எனது பதினொன்றாவது நூல்

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

ந(டை)ட ராஜா நட

உபவாசமும் பாதயாத்திரையும் ஒருவரின் ஆன்மீகப்
பாதையில் மட்டுமல்ல.. இகலோக வாழ்வுக்கும்
உகந்தது..

முதல்முறை பாதயாத்திரை செல்பவர்களுக்கு
சில அறிவுரைகள்
*வீட்டைவிட்டு வெளியில் கால்வைத்தால் காரில்.,
வண்டியில் அல்லது ஆட்டோவில் தான்
கால்வைப்பேன் என்பவர்கள்...
*வீட்டுக்குள்ளே கூட ஹவாய்., பாத்ரூமுக்கு
ஒரு ஹவாய்., தோட்டத்துக்கு ஒரு செருப்பு .,
ட்ரெட்மில்லுக்கு ஷூ., பார்ட்டிக்கு கோலாப்புரி.,
கட்ஷூ .,ஸ்லிப் இன் என்று ஏழு செருப்பு
வைத்து இருப்பவர்கள்...

*பச்சைத்தண்ணீரா ....?வெந்நீரில் யுக்கலிப்டஸ்
ஆயில்., ஆர். எஸ். பதி .,அல்லது ஆக்ஸாயில்
போட்டு குளிப்பவர்கள்...
*அமுக்கின பொம்மை மாதிரி சோபாவிலோ.,
லாப்டாப் முன்போ உக்கார்ந்து இருப்பவர்கள் .,
*வெய்யில் அடித்தால் தலைவலிக்கும்., மழை
பெய்தால் காய்ச்சல் வரும் .,பனி நேரம் சளி
பிடிக்கும் என்பவர்கள்....
* பறக்குறது .,நீஞ்சுறது., ஓடுறது .,ஓடுறது
போடுறது இல்லாம சாப்பிட முடியாதவர்கள்...
*ஏசி ரூமை விட்டு வெளியே வராதவர்கள்..
நேர்ந்து கொள்ளாமல் இருக்கலாம்...

"இல்லை போவேன்" என்று பிடிவாதம் பிடிப்பவரா..
இதை படிங்க முதலில்...
*ஒரு மண்டலம் விரதம் என்பது முக்கியம்
அல்லது 30 நாளாவது... (டிசம்பர் ஒன்று என
நினைத்தது ஜனவரி ஒன்றுதான் எனக்கு கைகூடியது)
* தினம் காலையில் பச்சைத்தண்ணீரில் குளிங்க..
( அழுவாச்சியோடு அல்ல ..) பிரம்ம முகூர்த்தம்
விஷேசம்... எட்டு மணி கூட பரவாயில்லை..
* விளக்கேற்றி தீப தூப ஆராதனைகள் பாமாலைகள்
பாடலாம்..(என்னம்மா லீவு நாளிலே காலங்
கார்த்தால சாம்பிராணி போட்டு சாமியத் திட்டுறீங்க
என பிள்ளைச் செல்வங்கள் சாபத்துக்கு
ஆளாகாம இருக்கவும்..
*பிள்ளை பிறந்தது., புஷ்பவதியானது .,கேதம்
கேட்கப் போகக் கூடாது...
*தினம் ஒரு மணி நேரம் அல்லது 3., 4 கிலோ
மீட்டர் நடந்து பழகவும்.. (செருப்பு இல்லாமல்)
ரோட்டில்போவோரெல்லாம் ஒரு மாதிரியாகப்
பாத்துக் கொண்டே செல்வார்கள் ... சில நாளில்
பழகிவிடும் ...அவர்களுக்கு...!!!
செல்ல முடியாத நாளில் ட்ரெட் மில்லில் ஷூ
இல்லாமல் சென்று கால் கொப்புளம் ஆகிவிடும்..
(நடைப்பயணத்தில் வரும் கொப்புளங்களுக்
கெல்லாம் இது சாம்பிள் கொப்புளம் மாதிரி)..
எனவே எது செய்கிறீர்களோ இல்லையோ
கட்டாயம் சோம்பல் இல்லாமல் நடந்து
பழகுங்கள்...
*கண்ட நேரத்தில் காபி., டீ குடிப்பது., ஸ்வீட்
இருக்கேன்னு சாப்பிடுறது., பன்னீர் பட்டர்
மசாலா., நெய் .,தண்ணிவிடாத பால் .,சாக்லேட்.,
கேக் என சாப்பிட்டு உடம்பை கால் தாங்க
திணறும் அளவு வைத்து இருப்பது தவிர்த்து
கீரை., காய் .,பழம் நிறைய சாப்பிடுங்க..
உடம்பைக் குறைக்கிறேன்னு சாப்பிடாம
இருந்துடாதீங்க...
* பெரிய பயணத்துக்கு முன்னாலேயே சில
சிறிய தூரத்தில் உள்ள இடங்களுக்கு..
ஆன்மீகத்தலங்களுக்கு சுமார் 5 முதல் 10 கிலோ
மீட்டர் சுற்று வட்டாரத்துல இருக்குற
இடங்களுக்கு சென்று வந்த பின்பு
வேண்டிக்குங்க... பாதியில் ஒரு சில பேர் பின்
தங்கிட்டாங்க.. ஆனா அடுத்த வருஷம் பூர்த்தி
பண்ணனும் கேட்ட பின்னாடி நமக்கு ஒரு கிலி
அடிச்சுரும்.. ஏன்னா இந்த தூரம் நாம நடந்ததே
பெரிசு.. இன்னும் அடுத்த வருஷமா...திரும்ப
முதல்லேருந்தான்னு ...!!!

