எனது பதிநான்கு நூல்கள்

புதன், 31 டிசம்பர், 2014

நர்சிம்மின் அய்யனார் கம்மா ஒரு பார்வை :-


நர்சிம்மின் அய்யனார் கம்மா ஒரு பார்வை :-


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( மூன்றாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி:- இந்த விமர்சனம் 16.11.2014 திண்ணையில் வெளிவந்தது.

செவ்வாய், 30 டிசம்பர், 2014

ராமலெக்ஷ்மியின் இலைகள் பழுக்காத உலகம் ஒரு பார்வை.ராமலெக்ஷ்மியின் இலைகள் பழுக்காத உலகம் ஒரு பார்வை.

இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( மூன்றாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.

திங்கள், 29 டிசம்பர், 2014

அகநாழிகை இதழ் -7 ஒரு பார்வை.

அகநாழிகை இதழ் -7 ஒரு பார்வை. அகநாழிகை இதழ் -7 ஒரு பார்வை.

ராஜ சுந்தரராஜனின் கேளாரும் வேட்ப மொழி இலக்கிய இலக்கண ஆராய்ச்சி செய்கிறது. எது ரியலிஸம், மார்டனிஸம், போஸ்ட் மார்டனிஸம், ரொமாண்டிசிஸம், நியோ ரொமாண்டிசிஸம், பற்றி விவரிக்கிறது.கவிதையின் கணங்களை பிரித்துக் காட்டுவது எனவும் சொல்லலாம்.

வியாழன், 25 டிசம்பர், 2014

கோவையில் யாதுமாகி நாவல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்.

திருவண்ணாமலை வம்சி புக்ஸ் வெளியிட்டிருக்கும் எங்கள் அம்மாவின்  ’யாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழா அழைப்பிதழ். கோவை மக்கள் அனைவரும் வருகை புரிந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்

சுசீலாம்மாவின் யாதுமாகி :-சுசீலாம்மாவின் யாதுமாகி :-

இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( மூன்றாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி :- இந்த விமர்சனம் நவம்பர் 21, 2014 திண்ணையில் வெளிவந்தது.


புதன், 24 டிசம்பர், 2014

திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள். 2014.

என் இனிய  நட்புகளே .,திருப்பூர் அரிமா சங்கத்தின் 2014 ஆம் ஆண்டிற்கான பெண் எழுத்தாளர்களுக்கான " சக்தி விருது "( அன்ன பட்சி கவிதைத் தொகுதிக்காகக்  ) கிடைத்துள்ளது.

நன்றி அகநாழிகை பதிப்பகம் & அகநாழிகை பொன் வாசுதேவன்.

இது குறித்து மத்திய அரிமா சங்கத்தின் மேலாளர் அனுப்பிய  கடிதம்.

///அன்புடையீர்...வணக்கம். நலம் குறித்த விருப்பம்.  வாழ்த்துக்கள்
 மத்திய அரிமா சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும்
“ அரிமா விருதுகள்  ”  டிசம்பர் 25 மாலை 5 மணி அளவில் தலைவர் அரிமா பிரதீப்குமார் தலைமையில் நம் அரிமா சங்க வளாகத்தில்  நடைபெற உள்ளது. ( மாலை 5 மணி முதல் 8 மணி வரை)  5 மணி முதல் படைப்பாளிகளின் படைப்பு அனுபவ உரைகள் இருக்கும்.

தாங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான கீழே குறிப்பிட்ட பரிசைப் பெற்றுச் சிறப்பிக்க வேண்டுகிறேன். அரிமா குறும்பட விருது / சக்தி விருது.

செவ்வாய், 23 டிசம்பர், 2014

ரோல் மாடல் என்னுடைய பார்வையில்:-ரோல் மாடல் என்னுடைய பார்வையில்.:-

இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( மூன்றாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்

டிஸ்கி :- இந்த விமர்சனம் ஜூன் 15 , 2014 திண்ணையில் வெளியானது.

