எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 அக்டோபர், 2020

கொலோன் கதீட்ரலில் கண்ணாடி ஓவியங்களும் கடைசி விருந்தும்.

 ஜெர்மனியின் கொலோன் கதீட்ரல் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினரால் நிர்வகிக்கப்படுகிறது. இங்கே  உள்ள ஜன்னல்களின் கண்ணாடிகளில் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. யேசுவின் வாழ்க்கை, அவர் நிகழ்த்திய அற்புதங்கள். அபோஸ்தலர்கள், கடைசி விருந்து, சிலுவையில் அறைதல் ஆகியன ஓவியங்களாகி உள்ளன. 1996 இல் யுனெஸ்கோ இதைப் பாரம்பரிய இடமாக அறிவித்துள்ளது. 

வியாழன், 29 அக்டோபர், 2020

குளுதாடிகளும் காய்கறி மரவைகளும்.

 157. 1651. அம்பு/கருது. சத்தகம். மகர்நோன்பில் அம்பு போட அம்பு பயன்படும். சத்தகம் தேங்காய் கீற உதவும். அரிவாளின் மினியேச்சர். சமைந்த பெண்கள் தூரம் கிடக்கும் சமயம் பெரிய வீடுகளில் பாத்ரூம் போவதானால் கூட பயப்படாமலிருக்க இதைக் கையில் பிடித்துச் செல்வார்கள். 


1652. ஊறுகாய்க் கிண்ணங்கள். மங்குச்சாமான் செட். கல்யாண வீடுகளில் நான்கு வகையான ஊறுகாய்கள் போடுவார்கள். காய்கறி ஊறுகாய், கும்பகோணம் ஊறுகாய், பச்சையாக எலுமிச்சை ஊறுகாய் ஊறிய உப்புத்தண்ணீரில் மசாலா இல்லாமல் வெள்ளைமிளகாய் ஊறுகாய், இதில் சுண்டைக்காய், காலிஃப்ளவர், குட்டிக் கத்திரிக்காய் எல்லாம் போடுவார்கள். பொடிமாங்காய் ஊறுகாய். காரட் ஊறுகாய். 

செவ்வாய், 27 அக்டோபர், 2020

வில்ஹெல்ம் ll பயணித்த பாதையில்..

ஜெர்மனியில் வூபர்டால் வோஹ்விங்கல் சஸ்பென்ஷன் மோனோரயிலில் பிரயாணம் செய்துக்கிட்டு இருந்தோம். இது வூபர் நதியின் மேல் பயணிக்குது. அங்கேயே உங்களை விட்டுட்டுப் போயிட்டேன். வாங்க தொடருவோம். 

கார்ல் யூஜின் லாங்கன் என்ற பொறியாளர் வடிவமைச்சாலும் அரசாங்கப் பொறியாளரான வில்ஹெல்ம் ஃபெல்ட்மென் என்பவரின் மேற்பார்வையில்தான் இந்தத் தொங்கு ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கு. 


இந்தப் பாதையும் ரயிலும் தயாரானதும் சோதனை ஓட்டம் 1900 அக்டோபர் 24 இல் நடைபெற்றபோது வில்ஹெல்ம் 2 என்ற ( ஜெர்மனியின் கடைசிச்) சக்கரவர்த்திதான் இதில் பயணம் செய்தாராம்.! 

சக்கரவர்த்தி பயணம் செய்த பெட்டிக்குப் பேரு கைஸர்வேகன் ( எம்பரர்ஸ் கார் ) இது சிவப்பு நிறத்தில் இருக்கும். 

சக்கரவர்த்தி வில்ஹெல்ம் ll பயணித்தபாதையில் நாமும் போய் வருவோம் வாங்க. 

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து.

 திருவள்ளுவர் நற்பணி மன்றம் 


பங்களா புதூர்.  ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு 

திருமதி சுபாஷிணி திருமலை அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா.