அலுவலில் விடுப்பு எடுக்க முடியாமல் ரங்கமணி
எனக்குத்துணையா குன்றக்குடி வரை வந்தார் ..
பின்பு உப்பாற்றுப் பாலம் வந்து பார்த்து அங்கும்
ஒரு 10 கிலோமீட்டர் கூடவே நடந்தார்.. சில
பேர் தம்பதிகளாகவே சேர்ந்து வந்து கொண்
டிருந்தார்கள்.. என் மனக் குறையை கணவரிடம்
சொன்னதும் அடுத்த வருஷம் சேர்ந்து போவோம்
என சொன்னார் ...அடுத்த வருஷமுமா என
திடுக்கிட்டு.. "இல்லை நீங்க நடங்க.. நான்
உங்களுக்காக வீட்டில் பத்திரமாக சென்று வர
சாமி கும்பிடுறேன்.. முடிந்தால் உங்களை நானும்
இது போல் வந்து பார்த்து ஊக்கமூட்டுகிறேன்"
எனக் கூறினேன்... நடக்க முடியாமல் கண்
எல்லாம் கலங்கி விட்டது... பாதம் தார் ரோடை
பார்த்தலே அலறியது ..பருமனை பார்த்து
உராய்வில் கால் கதறியது .. பந்துக்கிண்ண
மூட்டு எல்லாம் கழண்ட மாதிரி இருந்தது..
விரட்டப்பட்ட கோழி போல விரைவாக
நடந்தால்தான் மற்றவர்களின் வேகத்தோடு
போக முடிந்தது .."பரவாயில்லை வந்துவிடு"
என எங்கே அவர் என் உறுதியைக் குலைத்து
விடுவரோ என பயந்து அமைதி காத்தேன்..

கண்டவராயன் பட்டிக் கம்மாய்., திண்டுக்கல்
பாலம்., விருப்பாச்சி மேடு இது மூன்றும் பத்து
நாளாகியும் கனவில் கடக்க முடியாத இடங்களாய்
எல்லாம் முடித்து கிரிவலம் வந்து யானையடிப்
பாதையில் சென்று ஆண்டவனை தரிசித்தபோது
ஏற்பட்ட பரவசம் அப்பப்பா சொல்லில் அடங்காது...

டிஸ்கி :- மிச்ச விவரம் அடுத்த இடுகையில்...

46 கருத்துகள் :

ஹுஸைனம்மா சொன்னது…

ஆமா, ஒரு காலத்தில அஞ்சாறு கிலோமீட்டரெல்லாம் சர்வசாதாரணமா இருந்துது. இப்ப ஒரு மாலில் கொஞ்சம் நடந்தாலே நாலு நாள் கால் வலி இருக்கு.