திங்கள், 22 டிசம்பர், 2014

யானை டாக்டர்.யானை டாக்டர். :-
இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( மூன்றாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்


ஞாயிறு, 21 டிசம்பர், 2014

குழந்தைகளையும் தாக்கும் கொடூர நோய்கள்.:-

குழந்தைகளையும் தாக்கும் கொடூர நோய்கள்.:-
டல்லாஸ் பையர்ஸ் க்ளப் என்றொரு படம் வந்து ஏகப்பட்ட ஆஸ்காரை அள்ளியது. அந்தப்படத்தைப் பார்த்தபின் தான் எய்ட்ஸ்க்கும் மருந்து இருக்கிறது தெரிந்தது. ஆனால். அது பல வருடங்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டிய மருந்துகள். சலுகை விலையில் ஒரு கடையில் கிடைக்கும் என்றாலும் அந்த சொற்பப் பணத்திற்காக அந்த ஹீரோ படும் சிரமங்கள் கதையில் கண்ணீர் வரவழைக்கும்.  
குழந்தைகளைத் தாக்கும் நோய்கள் என்றால் பெரியம்மை, கக்குவான் இருமல், போலியோ, தொண்டை அடைப்பான், நிமோனியாக் காய்ச்சல், டிஹைட்ரேஷன், மலேரியா, டைஃபாயிடு, மஞ்சள் காமாலை, டெங்கு, சிக்கன் குனியா ஆகியனதான் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இவைகளுக்கெல்லாம் தடுப்பு மருந்தும் மாற்று வைத்தியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. ஓரளவு இவற்றை சொட்டு மருந்துகளும் தடுப்பூசிகளும் போடுவதனால் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்.

சனி, 20 டிசம்பர், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர், மூன்றுதாய்க்கு ஒரு மகன் முத்துராமலிங்கம் சுப்ரமணியன்

சிலுவைகளை நீ சுமந்து
மாலைகள்
எமக்குச் சூட்டினாய்.
சிறகடிக்கும்
பறவைக்கெல்லாம்
வானத்தைப் போல மாறினாய். !.
விழியோடு நீ
குடையாவதால்
விழிகள் நனைவதில்லை
நெஞ்சில் பூமாலை. !

Love You Amma. !

என் முகநூல் சகோதரர் & நண்பர் முத்துராமலிங்கம் சுப்ரமணியத்தின் முகநூல் பகிர்வு இது. குழந்தையைப் போன்ற அழகான புன்னகைக்குச் சொந்தக்காரர்.  அமெரிக்க மண்ணில் கோலோச்சி வரும் அவருக்குத் தற்போதுதான் திருமணமாகி இருக்கிறது.தலை தீபாவளிக்கு மனைவி கையால் சாப்பிட்ட உணவுகளைப் பட்டியலிட்டிருந்தார். காதெல்லாம் புகை வந்தது நமக்கு. :) அப்புறம் இன்னொரு நாள் சமைத்த உணவுகள் புகைப்படம் ( அவரே செய்தாரா தெரியல >> :)  ) போட்டிருந்தார். பார்த்துப் பலர் மிரட்சியடைந்ததாகக் கேள்வி. ! :) அப்போது அதை எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லி நாங்க தேற்றினோம். :) ( ஹிஹி சிண்டு முடிய பலமா முஸ்தீபு செய்றேன் >:) அங்கே அவரது அம்மா டாலி பாலாவும் கமெண்ட் போட்டு தேற்றி இருந்தார்கள். ! :)

இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா. டாலி பாலா முகநூல் மூலம் அறிமுகமாகியவர். அடக் கடவுளே நான் உண்மையிலேயே அவரோட அம்மான்னுல்ல நினைச்சிருந்தேன். !. எல்லா ஃபோட்டோவிலும் கமெண்டுகளிலும் பார்த்தால் இவர்தான் அவங்க பிள்ளைன்னு சத்தியம் அடிச்சி சொல்லலாம். அப்பிடி ஒரு முக ஒற்றுமை. !!!!!!!!