நாள்: 08.11.2020. ஞாயிற்றுக்கிழமை  நேரம்: காலை 11.00 மணி.

நிகழ்ச்சி நிரல்

11.00. இறை வணக்கம்.
11.05 வரவேற்புரை: திரு. பாமா. மனோகரன் தலைவர் திருவள்ளுவர் நற்பணி மன்றம் 
11.10. தலைமை உரை: திரு. பாரதி மணி எழுத்தாளர் மற்றும் திரைப்பட நாடகக் கலைஞர் பெங்களூரு, அவர்கள்.

வெள்ளி, 23 அக்டோபர், 2020

ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் - FAST FORWARD - ஒரு பார்வை.

 ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் - ஒரு பார்வை. 

திருமணமானதும் கணவருடன் பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. 1985 களில் வெளிவந்தது. 1986 இல் கோவையில் பார்த்தோம். கேஜியா அர்ச்சனா தர்சனாவா மாருதியா, செண்ட்ரல் தியேட்டரா தெரியவில்லை. ஆனால் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே டான்ஸ் டான்ஸ் டான்ஸ்தான். பேருக்கேற்றாற்போல் ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் டான்ஸ். இதன்பின் நான் பல்லாண்டு காலம் கழித்து ரசித்த நடனப் படம் டேக் தெ லீட். ஆந்தானியோ பாந்தாரஸ் நடித்தது. நடிப்பு ராட்சசன். 

அரும்பாக்கம் மிடில் ஸ்கூலில் குழந்தைகள் நிகழ்த்திய விழிப்புணர்வு நாடகம்.

அம்பேத்கார் பிறந்தநாளில் தோழி மணிமேகலை அட்சயா ஃபவுண்டேஷன் சார்பாக அரும்பாக்கம் மிடில் ஸ்கூலுக்குச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். அம்பேத்கார் பற்றிக் குழந்தைகளுக்குச் சொல்ல முடிந்ததில் மகிழ்ச்சி. ஆசிரியைகளுக்கு அட்சயா ஃபவுண்டேஷன் சார்பாக விருதுகள் வழங்கினோம். 

மிக அருமையா உரையாற்றினார் தோழி மணிமேகலை. இவர் சாஸ்திரிபவன் யூனியன் லீடர் ( பெண்கள் சங்கம் & தலித் பெண்கள் சங்கம் ) என்பதால் மிக அருமையான உரையாக அது அமைந்தது. 


வியாழன், 22 அக்டோபர், 2020

கொலோன் கதீட்ரலுக்குள் கல்லறைச்சிற்பங்களும் ஜெரோ சிலுவையும்.

 பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கோதிக் கட்டிடக்கலை பாணியைப் பின்பற்றிக் கட்ட ஆரம்பிக்கப்பட்ட கொலோன் சர்ச் (ஜெர்மனி ) பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ( 1880 ) பூர்த்தி செய்யப்பட்டது. ரோமன் கத்தோலிக்க சபையினரால் நிர்வகிக்கப்படும் இந்தக் கதீட்ரலில் சில புனிதர்களின் உடல்கள் உள்ளேயே வைக்கப்பட்டு அதன்மேல் அவர்களின் சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன. 

வடக்கு தெற்கு என்று இரண்டு கோபுரங்கள் கொண்ட இந்த சர்ச் பதினெட்டாம் நூற்றாண்டில் பூர்த்திசெய்யப்பட்டபோது உலகிலேயே உயரமான கோபுரமாக இருந்ததாம் !. 

பிள்ளை எடுக்கிக் கொடுக்கும் துண்டும் சிட்டிச்சாமான்களும்.

 156. 1641. தடுக்கு. இவை சிகரெட் அட்டைப்பெட்டிகளினால் செய்யப்பட்டவை. கீழே இருப்பது ஓலைத் தடுக்கு. பட்டி தைப்பது இங்கே ஸ்பெஷல்.


