எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

நமது மண்வாசம் நான்காம் ஆண்டுவிழாவில் பெண்மொழி வெளியீடு.

நான்காம் ஆண்டில் வாசிப்பை நேசிக்கவைத்த நமது மண் வாசம்

நமது மண்வாசம் இதழின் நான்காம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது மதுரை தானம் அறக்கட்டளையின் நிர்வாகக் கட்டிடத்தில். மிக அருமையான அந்தக்கூட்டத்தில் கிட்டத்தட்ட 300 சுய உதவிக் குழுக்களின் தலைவிகளும், நமது மண்வாசம் இதழில் பங்களிப்புச் செய்துவரும் பேராசிரியர்களும், மருத்துவர்களும், இதழாளர்களும் எழுத்தாளர்களுமாக அரங்கை நிரக்கச் செய்திருந்தார்கள்.

புதன், 22 மே, 2013

ஆசிரியை என்பது பணியல்ல. ஒரு வாழ்வியல்.

ஆசிரியை என்பது பணியல்ல.. ஒரு வாழ்வியல்.

கற்பித்தல்  என்பது பணியல்ல  அது ஒரு வாழ்வியல்

 குரோம்பேட்டை ஸ்ரீமதி ராம்குவார் தேவி ஃபோம்ரா விவேகானந்தா வித்யாலயாவில் ஆசிரியர் தினத்தில்  கிட்டத்தட்ட 110 ஆசிரியைகளுக்கு TEACHERS ROLE IN TODAYS ATMOSPHERE – ”இன்றைய சூழலில் அசிரியைகளின் பங்கு” என்ற தலைப்பில் உரையாற்றும்படி  பல்லாவரம் அரிமா சங்கம் சார்பாக அதன் செயலாளர் சதீஷ் அழைத்திருந்தார். இந்தப் பள்ளியில் சிபிஎஸ்சி திட்டத்தின் படி பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன

திங்கள், 15 ஏப்ரல், 2013

சூசைபுரம் செயிண்ட் ஜோசப் பள்ளியில் மகளிர் தினத்தில்

சூசைபுரத்தில் செயிண்ட்  ஜோசப் பள்ளியில்  மகளிர் தினத்தன்று சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள அழைப்பு வந்திருந்தது. என்னுடன் அழைக்கப்பட்டவர்கள் சாஸ்த்ரிபவனில் பெண்கள் சங்கம் மற்றும் தலித் பெண்கள் சங்கத்தின் தலைவியாக இருக்கும் மணிமேகலை அவர்கள் புதிய தலைமுறை டிவியில் ப்ரொடியூசராக இருக்கும் ஜென்னி அவர்கள் மற்றும் பெற்றோர்  சங்கத் தலைவர்  பழனி அவர்கள்.

லயன்ஸ் கிளப் மூலமாக பல்வேறு சமூகப் பணிகளை இலவசமாகச் செய்து தரும் மணிமேகலை இந்தப் பள்ளிக்கும் மாணவர்க்காக ஒரு கழிவறை கட்டித் தரும் பொறுப்பை ஏற்று அதை தான் சார்ந்துள்ள லயன்ஸ் கிளப் மூலமாக பண உதவி பெற்று வழங்கி இருக்கிறார். வாழ்க அவர் பணி.தனது பல்வேறு பணிக்கிடையிலும் அவர் அங்கு வந்து கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தன்னுடைய கருத்துக்களைக் கூறினார். எந்தச் சந்தர்ப்பத்திலும் படிப்பை விடாதீர்கள் என்பதே அன்று அவர் மாணவர்களுக்குச் சொன்னது.

வியாழன், 14 மார்ச், 2013

ஆசிரியர் தினத்தில் பல்லாவரம் எஸ் ஆர் வி வியில்

ஆசிரியர் தினத்தில் பல்லாவரம் எஸ் ஆர் வி வியில் :-

முகநூல் நண்பர் சதீஷ் பல்லாவரம் லயன்ஸ் க்ளப்பில் செயலாளராக இருக்கிறார். முகநூலில் என்னுடைய இலக்கியப் பங்களிப்பைப் பார்த்துவிட்டு ஆசிரியர் தினத்தன்று  உரையாற்ற அழைத்திருந்தார்.

