எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 டிசம்பர், 2011

என் முதல் புத்தகம், “ சாதனை அரசிகள்”


என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய வலைப்பதிவ சகோதரி, சகோதரர்களே..!

என்னுடைய முதல் புத்தகம் ”சாதனை அரசிகள்”.

வெளியிடுபவர்:- என் கணவர் திரு. லெட்சுமணன் அவர்கள்.

முதல் பிரதி பெற்றுக் கொள்பவர் :- நடிகர் ,எழுத்தாளர், உயர்திரு. பாரதிமணி ஐயா அவர்கள்.

பதிப்பகம்:- முத்துசபா பதிப்பகம்.

வெளியீட்டு தேதி - ஜனவரி 8 ஆம் தேதி, ஞாயிறு மாலை 6 மணிக்கு.

இடம் :- புத்தகக் கண்காட்சி டிஸ்கவரி புத்தக நிலையத்தின் 334 ஆம் அரங்கு.

விநியோக உரிமை ;- டிஸ்கவரி புத்தக நிலையம்.

விலை :- ரூபாய் 50/-

வெளீயீட்டு விழாவுக்கு அனைவரும் வந்து கலந்து கொள்ளுங்கள். அன்பு அழைப்பு..!

புதன், 28 டிசம்பர், 2011

கட்டுக்கள்..:-

கட்டுக்கள்..:-
*****************

தற்காலிக கட்டுக்கள்..
கைக்கட்டோ கால்கட்டோ
நினைக்க வைத்தது
நிரந்தரமின்மையை..

காலூன்றிக்
கிளைத்திருந்த மரங்கள்
நதியோரம் கூட
சருகு தூவி
களைத்திருந்தன..

வெள்ளி, 23 டிசம்பர், 2011

செவ்வாய், 20 டிசம்பர், 2011

குறுந்தொ..கை.

குறுந்தொ...கை...
**********************

பொதி சுமந்த கழுதையாய்
திணறிய உள்டப்பியில்
வேண்டாத குறுந்தகவலெல்லாம்
விரைந்து குப்பையிலிட்ட கை..

சனி, 17 டிசம்பர், 2011

அட்சரேகை.. தீர்க்கரேகை...

அட்ச ரேகை தீர்க்க ரேகை
******************************
ஊர் ஊராய்
நகரும் வெய்யில்..
எல்லா காலத்திலும்
என்று அஷ்டமி.,
எது பௌர்ணமி...
ஹோரைகளும்
சகட யோகங்களும்
ராகுவாய் கடித்து
கேதுவாய் ஞானமூட்டி
ராஜயோகமும் விபரீதமாய்.

புதன், 14 டிசம்பர், 2011

இருக்கை..

இருக்கை..:-
**************

எனக்கென சில தானியங்கள்
சிதறிக் கிடக்கின்றன
அங்கங்கே..

குளிரிலும் இருளிலும் கூட
கதகதப்பாய் ஒரு கூடும்..

அமரும் மரங்கள் தோறும்
பழங்களோ பூக்களோ
ரசிக்க., ருசிக்க..,

திங்கள், 12 டிசம்பர், 2011

கடவுளை நேசித்தல்..ஆனந்த விகடன் சொல்வனத்தில்.

கடவுளை நேசித்தல்:-
********************************
கடவுளை ஒருபோதும்
நான் நேசித்ததேயில்லை.

பயம், துக்கம், நோய், விபத்து,
ப்ரயாணம் செய்யும்போது
அம்மாவின் முந்தானையாய்
அவரின் பேர் பிடித்துப்
பதுங்கி இருப்பேன்.

வியாழன், 8 டிசம்பர், 2011

டைட்டானிக். லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில். ( TITANIC)

டைட்டானிக். இந்தப் பேரைக் கேட்டதும் என்ன ஞாபகம் வருது உங்களுக்கு. ஒரு பிரம்மாண்டமான உல்லாசப் பயணக் கப்பலும்., அதில் சந்தோஷப் பறவைகளாய்த் திரிந்த இரண்டு காதலர்களும்தானே.. கடல் நிறைய ரகசியங்களைப் புதைத்து வைத்திருக்கு. அதில் ஒன்று இந்த டைட்டானிக் கப்பல். நிறைய பள்ளத்தாக்குகளும்., மலைகளும்., எரிமலைகளும்., அபாயகரமான பனிப்பாறைகளும் கடலுக்குள்ளே மறைஞ்சிருக்கு. இந்தப் பனிப்பாறைகளில் மோதித்தான் டைட்டானிக் என்ற கப்பல் நிறைய பேரோட கனவுகளோட சேர்த்து வாழ்க்கையையும் மூழ்கடிச்சிருச்சு.

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

நகரத்தார் திருமணங்கள் மிகச் சிறப்பாக நடத்தப்படுகின்றன.. முன்பெல்லாம் 7 நாள் நடந்த திருமணங்கள் 5 நாட்களாகி பின் 3 நாட்களாகி தற்போது இரண்டு நாட்கள் நடத்தப்படுகின்றன. அலமூஸ் குரூப்ஸ் என்று சின்னத்திரை நிகழ்சிகளுக்கு வீடியோ எக்விப்மெண்ட்ஸ் சப்ளை செய்யும் திரு வெங்கடாசலம் செட்டியாரின் இரண்டாவது மகனின் திருமணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

வெள்ளி, 2 டிசம்பர், 2011

ரொமான்ஸ் மழை.. சூரியக்கதிரில்..



அலுவலகம் சென்றபின்னும்
மணத்துக் கொண்டிருந்தது
கணவனின் ஆஃப்டர்ஷேவ்
லோஷன் தடவிய முத்தம்.

மீசையில் டையிட்டுக்
காய்ந்த கணவனை
முத்தமிட்டமிட்டபோது
மனைவிக்கும் மீசை வந்தது.

வியாழன், 1 டிசம்பர், 2011

பெண்களுக்கு மட்டுமே வரும் நோய். யூராலஜி டாக்டர் ஸ்ரீகலா ப்ரசாத் பேட்டி.. லேடீஸ் ஸ்பெஷலில்

பெண்களுக்கு மட்டுமே என்று ஏற்படக்கூடிய உடற்கூறு சம்பந்தமான ப்ரத்யேகப் ப்ரச்சனைகள் பலவுண்டு. பூப்படைதல்., பின் மாதவிடாய்., பிள்ளைப்பேறு. கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள்., கர்ப்பப்பை கான்சர்., மார்பகக் கான்சர் என்று. அதில் முக்கியமானது சிறுநீர்க் கசிவு. இந்த சிறுநீர்க்கசிவு சிலருக்கு பலமான பிரச்சனையாக அமைந்து நிம்மதியைக் குலைத்துவிடும். இது சம்பந்தமாக ராயப்பேட்டை பொதுமருத்துவமனையில் சிகிச்சையளித்துவரும் டாக்டர் ஸ்ரீகலா ப்ரசாத் அவர்களை சந்தித்து நம் லேடீஸ் ஸ்பெஷல் வாசகியருக்கு தீர்வுகள் வழங்குமாறு கேட்டோம். சென்னையிலேயே இந்தத்துறையில் சிகிச்சையளித்து வரும் பெண் மருத்துவர் இருவர்தான். அதில் இவர் முக்கியமானவர். ஒரு அறுவை சிகிச்சை முடிந்து அப்போதுதான் ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்திருந்தார்.

Related Posts Plugin for WordPress, Blogger...