வியாழன், 18 டிசம்பர், 2014

40 ஆவது ராங்க். !!!

விமர்சகர் வட்டம் சிறுகதைப் போட்டி அறிவித்து இருந்தது. அதற்கு என்னுடைய ”பட்டாம்பூச்சிகளும் பூக்களும்” என்ற  சிறுகதையை அனுப்பி இருந்தேன்.

அதை விமர்சகர் வட்டம்  வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்கள். ஒரு நாயகன் என்னும் கதை முதலிடம் பெற்றிருக்கிறது. சிறப்பான கதை. ! வாழ்த்துகள். ! தொடர்ந்து அவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் மதிப்பெண்களும் ராங்கும் , கதை பற்றிய கருத்துக்களையும் வேர்டு ஃபைலாக அனுப்பிக் கொண்டிருந்தார்கள். நன்றி விமர்சகர் வட்டம். !


//// விமர்சகர் வட்ட சிறுகதைப் போட்டிக்கு  கதைகள் அனுப்பிய அனைவருக்கும் நன்றி. நடுவர்களின் இறுதி மதிப்பெண் இன்னும் ஒரிருநாட்களில் தெரிந்துவிடும். ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள்  இறுதி சுற்றிற்கு தேர்தெடுக்கப்படுகின்ற  பதினைந்து கதைகள் சாரு விமர்சகர் வட்டத்தில் பகிரப்படும்.

காண்டாமணியும் பிச்சைத் தட்டும். :-

ஊசிமுனை அமர்வு
சுகம் உனக்காய்
காத்திருப்பதை விட.

ஆசனவாய் வழி அது
கபாலம் பாய்ந்தாலும்
இருப்பின் வலி குறைவு,

ஞாபகம் புரட்டிய வெளியில்
கோயில் வாசலில்
பிச்சைக்காரனாய்,
உன் கருணைக்காய்த்
தட்டேந்திக் காத்து,

போவோர் வருவோரின்
காசுகளால்
நிரம்பிக் கிடக்கிறது தட்டு.

பல்லாக்கில்
பவனிவரும் நீ..
பக்கம்கூடத் திரும்பாமல்
பதுமையாய்..

புதன், 17 டிசம்பர், 2014

காந்தி தேசம் எனது பார்வையில்:-


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( மூன்றாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 
டிஸ்கி :- இந்த விமர்சனம் ஜூன் 22, 2014 திண்ணையில் வெளியானது.

செவ்வாய், 16 டிசம்பர், 2014

அத்தைமடி மெத்தையடி:-அத்தைமடி மெத்தையடி :-
த்லுலுலுவ்வாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ.. என்று குட்டிக் குழந்தையை மடியில் இட்டு கே ஆர் விஜயா தாலாட்டும்போது நாமும் குழந்தையாகிவிடமாட்டோமா என்றிருக்கும். இந்தப் பாடலை இன்று என்றில்லை கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு வயதிருக்கும் பார்த்த அன்றிலிருந்தே அப்போதிலிருந்தே அப்படி ஒரு பைத்தியம் இந்தப் பாட்டின் மீதும் கே ஆர் விஜயாமீதும்.

திங்கள், 15 டிசம்பர், 2014

திரு ஞானக்கூத்தன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

எனது பெருமதிப்பிற்குரிய சுசீலாம்மாவின் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த இந்த அழைப்பிதழை வெளியிடுவதில் மகிழ்கிறேன். மேலும் விருதுபெற்ற திரு ஞானக்கூத்தனுக்கு வாழ்த்துகள்.

நான் ரசித்த அவருடைய கவிதை ஒன்று.