நடைபயணம் சுவாரசியமா இருக்கு அக்கா.

S.A. நவாஸுதீன் சொன்னது…

படிக்க சுவாரசியமா எழுதினாலும் பட்ட கஷ்டங்கள் கண்முன்னே தெரிகிறது அக்கா. என்ன சொல்வதென்று தெரியவில்லை.

இராகவன் நைஜிரியா சொன்னது…

மனதுக்கும், கடவுளுக்கும் உண்மையாக நடந்து, நடந்திருக்கின்றீர்கள் தோழி.. நடக்கும் போது கஷ்டமாக இருந்தாலும், இன்று மனதில் ஒரு நிம்மதி இருக்கும்... வாழ்த்துகள். உடல் நலத்தை பேணுவதற்காகத்தான் அந்த காலத்தில் இது மாதிரி வைத்தார்கள் போலிருக்கு

விஜய் சொன்னது…

அப்பாடா கேட்கும்போதே வலிக்குதே, உங்களுக்கு எப்படி இருக்கும். ஆண்டவனின் அருள் பூரணமாக கிட்டியிருக்கும் என நம்புகிறேன்.

வாழ்த்துக்கள் ஒரு சுவையான பயணப்பதிவிற்கு

விஜய்

தமிழ் உதயம் சொன்னது…

டாக்டர் நடக்க சொன்னால் தான் நடப்போம் அல்லது தவிர்க்க முடியாமல், வேறு வழியில்லாமல் இம்மாதிரி ஆன்மிக பயணம் நடப்போம். இயல்பாக வர வேண்டிய விஷயங்களை(நடை பழக்கம்) பிறர் சொல்லி சொல்லி தான் நடக்கிறோம். நடப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை மனம் கண்டு கொண்டால் வாகனங்களை தேடாது

R.Gopi சொன்னது…

//முதல்முறை பாதயாத்திரை செல்பவர்களுக்கு
சில அறிவுரைகள்
*வீட்டைவிட்டு வெளியில் கால்வைத்தால் காரில்.,
வண்டியில் அல்லது ஆட்டோவில் தான்
கால்வைப்பேன் என்பவர்கள்...
*வீட்டுக்குள்ளே கூட ஹவாய்., பாத்ரூமுக்கு
ஒரு ஹவாய்., தோட்டத்துக்கு ஒரு செருப்பு .,
ட்ரெட்மில்லுக்கு ஷூ., பார்ட்டிக்கு கோலாப்புரி.,
கட்ஷூ .,ஸ்லிப் இன் என்று ஏழு செருப்பு
வைத்து இருப்பவர்கள்...
*பச்சைத்தண்ணீரா ....?வெந்நீரில் யுக்கலிப்டஸ்
ஆயில்., ஆர். எஸ். பதி .,அல்லது ஆக்ஸாயில்
போட்டு குளிப்பவர்கள்...
*அமுக்கின பொம்மை மாதிரி சோபாவிலோ.,
லாப்டாப் முன்போ உக்கார்ந்து இருப்பவர்கள் .,
*வெய்யில் அடித்தால் தலைவலிக்கும்., மழை
பெய்தால் காய்ச்சல் வரும் .,பனி நேரம் சளி
பிடிக்கும் என்பவர்கள்....
* பறக்குறது .,நீஞ்சுறது., ஓடுறது .,ஓடுறது
போடுறது இல்லாம சாப்பிட முடியாதவர்கள்...
*ஏசி ரூமை விட்டு வெளியே வராதவர்கள்..
நேர்ந்து கொள்ளாமல் இருக்கலாம்...//

*********

யப்பா..... இதெல்லாம் பண்ணுபவர்களே என்று நீங்கள் கொடுத்த லிஸ்டை படித்தாலே, மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்குகிறதே தேனம்மை... இருந்தாலும், இது போன்ற நிலையில் இன்று பலர் உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை...

