எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 மே, 2022

இராமசாமி தமிழ்க் கல்லூரியில் மகளிர் தின சிறப்பு விருந்தினராக.

 இராமசாமி தமிழ்க் கல்லூரியில் மகளிர் தின சிறப்பு விருந்தினராக.

காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில்  8.3.2022  அன்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன்.

முனைவர் திரு செ நாகநாதன் மிக அழகான வரவேற்புரை நல்கினார். முனைவர் கீதா தலைமை வகித்தார். அடுத்து நான் சிறப்புரை ஆற்றினேன். மாணவர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்வில் முனைவர் பா. ஸ்ரீவித்யா பாரதி மாணவர்களை அழைக்க அவர்களுக்கு நூல் பரிசு வழங்கினேன். 

 


இவ்விழாவுக்கு என்னை அழைத்த இராமசாமித் தமிழ்க் கல்லூரியின் முனைவர் உதவிப் பேராசிரியர் திரு செ. நாகநாதன் அவர்கட்கும் மற்றுமுள்ள பேராசிரியர்கள் திரு. அன்பு மெய்யப்பன், நூலகருக்கும் நன்றிகள்.

வியாழன், 26 மே, 2022

தான் கருணை இல்லக் குழந்தைகளின் மூத்தோர் தினவிழாக் கட்டுரை நூலுக்கான அணிந்துரை

 மூத்தோர் தினவிழாக் கட்டுரைப் போட்டி

சர்வதேச முதியோர் தினத்தை ஒட்டி மதுரை தானம் அறக்கட்டளை வெளியிட்ட கட்டுரைப் போட்டி நூல் ஒன்றுக்கு அணிந்துரை எழுதும் வாய்ப்பு அமைந்தது.

நிலக்கோட்டை தான் கருணை இல்லக் குழந்தைகளின் கருணையும் காருண்யமும் பொதிந்த கட்டுரைகள் படித்துக் கண்கள் கசிந்தது நிஜம். முதியோர்களைப் பாதுகாக்கவும், முதியோர் நலன் பற்றியும் ஆக்கபூர்வமாய் ஆலோசனைகள் வழங்கி நம்பிக்கை தந்த குழந்தைகளுக்கு அன்பு &
வாழ்த்துக்கள்

முதியோர் நலனில் அக்கறை கொண்டு இந்நூலை ஆக்கம் செய்த தானம் அறக்கட்டளைக்கும் திரு. பகவதி திருமலை சார் அவர்களுக்கும்
வாழ்த்துக்கள்
& நன்றிகள்.

தான் கருணை இல்லக் குழந்தைகளின் கட்டுரைகள்.

தான் கருணை இல்லம் நிலக்கோட்டை

முகவுரை

அணிந்துரை:-

தான் கருணை இல்லக் குழந்தைகள் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் சிப்பியின் முத்துக்கள். பள்ளியில் பயிலும் வயதிலேயே தங்கள் வாழ்வியல் அனுபவங்களைக் கொண்டு ஒவ்வொரு மாணாக்கரும் வடித்திருக்கும் கட்டுரைகள் அதி சிறப்பு. இந்நூலில் சிறார்களுக்குச் சிறார்களின் கட்டுரைகளே ஞானக் கண்ணைத் திறக்கும் திறவுகோலாக அமைந்திருக்கின்றன.

”முதியவர்களை மதிப்பவர்கள் வெற்றியை நோக்கித் தங்கள் சொந்தப் பாதையை அமைத்துக் கொள்கிறார்கள்” என்பது ஆப்ரிக்கப் பழமொழி. ”மூத்தோர் சொல் அமிர்தம்” என்பது தமிழ் மொழி. அதை வழிமொழிகிறது செல்வி ஜெயஸ்ரீயின் கட்டுரை. முதியோர்கள் நமது வழிகாட்டிகள் என்று முத்தாய்ப்பாய்க் கூறி இருக்கிறார்.