//// உயர்திரு பாரதியார்

July 30, 2006
சிறுவயதில் நான் பார்த்த நடனம் ஒன்றில்
பாடினார் இளம் பெண்கள் இருவரேதோ
பாட்டுக்கு. எவரெழுதித் தந்தா ரந்தப்
பாட்டென்று நான் கேட்டேன் உம்மைச் சொன்னார்.

சிறுவயதில் நான் சென்ற பொதுக் கூட்டத்தில்
சூடுள்ள சிலவரிகள் ஒருவன் சொன்னான்
எவரெழுதித் தந்தவரி என்றேன். வேர்த்த
முகம்துடைத்துக் கொண்டபடி உம்மைச் சொன்னான்,

அன்பெனும் பேராயுதம்.

101. நீண்டுவிட்ட தொலைதூரப் பயணமும் நீட்சியடையாமல் போய்விட்ட இணையமும் உங்கள் வாழ்த்துகளை என்னால் உரிய நேரத்தில் பார்க்க இயலாமல் செய்துவிட்டது. மிக நன்றி என் அன்பிற்குரிய நட்புகளே.. வாழ்க வளமுடன்.

102. Due to continuous travel and net problem im not able to respond for your wishes my dear friends.. Thank God and facebook for giving me such beautiful and awesome people as my friends :)

103. feeling annoyed·
டெல்லி டு கன்யாகுமரி.. பஸ்ஸிலும் ட்ரெயினிலும் படிக்கட்டுகளில் தொற்றிப் பயணிப்பது தற்கால ஆண்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்று..

104. எதனாலும் உன்னால்
வீழ்த்த முடியாது என்னை.
நான் தாங்கி இருப்பது
அன்பெனும் பேராயுதம்..

105.  வாழ்வின் பக்கங்களில்
அர்த்தம் தேடிச் சலிக்கிறது
மனம்

சனி, 13 டிசம்பர், 2014

சனிக்கிழமைப் பதிவு. முரளிகிருட்டிணன் சின்னதுரையின் அகரமுதல எழுத்தெல்லாம்..


முரளிகிருட்டிணன் சின்னதுரை. முகநூல் நண்பர், சகோதரர், வயசுப்படிப் பார்த்தால் என் பிள்ளைகள் வயசுன்னும் சொல்லலாம்.


இளங்கலை கணினியல் துறையில் பொறியியல் பட்டம் பயின்றவர். ஊடகவியலாளர்.

தமிழ் மொழி மீது பற்று உள்ளவர்.. சமூக செயற்பாட்டாளர். புதிய யுகம் தொலைக்காட்சி வழங்கும் பல நிகழ்ச்சிகளில் ( டாக் இட் ஈஸி, மனம் திரும்புதே, கிச்சன் காபினெட், ) இவரின் பணி இருக்கிறது. இளையோர் குரல் என்னும் இலக்கியப் பத்ரிக்கை நடத்தி வருகிறார். இவர் கல்லூரியில் படித்த காலத்தில்   மானூர் புகழேந்தி கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் என்ற பட்டம் வழங்கினார்.

சாட்டர்டே ஜாலிகார்னர், சாட்டர்டே பதிவு என்று இரு போஸ்ட்களை என் வலைத்தளத்தில் வெளியிடுகிறேன் என்று ஒரு முறை முகநூலில் போட்டதும் உடனே வந்து ( அது பேராசிரியர் குணா அவர்களின் தமிழ்மொழி பற்றிய பதிவு ) ஏன் சனிக்கிழமைப் பதிவு என்று போடலாமே. ஏன் ஆங்கிலத்தில் போடணும் என்று உள்டப்பியில் வந்து குரல் கொடுத்தவர். அவ்வளவு மொழிப்பற்று.