//என்னம்மா லீவு நாளிலே காலங்
கார்த்தால சாம்பிராணி போட்டு சாமியத் திட்டுறீங்க
என பிள்ளைச் செல்வங்கள் சாபத்துக்கு
ஆளாகாம இருக்கவும்..//

ஆஹா... இதுவல்லவோ நகைச்சுவை... மெல்லியதாக இருந்தாலும், மிகவும் ரசிக்க கூடியதாக எழுதி இருக்கீங்க தேனம்மை...

//*கண்ட நேரத்தில் காபி., டீ குடிப்பது., ஸ்வீட்
இருக்கேன்னு சாப்பிடுறது., பன்னீர் பட்டர்
மசாலா., நெய் .,தண்ணிவிடாத பால் .,சாக்லேட்.,
கேக் என சாப்பிட்டு உடம்பை கால் தாங்க
திணறும் அளவு வைத்து இருப்பது தவிர்த்து //

நெம்ப கஸ்டமுங்கோ...

//* பெரிய பயணத்துக்கு முன்னாலேயே சில
சிறிய தூரத்தில் உள்ள இடங்களுக்கு..
ஆன்மீகத்தலங்களுக்கு சுமார் 5 முதல் 10 கிலோ
மீட்டர் சுற்று வட்டாரத்துல இருக்குற
இடங்களுக்கு சென்று வந்த பின்பு
வேண்டிக்குங்க... //

அருமையான வார்த்தை சொல்லி இருக்கிறீர்கள்.. மிக சரியே... இது பழகினால், அப்புறம் பெரிய அளவில் ஆன்மீக யாத்திரை நடைபயிலலாம்...

//பாதம் தார் ரோடை
பார்த்தலே அலறியது ..பருமனை பார்த்து
உராய்வில் கால் கதறியது .. பந்துக்கிண்ண
மூட்டு எல்லாம் கழண்ட மாதிரி இருந்தது..
விரட்டப்பட்ட கோழி போல விரைவாக
நடந்தால்தான் மற்றவர்களின் வேகத்தோடு
போக முடிந்தது .."பரவாயில்லை வந்துவிடு"
என எங்கே அவர் என் உறுதியைக் குலைத்து
விடுவரோ என பயந்து அமைதி காத்தேன்..//

கவலை வேண்டாம் தேனம்மை... இதற்கு உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் தக்க பலனுண்டு. நீங்கள் வேண்டினாலும், வேண்டா விட்டாலும்...
அது தானே கடவுளின் மகிமை...

//கண்டவராயன் பட்டிக் கம்மாய்., திண்டுக்கல்
பாலம்., விருப்பாச்சி மேடு இது மூன்றும் பத்து
நாளாகியும் கனவில் கடக்க முடியாத இடங்களாய்
எல்லாம் முடித்து கிரிவலம் வந்து யானையடிப்
பாதையில் சென்று ஆண்டவனை தரிசித்தபோது
ஏற்பட்ட பரவசம் அப்பப்பா சொல்லில் அடங்காது...//

ஆஹா... படிச்சு முடிச்ச எனக்கே லைட்டா கால் வலிக்குதே...

சரி...சரி... கடவுளை காண்பதென்ன அவ்வளவு எளிதா ??

உங்களுக்கு பதிலளிக்கும் இவ்வேளையில் நான் பெருமைக்காக இல்லையென்றாலும் சொல்ல வேண்டியிருக்கிறது... தொடர்ந்து 10 க்கும் மேற்பட்ட முறை பவுர்ணமி அன்று திருவண்ணாமலை “கிரிவலம்” சென்று வந்தது நினைவுக்கு வந்தது...

இங்கு துபாய் வந்ததும் நிறைய முறை அதை நினைத்து பார்ப்பதுண்டு...

ரிஷபன் சொன்னது…

நடந்து பழகிவிட்டால் அதன் சுகம் புரிபட்டு போகும்.. கிரிவலம் போயிருக்கிறேன்.. இங்கும் எப்போதும் நடைதான் பிடித்தது..

அண்ணாமலையான் சொன்னது…

’நட’க்கட்டும்.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

//பாத்துக் கொண்டே செல்வார்கள் ... சில நாளில்
பழகிவிடும் ...அவர்களுக்கு...!!!//

நல்ல நகைச்சுவை உணர்வு, "நடை" பற்றிய உங்கள் (எழுத்து) "நடை" அருமை.

