எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 25 பிப்ரவரி, 2017

சாட்டர்டே போஸ்ட். தென்கிழக்கு ஆசியாவின் முதல் தண்டாயுதபாணி கோயில் பற்றி தெக்கூர் இராமநாதன்.

தெக்கூரைச் சேர்ந்த முகநூல் நண்பர் இராமநாதன் மிகச் சிறப்பான தகவல்களை அவ்வப்போது பகிர்வார். செட்டி நாட்டின் பாரம்பரிய வீடுகள், உணவுகள், பழக்க வழக்கங்கள், திருவிழாக்கள், திருமண நடைமுறைகள், வீட்டு விசேஷங்கள், படைப்புகள், பூசைகள், கோயில் திருப்பணிகள், கண்ணகி, பட்டினத்தார் பற்றிய பல பதிவுகள் மனங்கவர்ந்தவை.

இன்றைய இளைஞர்கள் அரசியல் பொதுநலம் ஆகியவற்றில் சிறப்பாக செயலாற்றுகிறார்கள்.சிலர் இலக்கியம், ஆன்மீகம் ஆகியவற்றிலும் மரபு சார்ந்த விஷயங்களிலும் கவனம் செலுத்தி ஆவணப்படுத்துகிறார்கள். அவர்களுள் ஒருவர் தெக்கூர் இராமநாதன். அவரது சீரிய பணிகளுக்காக அவரை வாழ்த்துவோம்.

{{ஜோதி இராமநாதன் என்பது அவர் பெயர் ஊடகங்களில் தற்போது இராமு இராமநாதன் என்ற பெயரில் கணக்குகள் வைத்துக்கொண்டு என்  பதிவுகளை பதிவு செய்கிறார்.  சொந்த ஊர் ஆ.தெக்கூர்  (கோவில்  மாத்தூர் மணலூர் )
தற்போது பணி நிமித்தமாக சென்னையில் உள்ளார். பெற்றோர் வடலூரில் உள்ளனர். பள்ளிபடிப்பு நெய்வேலியி புனித சின்னப்பர் பள்ளி மற்றும்
 கடலூர் மஞ்சகுப்பம் புனிதவளனார் பள்ளியில். கல்லூரிப்படிப்பை சென்னை செங்குன்றம் அருகில் உள்ள ஜெயசூர்யா பொறியியல் கல்லுரியில் B.E (ece) 2014கில் முடித்துள்ளார்.  தற்போது சென்னையில் ஒரு தனியார் தொலைத்தொடர்பு துறை நிறுவனத்தில் பொறியாளராக தற்போது பணி செய்கிறார் }}
அவரிடம் நம் சாட்டர்டே போஸ்டுக்காக ஆன்மீகம் சம்பந்தமாக ஏதும் எழுதித்தரும்படிக் கேட்டபோது தென்கிழக்கு ஆசியாவிலேயே முதல் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட தண்டாயுதபாணி கோயில் பற்றி எழுதி அனுப்பி உள்ளார். அதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.தென்கிழக்கு ஆசியாவின் முதல் தண்டாயுதபாணி கோவில் :
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கொண்டுவிற்க சென்ற இடமெங்கும் ஏரகத்து முருகனின் திருக்கை வேலை கொண்டு சென்று நிறுவி வழிபடும் வழக்கம் கொண்டவர்கள். அதுபோல மலேயா மண்ணில் பினாங்கில் கி.பி. 1818ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொழில் துவங்கிய நகரத்தார்கள், பினாங்கு நீர்வீழ்ச்சி அருகில் 1800 வாக்கில் தோட்டத்தொழிலார்களாகவும் கூலிகளாகவும் வெள்ளையர்களால் குடியேற்றப்பட்ட தமிழர்கள் நீர்விழ்ச்சியை ஒட்டிய பகுதியில்  தாமிர வேல் ஒன்றை நிறுவிய வழிபட்டு வந்தனர். அதனை தொழில்துவங்க வந்த நகரத்தார்களும் நீர்விழ்ச்சி பகுதியில் வழிபட்டும் வந்தனர்.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.