1642. சாமி எழுந்தருளப் பண்ணுதல். கானாடு வள்ளிமயில் அவர்கள் வீட்டில் சஷ்டியப்த பூர்த்திக்காக சிவனையும் அம்பாளையும் எழுந்தருளப் பண்ணியிருந்தார்கள். ஓம் சிவோஹம். 

புதன், 21 அக்டோபர், 2020

சுவடு மின்னிதழ் – ஒரு பார்வை.

சுவடு மின்னிதழ் – ஒரு பார்வை.


இந்த விமர்சனம் அமேஸானில் ”சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

வூபர் நதியின் மேல் தொங்கு ரயிலில் ஒரு த்ரில்லிங் சவாரி.

 அன்றைக்குத் தொங்கும் ரயிலில் பாதியில் விட்டுட்டுப் போயிட்டேனே. வாங்க வூபர் நதியின் மேல் ஒரு சவாரி போவோம். 

ஜெர்மனியின் நார்த் ரைன் வெஸ்ட்பேலியா மாகாணத்தில் ஓடும் ஒரு நதிதான் வூபர். இது ரைன் நதியின் கிளை நதிதான். 

வெள்ளி, 16 அக்டோபர், 2020

ஸ்ரீதனப் பணமும், காய்ச்சி ஊற்றுதலும்

155. 1631. பெண் அழைத்துக் கொள்ளல்.:-  பெண்ணையும் மாப்பிள்ளையும் தங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொள்ளுதல். பெண்வீட்டார் அனைவரும் வந்ததும் பெண்ணையும் மாப்பிள்ளையையும் அருகில் இருக்கும் உறவினர் வீட்டில் இருந்து அழைத்துக் கொள்வார்கள். அப்போது பெண் தேங்காய்ச்சட்டி வைதிருப்பார். பால்சட்டி கெண்டிச் செம்பை நாத்தனார் வைத்திருப்பார். பெண்ணுக்கு மாமியார் அல்லது பையனின் அப்பத்தா அல்லது சகோதரி குத்துவிளக்கு வைத்து ஆலாத்தி எடுத்து அழைத்துக் கொள்வார்கள்.

1632. பெண் அழைத்த சடங்கு :- இதுவும் சிலேட்டு விளக்கு, குழவி, நிறைநாழி கத்திரிகாய், சடங்குத்தட்டு வைத்துச் செய்யும் சடங்கு. இதை நாத்தனார், மாமியார் அல்லது அப்பத்தா செய்து கொள்வார்கள்.

1633. பூ, ரொட்டி மிட்டாய் கொடுப்பது- வந்தவர்களை வரவேற்று, பூ, ரொட்டி, மிட்டாய் கொடுப்பார்கள் பங்காளி வீட்டுப் பெண்கள்.


1634. குலம்வாழும் பிள்ளை எடுப்பது :- சாமி வீட்டில் எதிரே மூன்று பாத்திரங்களில் நீர் நிரப்பி இருப்பார்கள். அதைச் சுற்றி நாற்புறங்களிலும் இலை போட்டுப் பொங்கல் வைத்து வாழைப்பழம் சுற்றிலும் வைத்துப் படைத்திருப்பார்கள். பெண் அழைத்ததும் பெண் அழைத்த சடங்கு முடிந்ததும் மாப்பிள்ளை பெண் இருவரின் மாமக்காரருடன் வந்து இந்த இடத்தில் நிற்பார்கள். இங்கேயும் பெண்ணைத் தடுக்கில் நிற்கவைத்து நான்கு பக்கங்களிலும் பெண் அழைத்த சடங்கு செய்துவிட்டு மூன்று பாத்திரங்களிலும் உள்ள நீரில் கைவிட்டு குலம் வாழும் பிள்ளையை எடுக்கச் சொல்வார்கள். பொதுவாக பையன் எடுத்துப் பெண் கையில் கொடுக்க அவள் அதைத் தன் முந்தானையில் வைத்து இடுப்பில் முடிந்து கொள்ள வேண்டும்.  

