எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நூல் பார்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் பார்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 மார்ச், 2022

உலகம்பட்டி கோவில் கும்பாபிஷேக விழா மலர்.

 உலகம்பட்டி உலகநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 2017 மலர்  தொகுத்த விதம் மிக அருமை.



ஆன்மீக மடங்கள், தலைவர்களின் அருளுரைகள், நகரத்தார் வாழ்த்து, அரசியல் பிரபலங்களின் வாழ்த்து, மலர்க்குழு, கும்பாபிஷேகக் கமிட்டி, நிதியும் விளம்பரங்களும் தந்த நல் உள்ளங்கள், கோவில் வாரியாகப் புள்ளிகள், திருப்பணி செய்தவர்கள், பிரபலங்கள் அறிமுகம், சென்னை வாழ் உலகம்பட்டி நகரத்தார்களின் சேவைகள் என நல்ல கட்டுக்கோப்பு.

வியாழன், 1 அக்டோபர், 2020

ஸ்ரீ ப்ரம்மம் & ஏழைதாசன் - ஒருபார்வை

 ஸ்ரீ ப்ரம்மம் :- மாதாந்திரி. எட்டு வருடங்களாக கோயமுத்தூரில் இருந்து வெளி வருகிறது. சமூக முன்னேற்றத்துக்கான மாத இதழ். ஆசிரியர் அயிளை அ. நடேசன். 


ஸ்ரீ ப்ரம்மம் & ஏழைதாசன்

 ஸ்ரீ ப்ரம்மம் :- மாதாந்திரி. எட்டு வருடங்களாக கோயமுத்தூரில் இருந்து வெளி வருகிறது. சமூக முன்னேற்றத்துக்கான மாத இதழ். ஆசிரியர் அயிளை . நடேசன்

ஆரிய வைசியர் வரலாறு, பஞ்சராம க்ஷேத்திரங்கள்,,வாசவி க்ளப், பூஜை, பிரார்த்தனை , ஹோமம், திருமண வாழ்த்து, சஷ்டியப்த விழா இவற்றோடு தன்னம்பிக்கைக் கட்டுரைகளும் மாதவிடாய் பற்றிய கட்டுரைகளும் மனோதத்துவக் கட்டுரைகளும் ஆரோக்கியக் கட்டுரைகளும்  பாரம்பரிய விளையாட்டுகளும் ஆரோக்கிய உணவுகளும்  இடம்பெற்றுள்ளன. தூக்கம் ஏன் இன்றியமையாதது என விளக்குகிறது ஒரு கட்டுரை. விதம் விதமான தாலிகள் பற்றிச் சித்தரிக்கிறது ஒரு கட்டுரை

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

எனது சில நூல்கள் பற்றி திரு துரை அறிவழகன் அவர்களின் பார்வை.

அன்புள்ள தேனம்மை அவர்களுக்கு,

வணக்கம்.

தங்கள் எழுத்துக்களை வாசித்த வரையிலான கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் : குழந்தைகளின் கதை கேட்கும் ஆர்வத்தைப் புரிந்து ஆத்திச்சூடி அறநெறியை கதைவடிவில் குழந்தைகளுக்காகப் படைத்துள்ளீர்கள். மாத்திரையை தேனில் குழைத்துக் கொடுக்கும் குழந்தை வளர்ப்பு, பெண் என்பதையும் தாண்டி இலக்கிய வடிவில் இயங்கும் தன்மை சிறப்பு. குழந்தைகளின் உரையாடல் அவர்கள் மொழியிலேயே அமைந்துள்ளது.

செவ்வாய், 10 மார்ச், 2020

தோழர் சிவானந்தம் அவர்கள் பார்வையில் காதல் வனம்.

சகோதரி தேனம்மைலக்ஷ்மணன்  அவர்களின் காதல் வனம்   என் போன்ற சிறார்களுக்கு காதல் பொக்கிஷம் . இதனுள் இடம்பெற்ற வாடகைத் தாய் பற்றிய பதிவுகள் என்னை ஒரே நாளில் நாவலை வாசிக்க தூண்டியது.

இப்பிரபஞ்சத்தில் ஆண் பெண் புணர்தலால் உண்டாகும் கருதரித்தலானது  காலப்போக்கில் செயற்கை முறையில் அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி பலவாறாக கருத்தரித்தல் நிகழ்வு நிகழ்கிறது. இவற்றுள் வாடகைத்தாயும் உள்ளடக்கம் என்பதனை தெளிவாக பதிவு செய்துள்ளார்.


Related Posts Plugin for WordPress, Blogger...