1301. அரசன் அன்று கொல்வான். நீதி நின்று கொல்லுதோ.

1302. மத ஒற்றுமை & மன ஒற்றுமை.

1303. மனதை சுழட்டி சுழட்டி அடிக்கும் பாடல். இவங்க நடிக்கிறாங்களா.. உண்மையிலேயே இருக்காங்களான்னு நெனைக்க வைச்ச பாடல். சிம்ரன் என்னோட எவர் ஃபேவரைட்.. பிரஷாந்த் நல்ல டான்சர்.. பட் இதுல உருகி உருகி பாடுறார். ரமேஷ் அரவிந்த நல்ல நடிகர். ஆனா நிறைய படங்கள் சப்போர்டிங்க் ஆர்டிஸ்டாவே செய்திருக்கார்..


”ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான்தான் என்று.. ”

1304. எப்பவும் நமக்கு ஃபேரி டேல்ஸும் நடுவுல கொஞ்சம் கஷ்டமும். ( அழுவாச்சியும் ) ஹாப்பி எண்டிங்கும் பிடிக்கும்தானே.. மில்ஸ் அண்ட் பூன் அண்ட் ரமணி சந்திரன் கதைகள் மாதிரி..

1305. தாங்க்ஸ் தங்க்ஸ் சுபா

//ஃபேஸ்புக்ல குறிப்பிட்டு சொல்லக்கூடிய உறவுகள்ல,ரொம்ப உரிமையோட நான் குறிப்பிடறது தேனக்கா... இவங்க, சமையல்,எழுத்து,டெகரேஷன்,தெளிவா விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது இப்படி எல்லாத்துறைகளில் சிறந்து விளங்கக் கூடியவங்க. அதையும் தாண்டி, எப்போதும் சிரிச்ச முகத்தோட, அன்பா, ஆசையா பேசறது, என்கிட்ட மட்டும் இல்லை,இவங்க எல்லாரோடையும் இப்படித்தான் பழகுவாங்க. இவங்களோட மிகப்பெரிய ப்ளஸ் இது தான்.

அவங்க என்கிட்ட துபாய்ல உள்ள அன்றாட வாழ்க்கையைப் பத்தி, நான் போடுகின்ற கோலத்தைப் பத்தி கேட்டுருந்தாங்க. நான் எனக்குப் பிடித்த துபாய் கோவிலைப் பத்தி தகவல்களைத் தந்தேன். அவங்களுடைய ப்ளாக்ஸ்பாட்ல என்னுடைய தகவல்களைப் பதிவு பண்ணியிருக்காங்க.

தேனக்கா, நன்றின்னு சொன்னா, அது வழக்கமான ஒன்றாகிவிடும். அதனால “ஐ லவ் யூக்கா!!!!! //

-- தாங்க்ஸ் கண்மணி :)

திங்கள், 20 பிப்ரவரி, 2017

தேர்வு நேர கண் பாதுகாப்பு ஆலோசனை குறிப்புகள்.

தேர்வு நேர கண் பாதுகாப்பு ஆலோசனை குறிப்புகள்.

- அ போ இருங்கோவேள்,
மேலாளர் - பயனாளிகள் கல்வி மற்றும் ஆலோசனை,
சங்கர நேத்ராலயா, சென்னை 600 006.
இ-மெயில்: irungovel@gmail.com,

Inline image 1

து மாணவர்களுக்கு தேர்வு நேரம்.

பலரும் இரவும் பகலும் படித்துக் கொண்டே இருப்பீர்கள்.

பொதுவாக நாம் அனைவருமே நமது நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான 75 முதல் 80% செய்திகளை நமது கண்கள் மூலமாகவே தெரிந்து கொள்கிறோம். மேலும் கற்றல் என்னும் தொடர் நிகழ்வை 80% கண்கள் மூலமாகவே செயல்படுத்துகிறோம்.  

நமது தேர்வு வெற்றியியில் நமது கண்களுக்கு மிக முக்கியமான பங்கு இருக்கின்றது. எனவே உங்களுக்கு தேர்வுக்கால கண் பராமரிப்பு குறிப்புகளை கவனமாக கையாளுங்கள்.