வியாழன், 15 அக்டோபர், 2020

2010 : THE YEAR WE MAKE CONTACT. – சினிமா ஒரு பார்வை.

 2010 : THE YEAR WE MAKE CONTACT. – சினிமா ஒரு பார்வை.1984 இல் வந்த இந்தப் படத்தை 1986 இல் திருமணமானவுடன் கணவருடன் சென்று பார்த்தேன். கோவை செண்ட்ரல் தியேட்டர் என்று நினைவு. முதன் முதலா பார்த்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம். ஆர்தர் சி க்ளார்க்கின் நாவல்களில் ஒன்று. முதலில் வந்தது 2001: A SPACE ODYSSEY. ( ஆர்தர் க்ளார்க்கின் 2010: ODYSSEY TWO என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது ) இயக்கியவர் பீட்டர் ஹைம்ஸ்.

புதன், 14 அக்டோபர், 2020

பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.

 2781. சில இடங்களிலாவது சுயம் துலங்க நாம் நாமாகத்தான் இருக்க வேண்டும். சார்பு என்றைக்கும் மதிப்புத் தராது.

2782. அடுத்தவர்களின் நம்பிக்கையை மதித்துப் புண்படுத்தாமல் இருப்பதே ஆகச்சிறந்த குணம்.

2783. கண்ணாலமாம் கண்ணாலம்


2784. நாற்பது வருஷப் பாரம்பரியத்தைப் பத்து வருஷம் முன்னே உடைக்காம இருந்தா இன்னிக்கும் மார்க்கெட்ல கோலோச்சலாம். 

கட்டம் கட்டமா என்னிக்கு டிசைன் மாறிச்சோ அன்னிக்கே நான் மில்க் பிக்கீஸ் சாப்பிடுறத வெறுத்துட்டேன். 

பாக்கிங் & மூவிங் வசதிக்காக பார்பாரா டிசைன் மாத்துறது, ரெண்டரை நிமிஷம் ப்ரமோ ஆட் போடுறது 

இதெல்லாம் விட்டுட்டு பொதுமக்கள்கிட்டே சர்வே பண்ணி டிஸைனை பழையபடி ஆக்குங்க. பிஸ்குட் வெபாரம் பிச்சிக்கிட்டு ஓடும்.

செவ்வாய், 13 அக்டோபர், 2020

பணத்திருப்பேடும் குடிவழியும்.

 1621. கும்பிட்டுக் கட்டிக் கொள்ளுதல் :- திருமணம் முடிந்ததும் பெரியோர் அனைவரின் காலிலும் விழுந்து ஆசி பெறுதல். இச்சமயம் அவர்கள் பணமோ பொன்னொ கொடுத்து ஆசீர்வதிப்பார்கள். மற்றையோரும் பொருளோ பணமோ கொடுத்து ஆசி வழங்குவார்கள்.


1622. திருமண வாழ்த்துப்பா படித்தல். :- இச்சமயம் திருமணத் தம்பதிகளை வாழ்த்தி அவர்களின் சகோதர சகோதரியரோ, அவர்களின் குழந்தைகளோ வாழ்த்துப் பாக்களைப் படிப்பார்கள். இதை அவர்களேயும் இயற்றி இருக்கலாம். அல்லது தமிழறிஞர்களிடம் எழுதி வாங்கியும் படிப்பார்கள். இவ்வாழ்த்துப் பாக்களை 200, 300 என்ற அளவில் அச்சிட்டு வந்திருந்தோருக்கும் கொடுத்து மகிழ்வார்கள்