சனி, 26 ஜனவரி, 2013

நாட்டின் சுதந்திரமும் நமது சுதந்திரமும்.

சுதந்திரத் திருநாளில் (15.8.2012) மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரியில் சிறப்பு விருந்தினராய்ப் பங்கேற்று சுதந்திரதின சிறப்பு உரையாற்ற அழைப்பு வந்தது. சுதந்திரப் போராட்டத்துக்கான வேர் பாய்ந்த சம்பவம், சுதந்திரத்தை இன்னும் பாதுகாக்கும் எல்லைக் காவல் படையினர், ஜவான்கள் பற்றி மற்றும் மாணவ மாணவியருக்கான சுதந்திரத்தின் அளவுகோல் பற்றி உரையாற்றினேன்.

முதன் முதலில் தென்னாப்பிரிக்காவில் 1906 இல் ஏசியாடிக் பதிவு சட்டத்தை அப்போது அங்கிருந்த ட்ரான்சுவால் காலனி அரசாங்கம் கொண்டு வந்தது. அதன்படி வாக்குரிமை மற்றும் இந்தியத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது , இதுபோல இன்னும் இதுபோல பல ஷரத்துக்கள் அடங்கிய இச்சட்டம் செல்லாது என சத்யாக்கிரக முறையில் காந்தி போராட அழைப்பு விடுத்தபோது மயிலாடுதுறையிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு வேலைக்காகச் சென்றிருந்த சாமி நாகப்பன் படையாட்சி, நாராயணசாமி மற்றும் வள்ளியம்மை முனுசாமி முதலியார் போன்றோர் காந்திஜியின் அழைப்பை ஏற்று இந்தச் சட்டத்தில் பதிவு செய்து கொள்ள மறுத்து சிறை சென்றனர்.

திங்கள், 21 ஜனவரி, 2013

மகளிர் தினத்தில் முத்துச்சரம் சமுதாய வானொலியில் எங்கள் கலந்துரையாடல்.

முத்துச்சரம் சமுதாய வானொலியில் சர்வதேச மகளிர் தினத்திற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்குக் கொண்டு தங்களின் கருத்தினை பகிர்ந்துக் கொள்ள திரு ராமன் நாகப்பன்  ( எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் வானொலிப் பண்பலை ) அழைத்திருந்தார்.  அதற்கு நான்  முகநூலில் அழைப்பு விடுத்திருந்தேன்.

ஞாயிறு, 1 ஜூலை, 2012

பெண் சிசுக்களை நேசிப்போம்..

பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு.. இது இருக்கிறதா இல்லையா என்பது பற்றி பொதிகை தொலைக்காட்சியில் காரசாரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது . நல்ல கருத்துக்களைக் கூற ஒரு வாய்ப்புக் கிடைத்தது. இன்னும் விழிப்புணர்வு தேவை என்பது என் கருத்தாக இருந்தது.. அங்கு பேசப்பட்ட  பல சுவையான கருத்துக்களை இங்கே நான் என்னுடைய கருத்துக்களோடும் தர விழைகிறேன்.ஆயிரம் ஆண்களுக்கு 933 பெண் குழந்தைகள்தான் இருக்கிறார்கள். இன்னும் பெண் பிறப்பின் சதவிகிதம் குறைந்து வருகிறது. அதற்கு பெண் சிசுக் கொலைதான் காரணம்.

திங்கள், 2 ஏப்ரல், 2012

ஜவஹர் பள்ளி குழந்தைகள் நடனப் போட்டியில் நடுவராக.