1. முகத்தினை குறிப்பாக கண்களை அடிக்கடி குளிர்ந்த நல்ல நீரினால் கழுவுவது நல்லது.

2. தூக்கம் வரும் போது, தூக்கத்தினை தவிர்ப்பதற்காக கண்களை ஈரமாக்கிக்கொண்டு வலுக்கட்டாயமாக படிப்பது தவறு. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் சிறிது நேரம் கண்களை மூடி ஓய்வு எடுத்துக் கொள்வது அல்லது சிறிது நேரம் தூங்கி எழுந்திருப்பது நல்லது.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

ஆரண்யா ஆர்கானிக் ஃபார்மிங் சிறப்புப் பயிற்சி.

மருந்து தெளிச்ச காய்கனிகளையே வாங்கி சாப்பிட்டுட்டு இருக்கோம். இயற்கை முறையில் விவசாயம் பத்தி ஆரண்யா அல்லி நிறைய சொல்லித்தராங்க.

நிறையப்பேருக்கு ஆர்கானிக் ஃபார்மிங்னா என்ன அதை எப்பிடி செய்றதுன்னு தெரிஞ்சிக்க ஆர்வம் இருக்கும்.

சனி, 18 பிப்ரவரி, 2017

சாட்டர்டே ஜாலி கார்னர் - ஆகாயகாதலன் தேவராஜன் ஷண்முகம். :)

முகநூல் நண்பர் தேவராஜன். எம்.ஏ. தமிழ்இலக்கியம் பயின்றவர். . பூர்வீகம் நாகப்பட்டினம் மாவட்டம்- திருக்கண்ணபுரம். வசிப்பது காஞ்சீபுரம். 17 ஆண்டுகள் பத்திரிகைப்பணி. 500க்கும் அதிகமான கட்டுரைகள், பேட்டிகள், சிறுகதைகள், கவிதைகள் பிரசுரம். அச்சு புத்தகங்கள் 10 மற்றும் மின்புத்தகங்கள் 10 வெளியீடு என்று பிரமிக்க வைக்கிறார். 

தினமலரில் ஃபேஸ்புக் பிரபலங்களின் கதைகள் வெளிவரக் காரணமாயிருந்தவர். ( அதுல நாமளும் ஒரு ஆளுல்லா :) 

இடையறாத பத்ரிக்கை & எழுத்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் அவரிடம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக ஏதும் எழுதித்தரும்படிக் கேட்டிருந்தேன். அவர் வித்யாசமாக ஆகாயம் பத்தி எழுதி இருந்தார் !. 

நானும் இதுபோல் எல்லாம் ஆகாயத்தை ரசித்திருக்கிறேன் என்பது ஆச்சர்யம். நீங்களும் கூட ரசித்திருக்கலாம். கொஞ்சம் ஆகாய உலா போய் வருவோம் வாருங்கள்.  உங்கள் பார்வைக்குப் புலப்படும் கொஞ்சம் ஆகாயம் . :)

  
///நான் ஆகாய காதலன் ! 

மாதத்தில் ஒரு நாளாவது நீங்கள் பவுர்ணமி வானத்தை ரசித்திருக்கிறீர்களா? தன்னந்தனியே பொன்மாலை நேரங்களில் நடந்து செல்லும்போது அன்னார்ந்து வானம் பார்த்ததுண்டா? இதற்கு ஆமெனில் உங்களுக்கு இந்தக்கட்டுரை சுவாரஸ்யம் தரும். இல்லை என்பவர்கள் படிப்பதில் நேரம் வீணடிக்க வேண்டாம்! 

பகல் ஆண். இரவு பெண். பூமி பெண். வானம் ஆண். அஃறிணைக்கு பால் பிரிப்பது சரியா என்றெல்லாம் யோசிக்காதீர்கள். எனக்கும் வானத்துக்குமான புரிதலில் இவை எல்லாம் சரியே. வானம் எனக்கு இளங்காலையில் தோழன். மதிய நேரத்தில் ஆசிரியன். மாலையில் காதலன். இரவில் தாய். நானும் வானமும் எந்த பருவத்திலும் பிரிந்ததே இல்லை. என் துயரத்திலும் சந்தோஷத்திலும் வெற்றியிலும் தோல்வியிலும் வானத்தைப் பார்ப்பேன். சிலநிமிடங்களில் நான் ஜென் நிலைக்கு உறைந்துவிடுவேன். 

