எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
PENPOOKKAL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PENPOOKKAL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 ஜூன், 2017

புஸ்தகாவில் என் ஆறாவது மின்னூல் . ”பெண்பூக்கள்”

புஸ்தகாவில் என் ஆறாவது  மின்னூல் . ”பெண்பூக்கள்”

புஸ்தகாவில்   என் ஆறாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , பதினொன்றாவது நூல் ) “பெண்பூக்கள்” வெளியாகி உள்ளது.

இது எனது கவிதைகளின் தொகுப்பு. மொத்தம் 57 கவிதைகள் உள்ளன.

பக்கங்கள் - 109.

விலை ரூ. 63. 00 / $ 1.99.

இதை இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/pen-pookal

You can get my ebook by clicking this link below.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/pen-pookal

படிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.

http://www.pustaka.co.in/home/tamil/authors

http://www.pustaka.co.in/home/author/tamil/thenammai-lakshmanan

http://www.pustaka.co.in/ebook/tamil/library

http://www.pustaka.co.in/home/ebook/tamil/pen-pookal

இதை மின்னூலாக்கம் செய்த புஸ்தகா நிறுவனத்தாருக்கும் திரு. பத்மநாபன் & திரு. ராஜேஷ் தேவதாஸ் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

பெண்பூக்களை வாங்கி வாசிச்சுக் கருத்தை சொல்லுங்க.

அன்புடன்

தேனம்மைலெக்ஷ்மணன்.

வியாழன், 9 பிப்ரவரி, 2017

லேடீஸ் ஸ்பெஷலில் பெண்பூக்கள்.

ஃபிப்ரவரி 2017 லேடீஸ் ஸ்பெஷல் இதழில் படித்துப் பாருங்கள் பகுதியில் எனது நான்காவது கவிதைத் தொகுதியான “பெண்பூக்கள்” நூல் அறிமுகம் கிடைத்துள்ளது. 


திங்கள், 5 டிசம்பர், 2016

நூல் உலகத்தில் அன்னபட்சியும் பெண்பூக்களும்.

எனது மூன்றாவது நூலான அன்னபட்சியும் நான்காவது நூலான பெண்பூக்களும் நூல் உலகம் என்ற ஆன்லைன் ஷாப்பிங் சைட்டில் கிடைக்கிறது. ஸ்டாக் இருக்குதுன்னு போட்டிருக்காங்க. இவை இரண்டும் கவிதை நூல்கள். விருப்பமுள்ளவர்கள் வாசிக்கணும்னா இதில் ஆர்டர் செய்யுங்க. இரண்டு மூன்று நாளில் ஆன்லைன் டெலிவரி செய்வதாகப் போட்டிருக்காங்க.

வாங்கி வாசிச்சிட்டுக் கருத்தைச் சொல்லுங்க.


அன்ன பட்சி.
http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&si=2

வகை

: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தேனம்மை லெக்ஷ்மணன்
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.80


இது பற்றி ஷானின் விமர்சனம் இங்கே கனவு தேசத்தில். !!!

அன்ன பட்சி – தேனம்மை லெக்ஷ்மணன்

இவர்களுக்கும் நன்றி :) 

அன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.

நன்றி நன்றி நன்றி :)

1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்

2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.

3. திரு இரத்னவேல் ஐயா.

4. திருமதி பத்மா & திரு இளங்கோ

5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.

6. புதிய தரிசனம்.

7. திரு செல்வகுமார்

8. திருமதி அகிலா புகழ்.

9. திரு பால கணேஷ்

10. திருமதி கலையரசி, வலைச்சரம். 


பெண் பூக்கள்.
http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&si=2

வகை

: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தேனம்மைலெக்ஷ்மணன்
பதிப்பகம்: புதிய தரிசனம் (Puthiya Tharisanam)
ISBN :
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.60


பெண்பூக்கள் பத்தி விமர்சனம் செய்த விஜிகே சார், ஸ்ரீராம், ரத்னவேல் ஐயா ஆகியோருக்கும் நன்றி :)

”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.



சனி, 25 ஜூன், 2016

இளமதி பத்மாவின் பார்வையில் பெண்பூக்கள்.

ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் இளமதி பத்மா ! அன்பும் அணைப்பும். <3 span="">

////"பெண் பூக்கள்"

பூக்களைத் தொகுத்து கவிதைகள்
ஒவ்வொன்றும் முத்துகள்...

அற்புதமான வார்த்தைகள் கோர்ப்பு

காதல் பாசம் அன்பு நேசம் அத்தனைப்
பரிமாணங்களையும் அழகாய் சொல்ல ஒரு திறமை வேண்டும்...

அது மட்டும் போதுமா என்றால் போதாது...

படிப்பவர்கள் தொய்வில்லாமல் ரசித்து படிக்க வேண்டும்...!

ஆகா என்றோ சபாஷ் என்றோ மனதிற்குள் ஒரு குரல் ஒலிக்க வேண்டும்
எனக்கு ஒலித்தது...!

நான் கவிதைகளின் காதலி ஒரு நல்ல கவிதையை இனம் காணும் போது மனதிற்குள் ஒரு மலர்ச்சி பொங்கும்!

தும்பை பூவைக் கூட விடாமல் கவிதையாக்கிய தேனம்மையை எண்ணி அதிசயிக்கிறேன்...

இவரின் கட்டுரைகளோ கதைகளோ பரிச்சயமில்லை ஆனால் எல்லாவற்றையும் படித்து விடவேண்டும்
என்றொரு வேட்கை வருகிறது !

வாழ்த்துகள் Thenammai Lakshmanan////
 நன்றி இளமதி பத்மா, புவனா, செல்வகுமார். :)

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

ஈரோடு புத்தகத் திருவிழாவில் பெண் பூக்கள் வெளியீடு.

ஈரோடு சங்கமத்தின்போதே எனது நூல்களை ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெளியிட வேண்டுமென்ற என்னுடைய கோரிக்கையையை வலைப்பதிவர் சந்திப்பில்  அவையில் திரு. தாமோதர் சந்துரு அண்ணன் & திரு. ஸ்டாலின் குணசேகரன் முன்னிலையில் தெரிவித்திருந்தேன்.  அந்த எண்ணம் இன்று ஈடேறியது.  தாமோதர் சந்துரு அண்ணன் முன்னிலையில் பாரதி புத்தகாலயத்தில் என்னுடைய நூல் பெண் பூக்கள் வாசகர்களால் வெளியிடப்பட்டது. பெண்பூக்களை அன்பின் ஆராதனாவும் சக்தி ஷாலினியும் பெற்றுக்கொண்டது வெகு சிறப்பு.  நன்றி அண்ணன். :)