எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 டிசம்பர், 2010

அடைப்பு..

அவென்யூவின்
நாற்சதுரப் பள்ளங்களில்
அடைப்பெடுக்க
ஆள் தேடி..

இறங்கிக் கறுப்பாகி.,
இடுக்கெல்லாம் குத்தி..
மயிற்கற்றையும்.,
பஞ்சுக் குப்பையும்.,
அள்ளிப் போட்டவனுக்கு...,

திங்கள், 27 டிசம்பர், 2010

ஆஸ்டியோ போரோசிஸ்.. ஒரு விழிப்புணர்வு.. டாக்டர் வேல்ராணி..நம் நாட்டில் ஆறு கோடிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள நோய் ஆஸ்டியோ போரோசிஸ்.. காரணமே இல்லாமல் கை முறிஞ்சிருக்கு என கட்டுப் போட்டிருக்கும் என் தோழி சொன்னார்.. காரணம் எலும்புத்தேய்மானம்.. ஆஸ்டியோ என்றால் க்ரீக்கில் எலும்பு. போரோஸ் என்றால் ஓட்டை உண்டாவது. ஒரு வீட்டின் மரக்கதவுகள்., நிலைச்சட்டம் இவற்றில் இருக்கும் மரம் உள்ளுக்குள்ளே கரையான் அரித்து உளுத்துப்போய் விட்டால் வலுவிழந்து விடுவது போல் மனித உடலில் எலும்புகள் கால்சியம் குறைபாட்டால் அடர்த்தி குறைந்து விடுவதால் முறிந்துவிடுவதுதான் எலும்புத்தேய்மானம் என்ற ஆஸ்டியோ போரோசிஸ்.

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

மன்மதன் அம்பு .. எனது பார்வையில்..

HONESTY BECOMES LUXURY.. ஆம் பொய்யர்கள் நிறைந்த உலகில் உண்மை விலை உயர்ந்ததாகிவிட்டது.. இதுதான் மெசேஜ்.. இரண்டு உண்மையாளர்கள்., (ஒத்த குணமுடையவர்கள்.,) மட்டுமே ஒத்துப் போக முடியும்.. பொய்யோடு பொய்யும்., மெய்யோடு மெய்யும்.

சனி, 25 டிசம்பர், 2010

சும்மா பறத்தலே சுகம்..

பறத்தலுக்காய்தானே சிறகுகள்...
கூடல் இன்பத்துக்காய்
அலகுகள் மருவி..

பசித்தாலும் புல் தின்னாப் புலி
புனுகுப் பூனை மருவுமோ..
வைப்பரில் ஈசல் அல்ல..

கவரி மானோ ., அன்றிலோ
யாத்ராவின் புத்தகத் தலைப்பே
செல்ல விளிப்பாய்..

செவ்வாய், 21 டிசம்பர், 2010

தேனீர் தாகம்.. முதல் பரமபதப் பாம்புகள் வரை.. எட்டு கவிதைகள்..

1. தேனீர் தாகம்..
**************************

சுப்ரபாதத்தோடு
கணவருடன் ஆறுமணிக்கு.,
பையனுடன் எட்டு மணிக்கு.,
பலகாரத்துக்குப் பின்
பத்துமணிக்கு.,

வேலைக்காரப் பெண்ணுடன்
பன்னிரெண்டு மணிக்கு.,
மாலை நாலுக்கும்.,
பின் ஆறுக்கும் கூட..

திங்கள், 20 டிசம்பர், 2010

புதிய இதயம்.. புதிய ஜீவிதம்..(3) உமாஹெப்சிபா...

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி .. இப்படித்தான் இருந்தார் உமா., நான் பார்க்கும் போது. ஆனால் அவருக்குள் ஒரு சிவகங்கைக் குளத்து துர்க்கையும் இருப்பது பின்தான் தெரிந்தது. வெளியே போராடி ஜெயித்தவர்கள் அநேகம். இவர் வெளியில் மட்டுமல்ல.. தன்னுள்ளும் போராடி ஜெயித்த மஹிஷாசுரமர்த்தினி..

வியாழன், 16 டிசம்பர், 2010

ருக்மணி அம்மாவின் புத்தகங்கள்.. ஒரு பார்வை..இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

அடுத்த வாரம் உயிர்மையில் வெளிவரப்போகும் கவிதைத் தொகுப்பிற்காய் என் அன்பிற்குரிய நண்பன் நேசனுக்கு இந்த இடுகை பரிசு.. வாழ்க மக்கா.. வெற்றி நிச்சயம்..

டிஸ்கி:- இது எனது 300 வது இடுகை.. எல்லாம் உங்க ஆதரவும் ஆசீர்வாதமும் மக்காஸ்..:))

செவ்வாய், 14 டிசம்பர், 2010

கருவேலம்., பெட்டகம்., எழுத்து வாகனம்., எச்சப்புள்ளிகள்., தினசரி...

1. கருவேலம்:-

********************

ஈரப்பதம் உறிஞ்சி
உள்துப்பும் இயந்திரங்கள்
சமையற்கட்டிலும்.,
சயனத்திட்டிலும்.,
வரவேற்பறையிலும்.,
வாகனத்திலும்..

வெந்நீர் வளையங்கள்
பொங்கித்தரும்
தொட்டில் ஜலக்ரீடை..

சனி, 11 டிசம்பர், 2010

டிஸ்கவரி புக் பேலஸும்.. நானும்..