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

கைகேயி படைத்த கம்பன்.

 கம்பனல்லவா கைகேயியைப் படைத்தான். கைகேயி எங்கே கம்பனைப் படைத்தாள் எனக் குழம்புகிறதல்லவா. ஆம் அப்படித்தான் நானும் எண்ணி இருந்தேன். ஆனால் கைகேயி படைத்த கம்பனை நானும் அங்கே கண்டேன். அவ்வாறு கைகேயி படைத்த கம்பனை உருவாக்கி உலவவிட்டு கைகேயின்மேல் கழிவிரக்கத்தை உண்டு செய்தவர் கம்பனடி சூடி. திரு பழ பழனிப்பன் அவர்கள்.

/////காரைக்குடி கம்பன் கழகத்தின் பிப்ரவரி மாதக் கூட்டம் 04.02.2017 அன்று கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குக் கம்பன் அறநிலையின் தலைவர் திரு சக்தி திருநாவுக்கரசு அவர்கள் தலைமை வகித்தார். கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள் ‘‘கைகேயி படைத்த கம்பன்” என்ற தலைப்பில் மீனாட்சி பழனியப்பா நினைவு அறக்கட்டளைப் பொழிவை நிகழ்த்தினார்.////

இனி சொற்பொழிவில் என்னைக் கவர்ந்த சில விளக்கங்கள். நினைவில் இருத்தியவற்றைப் பகிர்கிறேன். பிழையிருப்பின் பொறுத்தருள்க.

கம்பன் அறநிலையின் தலைவர் திரு சக்தி திருநாவுக்கரசு அவர்கள் நட்பிற்காகத் தலைமை ஏற்க வந்ததாகக் கூறினார்.
வந்திருந்த அனைவரையும் அன்போடு வரவேற்று மிக நீண்ட முன்னுரைக்குப் பின் கைகேயி எப்படிக் கம்பனைப் படைத்தாள் என நிறுவினார் திரு கம்பனடி சூடி அவர்கள். அவர் ஒரு வழக்குரைஞர்/அறிஞர் என்பது இலட்சத்து ஓராவது தடவையும் நிரூபணமாயிற்று :)

திங்கள், 13 பிப்ரவரி, 2017

சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும்.

1281. வான் மேகம் கடலை நோக்கிச் செல்லும்போது நீறு பூசிய சிவபெருமான் போல வெண்ணிறம் கொண்டும், கடலில் நீர் கொண்டு திரும்பும்போது திருமாலின் கருத்த நிறம் கொண்டும் இருக்கும் என்று சொல்லும் சைவ வைணவ சமரசப் பாடல்.

“நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று, ஆர்கலி மேய்ந்து, அகில்
சேறு அணிந்த முலைத்திருமங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டவே “

---

“பூ நிரைத்தும் மென் தாது பொருந்தியும்
தேன் அளாவியும், செம்பொன் விராவியும்
ஆனை மா மத ஆற்றோடு அளாவியும்
வான வில்லை நிகர்த்தது அவ்வாரியே ! “

பல நிறப்பூக்களை வரிசைப்படுத்தியும், அதில் மகரந்தப் பொடி பொருந்தியும், தேன் கலந்தும், செம்பொன் கலந்தும், யானைகளின் மதநீர் கலந்தும் செல்லும் அவ்வாற்றின் வெள்ளம் வானவில்லை ஒத்திருந்ததாம்.

-- அட அடா என்ன ஒரு தமிழ்ச் சுவை. இத எழுதியது நம்ம ப்ளாகர் திருமதி சாந்தி லெட்சுமணன், வானொலி தமிழ் அறிவிப்பாளர், போர்ட் பிளேயர்.