1623. பொட்டலம் பிரித்தல். :- இது ஒரு கேளிக்கை நிகழ்ச்சி. மணமக்கள் இருவருக்கும் உறவுக்குழந்தைகள் இரு பொட்டலங்களைக் கொடுத்துப் பிரிக்கச் சொல்வார்கள். யார் முதலில் பிரிக்கிறார்கள் என்பதைக் கண்டறிய. இக்குழந்தைகள் அதில் சாக்லேட், குழந்தைகளின் பாட்டில், ரப்பர், ஜால்ரா, விசில் போன்ற பொருட்களைப் பேப்பர்களில் பலமுறை சுற்றிக் கட்டிப் பொட்டணமாகக் கொடுத்துப் பிரிக்கச் சொல்வார்கள். இந்நிகழ்ச்சியை உறவுக்காரர்கள் அனைவரும் கண்டு களிப்பார்கள்.  இதேபோல் வாழைப்பழத்தையும் மணமகனுக்கும் மணமகளுக்கும் ஐத்தை மக்கள், அம்மான் மக்கள் தடவுவார்கள்.

திங்கள், 12 அக்டோபர், 2020

அரும்பாக்கம் மிடிஸ் ஸ்கூலில் அம்பேத்கார் பிறந்தநாளில்.

அரும்பாக்கம் மிடில் ஸ்கூலில் அம்பேத்கார் பிறந்தநாளில் உரையாற்ற தோழி மணிமேகலை அழைப்பு விடுத்திருந்தார். இவர் சாஸ்திரிபவன் பெண்கள் & தலித் பெண்கள் நலச் சங்கத் தலைவி. பொதுத்தொண்டில் ஈடுபாடு உள்ள இவர் பள்ளிகளுக்குத் தேவையான உதவிகள் செய்து வருகிறார். கோடைகாலங்களில் பறவைகளுக்கு நீரும் உணவும் அளிக்கும் திட்டத்தைப்  பள்ளி கல்லூரிகளில் செயல்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். சாஸ்த்ரி பவனில் அம்பேத்கார் சிலை அமையப் பெரும்பாடு பட்டு அதை நிகழ்த்தியும் உள்ளார். பெண்கள் உடல் மன நலன்களுக்காகப் பல்வேறு பெண் பிரபலங்களை சாஸ்திரி பவனில் உரையாற்ற அழைத்துள்ளார். உடல் நலனுக்குப் பல்வேறு முகாம்களும் ஏற்படுத்தி எல்லாப் பெண்களுக்கும் உற்ற தோழியாக விளங்கி வருகிறார். பெயரைப் போலவே பொதுமக்கள் தொண்டாற்றிவரும் அவர் வாழ்க பல்லாண்டு. வாழ்க அவர்தம் புகழ்.

அரும்பாக்கம் பள்ளியில் கலந்து கொண்டது பற்றி முன்பே எழுதி உள்ளேன்.

இப்பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி லூர்து ராணி என் சாதனை அரசிகளில் ( முதல் நூல் ) ஒருவர். இப்பள்ளி மாணாக்கர்களின் செயலூக்கம் பாராட்டத்தக்கது. முதல்வர் அறையில் இச்சிறார்களின் கைவண்ணத்தில் பல்வேறு வேலைப்பாடுகளையும் பார்த்தேன். 

வெள்ளி, 9 அக்டோபர், 2020

வூபர்டால் வோஹ்விங்கல் சஸ்பென்ஷன் மோனோரயில்

 தொங்கு தோட்டம் கேள்விப்பட்டிருப்பீங்க. தொங்கும் ரயில் கேள்விப்பட்டிருக்கீங்களா. வாங்க பார்ப்போம். ஜெர்மனியின் வூபர்டால் வோஹ்விங்கல் சஸ்பென்ஷன் மோனோ ரயில்தான் அது. 

இரும்பு விளைச்சல் அதிகம் (!) என்பதால் ஜெர்மனியில் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே மாங்ஸ்டன் ரயில்வே பாலம், வூபர்டால் சஸ்பென்ஷன் ரயில் என இரும்பைக் கொட்டி இருப்புப் பாதையை மேலே கீழேன்னு கட்டி ரயில் ஓட்டி இருக்காங்க.