அமெரிக்காவை கண்டு பிடித்தவர் கொலம்பஸ் என்றால் என்னைக் கண்டு பிடித்தது டிஸ்கவரி புக் பேலஸ் எனலாம்.. என் முதல் கட்டுரை புத்தக வெளியீடு பற்றி வந்தது.. மிக நீண்ட நாட்களுக்குப் பின் அதிகமாக எழுதப் பழகினேன் அதிலிருந்து எனலாம்.. இன்று சில கட்டுரைகள் எழுத அதுவே முதல் முயற்சி..

ஒரு ஜர்னலிஸ்டாக ஆகவேண்டும் என்ற ஆவல் இருந்தது.. விகடன் மாணவப் பத்ரிக்கையாளர் திட்டம் முதல்முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது கல்லூரியில் மூன்றாமாண்டு வேதியல் படித்துக் கொண்டிருந்தேன்.. இரண்டாமாண்டு மாணவியர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்..என்றிருந்தது.. என்ன செய்வது.. ஓரளவு லேடீஸ் ஸ்பெஷல் மூலம் அந்த எண்ணம் நிறைவேறியது எனலாம்.. இன்னும் உழைத்தால்., இன்னும் முயன்றால் இன்னும் அதிக உயரங்களைத் தொடமுடியும் என்ற நம்பிக்கையை விளைத்தது.., இந்த மாதிரி கட்டுரை ., கவிதை., கதை எழுதும் முயற்சிகளே..

வியாழன், 9 டிசம்பர், 2010

கவிதை என்பது என்ன..?

”I THINK POETRY COMES TO U WHEN U R RESTLESS., UNEASY ., DEPRESSED..... ” -- DHARMENDRA.. --IN HINDU ..

IS IT SO ALWAYS..DHARAM.. ??

கவிதை என்பது இருப்பு கொள்ளாத நிலையிலோ., சரியில்லாத சூழலிலோ., மனச்சோர்வுற்ற போதோ வருவதுதானா.. தரம் தியோல்..

ஏன் காதல்., இன்பம் ., அமைதி., போர்., எல்லாம் இல்லையா..

புதன், 8 டிசம்பர், 2010

டிசம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் புவனேஸ்வரி ராமனாதன்., உமா ஹெப்சிபா., டாக்டர் வேல்ராணி. ருக்மணி அம்மா...

டிசம்பர் மாதம் மழை., சங்கீதக் கச்சேரி மாதிரி களை கட்டி இருக்கு., நம்ம லேடீஸ் ஸ்பெஷலும்.. பிள்ளையார் நோன்பு., ராப்பத்து., பகல் பத்து., வைகுண்ட ஏகாதசி., மொஹரம்., கிறிஸ்த்மஸ்., புத்தாண்டுன்னு அடுத்தடுத்து வருது.. நம்ம ப்லாகர்களோட படைப்புகள் மாதிரி..

திங்கள், 6 டிசம்பர், 2010

தீட்டு., மழை., கல்யாண முருங்கை., நசிகேதன் அக்னி..

தீட்டு:-
***********
பாத்ரூம் போனால்
காவலாய் சத்தகம்..
படுக்கை பக்கம்
தடுப்பாய் உலக்கை..

தலைக்குக் குளித்தாலும்
மூன்றுநாள் தீண்டத்தகாதவளாகி
தனித்தட்டு., தனி டம்ளர்..

தனி நாடு கேக்காத
எனக்குத் தனியிடம்..
துண்டு நிலம்...
தோல் தலையணை..

சனி, 4 டிசம்பர், 2010

கடவுளும்., நானும்..

நெல்லிமரத்துப் பிள்ளையாரப்பா.,பிள்ளையார்பட்டி பிள்ளையாரப்பா., குன்றக்குடி முருகா., ஊனையூர் கருப்பா., மாத்தூர் மகிழமரத்தடி முனிஸ்வரா.. ............. என்ன பார்க்குறீங்க.. எல்லா நல்ல கார்யம் ஆரம்பிக்கும் போதும் தெய்வத்துணையை நாடுவது நம்ம பழக்கமாச்சே..

நம்ம தமிழ் உதயமும்., தங்கமணியும் என்னை லாங் லாங் அகோ., சோ லாங் அகோ.... ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்கள்.. அதை முடிச்சே ஆகணும் .. ஏன்னா நம்ம ஸாதிகா அடுத்த கானாமிர்தம் பதிவுக்கு அழைச்சிட்டாங்க.. இப்ப அசைன்மெண்ட்ஸ் அதிகமா போச்சா.. முடிக்காட்டி டிஸொபிடியண்ட் ஆகிருவோம்.. சோ சுறுசுறுப்பு..

புதன், 1 டிசம்பர், 2010

தேனமுதபாஷிணி..


உன் குரல் கேட்டதில்லை நான்.. எழுத்திலேயே எல்லாம்.. !!! மிக மென்மையானதாகவும்., சமயங்களில் வலிமையானதாகவும் இருக்கும்..

வார்த்தைகளின் சாகசக்காரி நீ.. சூத்திரதாரி நீ ...உன் வார்த்தைச்சரங்களில் தோல்பாவையாய் ஆடிக்கொண்டிருக்கிறேன் நான் நிகழ்வேதும் அறியாமல்.. அன்பால் நீ ஆட்டுவிப்பதும் பின் காணாமல் போவதுமாய் கண்ணாமுச்சியில்.. ஜென்மம் தோறுமோ., யுகங்கள் தோறுமோ ..