-- காரைக்குடி கம்பன் கழகமும் அந்தமான் தமிழ் இலக்கிய மன்றமும் இணைந்து நடத்திய கம்பராமாயண மூன்றாவது உலகத்தமிழ் ஆய்வுக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு நூலான “கம்பனில் இயற்கை” என்ற நூலில் தமிழ்த் தேன் அருந்திச் செம்மாந்தேன் :)

1282. கா. லூ. க.

கூலிங் க்ளாஸோட
வந்தாரே.. ரொம்ப ரொமாண்டிக்கா..
கம்பெல் பண்ணி
கண் பார்க்க ஆசைப்பட்டா..

.
ஐயோ தொத்திக்கிச்சு
மெட்ராஜ் ஐ..

EYE யோடு EYE சேர்க்கும் காலங்களே..

1283. வணக்கம்  அக்கா.
உங்களது இரண்டாவது புத்தகம் 'ங்கா' விற்கு வாழ்த்துக்கள்.
இங்கு டெல்லியில் இந்த மாதம் 25 முதல் மார்ச் 4 வரை
புத்தகக் கண்காட்சி (International book fair) நடக்க இருக்கிறது. அதற்கு டிஸ்கவரி
பாலஸில் இருந்து தங்களது புத்தகங்கள் விற்பனைக்கு வருமா?
வாங்கிப் படிக்க ஆவலாக உள்ளேன்.
இல்லையெனில் ஆன்லைனில்தான் ஆர்டர் செய்ய வேண்டும்.
நன்றி. ///

காயத்ரி ஞானம், நியூ டெல்லி.


-- அஹா நன்றி காயத்ரி ஞானம். நீங்க சென்னையில் உள்ள டிஸ்கவரி புத்தக நிலையத்தில் ஆர்டர் செய்தும் வாங்கிக்கலாம்.

1284. சோத்தைப் பார்த்து பயப்படுற தலைமுறையா ஆகிட்டோம். எண்ணெய், பால், கோழி, அரிசி, காய்கறி, கீரை பழம்ன்னு நீளுது இந்த லிஸ்ட். எத சாப்பிட்டாலும் ஐயறவா இருக்கு.

சனி, 11 பிப்ரவரி, 2017

சாட்டர்டே போஸ்ட். குழந்தைக்கும் கேட்டராக்டா - கண்பிரச்சனை பற்றி திரு அ போ இருங்கோவேள்


சாட்டர்டே போஸ்டுக்காக மதிப்பிற்குரிய முகநூல் நண்பர் திரு அ போ இருங்கோவேள் அவர்களிடம் கேட்டிருந்தேன். அவர் சங்கர நேத்திராலயாவில் பணிபுரிவதால் கண்நலம் பற்றி அனுப்புங்கள் என்று கேட்டதற்கு இந்தக் கட்டுரையை அனுப்பி இருந்தார்.

தற்போது அனைவருக்கும் கண் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. ஃபேஸ்புக், வாட்ஸப் , தொலைக்காட்சி , கைபேசி என கண்ணை சலிக்க வைக்கும் அளவு செய்திகள் குமிகின்றன. கண்ணைக் கண்போல் பாதுகாக்க சில கருத்துக்கள் அளிப்பார் என எதிர்பார்த்திருக்க ஒரு குழந்தைக்கு கேட்டராக்ட் என்பதைக் கண்டுபிடித்து அதைக் குணமாக்கிய விதத்தை எழுதி இருந்தார். மேலும் கண் பராமரிப்புப் பற்றியும் விவரங்கள் அளித்துள்ளார். ..

”என்னது குழந்தைக்கும் கேட்டராக்டா” என அதிர வைத்த கட்டுரை இதோ உங்கள் பார்வைக்கு.

