எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஜூலை, 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 7

 

7

”பொறந்தோடனே ஆத்தாளைத் தூக்கிப் போட்டு முழுங்கிருச்சி இந்தக்குட்டி. ” எனப் பேசிக்கொண்டிருந்தாக பங்காளி வீட்டில் இரு ஆச்சிகள். “ எறையாமப் பேசு. அப்பச்சிக்கும் ஐயாவுக்கும் இந்தக்குட்டின்னா ஓவியம், உசுரு. ஒருத்தருக்கு ஒரு சாமானைக் கொடாது. அதுவே வச்சிக்கினு உங்கும், திங்கும். வெளையாடும். ஆரையும் சேத்துக்காது. சரியான வறளி “

”ஆமாமாம் எதுனால அந்த ஒமையா எறந்து போனாளாம்.”

“ரெத்தப் போக்கு அதிகமா இருந்துச்சாம். மேக்கொண்டு சமைஞ்சாப்புல அவ ஊரணிக்குத் தண்ணி எடுக்கப் போனாளாம். அப்ப முனி அடிச்சிருக்குன்னு வேற சொல்றாக. குலதெய்வக் கோயில்லே கொண்டே சேத்துப்புட்டாகன்னு சொன்னாக. ஆர் கண்டா “

செவ்வாய், 28 ஜூலை, 2026

தேன்தீ.. தீந்தேன்.. எனது 30 ஆவது நூல்.

எனது 30 ஆவது நூல் " தேன்தீ.. தீந்தேன்" கவிதைத் தொகுப்பு இன்று காதலர்தினத்தில் சிநேகாவின் வெளியீடாக மலர்கிறது என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறேன்.



***தேனம்மை லெக்ஷ்மணனின் தேன்தீ*

   இது, ஆசிரியர் - கவிஞர் - கட்டுரையாளர் - நகரத்தா ரியல் ஆய்வாளர் அவர்களின் முப்பதாவது நூல் (கவிதை) சிநேகா பதிப்பகத்தாரின் வெளியீடு.

ஞாயிறு, 26 ஜூலை, 2026

மன்னர் பின்னோரும் வட்டகைகளும்

183.

 

2091.மன்னர் பின்னோர் – மன்னருக்கு ஆட்சி, நிதி மற்றும் பாதுகாப்பில்  பக்கபலமாயிருந்து கடமை ஆற்றும் வணிகக் குலத்தோர். (சிலப்பதிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ளது).

2092.வட்டகை – வட்டாரப் பகுதி, குறிப்பிட்ட இன மக்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதி. செட்டிநாட்டுப் பகுதிகளையே 64 வட்டகை என்பார்கள். பகுதிவாரியாகப் பிரிக்கப்பட்டு இதுபோல் 7 வட்டகைகள் உள்ளன.

சனி, 25 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6101 - 6110 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6101.திருமந்திரம்  - 561 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/FjBGwM-tT6s


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6102.திருமந்திரம்  - 562 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/Mo9exBq1XA4


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 24 ஜூலை, 2026

குபேரர் ஆன குசேலர்

 குபேரர் ஆன குசேலர்


நண்பர்கள் ஒருவருக்காக இன்னொருவர் உதவி செய்வதும்அதே இன்னொருவர் ஒரு சில சமயங்களில் சுயநலமாய் நடந்து கொள்வதும் நாம் காணக்கூடியதேஅப்படிப்பட்ட ஒருவர்தான் சுதாமாயார் அந்த சுதாமா என்று கேட்கிறீர்களாஅவர்தான் கிருஷ்ண பரமாத்மாவின் பால்ய தோழர்சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் குருகுலக்கல்வி முறையில் கிருஷ்ணருடன் பயின்றவர்குசேலனான அவர் எப்படிக் குபேரன் ஆனார் என்று பார்ப்போம்

உஜ்ஜினியில் உள்ள சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் கிருஷ்ணரும் குசேலரும் பயின்று வந்தார்கள் அக்காலங்களில் குருகுலங்களில் பயில்பவர்கள் குருசேவை செய்ய வேண்டும்குருபத்தினி கூறும் பணிகளை நிறைவேற்ற வேண்டும்அவ்வாறாக ஒருமுறை குருவின் வயலில் நீர்வரத்து அதிகம் இருந்ததால் பயிர் அழிந்துவிடும் என்று வரப்பில் மண்ணை வெட்டிப்போட்டு அடைக்க கிருஷ்ணர் செல்லவேண்டிய முறை வந்தது.