விட்டுப் போனவை.., வெறுப்பு., கனவு...


1. விட்டுப் போனவை:-
**************************
ஒரு கோப்பைக்குள் பாதரசமாய்
ஏந்தி இருந்தாய் உன் கனவை..
காலம் தீர்ந்த அவகாசத்தில்
கையளித்துச் சென்றாய் என்னிடம் ..
குழியாடிக் குவியாடிக்
கண்களாடிக் கலந்தேன்..
நகரும் வெள்ளிக் கண்ணாடியில்..
அதிகமசைந்து
தங்கம் துளைந்தாடியது அது..

வெள்ளி, 26 நவம்பர், 2010

சுயம்புவாய் உருவான பெண் (2) ... மோகனா சோமசுந்தரம்..

சுயம்பு மூர்த்திகள் கேள்விப்பட்டிருப்பீர்கள். சுயம்புவாய் உருவான பெண்ணைப் பார்த்திருக்கிறீர்களா..? அவர்தான் மோகனா சோமசுந்தரம்.

ஸ்தலங்களுக்குப் பேர்போன தஞ்சை மாவட்டத்தில் காவிரிக் கரையில் மாயவரம் பக்கம் சோழம்பேட்டையில் பிறந்த இவர் தன்னைத்தானே செதுக்கிக் கொண்ட சிற்பம்.

கீதா ஜீவன்.. சமூக நலத்துறையின் ஜீவன்..
கீதா ஜீவன் சமுக நலத்துறை அமைச்சர் என்று சொல்வதை விட அதன் ஜீவன் என்று சொல்லலாம். தி. மு. க வின் மிகப் பெரும் தூணாயிருக்கும் பெரியசாமி அவர்களின் புதல்வி. மாநில அமைச்சர் என்ற பந்தா சிறிதும் இல்லாமல் நமது சகோதரி போல தோற்றத்திலும் எளிமையிலும் கவர்கிறார்.

வியாழன், 25 நவம்பர், 2010

ப்ரக்ஞை..

இருப்புத் துருவும்
எண்ணங்களூடே
பயணத்தில்...
இருப்பற்றுக் கிடப்பது...
எதாகவாவது..

யாதுமாய்.., அற்றதாய்..,
செவிப்பறையில்
சத்தமற்ற சத்தம்..
கண்ணுள் ஒளியற்ற ஒளி..
நாசியும்., நாவும்., மெய்யுமாய்..
வெளியற்ற வெளி..

புதன், 24 நவம்பர், 2010

அன்ன பட்சி..

பேசத்துவங்குமுன்னே
முடிவுக்கு வந்து விடுகின்றன..
நம் உரையாடல்கள்...

கடலுக்குள் மூழ்கிய கப்பல்களாய்
ஒரு கனவுக்குள் ஆழ்கிறது
உன் கண்கள்..

அவ்வப்போது கலங்கரை
விளக்காய் என் கண்
தேடியலைந்து..

திங்கள், 22 நவம்பர், 2010

மந்திரப் புன்னகை.. எனது பார்வையில்.

மந்திரப் புன்னகை.. நல்ல மர்மம் கொண்ட புன்னகைதான்... புதிதாக ஹீரோவாயிருக்கும் கரு. பழனியப்பனுக்கு.. நல்ல திராவிட நிறம் கொண்ட வெகு இயல்பான ஹீரோ.. நிச்சயம் இந்தக் கதையில் இவரால்தான் சிறப்பாக செய்ய முடியும்.. என்ன., இவர் வசனம் போல பேச்சுத்தான் பலமும்... சொற்ப இடங்களில் பலகீனமும்.

வெள்ளி, 19 நவம்பர், 2010

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்..இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

புதன், 17 நவம்பர், 2010

அந்த முன்னிரவு...ஐப்பசி அடைமழை..
கப்பல்விடத் தோதாய்.!
அடித்தடித்து வீசும் காற்று..
ஆடியது வாசலில் வேம்பு..
ஆடுபுலி ஆட்டம்
அண்ணா சொன்னான்..
வேரோடு கோரத்தலையசைத்த
பனை தென்னை பார்த்து..

திங்கள், 15 நவம்பர், 2010

நவம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் மோகனா சோமசுந்தரம்., சித்ரா சாலமன்., ருக்மணி அம்மா., மனோ சாமிநாதன்., மற்றும் நான்...

மிக அருமையான ., எளிமையான ஒரு சந்திப்பு நிகழ்ந்தது நவராத்திரி அங்காடியில்.. எந்தவித ஆர்ப்பாட்டமும் பந்தாவும் இல்லாமல் ஒரு அமைச்சரை நீங்கள் சந்திக்க இயலுமா.. மிக நெருங்கிய தோழி போன்ற அழகிய புன்னகையுடன் வந்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்தான் அவர்கள்.. அசந்து விட்டோம் அனைவரும்.. அவரின் பேச்சுத்திறனும் அபாரம்..
வாழ்க.. வளர்க அவரின் சமூகப் பணி..

முகப் புத்தகத்தில் முதிர்ந்த அறிவுடைய ஒரு தோழியை சந்தித்தேன்.. அவரின் பின் எவ்வளவு பெரிய சாதனைக் கதை.. சொல்லில் வடிக்க இயலாது அவரின் போராட்டம்.. படித்துப் பாருங்கள் சுயம்புவாய் உருவான பெண்ணின் கதையை..