/// ண்ணனுக்கு முதலாவது பிறந்த நாள்.
காலையில் ஆயுஷ் ஹோமம் முடிந்து வீட்டில் உள்ள தாத்தாக்கள், பாட்டிகள், மாமாக்கள், மாமிகள், சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, சித்தி எல்லோருடைய ஆசியையும் வாங்கி விட்டு தூங்கி எழுந்து விட்டு, மாலையில் நடைபெற்ற பர்த்டே பார்ட்டிக்கு அப்பா அம்மாவின் நண்பர்கள், குட்டீஸ். சுட்டீஸ் என்று ஒரே கலகப்பாக இருந்தது.
ஹாப்பி பர்த்டே பாட்டு பாடி, கேக் வெட்டி, குழந்தைகள் விளையாட்டு எல்லாம் முடிந்து ஒவ்வொருவராக கிளம்பியபோது தான் நானும் அந்த பார்ட்டியில் கலந்து கொண்டு குழந்தை கண்ணனுக்கு வாங்கி வந்திருந்த பரிசை கொடுத்தேன்.
குழந்தை பரிசு பார்சலை வாங்குவதற்கு சிரமப்பட்டான்.
“குழந்தை ரொம்ப டயர்டாகி விட்டான்” - என்று அவனுடைய அம்மா சொல்கிறாள்.

வியாழன், 9 பிப்ரவரி, 2017

வீரம் மிக்க ராணி அவந்திபாய் லோதி.

வீரம் மிக்க ராணி அவந்திபாய் லோதி

சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளில் ராணி அவந்திபாய் லோதியும் ராணி அப்பக்கா சௌதாவும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள். 

ராணி அவந்திபாய் லோதி :-

மத்தியப் பிரதேசத்திலிருக்கும் ராம்கார்க் ராஜ்ஜியத்தின் ராஜாவான விக்ரமாதித்யசிங்கின் மனைவி ராணி அவந்திபாய் லோதி. வாரிசு இல்லாமல் ராஜா உடல் நலிவுற்று இறந்தார். பிரிட்டிஷ் அரசு ராஜாவின் இறப்புக்குப் பின் ராணி பதவியில் அமர்ந்து அரசாட்சி செய்த் த்.ாடு பிடிக்கும் ஆசையில் இரந்த ங்கிலேய அர ஆண் வாரிசுகள் மட்டுமஆளண்டும் என்று சட்டம் போட்ட. பெண் அரசாள்வதைத் தடுப்பதா எனக் கொந்தளித்த ராணி தனது நாட்டை மீட்க உறுதி பூண்டார். 

1857 இல் நான்காயிரம் வீரர்களைத் திரட்டி ஆங்கிலேயர் அதிகாரத்துக்கு எதிராகப் போர் தொடுத்தார். மிகத்தீரத்துடன் போர் புரிந்தும் கூட நவீனக் கருவிகளுடன் போரிட்ட ஆங்கிலேயப் படைக்கு முன்னால் ராணியின் படைகள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தோல்வியைத் தழுவ விருப்பமில்லாமல் வீரம் மிக்க ராணி அவந்திபாய் 1858, மார்ச்20 ஆம் தேதி தனது வாளினால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார். 

இவருக்கு வீர வணக்கம் தெரிவிக்கும் முகமாக அரசு ஜபல்பூர் அணைக்கு இவர் பேரைச் சூட்டி உள்ளது. மகாராஷ்டிரா அரசாங்கமும் தபால் துறையும் இவரது வீரத்துக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அஞ்சல்தலையை வெளியிட்டுள்ள.

லேடீஸ் ஸ்பெஷலில் பெண்பூக்கள்.

ஃபிப்ரவரி 2017 லேடீஸ் ஸ்பெஷல் இதழில் படித்துப் பாருங்கள் பகுதியில் எனது நான்காவது கவிதைத் தொகுதியான “பெண்பூக்கள்” நூல் அறிமுகம் கிடைத்துள்ளது. 


