டு கடந்தும் விழாம சாஞ்சே நின்று பெயர் வாங்கிருச்சு இந்த டவர். இதை உருவாக்கியவர் டியோட்டிசால்வி என்ற கட்டிடப் பொறியாளர். 

இங்கே பிஸா பாப்டிஸ்ட்ரி, பிஸா கதீட்ரல் ( சர்ச்) & பிஸா டவர் ( பிஸா பெல் டவர் ) மூன்றும் அடுத்தடுத்துக் காணப்படுகின்றன. இந்த பிஸா டவர் 55.86 மீட்டர் உயரம் உள்ளது. தோராயமா 184 அடி உயரம். இதோட அடியின் விட்டம் 57 அடி. தரைத் தளம் ( பூமி ) இந்தக் கட்டிடத்தோட எடையைத் தாங்கும் அளவு பலமா இல்லாததால இது நாலு டிகிரி சாஞ்சிருக்குன்னு சொல்றாங்க. ஐஞ்சரை டிகிரி வரை சாஞ்ச இதை 2001 வாகில் நாலு டிகிரி அளவு நிமிர்த்தி சரி செஞ்சிருக்காங்களாம். 

ஏழு மாடியோட சேர்த்து மொத்தம் 8 தளம் உள்ள கட்டிடம் இது. இரண்டரை அடி கனமுள்ள சுவர்கள், 296 படிகள். மழையும் அதுவுமா உள்ளே சுத்தி சுத்திப் போறதுக்குள்ள வழுக்குது. மேலே போனா ரெண்டு டைப் பெல் இருக்கு.  

பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட்தான் வீக்கு என்னும் வடிவேலு வசனம் அசந்தர்ப்பமாக ஞாபகம் வந்து புன்னகைக்க வைத்தது. 

வருடா வருடம் சில இஞ்சுகள் சாய்ந்து வரும் இந்த பிஸா டவர் வருடந்தோறும் கோடிக்கணக்கான உல்லாசப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இங்கே லெமன் செல்லா என்ற ட்ரிங்க் நன்றாக இருக்கும் என எங்கள் டூர் கைட் சந்தோஷ் ராகவன் பரிந்துரைத்தார். ( ஒரு பத்துத் தரமாவது சொன்னாரே என்று வாங்கிவிட்டு ரங்க்ஸ் அது ஒரே புளிப்பு. மனுஷன் குடிப்பானா என்று யாருக்கோ பரிசளித்துவிட்டார் :)


பிஸா டவருக்கு முன்னால் இருக்கும் பிஸா பாப்டிஸ்ட்ரி.இவை அமைந்திருக்கும் இடம் இத்தாலியின் டஸ்கனி. இதை பியாஸா டெல் டுமோன்னும் சொல்றாங்க. 

செவ்வாய், 10 நவம்பர், 2020

படைப்பு வீடு சில க்ளிக்ஸ்.

 159. காரைக்குடியில் பல்வேறு 1691*படைப்பு வீடுகள் உண்டு. 1692*அக்கினியாத்தா, 1693*மெய்யாத்தா, 1694*பாப்பாத்தி, 1695*அடைக்கியாத்தா, 1696*மாறத்தி படைப்பு வீடு என்று. இங்கு நான் அக்கினியாத்தா படைப்புவீடு பற்றி எழுதி உள்ளேன். 

அக்கினியாத்தாவைப் பல்லாண்டுகளாக வணங்கி வருகிறார்கள் இரணிக்கோவிலைச் சேர்ந்த 1697*ஆவுடையான் செட்டியார் வகையறாக்கள்/பங்காளிகள். இந்தப் படைப்பு வீடு ஃபைவ் லாம்ப்ஸில் உள்ளது. 

வெள்ளி, 6 நவம்பர், 2020

யுவைடிஸ்

 யுவைடிஸ்


டுப்படிப் பத்தியில் ஐயாவுக்குச் சாப்பாட்டைக் கட்டிக் கொண்டிருந்தாள் ஒமையா. அப்பத்தா இல்லாததால் ஐயா வீட்டில் தங்குவதில்லை. கிணற்றடிக் காளியம்மன் கோவில் பக்கம் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்கள் ஐயா. அங்கே நண்பர்களோடு அவ்வப்போது சீட்டுக் கச்சேரியும், அரட்டைகளும், தினசரிகள் பார்த்து அரசியல் அலசல்களும் நடக்கும். எப்போதும் எல்லாரும் சீட்டு விளையாடும் இடம் என்பதால் அதற்கு சங்கம் என்று பெயரிட்டு இருந்தார்கள் ஐயாவின் நண்பர்கள். 

