எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

திங்கள், 12 டிசம்பர், 2011

கடவுளை நேசித்தல்..ஆனந்த விகடன் சொல்வனத்தில்.

கடவுளை நேசித்தல்:-
********************************
கடவுளை ஒருபோதும்
நான் நேசித்ததேயில்லை.

பயம், துக்கம், நோய், விபத்து,
ப்ரயாணம் செய்யும்போது
அம்மாவின் முந்தானையாய்
அவரின் பேர் பிடித்துப்
பதுங்கி இருப்பேன்.


அவமானம், நிராசையின்போது
அவரை நிந்தித்திருக்கிறேன்.

ஆசைகள் பலிக்க
உண்டியலில் காசுபோட்டு
டீல்பேசி வியாபாரியாக்கி
இருக்கிறேன் அவரை.

நாள் கிழமையில்
அவர் பேர் சொல்லி
விதம் விதமாய்
உண்டிருக்கிறேன்.

ஒரு படத்துக்குள் அடைத்து
வீட்டில் வைத்தவுடன்
அவர் அதில் மட்டும் இருப்பதாக
நம்பி இருக்கிறேன்.

அவர் தந்ததை
அவருக்கே படைத்து
நான் செலுத்தியது என
பெருமையுற்றிருக்கிறேன்.

எனக்குத் தந்ததுபோதுமென நினைத்து
எப்போதாவது அவர் எனக்கு
வஞ்சகம் செய்திருப்பாரோ என
சந்தேகப்பட்டிருக்கிறேன்.

என்னை முன்னேறவிடாமல்
தடுத்ததுபோல் திட்டி இருக்கிறேன்.
என்னை எப்போது உயர்த்துவாய் என
எந்நேரமும் கேட்டபடி இருக்கிறேன்.

என்னை யாராவது
காயப்படுத்தும்போது
கேட்கமாட்டியா நீ என
கத்தித் தீர்த்திருக்கிறேன்.

கடவுளை ஒருக்காலும்
நான் நேசித்ததே இல்லை என்ற
உண்மையை உணரும்போது
சங்கடமாய் இருக்கிறது
அவராவது என்னை நேசித்திருப்பாரா என்று

டிஸ்கி:- இந்தக் கவிதை 28.10. 2011 ஆனந்தவிகடன் சொல்வனத்தில் வெளிவந்தது. நன்றி விகடன். இந்த வருடம் 5 கவிதைகள் பிரசுரித்து என்னை கௌரவப்படுத்திய விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்..( பொம்மை உலகம், நாணம்., மிச்சம்., மௌனக்கூடு, கடவுளை நேசித்தல்).

13 கருத்துகள்:

 1. வளர்ச்சி தொடங்கி விட்டது இனி பிறக்கும் புத்தாண்டில் ஜெட் வேகம் தான் வாழ்த்துக்கள் !!

  பதிலளிநீக்கு
 2. ஒரு பக்தையின் சிந்தனை சிறப்பான கவிதையாக.

  பதிலளிநீக்கு
 3. விகடன் மட்டுமாக்கா... உங்களின் அழகிய தமிழுக்கும், சீரிய சிந்தனைகளுக்கும் இன்னும் பல சிகரங்களைத் தொடுவீர்கள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. :)\\அம்மாவின் முந்தானையாய்
  அவரின் பேர் பிடித்துப்// நல்லா இருக்குங்க

  பதிலளிநீக்கு
 5. கடவுளை ஒருக்காலும்
  நான் நேசித்ததே இல்லை என்ற
  உண்மையை உணரும்போது
  சங்கடமாய் இருக்கிறது
  அவராவது என்னை நேசித்திருப்பாரா என்று//வாழ்த்துக்கள் !!

  பதிலளிநீக்கு
 6. கடவுளை நம்பியும் நம்பாமலும் நல்ல கவிதை தேனக்கா.அன்பு வாஅழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 7. அருமை. கடவுளை தோழனாய், உறவாய், பங்காளியாய் பார்ப்பது சிறந்த பக்தி. கிருஷ்ணர் நாரதர் பக்தி சந்தேகம் நினைவுக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
 8. நல்ல சிந்தனை.

  கடவுள் உங்களை நேசித்ததால் தான் தமிழ் உங்களிடம் ததும்பி நிறைந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 9. அருமையான கவிதை தேனம்மை. படிக்கும் பொழுதே பல
  ஆன்ம உணர்ச்சியை தட்டி எழுப்புகிறது. மிகவும் பிடித்திருந்த்து.
  கவிதையின் பிரசுரத்திற்கு வாழ்த்துக்கள். இக்கவிதையை
  வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன்.
  நன்றி :)

  கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.

  http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_25.html

  பதிலளிநீக்கு
 10. நன்றி ரூஃபினா

  நன்றி ரமேஷ்

  நன்றி கணேஷ்

  நன்றி முத்துலெட்சுமி

  நன்றி மனோ

  நன்றி கார்த்தீஸ்வரன்

  நன்றி மாலதி

  நன்றி ஹேமா

  நன்றி ஸ்ரீராம்..!

  நன்றி ரசிகன்

  நன்றி சக்திப்ரபா..

  பதிலளிநீக்கு
 11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...