சென்னை ஜவஹர் வித்யாலயாவில் ஆகஸ்ட் 24  , 2011 அன்று குழந்தைகளுக்கான நடனப் போட்டி நடந்தது. அதில் என்னையும், டி சி எஸ்ஸில் பணிபுரியும் வைஷ்ணவியையும், டி நகர் பெங்கால் அசோஷியேஷன் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருக்கும் லலிதாவையும் நடுவராக அழைத்திருந்தார்கள்.மிக அருமையாக ஆடினார்கள் குழந்தைகள். மூன்று நடனப் போட்டிகள் 3 ஆம் வகுப்பு வரை, 8 ஆம் வகுப்பு வரை ப்ளஸ்டூ வரை ஒரே நாளில் வெவ்வேறு தளங்களில் இடங்களில் நடைபெற்றன. இதில் தொலைக்காட்சி நடிகர் கமலேஷும் வந்திருந்தார் இன்னொரு நடன நிகழ்ச்சிக்கு நடுவராக வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் ( விஜய் டிவி நீயா நானாவில் சந்தித்திருக்கிறோம்.) நலம் விசாரித்தார். எப்படி நினைவு வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு ..எங்கள் எதிர்டீமில் பேசியவர்களை மறக்க முடியுமா. என்றார். !
ஜட்ஜம்மாக்களே :)
நாட்டுப்புற நடனங்கள் தான் தலைப்பு . அருமையாக ஆடினார்கள் அனைத்துக்குழந்தைகளும். மதிப்பெண் வழங்குவதில் நாம்தான்
 தாராளமாச்சே.. சும்மா அள்ளி அள்ளி வழங்கினோம் . மற்ற இருவரும் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். ஏன்னா ஒருத்தங்க அதுல ஹெட்மிஸ்ட்ரஸ்.. எனவே ரொம்ப கறாரா மதிப்பெண் போட்டாங்க. 

சனி, 18 பிப்ரவரி, 2012

அருண் திருமணமும், ஆராதனாவின் , ”ங்கா..” வெளியீடும்...

திரு தாமோதர் சந்துரு அண்ணனின் நண்பரும் எனது முகநூல் நண்பருமான திரு . ராஜ் சிவாசுந்தர். புத்தகம் வெளியிடும் முன் தங்கள் இல்லத்துக்கு வரும்படி அழைத்துச் சென்று உபசரித்தார். மேலும் வீட்டின் அருகிலுள்ள ராஜ கணபதி ஆலயத்தில் அந்தப் புத்தகத்தை வைத்து ஆசி பெறும்படி செய்தார்.

புதன், 15 பிப்ரவரி, 2012

ஈரோடு சங்கமத்தில் வலைப்பதிவர்களின் ஆஸ்காருக்கு நன்றி

சமூக கலை இலக்கிய இணையப் பங்களிப்புக்காக அவரவர் பெயர் பொறித்த ஸ்பெஷல் விருது.!
ஈரோடு .. என் வாழ்வில் மறக்க முடியாத ஊர்.. பதினைந்து வலைப்பதிவர்களை ஆஸ்கார் வாங்கியது போல மகிழச் செய்த மங்களகரமான ஊர். எவ்வளவோ வேலைகள் செய்கிறோம். அங்கீகாரம் கிடைக்கும் அல்லது பணம் கிடைக்கும். ஆனால் இலக்கியம் நமக்காகவே படைக்கிறோம். நம் சொந்த திருப்திக்கு. அதை மற்றவர்களும் பாராட்டும்போது தன்னம்பிக்கை பெருகுகிறது.

சங்கமத்துக்கு அழைத்து காலையில் மிக விமரிசையான விருந்துக்குப் பின் ஈரோடு வலைப்பதிவர்களை சந்தித்தோம். என்னுடையது ஒரு 2 மாச லேட் போஸ்ட். இன்னும் பலர் அது பற்றி விரிவாக பகிர்ந்திருக்கிறார்கள். நிறைய கமிட்மெண்ட்ஸ் மற்றும் என்னுடைய புத்தகம் தொடர்பாக அலைந்ததில் மனதை ஒன்றுபடுத்து எழுத இயலாமல் போயிற்று. தனியாகக் கலந்து கொள்ளச் சென்ற வலைப்பதிவர்களுக்கு ஒரு இடத்திலும், தம்பதிகளாக வந்தவர்களுக்கு சண்முகா லாட்ஜிலும் தங்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுவரை கணவர் கூடவே நாம் எல்லா இடங்களுக்கும் சென்றிருக்கிறோம். ஆனால் முதல் முறையாக நம்மை , நம் எழுத்தை அங்கீகரித்து அவர்கள் அழைத்து தங்கச் சொன்னது மிகப் பெருமையாக இருந்தது. 