சனி, 13 நவம்பர், 2010

லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் புதுகைத்தென்றல்., ருக்மணி அம்மா., கார்த்திக்., மரா., ராமலெக்ஷ்மி., தினேஷ்குமார்., தமிழ் உதயம்., கோபி ராமமூர்த்தி..

ஐப்பசியில் தீபாவளி ...அடைமழை.. பட்டாசு., பட்சணம்., புது உடை எல்லாம்.. இந்த வருடம் ரொம்ப ஸ்பெஷல்.. நிறைய ப்லாக்கர்களின் படைப்புக்கள் .. லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரிலும்., நவம்பர் மாத இதழிலும்.. அவசரத்தில் தீபாவளி மலரில் என்னுடையது விட்டுப் போய்விட்டது .. அதற்கென்ன மக்காஸ்.. பொங்கல் இதழில் எழுதுவோம்.. நவம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷல் இதழிலும்., திண்ணையிலும் தேவதையிலும் வந்திருக்கிறது..
இது நம்ம புதுகைத்தென்றல் ஸ்பெஷல்.. திரும்பி வந்த அம்பு ..நல்ல நச் சிறுகதை.. வாழ்த்துக்கள் கலா ஸ்ரீராம்..:))

வெள்ளி, 12 நவம்பர், 2010

வெளிச்சம்..

கோவையில் ஈச்சனாரி பிள்ளையார் கோயில் தாண்டியது.. கை அனிச்சைச் செயலாய் வணங்கியது..அம்மாவும் அப்பாவும் காத்திருப்பார்கள்..மெல்ல வீசிய காற்றில் பவளமல்லி வாசம்..தூங்கும் கணவரின் தோளில் சாய்ந்தாள்.. அம்மாவின் ஆயாவும் வந்து இருக்கிறார்களாம்.. பேத்தி மகளின் தலை தீபாவளிக்கு.. தலைமுறை தாண்டிய உறவுகள்..

ஜூன் மாதம் திருமணம். அடுத்த ஐந்து மாதங்களில் தீபாவளி. தாய்வீடு செல்லும் மகிழ்ச்சியோடு புகுந்த வீட்டினரை விட்டுச் செல்லும் சிறிய பிரிவுத்துயரும் இருந்தது. மாமியார் தாய்க்கும் மேலே அன்பு செலுத்துவதாலோ என்னவோ..

எப்போது எழுந்தாலும் எழுந்து கொள்ளும் முன்னரே மாமியார் எழுந்து சுறுசுறுப்பாய் வேலை செய்வது ஆச்சர்யம்தான் அவளுக்கு. எத்தனையோ முறை மு்யன்று விட்டாள். இந்த விஷயத்தில் மட்டும் வெல்ல முடியவில்லை. காபியைக் கலந்து கையில் கொடுக்கும் அன்பு வேறு. தன் பிள்ளைகளைப் போல நடத்துவதும்., எதையும் செய் என்று சொல்லாததுமான வித்யாசமான மாமியார்தான்.

புதன், 10 நவம்பர், 2010

நம்பிக்கை..

திரையரங்கோ., கோயிலோ.,
முன்னேற்பாடுகளுடன்
பெரும்பாடாய்..
திட்டமிட்டேதான் நடக்கிறது..
சந்திக்கச் செல்வதற்கான முஸ்தீபும்.,
பழகிப் போன இதே போன்றதான
ஏமாற்றமும்..

விருந்து மண்டபமோ.,
பிறந்தநாள் விழாவோ.,
புகைப்படச் சிரிப்புக்களில்
இல்லாத தன்னை உணர்ந்து
கரைந்து போவதாய்க் கனக்கிறது..

ஞாயிறு, 7 நவம்பர், 2010

சுய உதவிக் குழுக்கள் ( மகளிர்) எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சனைகள்...தீஞ்சுவைப் பாலெடுத்து நறுஞ்சுவைத் தேன் கலந்து பழச்சாறும் ஊற்றிக் கொடுத்தாலும் புளிக்குதென்பேன்.. தமிழ்த்தாயிடம் மதலை நான் தாய்ப்பால் குடித்து வளர்ந்த காரணத்தால்.. அன்னையவள் பரிவு கொண்டு என்னை வளர்த்த காரணத்தால்.. தமிழ் அன்னைக்குக் குழந்தையின் வணக்கங்கள்..

வியாழன், 4 நவம்பர், 2010

திண்ணைகள் வைத்த வீடு...

வலப்புறமும் இடப்புறமும்
திண்ணைகள் வைத்து
சிமெண்ட்டால் இழைத்த வீடு..

முதுகு சாய மேடும்
விளக்கு வைக்க மாடமும்
வாசலில் த்வாரபாலகராய்..

தி ஜ ர., லா ச ரா கதைகள்.,
மன்னார்குடியின் ஒற்றைத்தெரு.,
முதல் தெரு., இரண்டாம்தெரு.,
மூன்றாம் தெரு எல்லாவற்றிலும்

திங்கள், 1 நவம்பர், 2010

தைர்ய லெக்ஷ்மி... (1) .. ரம்யா தேவி..ஃபீனிக்ஸ் பறவை பார்த்து இருக்கிறீர்களா..? தன் சாம்பலில் இருந்தே திரும்பத் திரும்ப உயிர்த்தெழும் ஃபீனிக்ஸைப் பார்க்க வேண்டும் என்றால் ரம்யா தேவியைப் பார்க்கலாம்... இரும்பு மனுஷி., மலை அரக்கி என்றெல்லாம் தன் நண்பர்களால் செல்லமாக அழைக்கப் பெறும் ரம்யா என்றைக்கும் சந்தோஷப் பந்து..