இரு வேறு மனம் :- ( மூன்றாம் பரிசு பெற்ற கவிதை )

இரு வேறு மனம் :-

அவனுக்கும் அவளுக்குமிடையில் எதுவுமில்லை
ஒற்றை வாக்குவாதம் தாங்கும் சின்னச் சுவர்கூட
வரப்புத் தகராறில்லை வாய்க்கால் வெட்டவில்லை
பொட்டலாய்க் கிடக்கு வாழ்க்கை
உறவின் உரசல்கள் எங்குமே இல்லை
ஈர்ப்பாக எதுவுமே தோணவில்லை.
எதையும் ரத்து செய்யாமல்
என்னவோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

வீராங்கனை கிட்டூர் ராணி சென்னம்மா. :- கோகுலம்

வீராங்கனை கிட்டூர் ராணி சென்னம்மா. :-

நமது நாடு சென்ற நூற்றாண்டுகளில் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அப்போது சுதந்திரம் வேண்டி சாமான்யர்களும் புரட்சியாளர்களும் போராடியது போல சாம்ராஜ்யம் ஆண்டவர்களும் அந்நியரின் ஆக்கிரமிப்புக்கு அடிபணியாமல் போராடினர்.  அவர்களுள் சிலரின் வீர சரித்திரத்தைக் காண்போம்.
டிஸ்கி:- கோகுலத்தில் சென்ற ஓராண்டாக குழந்தைகளுக்கேற்ற சத்துணவு வெளியானது. அதற்கு சில வாசகர்கள் கடிதங்களும் பாராட்டி வந்தன. அத்திப்பழ அல்வாவை பாராட்டிய வேம்பார் பொ. ஜெனிட்டா அவர்களுக்கு நன்றி !. வாய்ப்புக்கு நன்றி கோகுலம். ! 


சனி, 4 பிப்ரவரி, 2017

தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

1261. 1980 - நாம் இருவர் நமக்கிருவர்

2000 - நாம் இருவர் நமக்கொருவர்

2012 - நாமே இருவர் நமக்கெதுக்கு ஒருவர்..

-- வெளங்கிருச்சு :) 

1262. ஃபார்ம் வில்லி காலத்திலேருந்து பார்க்கிறேன்.

ஃபேஸ்புக் வந்தா ஃப்ரெண்ட்ஸ் ஸ்டேசஸ் படிக்கவே நேரம் பத்தல..

இதுல காண்டி க்ரஷ்,, பபில் ,பெப்பர் பானிக், ஸ்கூல் ஆஃப் ட்ரகன்ஸ், ராயல் ஸ்டோரி, கிச்சன் ஸ்க்ராம்பிள்னு வெளையாட வேற கூப்பிடுறீங்களா... நோ டைம்..

#வெளையாட்டுப்_புள்ளைக_ஜாஸ்தியாயிடுச்சு.

1263. எங்கே பார்த்தாலும் விஸ்வரூபமா தெரியுதே.. கடவுளே காப்பாத்து.. கமலையும் ஃபேஸ்புக்கர்ஸையும்..

1264. namakey teriyama blogspot.com ellaam blogspot.in aa epo marichu.. தமிழ்மணத்துல இணைக்க முடியலை.. plz help

1265. பதில் போடாட்டாலும் தினம் மெசேஜ் அனுப்புறியே உனக்கு வேற வேலை வெட்டி இல்லையா...
.
.இந்த VX 611112 ஐ சொன்னேனுங்க.

புதன், 1 பிப்ரவரி, 2017

மாங்கல்யதாரணமும் மங்கள தோரணமும்.

641*. கழுத்துரு கோர்த்தல்.
கழுத்துருவில் பொதுவாக 642* .31 உருப்படி இருக்கும். இது போக 643* .குச்சி 644*. தும்பு 645*.துவாளை என்ற மூன்றையும் திருமணம் முடிந்த அடுத்த நாள் காலையில்கழுத்துருவில் கோர்த்து மணமகளுக்கு மணமகனின் தாயார் அல்லது அப்பத்தா அணிவிப்பார்கள். திருமணத்தின் போது கழுத்துரு கட்டுவதுதான் 646*. மாங்கல்யதாரணம்.

இதில் 647. கடைமணி, 648*. உரு, 649*. சரிமணி, 650*. ஏத்தனம், 651*. லெட்சுமி ஏத்தனம், 652*. திருமாங்கல்யம் ஆகிய உருப்படிகள் கோர்க்கப்படும்.

