எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 24 டிசம்பர், 2014

திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள். 2014.

என் இனிய  நட்புகளே .,திருப்பூர் அரிமா சங்கத்தின் 2014 ஆம் ஆண்டிற்கான பெண் எழுத்தாளர்களுக்கான " சக்தி விருது "( அன்ன பட்சி கவிதைத் தொகுதிக்காகக்  ) கிடைத்துள்ளது.

நன்றி அகநாழிகை பதிப்பகம் & அகநாழிகை பொன் வாசுதேவன்.

இது குறித்து மத்திய அரிமா சங்கத்தின் மேலாளர் அனுப்பிய  கடிதம்.

///அன்புடையீர்...வணக்கம். நலம் குறித்த விருப்பம்.  வாழ்த்துக்கள்
 மத்திய அரிமா சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும்
“ அரிமா விருதுகள்  ”  டிசம்பர் 25 மாலை 5 மணி அளவில் தலைவர் அரிமா பிரதீப்குமார் தலைமையில் நம் அரிமா சங்க வளாகத்தில்  நடைபெற உள்ளது. ( மாலை 5 மணி முதல் 8 மணி வரை)  5 மணி முதல் படைப்பாளிகளின் படைப்பு அனுபவ உரைகள் இருக்கும்.

தாங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான கீழே குறிப்பிட்ட பரிசைப் பெற்றுச் சிறப்பிக்க வேண்டுகிறேன். அரிமா குறும்பட விருது / சக்தி விருது.


வழங்கப்படும் விருதுகள்:
1. அரிமா குறும்பட விருது  -4 பேருக்கு
2. அரிமா ஆவணப்பட விருது -3 பேருக்கு
3. அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கானது )- 15 பேருக்கு
                                                   அன்புடன்,
                                                 ராஜராஜன் 

 “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ” 
அரிமா குறும்பட/ ஆவணப்பட விருது  :
1.  சாரோன், சென்னை( பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம் பற்றிய ஆவணப்படம் )
2. யுகபாரதி புதுவை( தீதும் நன்று பிறர்தர வாரா )
3. நம்மூர் கோபிநாத், சென்னை(  why why    )
4.மதரா , திருனெல்வேலி ( கதவு  )
5. கே.பி.ரவிச்சந்திரன் கரூர் ( “ விழிகள் )
      * சிறப்புப் பரிசு  : திருப்பூர் குறும்படப் படைப்பாளிகளுக்கு
           1.சபரீஸ்வரன், 2. சி.கோபிநாத் 3. பைரவராஜா
*. அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கானது )
    1.  .விஜயலட்சுமி சுந்தர்ராஜன் ( நாவல் ). கோவை 2. சுபாஷிணி, சென்னை, (கட்டுரை)    . 3.இடைமருதூர் கி.மஞ்சுளா, சென்னை ( நாவல் ). 4.இந்திராபாய், சென்னை ( பெங்களூர்  ) 5 .கவுரி கிருபானந்தம் சென்னை      ( மொழிபெயர்ப்பு ),  6..ஸ்ரீஜாவெங்கடேஷ், சென்னை( நாவல் ).  .,7. கமலா  இந்திரஜித்., திருவாரூர்(சிறுகதை )  8.சாந்தாதத் ஹைதராபாத்) மொழிபெயர்ப்பு     9.தேனம்மை லட்சுமணன் (ஹைதராபாத்)-கவிதை      10.  பாலசுந்தரி, திருவாரூர்(சிறுகதை )   11. எம் எஸ் லட்சுமி, சிங்கப்பூர்(கட்டுரை)     12. மாதாங்கி , சிங்கப்பூர்- கவிதை.13. ஈஸ்வரி, கோவை (கட்டுரை)      14  கவுதமி, கோவை -கவிதை       15. சவுதாமினி , தாராபுரம் (கட்டுரை)     16. ராஜேஸ்வரி கோதண்டம், ராஜபாளையம்  (மொழிபெயர்ப்பு )   17.   ஜெயஸ்ரீ சங்கர்(ஹைதராபாத்) நாவல்,18.மைதிலி சம்பத்  (ஹைதராபாத்), நாவல் 20.வனஜா டேவிட் , பெங்களூர் நாவல்           21. ராமலட்சுமி  , பெங்களூர், - சிறுகதை 22.சுஜாதா செல்வராஜ் , பெங்களூர் –கவிதை.

பதினைந்து பெண் படைப்பாளினிகளைக் காணும் ஆவல் அதிகரித்துள்ளது. அங்கே அகிலா புகழ், மாதங்கி, சுபாஷிணி திருமலை, சாந்தா தத்,கவுரி கிருபானந்தம், ஸ்ரீஜா வெங்கடேஷ் , ராஜேஸ்வரி கோதண்டம், ஜெயஸ்ரீ சங்கர், ராமலெக்ஷ்மி, சுஜாதா செல்வராஜ்  ஆகியோரைச் சந்திக்கப் பெரு விருப்பம் கொண்டிருந்தேன்.ஆனால் செல்ல இயலவில்லை. 

இது குறித்து முகநூலில் பதிவிட்டபோது என் நட்பூக்கள் அனைவரும் வாழ்த்தினர்.  எப்போதும் துளிப்பாவில் வாழ்த்தும் சகோ பக்ருதீனின் வாழ்த்தை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன். . :)  நன்றி சகோ.

Fakhrudeen Ibnu Hamdun வாழ்த்துகள் ஆச்சி.

அன்னப்பட்சி போல அதிகம் எழுதிட
இன்னுமின்னும் ஆயிரம் வாழ்த்து.


5 கருத்துகள்:

 1. அனைவருக்கும் வாழ்த்துகக்ள்

  பதிலளிநீக்கு
 2. விருது பெற்ற அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்!
  நன்றியுடன்,
  புதுவை வேலு,
  வலைப் பூ நண்பருக்கு,
  வணக்கம்!
  அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்துக்கள்
  நட்புடன்,
  புதுவை வேலு,
  www.kuzhalinnisai.blogspot.fr

  (இயக்குனர் சிகரம் கே.பி அவர்களுக்கு கவிதாஞ்சலி!
  பங்கு பெற வாருங்கள்
  குழலின்னிசை வலைப் பூ பக்கமாய்!)
  நன்றி!

  பதிலளிநீக்கு
 3. நன்றி ஜலீலா

  நன்றி தனபாலன் சகோ

  நன்றி வேலு சகோ.

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...