/// திருக்குறளும், திருவள்ளுவரும் அரசியல் பாடு பொருள் ஆகியது.///

///உலகில் பல மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டது திருக்குறள்....
இது பாசக ஆட்சிக்கு வரும் முன்பே நடந்தது என்று அறிந்துக் கொள்வோமாக
ஆங்கிலத்தில் couplets என்று சொல்வார்கள்///

///திருவள்ளுவரும், திருக்குறளும் வாஜ்பாய் காலத்தில் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்கள் போலும் ....///

என்றெல்லாம் அவரின் முகநூல் சுவற்றில் நிலைத்தகவல்களைப் பார்த்ததும் உடனே  ஒரு கேள்வி கேட்டேன் . ஆனால் அரசியல் காரசாரம் எதுவும் வேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக்கொண்டதற்கிணங்க. , நான் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இதோ. 

///திருக்குறளும் திருவள்ளுவரும்..  ////

வியாழன், 11 டிசம்பர், 2014

மலைகள் எத்தனை வகைகள்.. ( MOUNTAIN DAY )

மரம் செடி கொடிகள் , மற்ற மலை வாழ் உயிரினங்கள் வாழும் இடத்தை நாம் ப்ளாஸ்டிக் மலைகளால் மூடி வருகிறோம். பத்தாதுக்கு ப்ரபஞ்ச ரகசியத்தை அறிகிறோம் என்று மலையைக் குடைந்து ஒரு அணு ஆய்வுக்கூடம் ( நியூட்ரினோ ) கட்ட முயற்சி நடந்து வருது.  மான்களும் முயல்களும், யானைகளும் காட்டெருதுகளும் , புலிகளும் உலவும் மலையையே துண்டு துண்டாக வெட்டி  கூறு போட்டு தின்னத் தெரியும் நமக்கு. நம்மால் உருவாக்க முடியாத பொருள்களில் மலையும் ஒன்று. நிலத் திட்டுகள் நகர்ந்து மலையை உருவாக்குகின்றன. இவை குஜராத்,  ஆந்திரா, கேரளா,  கர்நாடகா, மலேஷியா, ஓம்காரேஷ்வர், (சேலம், பழனி, கோவை), தமிழ்நாட்டில்  நான் பயணம் செய்தபோது புகைப்படம் எடுத்த மலைகள்.

 குவாலியரிலிருந்து போபாலுக்கு வரும் வழியில் விந்தியா சத்புரா மலைகள்.

ஆந்திராவில் ஹைதைக்கு அருகே உள்ள மலைகளை ஒரு ரயில் ப்ரயாணத்தின்போதே  எடுத்தேன்.


இலைக்குழந்தைகள்.

முதல் இலை உதிர்கிறது.
அடுத்தடுத்து ஒவ்வொன்றும்.
தனிமையின் மிச்சத்தோடு
சருகுவழி மிதந்து இறங்குகிறது வெய்யில்.
உஷ்ணம் கக்குகிறது
உதாசீனமாய் மிதிக்கப்படும் பூமி.
நெடுஞ்சாலையில் ஓடும்
வண்டிகளின் பின்னெல்லாம் ஓடிப்
புழுதியாகின்றன சருகுகள்.

செவ்வாய், 9 டிசம்பர், 2014

நிலவுத் தேனீயும் சூரியப் பட்டாம்பூச்சியும்.

1.உன் நினைவு மகரந்தத்தோடு
பட்டாம் பூச்சிகள் சுற்றுகின்றன..
சேகரிக்கும் பூவாகிறேன்.

***********************************

2. உன்னைத் தேடித்தேடிக்
களைக்கும் இமைகள்
உன் வருகைப் பூ மலர்ந்ததும்
படபடத்து பட்டாம்பூச்சியாகின்றன..


**************************************
 
3. தங்கப் பட்டாம்பூச்சியாய் சூரியனும்
வெள்ளிப் பட்டாம்பூச்சியாய் நிலவும்
பூமிப்பூவை மாறி மாறி மொய்த்தபடி..

***************************************
Related Posts Plugin for WordPress, Blogger...