பதினெட்டாம் நூற்றாண்டில் அவங்க தொங்கு ரயில் என்னும் புதிய முயற்சியில் இருந்தபோது இங்கே நாம் அப்போதான் போர்பந்தரில் இருந்து தானே வரை இருப்புப்பாதை அமைச்சு முதன் முதலா ரயில் ஓட்டி இருக்கோம். கௌசியும் அவர் கணவரும் அவர்கள் வீட்டில் விருந்தளித்தபின் மாங்க்ஸ்டன் ரயில்வே பாலம், ஷோலாஸ் கேஸில் எல்லாம் காண்பிச்ச பின்னாடி இங்கே கொண்டு வந்து இறக்கி விட்டாங்க. 

புதன், 7 அக்டோபர், 2020

சிவப்புப் பட்டுக்கயிறு நூல் வெளியீடும், அறிமுகமும்.

 ஒவ்வொரு நூல் வெளியீட்டின் போதும் எத்தனையோ பேருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். சிவப்புப் பட்டுக்கயிறுநூலைச் செம்மையாகக் கொண்டு வந்த சகோதரர் டிஸ்கவரி புக்பேலஸ் அதிபர் வேடியப்பனுக்கும் இந்நூலைச் செம்மையாகச் சீர்திருத்தித் தந்த திரு. கிருஷ்ணப்ரபுவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

புத்தகக் கண்காட்சியில் இந்நூலை வெளியிட்டுப் பத்துப் பிரதிகள் வாங்கிய நண்பர் இளங்கோவுக்கும் தங்கை கீதாவுக்கும் மனமார்ந்த பிரியங்கள். முதலில் 200 பிரதிகள் அச்சடித்து அடுத்தும் 200 பிரதிகள் அச்சடித்ததாகக் கூறினார் வேடியப்பன். என் உறவினர்களும் நண்பர்களும் கூட இந்நூலைத்தான் என் முகவரியாகக் கூறுகின்றார்கள். :) ராசியான கரங்களுக்குச் சொந்தக்காரரான இளங்கோ மச்சிக்கும் கீத்ஸுக்கும் நன்றி. 

தோழி கீதா வெளியிட முதல் பிரதி பெற்றுக் கொண்டவர் அன்புத்தங்கை புவனா. இரண்டாம் பிரதியை நண்பர் இளங்கோவிடமிருந்து நண்பர் செல்வா பெற்றுக் கொள்கிறார். 

செவ்வாய், 6 அக்டோபர், 2020

மணவறைச்சடங்கும் மாமவேவும்.

 1611. மாலை மாற்றிக் கொள்ளுதல் :- திருப்பூட்டியதும் மாப்பிள்ளை மாலை அணிவிக்க மாப்பிள்ளையும் பெண்ணும் மூன்று முறை மாலை மாற்றிக் கொள்வார்கள். திருப்பூட்டும் சமயங்களில் மேளதாள நாதஸ்வர இசை உச்சஸ்தாயியில் மங்களகரமாக ஒலிக்கும். மாப்பிள்ளையும் பெண்ணும் மிட்டாய்களை ஊட்டிக் கொள்வார்கள்.

1612. கும்பிட்டு வருதல்:-. திருப்பூட்டியபின் இரு மாமக்கார்களும் அழைத்துச் செல்ல முகப்புக்குச் சென்று வளவு அடுப்படி வரை அனைவரையும் மாப்பிள்ளையும் பெண்ணும் கூப்பிய கரங்களுடன் வணங்கியபடி வருவார்கள். இப்படி வரும்போது பெண் மாப்பிள்ளையின் வலப்புறத்தில் பெண் நடந்து ஜோடியாக வரவேண்டும்.

இதுவரை அங்கே புரோகிதர் வரமாட்டார். பகவணம் செய்ததும் அவர் போய்விடுவார். திரும்ப திருப்பூட்டி முடிந்ததும்தான் அவர் வருவார்.