கீழ்வாசலில் நின்று கண்ணைச் சுருக்கியபடி ”சீக்கிரம் கொடாத்தா “ என்று பரபரத்து கொண்டிருந்தார் சோமண்ணன்.

வெற்றிலை பொகையிலை போட்டுச் சிவந்திருந்த வாய்க்கு ஈடாக ராத் தூக்கமில்லாமல்  செக்கச் செவேலனக் கிடந்தன சோமண்ணனின் கண்கள்.


எப்போது பார்த்தாலும் அவர் முகத்தில் ஒரு சிரிப்பு ஒட்டிக் கொண்டிருக்கும். மாநிறம்தான் என்றாலும் சூரியனை உலவ விட்டதுபோல் இரண்டு கண்ணும் ஜொலிக்கும். எல்லாருக்கும் வாய் சிரிக்கும் என்றால் சோமண்ணனுக்குக் கண்ணுதான் முதலில் சிரிக்கும். ஐயாவுக்கு அமையும் ஆட்களும் ஐயாவைப் போலவே.

ஐயாவின் கண்கள் போல சாந்தமானவை அண்ணனின் கண்களும். ஒற்றை நாடி சரீரம். லேசாய் வழுக்கை விழுந்த தலை. ஒரு ப்ளெயின் சட்டை, கட்டம்போட்ட லுங்கி இதுதான் அவர் அணிவது.

வியாழன், 5 நவம்பர், 2020

யுத்தம் செய் - சில நினைவுகள்.

 யுத்தம் செய் படத்தின் ப்ரிவ்யூ ஷோவை எங்களுக்குத் தனியாக ( முகநூல் நண்பர்கள் ) போட்டுக்காட்டினார்கள் நண்பர் சேரனும் இயக்குநர் மிஷ்கினும். 

தன் மகளுக்குத் தீங்கு நேரும்போது மத்யதர வகுப்பைச் சேர்ந்த ஒரு சாத்வீகத் தாய் சீறியெழுந்து நியாயம் கேட்பதுதான் கதை. இதற்கு என ஒரு கலந்துரையாடலும் கலைஞர் டிவியில் நடைபெற்றது. அதிலும் பங்கேற்க அழைப்பு வந்தது. 

இயக்குநர் மிஷ்கினிடம் கறுப்பு உடை பற்றியும்,  மஞ்சள் உடைப் பெண்களின் நடனம் பற்றியும் கேட்டோம். அது பற்றி எல்லாம் முன்பே எழுதி இருக்கிறேன். 

டாக்டர் ஷர்மிளா, கயல், இயக்குநர் நந்தினி, ஐஸ்வர்யா ராகவ் ஆகியோர் பங்கு பெற்றோம். இந்த நிகழ்வு சத்யம் தியேட்டர் மாடியில் நடைபெற்றது. 


புதன், 4 நவம்பர், 2020

நாலு கட்டு உள்ள கோட்டையூர் வீடு.

 158. 1661. இன்று கோட்டையூரில் உள்ள ஒரு வீட்டை முழுமையாகப் பார்ப்போம் வாங்க.  இந்த வீட்டுக்கு பனா ஆனா ஆனா சித வீரப்ப செட்டியார் வீடு என்று பெயர். இது நாலு கட்டு உள்ளது. 


செவ்வாய், 3 நவம்பர், 2020

ஜெர்மனி தமிழ்ச் சங்கத்தினருடன்.

///ஜெர்மன் தமிழ் கல்விச் சேவை தலைவர் திரு அம்பலவன் புவனேந்திரன் அவர்களும், உபதலைவர் திரு சிறி ஜீவகன் அவர்களும் எங்கள் டூயிஸ்பர்க் இல்லத்துக்கு வருகை தந்து வாழ்த்தினார்கள். இந்தச் சந்திப்புக்கு வழிகோலிய அன்புத்தோழி ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் , மூன்று நூல்களின் ஆசிரியர், பிரபல வலைப்பதிவர் திருமதி கௌரி சிவபாலன்.  அவருக்கு முதலில் என் நன்றிகள்.

இச்சங்கத்தில் 30 பேர் உறுப்பினராக உள்ளனர். அவர்களுள் தலைவரும் உபதலைவரும் எங்கள் இல்லத்துக்கு வந்திருந்தார்கள். ஜெர்மனிக்கு வந்துள்ள தமிழக எழுத்தாளர் என்ற முறையில் எனக்குப்  பொன்னாடை போர்த்திக் கௌரவித்து நூல்கள் அளித்துச் சென்றார்கள்.////
Related Posts Plugin for WordPress, Blogger...