புதன், 25 மே, 2022

பாட்டிக்ஸ் மௌச்சஸ் - 4

 கெனால்ஸ் செயிண்ட் மார்ட்டின் என்ற கால்வாயின் ஸீன் நதியுடன் இணைகிறது. இந்தப் படகுசெல்லும் பாதை நகரைப் பிளக்கும் ஸீன் நதியின் ஏதோ ஒரு கால்வாய் என்றுதான் தோன்றுகிறது. 

ஜீன் ப்ரூயல் என்பவரால் 1917 இல் இந்தப் படகுப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டதா சொல்றாங்க. இந்தப் படகுகளை ஃப்ரான்ஸின் மூன்றாவது பெரிய நகரமான லையன் என்கிற படகுத் துறைமுகத்துல தயாரிக்கிறாங்களாம். 

இதன் அப்பர் டெக்கில்தான் பயணிகளை அமரவைத்துக் கூட்டிட்டுப் போறாங்க. மழை போன்றவை வந்தால்தான் லோயர் டெக்கில். இது பக்கவாட்டுகளில் மூடி இருக்கும். இந்தப் படகுப் போக்குவரத்துல நகரின் முக்கிய அம்சங்கள், கட்டிடங்கள், நிகழ்வுகள் , பற்றிப் பதிவு செய்யப்பட்ட ரன்னிங் கமெண்டரி போடுறாங்க.  



எங்க கூட யூரோப் டூர் வந்தவுங்க. ஓரத்தில் இருப்பவர்கள் நார்த் இந்தியா & கன்னடா. அடுத்து நிற்கும் பர்தா அணிந்த தோழி சென்னைதான் ஆனால் மூவரும் வசிப்பது அமெரிக்கா. ரோஸ் சூடி மற்றும் அவர் பக்கம் இருக்கும் இளம் பெண்கள் அவர்களது மகள்கள் வசிப்பது ஆந்திரா. என் பக்கம் நிற்பவர் இந்தூர் டாக்டர். 

புதன், 18 மே, 2022

குறும்பனால் சாபவிமோசனம் பெற்ற குபேரன் மைந்தர்கள்

 குறும்பனால் சாபவிமோசனம் பெற்ற குபேரன் மைந்தர்கள்


புராண காலங்களில் தங்கள் துர்நடைத்தையாலும் அகந்தையாலும் முனிவர்களையும் மகரிஷிகளையும் மதிக்காமல் நடந்து சாபம் பெற்றோர் பலர். சாபம் பெற்றபின் தங்கள் தவறுணர்ந்து சாப விமோசனத்துக்காக சாபமிட்டவரிடமே வணங்கி மன்னித்தருளும்படி வேண்டுவார்கள். உடனே சாபமிட்ட மகரிஷிகளும் முனிவர்களும் சாபவிமோசனத்துக்கான வழிமுறைகளைக் கூறி மன்னிப்பார்கள். இப்படி சாபம் பெற்ற இருவர் பற்றியும் அவர்கள் பெற்ற சாபத்திலிருந்து எப்படி விமோசனம் அடைந்தார்கள் என்பது பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே.

குபேரனின் புதல்வர்களின் பெயர் நளகூபரன், மணிக்ரீவன். அவர்கள் இருவரும் ஒருநாள் மிதமிஞ்சிய களியாட்டத்தில் அரண்மனை வாவியில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். கூடவே பல்வேறு வகையான மங்கையர்களும் அவர்களுடன் ஜலக்ரீடை ஆடிக் கொண்டிருந்தனர்.

திங்கள், 16 மே, 2022

பாரதி பதிப்பகத்தில் எனது நான்கு நூல்கள் வெளியீடு.

வளையாபதி குண்டலகேசி - மூலமும் உரையும். வெளியீடு. 

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ளது பாரதி பதிப்பகம். இந்நிறுவனம் 70 ஆண்டுகளாகச் சிறப்பாக நடந்து வரும் பெருமை உடையது. 

இதன் தற்போதைய நிர்வாக இயக்குநர் செல்வி நித்யா ராஜேந்திரன். துடிப்பான இளம்பெண். 