ஒற்றைப் பைசா சம்பாதிக்கிறோமோ இல்லையோ , இலக்கியம் நமக்கு ஒரு இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது என்ற பெருமிதம். அந்தப் பெருமிதத்தை உணரச் செய்த திரு . தாமோதர் அண்ணனுக்கும் ஈரோடு வலைபதிவர் குழுமத்துக்கும் என்ன நன்றி சொன்னாலும் தகும். ரயில்வே ஸ்டேஷனில் இருந்து காரில் அழைத்து வந்து ஹோட்டலில் விட்டார்கள். இரட்டைப் படுக்கைகள், வெந்நீர், குளிர்சாதனம் , சுத்தமான பாத்ரூம்கள், உடை மாற்றுமிடங்கள் என்று நல்ல தங்குமிடம் அது. நன்கு உறங்கி ஓய்வெடுத்து மறுநாள் திரு சீனா சார் அவர்களின் குடும்பத்தோடு சங்கமம் நடக்கும் ஹாலுக்கு சென்றோம். நல்ல காலை உணவுக்குப் பின் ஆரம்பமாயிற்று சங்கமம் நிகழ்வுகள்.

திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் மிகச் சிறப்பாக உரையாற்றினார்கள். வலைப்பதிவர்களின் வலிமை குறித்து சொன்னார்கள். ஈரோடு புத்தகத்திருவிழாவில் நுழைவுத் தொகை வாங்காமல் எல்லாரையும் அனுமதிப்பதாக சொன்னார்கள். ஈரோடு புத்தக வாசிப்பாளர்கள் மிகுந்த ரசனையான நகரம். அங்கே மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவராக ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார். அதே அவரின் பேச்சிலும் வெளிப்பட்டது. தாமோதர் சந்துரு அண்ணன் அவர்களும் சிறப்பாக பேசினார்கள்.

நன்றி உரை என்று கூற முற்பட்டபோது ஒரு எண்ணக் கோர்வையில்லாமல் பேசினேன். எங்கு ஆரம்பிப்பது எப்படி முடிப்பது எனத் தெரியாமல்.
வலைப்பதிவர்களின் ஆஸ்காரைக் கையில் வாங்கியதும் கொஞ்சம்

கிறுகிறுத்தது உண்மை. பத்ரிக்கையாளராக என்னை ஆக்கியதே வலைப்பதிவர் என்ற முகம்தானே.. அந்த முகத்தை என்றும் இவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை கெடாமல் காக்கவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.






விருதும் விருந்தும் கொடுத்தும் களைக்காத மனதோடும், முகத்தோடும் அனைவரையும் உபசரித்துக் கொண்டிருந்த திரு தாமோதர் சந்துரு அண்ணாவுக்கும் ஈரோடு வலைப்பதிவர் குழுமத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..!


ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

ஈரோடு சங்கமமும், வெல்விஷர் தேவதைகளும்..


ஈரோடு சங்கமமும் வெல்விஷர் தேவதைகளும்..

2011ஆம் ஆண்டு தை பிறந்த போது சென்னை சங்கமத்தில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒவ்வொரு வருடமும் தை பிறக்கிறது. ஏதோ ஒரு வழியும் பிறக்கிறது. 2010 வலைச்சரம் ஆசிரியரானதில் இருந்து இரண்டு வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக தன்னம்பிக்கை அதிகரித்தது. வலைச்சரத்தில் ஆசிரியப் பணி ஆற்ற அழைத்து தன்னம்பிக்கை ஊட்டிய சீனா சாருக்கு நன்றி..

வியாழன், 9 பிப்ரவரி, 2012

பாரதி மணி ஐயாவின் ஆசியுரை சாதனை அரசிகளை வெளியிட்டபின்.


பாரதி மணி ஐயா..

இலக்கிய உலகில் எனக்கு மறக்க முடியாத பெயர். ஒரு புத்தகம் , சில கட்டுரைகள் எழுதி அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர். வைக்கம் முகம்மது பஷீரின் சப்தங்கள் நாடகத்தில் பஷீராக நடித்தவர். புகைப்படத்தில் பார்த்த பின் இவர்தான் பஷீரோ என எண்ண வைத்தவர். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றாலும், வீர சிவாஜி என்றாலும், திருஞான சம்பந்தர் என்றாலும் நடிகர் சிவாஜியின் சாயல் மனதுள் படிவது போல இவர் போலத்தான் பஷீரும் இருக்கவேண்டும் எனத் தோன்றியது.

புதன், 11 ஜனவரி, 2012

சாதனை அரசிகள் வெளியீடு 35 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில்..