கடைமணி சதுரமாகவும், உரு உருண்டையாகவும், சரி மணி நீள் உருண்டையாகவும் இருக்கும். ஏத்தனம் என்பது ஐந்து விரல்கள் போல லெட்சுமி ஏத்தனத்தின் இருபக்கமும், திருமாங்கல்யத்தின் இருபக்கமும் கோர்க்கப்படும். லெட்சுமி ஏத்தனம் என்பது நான்கு விரல் கொண்ட அமைப்பில் நடுவில் இருப்பது. திருமாங்கல்யம் என்பது கோபுர அமைப்பில் இருபுறமும் கால்பாவியது போல் இருப்பது. 

இவற்றைக் கோர்ப்பதற்கென்று சில முறைகள் இருக்கின்றன. 653*. திருமணத்தின் முதல் நாள் மணமகள் வீட்டாரிடமிருந்து கொண்டு வரப்பட்டு மாப்பிள்ளை வீட்டில் கழுத்துருவுக்குப் 654*. பொன் தட்டி அதன் பின் கோர்க்கப்படும். 655*. மாப்பிள்ளையின் பங்காளிகள் வந்திருந்து கோர்த்துக் கொடுப்பார்கள்.

////656.*. பிள்ளைச் சரடு இழைதல்:
7 பாகம் நூல் எடுத்து, 3ல் ஒரு பங்காக சங்கிலிப் பின்னல் பின்னி மஞ்சள் ஏற்றி, அதில் ஒத்தை தும்பை கோர்க்கவேண்டும். ஒரு நல்ல நாள் பார்த்து பெண்ணின் தாயார் வீடு சென்று கழுத்துருவின் இடது பக்கத்தில் இரண்டு கயிற்றிலும் சேர்த்து குச்சி, தும்பு துவாளையைக் கட்டி பின்னர் கழுத் துருவை கழுத்தில் அணிந்து கொண்டு சாமி கும்பிட்டு பின்னர் கழட்டி வைக்கவேண்டும்.

கழுத்துரு உருப்படிகள்:
மேல் பாகம்: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16
கீழ்பாகம்: 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31
கடைமணி: 1, 16, 17, 31
உரு: 2, 3, 4, 6, 8, 10, 12, 14, 15, 18, 19, 20, 22, 23, 25, 26, 28, 29, 30
ஏத்தனம்: 5, 13, 21, 27
லெட்சுமி ஏத்தனம்: 24
சரி மணி: 7, 11
திருமாங்கல்யம்: 9

29 உருப்படிகள் இருந்தால் 23, 25 (வட்டத்துக்குள் உள்ளதை) கோர்க்க வேண்டாம்.////


-- நன்றி அருண் கண்ணன். செட்டிநாட்டு இதிகாசம்.  
பிள்ளைகள் கோர்க்கக் கற்றார்கள். கோர்த்தபின் இப்படி இருக்கும்.

பேச்சிலர் சமையலும் காரட் தக்காளி சூப்பும்.

அட பேச்சிலர் சமையல்னவுடனே என்ன அரையும் குறையுமா வெந்ததும் வேகாததுமா சமைச்சு சாப்பிடுவாங்கன்னு நினைப்போம். ஆனா இங்கே ஒரு வெளிநாட்டு வாழ் பேச்சிலர் சொல்பேச்சு கேட்டு விதம் விதமா சமைச்சத பகிர்ந்துக்குறேன். சுபஸ்ய சீக்ரம் . சமைக்கத் தெரியாத திருமதி வந்தாலும் சாப்பாட்டுக்கு பிரச்சனை இல்லை. அந்தூர்ல கிடைக்கிற காரட்டையும் தக்காளியையும் வச்சே விதம் விதமா அசத்திடலாம்ல. :)

சப்பாத்தியும் காரட் மிளகுப் பொரியலும் தக்காளிச் சட்னியும். !
சிகப்பரிசி அவல் உப்புமான்னு சொல்றாய்ங்க. காரட் சாம்பாரோட முறுக்கும் நொறுக்க :)
வெள்ளை ரவை உப்புமா. சாம்பார்ல பருப்புதான் கொஞ்சம் மசியணும். அது இன்னும் சொல்பேச்சு கேக்கலை போல :)

Related Posts Plugin for WordPress, Blogger...