இன்றைக்கு ஒரு சிங்கப்பூர் பேஸ்டு கம்பெனியில்., சாஃப்ட்வேர் டிவிஷனில் ப்ராஜெக்ட் மானேஜராக இருக்கிறார். இதன் பின்னே நெடிய உழைப்பு இருக்கிறது. அசாதாரணமான உழைப்பு. பெண்கள் முன்னேற்றம் என்பது இப்போதும் கடினமாக இருக்கக் கூடிய சூழலில் தன் உபாதைகளையும் மீறி மீண்டெழுந்து புதிய பரிமாணங்களில் பரிணமிக்கிறார்.

வெள்ளி, 29 அக்டோபர், 2010

நிகழவே இல்லை நம் சந்திப்பு.......

நான் உன் பின்னே வர
நீ எதன் பின்னோ விரைய
குதிரை முன் கட்டிய கொள்ளுப்பை..

பாம்புகளும் ., பூரான்களும்
அடைசலாய் நெளியும்
கெட்ட கனவொன்றில் முழித்து..

வேர்வைச் சுரப்பிகள்
அமிலக் கண்ணீராய் அரிக்க..
இன்மையின் திரையில்..

வியாழன், 28 அக்டோபர், 2010

மார்பகப் புற்று.. முன்னெச்சரிக்கை..

அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.. நண்டூறுது ., என அறியா வயதில் விளையாடி இருக்கலாம்.. பேரிளம் பெண்களுக்கான பருவத்தில் அறியாமல் இருக்கலாமா..

சென்ற மாதம் ஒரு தோழியுடன் பேசியபோது சொன்னார்.. தற்போதெல்லாம் 40 வயதுக்கு மேல் அல்ல ...30 வயது உள்ள பெண்களுக்கும் மார்பகப் புற்று ஏற்படுகிறது என.. மார்பகத்தில் சிறு சிறு கட்டிகள் உருள்வது போல் இருந்தால் மாமோகிராம் செய்வது அவசியம் ..

புதன், 27 அக்டோபர், 2010

காந்தி ஸ்டடி சென்டரில் குழந்தைகளின் அறிவியல் ., கைவினைப் பொருட்கள் கண்காட்சி..

ஒரு புக் ரிவ்யூக்காக காந்தி ஸ்டடி சென்டர் சென்றிருந்தேன்.. 28.0 2010 அன்று அங்கு தக்கர் பாபா வித்யாலயா ( வெங்கட்நாராயணா சாலை., தி. நகர்) வில் பயிலும் குழந்தைகள் நடத்தும் அறிவியல் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடக்க இருக்கிறது..

தேன் சிறகு முத்தம்...

தாலாட்டும் ரயில்
தாய் போலெனக்கு...

ஆடுகளும்., பாசி ஊசிகளும்
அசைபோட்டு நடந்தபடி..

கிரானைட் பெஞ்சுகளில்
சாய்ந்து அமர்ந்திருந்தோம்..
அணைத்துக் குலவியபடி..

போவோர் வருவோரெல்லாம்
புகை பொங்கப் பார்த்தபடி..

செவ்வாய், 26 அக்டோபர், 2010

கடல் அடையும் விளையாட்டு...

அலங்காரத்தோடும்
பாதுகாப்போடும்
கடலில் கரையப் போகும்
பிள்ளையார் படம் போட்ட
தாளில் மடிக்கப் பட்டது.,
கணவன் அடித்துத்
தண்டு உடைந்த தோடு..

வீடெங்கும் இறைந்து
கிடந்தன வார்த்தைகள்...,
வலித்த தோளோடும்
துடைத்தும் தீராமல்..

திங்கள், 25 அக்டோபர், 2010

தாம்பத்யம்..

என்றுமே புரி்ந்து கொள்ளாத தன்மைக்கு
என்ன பெயரிட்டாலென்ன..?

வருடங்கள் மட்டுமே வாழ்க்கையல்ல..
வருடல்கள் மட்டுமேயும்..

வாழ்க்கைக்குள்ளும் ஒரு நெகிழ்வு.,
ஒரு புரிவு., பரிவு..

எனக்கான பிரபஞ்சத்தில் நானும்..
உனக்கான பிரபஞ்சத்தில் நீயும்..

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

செய்தியும் கருத்தும்..

தமிழகத்தில் தபால் நிலையங்களில் தங்கக் காசு விற்பனை செய்யப்படுகிறது.. ---- செய்தி..

நகைக் கடைக்காரர்கள் போல வங்கி மேனேஜர்கள் வித்துக்கிட்டு இருந்தாங்க.. இப்ப தபால் துறையுமா.. இந்தப் போட்டியில் ...!!!

இந்தியாவின் இந்த வார கோல்., கோல் இந்தியாதான்.. ( வெளியீடு) -- பங்குச்சந்தை செய்தி..

நல்ல கோல்தான்..தங்கம் விலை குறைகிறதே..