வியாழன், 23 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6091 - 6100 வீடியோக்கள். புத்தக விமர்சனங்கள்.

6091.உத்தம கிறிஸ்துவன் l கிறிஸ்டியான் உவைஸ் l ஆசீர்வாதம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=7OUeKj74YCk


#உத்தமகிறிஸ்துவன், #கிறிஸ்டியான்உவைஸ், #ஆசீர்வாதம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#bookreview, #thenammailakshmanan, 



6092.மலரும் உள்ளம் l அழ.வள்ளியப்பா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=jjJid-YEspM


#மலரும்உள்ளம், #அழவள்ளியப்பா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#malarumullam, #azhavalliappa, #thenammailakshmanan, 

செவ்வாய், 21 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6081 - 6090 வீடியோக்கள்.

6081.சாமியே சரணம் சரணம் என் முருகா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=BVoNwcR8k0c


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKHMANAN,



6082.கவலையைத் தீர்க்கும் கடவுள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=a3K6TTvdYak


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKHMANAN,

திங்கள், 20 ஜூலை, 2026

ஜெர்மனி வாழ் தமிழர்கள்

ஜெர்மனி வாழ் தமிழர்கள் 



அமெரிக்கா, கனடாவுக்கு அடுத்துத் தமிழர்கள் அதிக அளவில் வாழத் தகுதியான ஒரு இடம் என்றால் அது ஜெர்மனிதான். 1980 களில் வெளிநாடுகளுக்கு அதிக அளவு புலம் பெயர்ந்தவர்கள் ஈழத் தமிழர்கள். ஜெர்மனியிலும் கிட்டத்தட்ட 60 ஆயிரம் தமிழர்கள் புலம்பெயர்ந்து டுல்டுங் எனப்படும் இரட்டைக் குடியுரிமை வசதி பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.

2010 ஆம் ஆண்டு முதல் அங்கே ஐடி துறைக்காக வேலைக்கு சென்றவர்கள் அதிகம். ஜெர்மன் மொழியைக் கற்றவர்களுக்கு அங்கே வேலைவாய்ப்புகள் அதிகம். மருத்துவர்கள், பொறியாளர்கள் ஆகியோர் மொழியைக் கற்றிருந்தால் விசா கிடைப்பதில் சிரமம் இருக்காது. அங்கேயே மேல் கல்வி கற்போருக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால் ஜெர்மன் மொழியைக் கற்று இருப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஞாயிறு, 19 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6071 - 6080 வீடியோக்கள்.

6071ராஜ்கோபால் ரெஸிடென்ஸியில் ஒரு விடியல் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=lRKuTZgGNbs


#ராஜ்கோபால்ரெஸிடென்ஸி,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#rajgopalresidency, #thenammailakshmanan,



6072.வில்ஹெல்ம் ll  பயணித்த பாதையில் l  ஜிகுபுகு ஜிகுபுகு ரயிலே l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=UW6RPDrVyKw


#வில்ஹெல்ம்llபயணித்தபாதையில், #ஜிகுபுகுஜிகுபுகுரயிலே, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#traintravel, #germany, #thenammailakshmanan, 

சனி, 18 ஜூலை, 2026

வெள்ளி, 17 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6061 - 6070 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6061.திருமந்திரம்  - 551 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/ETOQ_Ad51zs


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6062.திருமந்திரம்  - 552 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/98YmxiO2oVw


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 16 ஜூலை, 2026

ப்ரைம் படிகளும் ரெவே சரக்கும்

231.


4601.Sunday breakfast


4602.வாழ்க்கையிலிருந்தும் அனுபவத்திலிருந்தும்தான் எல்லோரும் கற்றுக்  கொள்கிறோம். பொறுத்திருந்துதான் பார்ப்போமே.