செ.சரவணக்குமார் சொன்னது…

அருமையான உங்களது எழுத்து நடை, நாங்களும் உங்களோடு பாத யாத்திரையில் நடந்ததைப் போன்ற உணர்வைத் தருகிறது தேனம்மை அக்கா.

செ.சரவணக்குமார் சொன்னது…

அருமையான உங்களது எழுத்து நடை, நாங்களும் உங்களோடு பாத யாத்திரையில் நடந்ததைப் போன்ற உணர்வைத் தருகிறது தேனம்மை அக்கா.

Menaga Sathia சொன்னது…

படிக்க சுவராஸ்யமா இருக்கு அக்கா.மாலுக்கு போய் சாமான் வாங்கி வருவதற்குள் கால் பயங்கரமா வலிக்குது.ம்ம்ம்....அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க...

ஜோதிஜி சொன்னது…

எனக்குள் இருந்த சின்ன வருத்தத்தை இந்த இடுகை எழுத்து இன்று போக்கி விட்டது. என்ன அற்புதமான எதார்த்தமான வீச்சு.

இன்னும் பச்சையாக சொல்லப்போனால் ஆன்மீக விசயம் என்றாலும் பலருக்கும் செருப்ப கழட்டி (நடக்கும் போது) அடிச்சமாதிரி. நவீனம் தந்த வீக்கம்.

ரொம்ப்பபபபபப பிடித்தது.

Unknown சொன்னது…

உங்க நட நல்ல நட (எழுத்து )

Paleo God சொன்னது…

நடத்துங்க ..:)) அடுத்த பதிவுக்கு வைய்டிங்..:))

Chitra சொன்னது…

அக்கா, உங்களுக்கு "கவிதை கங்கா" னு பட்டம் கொடுத்து இருக்கோம்.. அப்படியே, பொங்கி வரீங்க.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்ல தகவல்கள் தேனம்மை அக்கா .

நடைபயிற்சி ரொம்ப உடம்புக்கு நல்லது என்பதை அறிந்து கொண்டேன் .

jothi சொன்னது…

நீங்க காரைக்குடியா?? நாங்க திண்டுக்கல்லில் இருந்துதான் கிளம்புவோம். காலை குளிரில், ஒரு கம்பளி போர்வையை போர்த்திக்கொண்டு லெமன் சாதம், புளி சாதம், தயிர்சாதம் என ரவுண்டு கட்டி சாப்பிட்டுகிட்டே நடப்போம். விருப்பாச்சி மேடு தாண்டி சத்திரப்பட்டிக்கு மேல தான் வேட்டையே. கால் வீங்கி, முகம் வீங்கி,.. அப்பா,. சாமி,.. அந்த சண்முக நதியில் குளிக்கும் போது எல்லா சோர்வும் பறந்து போய்விடும்,..

ம்ம்ம்ம்ம்ம், அது ஒரு காலம்,.. இப்ப ஒரு கிலோமீட்டர் நடப்பதற்கே ரெண்டு ஹார்லிக்ஸ் பாட்டில் தேவைப்படுது,..

உங்க பதிவு சந்தோசமான பழனி பாதயாத்ரையை கிளப்பி விட்டது. மிக்க நன்றி

புலவன் புலிகேசி சொன்னது…

நல்ல ந(டை)ட...

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல அனுபவங்கள். நல்ல பழக்கங்களை எழுதி உள்ளீர்கள். இறங்கினாலே ஆட்டோ... உண்மைதான் மாற்றிக் கொண்டு நடை பழகணும். உங்களோடு கூட நடந்தா மாதிரி அனுபவத்தை எழுதி இருக்கிறீர்கள்.உபவாசம், நடைப் பயிற்சி உடலையும், மௌன விரதம் மனதையும் பழக்குகின்றன

PPattian சொன்னது…

ஏதோ பாதயாத்திரையாம் என்று சொல்லி விட்டு சென்று விடுவேன்.. இவ்வளவு கஷ்டங்களா? உங்கள் மன உறுதியும் விடா முயற்சியும் வியக்க வைக்கிறது. தொடர்ந்து எழுதுங்க இந்த யாத்திரையின் அனுபவங்களை..