இந்தியா வரும் ஆறாவது அதிபர் ஒபாமா...-- செய்தி

சனி, 23 அக்டோபர், 2010

வெள்ளி கொலு..கொலுவென்றால் என்னவெல்லாம் தோன்றும் உங்களுக்கு..
சுண்டல்., மரப்பாச்சி., பொம்மைகள்., பார்க்., மலை., ஃபவுண்டன்., கோலம்., பாடல்கள். , பட்டுப் பாவாடை ஜிமிக்கியில் கண்மை தீட்டிய குழந்தைகள்..
இப்படித்தான் நினைத்து நானும் சென்ற வாரம் என் நண்பர் அருண் வீட்டு கொலுவுக்கு சென்றேன்.. கை மாவுக்கட்டு இருந்தால் என்ன..? நட்பு முக்கியம் இல்லையா..:))

வியாழன், 21 அக்டோபர், 2010

மகாவின் கல்யாண வைபோகமே..

மக்காவின் மகா..
மஞ்சள் புடவையில்
சின்ன தேவதை..
கருவேல நிழலின் கீழ்
கிருஷாந்திப் பூ..
பாலையில் காய்ந்த பாராவின்
பசும் சோலை..
விளக்கில் விசும்பிய பூதம்
விருந்துத் தட்டோடு..
இனி முதலாளியென்று
சொல்லாதே..ஜீனியே
மாப்பிள்ளை என்று சொல்லு..

புதன், 20 அக்டோபர், 2010

எல்லாம் வாய்க்கிறது..

எதிர்வீட்டுக் குழந்தையுடன் குலாவல்...
படி கூட்டும் பெண்ணிடம் விசாரணை..
பேரம் பேசிக் காய்கறி...
காக்காய்க்குச் சுடுசோறு..
தொலைபேசியில் தாய்வீட்டில் கொஞ்சல்...
தோழிகளிடம் அளவளாவல்..
அலுவலில் இருக்கும் கணவரிடம்
குறுந்தகவலில் குறும்பு..

திங்கள், 18 அக்டோபர், 2010

வட்டங்கள் இறக்கிய கிணறு..

வட்டங்கள் இறக்கிய கிணறு...
வட்டச் சிற்றலைகளுடன்..

மழைத்துளி உண்ணும்
சாதகப் பட்சியாய் வாய் பிளந்து..

சில படிக்கட்டுகளோடும்..
சில பாழடைந்தும்..
சில குப்பைகளோடும்...
சில வாழ விரும்பாதவர்களோடும்..

சனி, 16 அக்டோபர், 2010

புத்தகத்துள்ளுறை மா(னுடர்க)தர்களே..

இந்த மாத ரிவ்யூ .. முகப்புத்தகம்..
உருவாக்கியவர் .. மார்க் ஜுக்கர்பெக்கர்..

ஸ்பெஷலிடி.. இதில் படிக்க மட்டுமல்ல . எழுதலாம்., பகிரலாம்..
மல்டி ஸ்பெஷலிடி.. நிறைய பேருக்கு வீடே இதுதான்.. தூங்குற நேரம் டாய்லெட் நேரம் தவிர... இது தூக்கமும் தவிர்ந்த திரிசங்கு சொர்க்கம்..குப்பையைக் கூட இதுலதான் கொட்டுவோம்னா பார்த்துக்குங்க..

வெள்ளி, 15 அக்டோபர், 2010

அக்டோபர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் ரம்யா தேவி.,ராமலெக்ஷ்மி., ருக்மணி அம்மா., சித்ரா நாகப்பன்..

அக்டோபர் மாதம் நவராத்திரி ஸ்பெஷல்.. அதில் துர்க்கையாக வாழ்வில் போராடி ஜெயித்த ரம்யாதேவியைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன்.. இவர் ப்லாக்கிலும் எழுதிவருகிறார்.. போராடி ஜெயித்த கதைகள் என்ற தலைப்பில் தன்னம்பிக்கைப் பெண்கள் பற்றி கட்டுரை தொடரும்...வெற்றி தொடரட்டும் ரம்யா தேவி..

புதன், 13 அக்டோபர், 2010

விட்டிலாயிராமல் விலகியிரு...

மின்சாரமற்ற பொழுதுகளில்
மின்சார உற்பத்தியானில்
எரிப்பான் அற்ற நேரங்களில்..

கும்மிருட்டு மூலையில் கிடந்த
என்னைத் தேடி எடுத்து
ஒளிர்ப்பானில் பற்றவைத்த போது..

உணர்ந்தேன்.. உன் கைகளில்..
பஃப்களின் வெண்குழல் வத்திகளும்
புளித்த பார்லித் தண்ணீரின் வாசமும்..

செவ்வாய், 12 அக்டோபர், 2010

உயிர் உறை ரகசியம்..

குறுக்கில் மரத்துண்டாய்..,
பூவில் பனித்துளியாய்.,
காரணமற்ற காய்ச்சலாய்..
பீடித்துக் கிடக்கிறது..
உன் அன்பு.. என் மேல்..

எல்லா அம்புகளும் படுக்கையாய்..
தக்ஷிணாயனம் இருக்கட்டும்..
எய்துவிடு மிச்சமும்..

நேசத்தின் இழையா ..
அன்புப் பிளவை..
நெய்வதை நிறுத்து..

சனி, 9 அக்டோபர், 2010

சுய உதவிக்குழுக்கள்.. நவராத்திரி அங்காடி ..பெண்களுக்கான போட்டிகள்..
நவராத்திரி ..சுபராத்திரி.. பாடல் கேட்கும்போதே முப்பெரும் தேவியரும்.. பட்டுப்பாவாடையணிந்த சுவாசினிகளும் ., மஞ்சள் குங்குமமும் தாம்பூலமும் ., கொலுவும் சுண்டலும் கண்முன்னே விரிகிறதா..