1613. இசைகுடிமானம்.:- திருமண ஒப்பந்தத்திற்கு இசைகுடிமானம் என்று பெயர். இதை மாப்பிள்ளை பெண் இருவரின் அப்பத்தா வீட்டு ஐயாக்களோ அல்லது மாப்பிள்ளை பெண் இருவரின் அப்பாக்களோ கையெழுத்திட்டு வைத்துக் கொள்வார்கள். மாப்பிள்ளை பெண் இருவருக்கும் அதன் பின் ரிஜிஸ்டர் ஆஃபீஸ் சென்று பதிவு செய்து வருவார்கள். இன்றைய மேரேஜ் ரிஜிஸ்டரேஷனின் முன்னோடிதான் இசைகுடிமானம்.

1614. திருப்பூட்டிய சடங்கு :- சடங்குத் தட்டு, குழவி, கத்திரிக்காய், நிறைநாழி, சிலேட்டு விளக்கு வைத்துச் செய்யப்படும் இச்சடங்கை மாமியார் முதலில் செய்து கொள்வார். சடங்குத்தட்டு என்பது ஒரு வெள்ளித்தட்டும் ஏழு கிண்ணங்களும் அடங்கியது. இதில் விநாயகர், பஞ்சு, விபூதி, மஞ்சள், பச்சரிசி, புளி  போன்றவை இருக்கும். எனக்குக் கிடைத்த பாக்கியமெல்லாம் உனக்கும் கிடைக்கட்டும் என்று ஒவ்வொரு கிண்ணத்திலும் மூன்றுமுறை கையால் தொட்டுத் தன் கழுத்தில் வைத்து மணமகள் கழுத்திலும் வைப்பார்கள். அடுத்து சிலேட்டு விளக்கைப் பிடித்துக் கொண்டு கெண்டிச் செம்பில் நீர் ஊற்ற அதைப் பெண் வெற்றிலையில் வாங்கித் தன் காலடிக்குப் பக்கத்தில் ஊற்றுவார். நீங்கள் இட்ட பணியை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவேன் என்பதைப் போலிருக்கும் அது. அதேபோல் நிறைநாழி கத்திரிக்காய், பட்டுத்துண்டில் சுற்றிய குழவி ஆகியவற்றைக்கொண்டும். வீட்டில் தனம் தான்யம் நிரம்பி இருக்க வேண்டும். மக்கட் செல்வம் பெருக வேண்டும் என இச்சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன.

திங்கள், 5 அக்டோபர், 2020

கயலுடன்..

 கயலுடன் எத்தனையோ சந்தர்ப்பங்களில் எடுத்த ஃபோட்டோக்கள் இருக்கு. சுமார்100க்கு மேல் தேறும். அவற்றில் சிலதை மட்டும் இங்கே பகிர்கிறேன் :) 

இது கயல் பிறந்தநாளின் போது எடுத்தது. லாமிக்கிளில்தான். நிறைய பிரபலங்கள் இருக்காங்க. யார்னு சொல்லுங்க பார்ப்போம் :) 

நடந்தாய் வாழி காவேரி - 2.

அதே காவிரிதான். அதே படித்துறைதான். 

இது கரூர்  திருச்சி செல்லும் வழியில் உள்ள காவிரிப் படித்துறை. வியாழன், 1 அக்டோபர், 2020

ஸ்ரீ ப்ரம்மம் & ஏழைதாசன் - ஒருபார்வை

 ஸ்ரீ ப்ரம்மம் :- மாதாந்திரி. எட்டு வருடங்களாக கோயமுத்தூரில் இருந்து வெளி வருகிறது. சமூக முன்னேற்றத்துக்கான மாத இதழ். ஆசிரியர் அயிளை அ. நடேசன். 


இந்த விமர்சனம் அமேஸானில் ”சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 


Related Posts Plugin for WordPress, Blogger...