இந்த வருடம் புத்தகத்திருவிழாவிற்காகக் கிட்டத்தட்ட 50 புது நூல்களை புது ஆசிரியர்களைக் கொண்டு எழுத வைத்துப் பதிப்பித்து இருக்கிறார். அதில் நானும் ஒருத்தி எனச் சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகின்றேன்.

புதன், 11 மே, 2022

சிறகில்லா தேவதை தேவயானி

சிறகில்லா தேவதை தேவயானி


மென்மையான முயல்குட்டிப் பாதங்கள்தான். மனம் மயக்கும் மோனாலிஸா புன்னகைதான். ஆனால் அவர் இராஜகுமாரனை மணந்துகொண்ட அழகிய சிண்ட்ரெல்லா. ”வெள்ளை வெளேர்னு ஒரு ஜப்பான் பொம்மை” என்று சூரியவம்சம் 25 ஆம் ஆண்டு நிறைவில் எடுக்கப்பட்ட பேட்டியில் கணவரால் புகழப்பட்டவர். அவர்தான் அழகு ராணி தேவயானி.  

இத்தனை வருடம் கழித்தும் இன்னமும் இராஜகுமாரன் சொல்வது போல் வெண்மையா மென்மையா ஜப்பான் பொம்மை போலவேதான் இருந்தார். சௌந்தர்யா, சுவலெட்சுமி, சினேகா போல் தன்மையான அழகு தேவதை தேவயானி. க்ளாஸ்கோ பேபி, அமுல் பேபி போல் தோற்றம். எப்போதும் சிறிது நீரைப் பொழியத் தயாராய் இருக்கும் ஈரமான கண்கள். குட்டியாய்க் குவிந்த இதழ்கள் அடர்த்தியான சுருண்ட கேசம். பூவினும் மெல்லிய பூங்கொடி இதுதான் தேவயானி.

ஞாயிறு, 8 மே, 2022

பாட்டிக்ஸ் மௌச்சஸ் - 3

 ஏற்கனவே இரண்டு சுற்று ஸீன் நதியின் மேல் வந்திருக்கிறோம். வாங்க மூணாவது சுற்றும் போய் வருவோம். 

வான்கூவர், லூவர், மியூசியங்கள் , பிர்லா ஹவுஸ், ஈஃபில் டவர், சுதந்திர தேவி சிலை , அலக்ஸாண்டர் 3 ப்ரிட்ஜ் ம் பாண்ட் நியூஃப்,  ஓர்ஸே மியூசியம், நெப்போலியனைப் புதைத்த இடம், லே இன்வாலிட்ஸ் என்ற இடம்  இதெல்லாம் இந்த பாட்டிக்ஸ் மௌச்சஸ் என்னும் பறக்கும்படகில் போகும்போது பார்க்கலாம். 

அதோ தெரியுதுல்ல . மண்டபம் போல ஒண்ணு. அதுதான் பாட்டிக்ஸ் மௌச்சஸ் எனப்படும் பறக்கும் படகுகளின் துறைமுகம். பின் பக்கம் தெரிவது வெயிட்டிங் ஹால். 


திங்கள், 2 மே, 2022

மன்னை இராஜகோபாலஸ்வாமி செங்கமலத் தாயார் திருக்கோயில்

 மன்னார்குடி மதில் அழகு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த ராஜ மன்னார்குடியில் இராஜ கோபாலனையும் செங்கமலத் தாயாரையும் தரிசிக்கும் வாய்ப்பு சென்ற ஆண்டு கிட்டியது.

நான் மன்னார்குடி செல்லக் காரணமே என் தோழி ப்ரேமலதாதான். அவளுடைய அன்புதான் என்னை அங்கே கட்டி இழுத்துச் சென்றது என்று சொல்லலாம். அவள் மூலம் வசந்தி, வஹிதா, அமுதா ஆகியோரையும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.( தஞ்சையில் தேன்மொழி & சாந்தியின் பெண் நந்தினி ) 


Related Posts Plugin for WordPress, Blogger...