சாதனை அரசி சாஸ்த்ரிபவனின் ஸ்ரீசக்தி மணிமேகலை
சாஸ்த்ரி
பவன் பெண்கள் சங்கத் தலைவி
& தலித்
பெண்கள் நல சங்கத் தலைவி
மணிமேகலை மேடம் என் முதல்
நூல் சாதனை அரசிகளில் இடம்
பெற்ற சாதனை அரசி. சாஸ்திரி
பவனில் ப்ரஸ் பகுதியில் வேலை பார்த்து வந்த தோழி கீதா இளங்கோவன் மூலம் பத்தாண்டுகளுக்கு
முன் அறிமுகமானவர். அன்றிலிருந்து இன்று வரை அன்போடும் பாசத்தோடும் தொடர்ந்து வருகிறது
எங்கள் நட்பு. மனித நேயம்
மிக்கவர். இவர் எங்கே இருந்தாலும்
அங்கே பாஸிட்டிவ் வைப்ஸ் இருப்பதை நாம்
உணரலாம். அவரது அகத்தின் அழகு
முகத்தில் தெரியும். இவரின் நூலைப் படித்தேன். படித் தேன். இவரது
அனுபவங்கள் பரந்துபட்டவை.
அரும்பாக்கம் மிடில் ஸ்கூலில் அம்பேத்கார் பிறந்தநாளில் உரையாற்ற தோழி மணிமேகலை அழைப்பு விடுத்திருந்தார். சாஸ்த்ரி பவனில் அம்பேத்கார் சிலை அமையப் பெரும்பாடு பட்டு அதை நிகழ்த்தியும் உள்ளார். சென்னைத் தமிழில் அவர் ஃபோனில் உரையாடும்போதெல்லாம் மனதில் மகிழ்ச்சி பொங்கும். உடன்பிறவா சகோதரி போன்றவர். அட்சய பாத்திரம் கொண்டு மணிமேகலை அனைவருக்கும் புரந்தளித்ததுபோல் இவர் அட்சயா ஃபவுண்டேஷன் மூலம் அரசுப்பள்ளி சிறார்களை மேம்படுத்துகிறார்.