செவ்வாய், 14 ஜூலை, 2026

பதினொன்றாம் அத்யாயம் பதினெட்டாவது ஸ்லோகம்

பதினொன்றாம் அத்யாயம் பதினெட்டாவது ஸ்லோகம்


    தேயம் போஜ்யதனம் தனம் ஸுக்ருதிபி:

நோ ஸஞ்சய: தஸ்ய வை

    ஸ்ரீகர்ணஸ்ய பலேச்ச விக்ரமபதே:

அத்ய அபி கீர்த்தி: ஸ்திதா l

    அஸ்மாகம் மதுதானபோகரஹிதம்

நாதம் சிராத் ஸஞ்சிதம்

    நிர்வாணாத் இதி நைஜபாதயுகலம்

தர்ஷயன்தி அஹோ மக்ஷிகா: ll

ஞாயிறு, 12 ஜூலை, 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 6

 

6

”நெல்லிமரத்துப் பிள்ளையாருக்குச் செதர்காய் ஒடைச்சிட்டுத்தான் வந்தேம்ணே “ என்று பரிதவிப்போடு கூறினான் வேலு. “பரவாயில்லை விடப்பா “ என்று பத்தாவது முறையாகக் கூறினாக கருப்பஞ்செட்டி. கோழி விழுந்ததும் திண்ணையில் உட்கார்ந்திருந்த பெரியவர் ஒருவர் எழுந்து வந்து “அதுகளாத்தான் குறுக்கால ஓடியாந்து விழுந்துச்சுக. எங்க கோழிகதான். ஒங்க தப்பில்ல போங்க “ என்று கூறிவிட்டார்.

என்னவோ இன்று பலி விழுந்தது நல்ல சகுனமாகத் தோன்றவில்லை வேலுவுக்கு. வீட்டுக்கு வந்ததும் பங்காளி வீட்டுச் சுகுணா ஆச்சி வந்து ஆலாத்தி எடுத்தாக. சாமி வீட்டில் விளக்கேற்றி இருந்தது. மூன்று கட்டு வளவு உள்ள பெரிய வீடு அது. அப்பச்சி கூட்டிக்கினுபோய் விபூதி பூசி விட்டாக. வேலு கார் டிக்கியிலிருந்து எடுத்து பொட்டி பைகளைக் கொண்டு வந்து பட்டாலை அறையில் வைத்தான்.

சனி, 11 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6041 - 6050 வீடியோக்கள்.

6041.ஸ்ரீ தேவி பாகவதம் l மகிஷாசுர சரிதம் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/5DQwzx1U_Vo


#ஸ்ரீதேவிபாகவதம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIDEVIBHAGHAVATAM, #THENAMMAILAKSHMANAN,



6042.முத்தப் பருவம் l ஸ்ரீ மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ் l குமரகுருபரர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=F86jYvuj58s


#முத்தப்பருவம் #ஸ்ரீமீனாட்சிஅம்மன்பிள்ளைத்தமிழ், #குமரகுருபரர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 10 ஜூலை, 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 7

 ** ஒரு சந்தி விரதம்

இரு சந்தி தியானம்
இவை களைந்த காமம்
நிறுத்துகிறது முச்சந்தியில்.

 

**ஒத்த மிஞ்சி கொடுத்தேண்டி
தங்கமே தங்கம்
அது ஒண்ணுக்கு மூணா மின்னுவதென்ன
தங்கமே தங்கம்
ஒத்த மிஞ்சி நீ கொடுத்தே
மச்சானே மச்சான்
அது ஒன் பிரியம் போலப் பெருகிப் போச்சு
மச்சானே மச்சான்

--
இதுக்கும் எம் எல் எம் பிஸினஸுக்கும் சம்பந்தமில்ல மில்ல மில்ல

புதன், 8 ஜூலை, 2026

ஒப்பிட முடியா வீராங்கனை ஒனகே ஓபவ்வா

ஒப்பிட முடியா வீராங்கனை ஒனகே ஓபவ்வா

 

கர்நாடக மாநிலத்தில் அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிட்டதால் கொண்டாடப்படும் இராணிகளுடன் ஒனகே ஓபவ்வா என்ற வீரதீரமிக்க பெண்மணியும் கொண்டாடப்படுகிறார். பதினெட்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் மீதும் முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரின் ஆக்கிரமிப்பு தொடங்கியது.