அறிவு GV சொன்னது…

///ஆண்டவனை தரிசித்தபோது
ஏற்பட்ட பரவசம் அப்பப்பா சொல்லில் அடங்காது...///

முயற்சியுடையார்.., இகழ்ச்சியடையார்..! வாழ்த்துக்கள் அக்கா...!

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

இப்ப பிரமிப்பா இருக்கு.இன்னும் கொஞ்சநாள் போனா இது சந்தோசமான மலரும் நினைவா ஆயிடும்.ஒரு அருமையான அனுபவம் உங்களுக்கு முருகன் குடுத்திருக்கார். உங்க வேண்டுதல் பலிக்கட்டும்.

Thenammai Lakshmanan சொன்னது…

என் வலியை எல்லாம் உங்கள் வலியாய் உணர்ந்ததற்கு
நன்றி சகோ ஹுசைனம்மா .,சகோ நவாஸ்..

Thenammai Lakshmanan சொன்னது…

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வரவு ராகவன் நலமா ..?நன்றி தோழரே...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி விஜய் என் வலியில் பங்கெடுத்ததற்கு

Thenammai Lakshmanan சொன்னது…

உண்மை தமிழ் உதயம் நன்றி உங்க கருத்துக்கு

Thenammai Lakshmanan சொன்னது…

வரிக்குவரி படித்து ரசித்ததற்கு நன்றி கோபி திருவண்ணாமலையா ..அது பாக்கி இருக்கு எனக்கு

Thenammai Lakshmanan சொன்னது…

சிலசமயம் நடை சுகம்தான் ரிஷபன்

Thenammai Lakshmanan சொன்னது…

அண்ணாமலையான் என்னையவா சொல்லுறீங்க இப்போ இல்ல கொஞ்ச நாள் கழிச்சு நடக்குறேன்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சைவக்கொத்துப்பரொட்டா

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சரவணன்.,

நன்றி மேனகா .,

உங்கள் அன்பிற்கு ...

Thenammai Lakshmanan சொன்னது…

இதில் என்னைப்பற்றியே நிறையக் குறைகள் இருக்கு ஜோதிஜி எனவே பகிர்ந்து கொண்டேன் நன்றீ ஜோதிஜி

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி விஏஎஸ் சங்கர்

மற்றும் பலாபட்டறை ஷங்கர்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சித்ரா அப்ப நீயும் அமுதாவும் யமுனா சரஸ்வதியா அப்ப சரி

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி புலிகேசி

Thenammai Lakshmanan சொன்னது…

நல்லா ரவுண்டு கட்டி நடந்து இருக்கீங்க ஜோதி நீங்க அழகப்பா காலேஜா

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ராம்

நன்றி பட்டியன்

உங்க ஆறுதலான வார்த்தைகளுக்கு

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி அறிவுஜீவி

நன்றி சாந்தி என் முயற்சியைப் பாராட்டினதுக்கு

ஹேமா சொன்னது…

எழுதியே நடை பழக்க்கிறீங்க தேனு.பாருங்க எத்தனை பேர் கஸ்டப்படுறாங்கன்னு !நல்ல பதிவு.

Mythili (மைதிலி ) சொன்னது…

உங்களோடு கூட யாத்திரைக்கு வந்தது போன்ற ஒரு பிரமையை உண்டாகி விட்டீர்கள். கொமெடி கலந்து சொல்லியிருப்பது அருமை. நடந்தவர்களுக்கு தானே அதன் அருமை தெரியும். பகிர்வுக்கு நன்றி தேனம்மை.

கண்ணகி சொன்னது…

நடத்துங்க..அடடா..என்ன நடை...நல்லாருக்குங்க..

Thenammai Lakshmanan சொன்னது…

வாங்க ஹேமா எழுதியே நடை பழகுறேனா அல்லது பழகிட்டேனா

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மைதிலி கிருஷ்ணன் உங்க வரவுக்கும் கருத்துக்கும்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கண்ணகி உங்க வரவுக்கும் கருத்துக்கும்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...