வெள்ளி, 8 அக்டோபர், 2010

ஸ்மைலியும்., க்ளாடியும்., கல்கியும்...


சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்பவர்கள் ... திருநங்கைகள்..

உடலால் ஆணாகவும் உள்ளத்தில் பெண்களாகவும் உளவியல் சிக்கல்களோடு வாழ்பவர்களின் உணர்வுகளைச் சித்தரிக்கும் ஆவணப்படம்.. அஃறிணைகள்... CREATURES..?

புதன், 6 அக்டோபர், 2010

புகைப்படங்களில் வாழ்பவர்கள்...

சட்டமிடப்பட்டு சந்தனமிடப்பட்டு
சாஸ்வதமான தாத்தாவுடன் பாட்டியும்..

சலனமுற்று நகரும் கணனிப் படங்களில்
வெளிநாட்டுவாழ் அப்பாவுடன் அம்மாவும்..

திங்கள், 4 அக்டோபர், 2010

பெயரெச்சம்..

லாரி முகப்புகளில்.,
விளம்பரப் பலகைகளில்.,
திரையரங்கு நிறுத்தங்களில்.,
ஊர் காட்டிகளில்.,
ஒளிந்து தெரியும் உன் பெயர்..

ஓட்டுனர் பயிற்சிப்பள்ளியோ.,
நகை அடகுக் கடையோ.,
உணவுக்கூடமோ.,
அணியாடை அகமோ
தேய்ந்தும் கரைந்தும்
மறைந்தும் பளிச்சிட்டும்...
சுருட்டைக் கேசமாய்
கருத்த எழுத்துக்களில் உன் பெயர்..

சனி, 2 அக்டோபர், 2010

எந்திரன்..THE ROBOT..எனது பார்வையில்...கடவுள் இருக்கிறாரா..? இந்த கேள்விக்கு சிட்டியை கேளுங்கள் ..சொல்வார்.. இருக்கிறார்.. அவர்தான் வசீகரன்.. என்னைப் படைத்த கடவுள்..என்று.
ஒரு ரோபோ சொல்லும் சிம்பிள் ஆன்ஸர்..
 
ரோபோவுக்கு மனித உணர்ச்சிகள் வந்தால் எப்படி இருக்கும்..? அதுதான் கதை..முதலில் கோபம் வருகிறது..பின்பு உற்சாகம்.. பின் காதல்..
காதல் வந்ததும் ஆக்கபூர்வமான மனது காதல் போட்டியில் டிஸ்ட்ரக்டிவாக எப்படி எல்லாம் செய்ய முடியும்.. இதுதான்.. ஜெயண்ட் சைஸ்.. ரோபோ..
இது கலாநிதிமாறனின் லேபிளில் மிக அட்டகாசமாக வந்துள்ளது..

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

அம்மா...அருமை அம்மா

அன்பு எனப்படுவது யாதெனின் .. அம்மா என்றால் அன்பு..

நாம் செலுத்துகிறோமோ இல்லையோ பிரதிபலனற்று நம்மிடம் அன்பு செலுத்திக்கொண்டு இருப்பவர் நம் அம்மா.. நம்மை நல்வழியில் செலுத்துபவரும் அவரே.. அம்மா என்று சொல்லும்போதே கண்டிப்புக் கலந்த கனிவுதான் தோன்றுகிறது. கனிவும் கண்டிப்பும் சேர்ந்த கலவைதான் அம்மா. உற்றது செய்யும் போது பாராட்டுதலும் அற்றது செய்யும் போது வழி நடத்துதலும் அம்மாவின் இயல்பு. அவளின் அன்புக்கு இணையுண்டோ.?

தாய்ப்பாலைப் போல முதல் முக தரிசனம் நம் அம்மா முகத்தில்தான் நிகழ்கிறது. ! நாம் பார்த்த முதல் அழகியும் அவள்தான். அவள் முந்தானை வாசம்தான் நாம் உணர்ந்த முதல் சுவாசம்.! அன்கண்டிஷனல் லவ் என்பதெல்லாம் அம்மாவிடம் கிடையாது! எல்லாம் ஒரே கண்டிஷந்தான்..!

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

அன்பு வெருட்டு..

மண்ணைக் கிளறி
மூச்சை பெருக்கி
கொம்போடு விரட்டும்
அன்பு மிருகம்..

வாலும் அல்ல.,
தும்பும் அல்ல..
திமிலும் அல்ல..
பிடிக்கு எட்டாமல்..

கிளப்பும் புழுதி ...
கொடிய மூர்க்கம்..
விரட்டுகிறோமா..
வெருட்டுகிறதா..

சனி, 25 செப்டம்பர், 2010

சேமிப்பு..

குழந்தைகள் லேபிள்களையும்., சிகரட் அட்டைகளையும் ., வண்ணப் படங்களையும் ., தீப்பெட்டித் தாள்களையும்., ஸ்டிக்கர்களையும்., சேமிப்பதாய்..

பள்ளி செல்லும் வயதில் அது நாணயங்களாய்., ஸ்டாம்புகளாய் ., ஸ்கெட்சுகளாய்..