 

கர்நாடகாவின் சித்ரதுர்கா இராஜ்ஜியத்தினைப் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் ஆண்டுவந்தவர் மதகரி நாயக்கர். வலிமையாகக் கட்டப்பட்ட சித்ரதுர்கா கோட்டை ஒரு குன்றின் மீது அமைந்திருந்தது. சித்ரதுர்கா கோட்டைக்கு எலுசுட்டினா கோட் என்ற பெயரும் உண்டு. அதாவது ஏழு வட்டங்களின் கோட்டை என்று பொருள்படும் . தற்போதைய பெங்களூருவில் இருந்து வடமேற்கே 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

செவ்வாய், 7 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6031 - 6040 வீடியோக்கள்.

6031.வூபர் நதியின் மேல் தொங்கு ரயிலில் ஒரு த்ரில்லிங் சவாரி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=BHbnusIEgYw


#வூபர்நதி, #த்ரில்லிங்சவாரி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#wupperriver, #thenammailakshmanan, 



6032.பஞ்சு மிட்டாய் l காதல்வனம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=w8F1b15EUYM


#பஞ்சுமிட்டாய், #காதல்வனம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#panchumittai, #kathalvanam, #thenammailakshmanan, 

திங்கள், 6 ஜூலை, 2026

தேனம்மைலெக்ஷ்மணனின் நூல்கள்

தேனம்மைலெக்ஷ்மணனின் நூல்கள்

நூல் – பக்கம் – வருடம் – விலை – பதிப்பகம் - சமர்ப்பணம்


1.சாதனை அரசிகள் – 80 – ஜனவரி 2012 – 50/- - முத்துசபா - அய்த்தான்

ஞாயிறு, 5 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6021 - 6030 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6021.திருமந்திரம்  - 541 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/cxbfRsZHs2k


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6022.திருமந்திரம்  - 542 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/kIv1d_bulrw


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

சனி, 4 ஜூலை, 2026

சின்னத்தம்பி பிரபு


என் காதலே என் காதலே என்ன செய்யப் போகிறாய், மழைவருது மழை வருது குடை கொண்டு வா, எனக்கெனப் பிறந்தவ ரெக்கை கட்டிப் பறந்தவ, குண்டு ஒண்ணு வைச்சிருக்கேன், கத்திரிக்காய் குண்டுக் கத்திரிக்காய், குளிச்சா குற்றாலம் கும்பிட்டா பரமசிவம், அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி, மழையின் துளியில் லயம் இருக்குது, பூவே இளைய பூவே, ஏதோ மோகம் ஏதோ தாகம், மாறுகோ மாறுகோ, பூங்காற்று உன் பேர் சொல்ல எனக் காதலும் காமெடியும் கலந்தவை பிரபுவின் படப்பாடல்கள்.

 

25, டிசம்பர் 1956 இல் பிறந்தார். நடிகர் திலகத்தின் இளைய மகன். பரந்த முகம். அகண்ட நெற்றிநிறைந்த தலைமுடி கன்னக்குழி, நிறைவான புன்னகை எப்போதும் ஹை எனர்ஜி லெவலில் இருப்பது இவரது ஸ்பெஷாலிட்டிஜாலி பால். தந்தையின் புகழ் விசிட்டிங் கார்டாகப் பயன்பட்டாலும் அதையும் மீறித் தன்னை நிலை நாட்டி ஜெயித்தவர்.

புதன், 1 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6001 - 6010 வீடியோக்கள்.

6001.ஸ்ரீ காளியம்மன் கவசம் l ஸ்ரீ துர்க்கைச் சித்தர் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=6WyKeXoHwCU


#ஸ்ரீகாளியம்மன்கவசம், #ஸ்ரீதுர்க்கைச்சித்தர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,



6002.கலைமகள் வாழ்த்து l ரெ.முத்துகணேசன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=df7bBS9rRTw


#கலைமகள்வாழ்த்து, #ரெமுத்துகணேசன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,

Related Posts Plugin for WordPress, Blogger...