டிஸ்கவரி புத்தக அரங்கில் என்னுடைய புத்தகத்தை என் கணவர் வெளியிட உயர்திரு பாரதி மணி ஐயாவும், இளம் பெண் கிரிக்கெட்டர் திருஷ்காமினியும் பெற்றுக் கொண்டார்கள்.

செவ்வாய், 18 அக்டோபர், 2011

விக்னேஷ்வராவில் (துணை)விருந்தினராக..

ஜூன் 25 ஆம் தேதி ருக்கு அம்மாவுடன் விக்னேஷ்வரா லேடீஸ் க்ளப்பின் ஒரு விழாவுக்கு செல்ல நேர்ந்தது. அது போரூர் கவர்ன்மெண்ட் பள்ளியில் ப்ளஸ்டூ படித்து நல்லமார்க் வாங்கி தேறிய குழந்தைகளுக்குப் பணப்பரிசும், 18 குழந்தைகளுக்கு சீருடையும், நோட்டுப் புத்தகங்களும் வழங்கும் விழா. அந்த க்ளப்பை சேர்ந்த பத்மா மணி மேடம் சிறப்பு விருந்தினராக ருக்கு அம்மாவை அழைத்திருந்தார்கள். ருக்கு அம்மாவுடன் துணைக்கு சென்ற என்னையும் துணை விருந்தினராக அமரவைத்துவிட்டார்கள். லேடீஸ் ஸ்பெஷல் வாசகியர் அவர்கள் அனைவரும் என்பதும் என்னை ஓரளவு தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதும் மகிழ்ச்சியாய் இருந்தது. (நன்றி கிரிஜாம்மாவுக்கு) .

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

சாஸ்த்ரிபவனில் மகளிர் தினத்தில்.




INTERNATIONAL WOMEN’S DAY CENTENARY 1911-2011
CENTRAL GOVERNMENT WOMEN EMPLOYEES WELFARE ASSOCIATION

Equal access to education, training and science and technology:
Pathway to decent work for women

19 th - TUESDAY APRIL 2011

CONFERENE HALL- I (A- WING) DURING : 3 TO 5.30 PM
SHASTRI BHAVAN CHENNAI

WELCOME ADDRESS : MANIMEGALAI - PRESIDENT
SECRETARY REPORT : SREE KUMARI - SECRETARY.
SPECIAL ADDRESS : JAYA SHREE - JT SECRETARY.
ANNUAL REPORT : PRABHAVATHY - ORG. SECRETARY,
CULTURAL PROGRAMME ; CHILDREN AND MEMBERS.


CHIEF GUEST : SMT. KAMALA SELVARAJ . MD.DGO. PHD.
OBSTETRICIAN AND GYNECOLOGIST
A PIONEER IN INFERTILLITY TREATMENT
GG HOSPITAL -CHENNAI

TOPIC :WOMEN GYNAC PROBLEMS

FELICITATION AND PRIZE DISTRIBUTION:
SMT. THENAMMAI
JOURNALIST . FREELANCER FOR 3 TAMIL MAGAZINES.

DR. SATHYA. CGHS . DISPENSARY
SHASRTI BHAVAN

SHRI.N.V.NAGARAJAN I.I.S.
JOINT DIRECTOR
DIRECTORATE OF FIELDPUBLICIY
SHASTRIBHAVAN

VOTE OF THANKS.:

PUSHPA DEVI- Treasurer

சாஸ்த்ரி பவனில் CGWEWA வுக்காக 19 ஏப்ரல் அன்று மகளிர் தினம் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்க அழைத்திருந்தார் யூனியன் லீடர் மணிமேகலை அவர்கள். அன்புத் தங்கை கீதாவின் மூலம் போராடி ஜெயித்த பெண்ணாக அறிமுகமான மணிமேகலை சிறந்த தோழியாகி விட்டார். டாக்டர் கமலா செல்வராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அந்த விழாவில் என் கருத்துக்களை மகளிரிடம் பகிர்ந்து கொள்ளவும் வெற்றி பெற்றவர்க்குப் பரிசுகளை வழங்கவும் அழைக்கப்பட்டிருந்தேன். அதற்கு சிறப்பு ப்ரஸ் கவரேஜாக தினமலர் நிருபரும், தீக்கதிரின் நிருபர் தங்கமும் அழைக்கப்பட்டிருந்தார்கள் .