பருவ வயதில் ரெக்கார்ட் நோட்டுகளாய்., க்ரோஷாக்களாய்., எம்பிராய்டரிகளாய்.,

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

இனிது இனிது.... போஸ்டர்

எனக்குப் பிடித்த ஹாலிவுட் ...இந்த தலைப்பில் இடுகையைத் தொடர்பவர்களுக்கு என் முகபுத்தக நண்பர் ப்ரகாஷ்ராஜின் இனிது இனிது படத்தின் இந்த போஸ்டர் ஃப்ரீ..அட நிஜமாத்தான்பா.. நேத்து சொன்னமில்ல... அந்த சத்யத்தை நிறைவேத்திட்டோம்..:))

வியாழன், 23 செப்டம்பர், 2010

எனக்குப் பிடித்த ஹாலிவுட்....

1. ஆர்னால்டு ஸ்வஷர்நெகர்.. - ட்ரூ லைஸ்.. டெர்மினேட்டர்., டோட்டல் ரீகால்.

2. டாம் க்ரூஸ் - மிஷன் இம்பாஸிபிள் 1. 2. 3.

3. ப்ராட் பிட் - ஓஷன்ஸ் 11. 12. 13.

4. பியர்ஸ் ப்ராஸ்னன் - கோல்டன் ஐ., வர்ல்ட் இஸ் நாட் இனாஃப்.

5. அல் பசினோ - காட் ஃபாதர் .

6 ஜாக்கி சான் - ஷாங்காய் நைட்ஸ்..

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

இன்னும் இளமையாய்...

தந்தை கைகளுக்குள்
வளர்ந்த காலம் முடிந்து..
செல்லச் சகோதரர்கள்
குடும்பஸ்தர்களாகி..
முயல்குட்டிகளாய் அணைப்பில்
கிடந்த குழந்தைகள்
ஆளுயரம் தாண்டி.,

திங்கள், 20 செப்டம்பர், 2010

நீ என்பதான ஒன்று..

எங்கு சென்றாலும் உன்னையும்
ஏந்திச் செல்கிறேன்..
இன்பச் சுமையாய் இருப்பதால்
இலகுவாய் இருக்கிறாய்...

எப்போது புகுந்தாய்..
எங்கிருந்து வந்தாய் ..
மஹிமா ., லகிமா.,
அணிமா அறியாமலே..

நினைவு விளக்கில்
அலாவுதீன் பூதமாய்
அவ்வப்போது எழுந்து ...

சனி, 18 செப்டம்பர், 2010

செப்டம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் துளசி கோபால்., ருக்மணி அம்மா., சித்ரா நாகப்பன்., ஹேமா மற்றும் நான்..

பண்டிகைகள் விநாயகர் சதுர்த்தியுடன் ஆரம்பிக்கின்றன..
எனவே அடுத்து அடுத்து விஷேச சிறப்பிதழ்கள்தான்..
அம்மா அருமை அம்மா என்ற தலைப்பில் என்னுடைய பகிர்வு வந்து இருக்கு. சகோதரிகள் தங்கள் அம்மாவைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளுங்க .. சிறப்பானது அடுத்த அடுத்த இதழ்களில் வெளிவரும்.

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

வெர்ச்சுவல் சாட்டிஸ்ஃபாக்‌ஷன்..

இரண்டு இல்லாமல்
எப்போதும் எதுவுமில்லை..
இருப்பு ... இருப்பின்மை..
உளதாய் ., இலதாய்..

நட்பு., பிரிவு
அன்பு., க்ரோதம்.,
ஆதரவு., அலட்சியம்.,
எழுத்து ., விமர்சனம்...

வெளி வெறுத்து
நிஜம் போலான ஒரு உருவில்.,
மௌனப்பேச்சில் நிம்மதி..
கஞ்சாக்காரனின் உலகமாய்..

வியாழன், 16 செப்டம்பர், 2010

பங்குச்சந்தை......முரட்டுக் காளையும் மிரளும் கரடியும்.

1986 பிப்ரவரி மாதம் முதல் காப்பிடல் மார்க்கெட் இதழ் வந்தது ...
பெட்ரோ பாட்டரி டிப்போ எனும் பெயரில் கடையும் ஷேர் ட்ரேடிங்கும் செய்துவந்த ஐயா சொல்வது புரிந்தும் புரியாமலுமிருக்கும்... லாங் .,ஷாட்., புல்லிஷ் .,பியரிஷ் என்று..

திருமணம் முடிந்தபின் தெரிந்தது என் கணவருக்கும் பங்குச் சந்தையில் ஆர்வம் அதிகம் என்று .. இந்திய வழக்கப்படி ராமர் செல்லும் வழியில் சீதையும் செல்ல ஆரம்பித்தேன்..( இது ரொம்ப ஓவர் என்று குரல் கேக்குது..:))
கவிதை தெரிந்த அளவு வணிகம் புரிபடவும்., பிடிபடவும் இல்லை..

பிஸினஸ் லைன்., காப்பிடல் மார்க்கெட்., எகனாமிக் டைம்ஸ்., ஹிண்டுவில் ஷேர் ப்ரைஸ் மூவ்மெண்ட்ஸ் என்று அவ்வப்போது விரும்பியும் விரும்பாமலும் பங்குச் சந்தை என்னை தொடர்ந்து கொண்டே இருந்தது.

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

வெம்மிளகாய்..

குடுவை உடைந்து
மீன்கள் துள்ளின..
ஆன்ம விடுதலைக்காய்..

பிணத்தின் முன் ஆட்டம்..
சாவும் கொண்டாடப்பட வேண்டுமென்றா..
நிறைபட வாழ்ந்ததற்கா..

மல்லிகை மொக்குகளில்
வெம்மிளகாய் வாசனை ..
உன் ஊடல்..

Related Posts Plugin for WordPress, Blogger...