எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 மே, 2022

இராமசாமி தமிழ்க் கல்லூரியில் மகளிர் தின சிறப்பு விருந்தினராக.

 இராமசாமி தமிழ்க் கல்லூரியில் மகளிர் தின சிறப்பு விருந்தினராக.

காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில்  8.3.2022  அன்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன்.

முனைவர் திரு செ நாகநாதன் மிக அழகான வரவேற்புரை நல்கினார். முனைவர் கீதா தலைமை வகித்தார். அடுத்து நான் சிறப்புரை ஆற்றினேன். மாணவர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்வில் முனைவர் பா. ஸ்ரீவித்யா பாரதி மாணவர்களை அழைக்க அவர்களுக்கு நூல் பரிசு வழங்கினேன். 

 


இவ்விழாவுக்கு என்னை அழைத்த இராமசாமித் தமிழ்க் கல்லூரியின் முனைவர் உதவிப் பேராசிரியர் திரு செ. நாகநாதன் அவர்கட்கும் மற்றுமுள்ள பேராசிரியர்கள் திரு. அன்பு மெய்யப்பன், நூலகருக்கும் நன்றிகள்.


கிட்டத்தட்ட 120 பிள்ளைகள் இங்கே பயில்கிறார்கள்.  பி எட் தமிழ் இங்கே  உள்ளது. மாணவிகள் எண்ணிக்கை தொண்ணூறு பேர்களுக்கு மேல் இருக்கும். மாணவர்கள் எண்ணிக்கை 20 க்கு மேலும் இருக்கும். எனக்கு நினைவுப் பரிசாக புதுமைப்பித்தன் கதைகள் கொடுத்தார்கள். 
கல்லூரி நூலகத்துக்கு நூலகரிடம் எனது நூல்கள் சிலவற்றைக் கொடுத்தேன். 

அவை முறையே பெண்பூக்கள், பெண் மொழி, பெண் அறம், பெண்ணின் மரபு, கீரைகள், ஆத்திச்சூடிக் கதைகள், காதல் வனம், மஞ்சளும் குங்குமமும் ஆகிய எட்டு நூல்கள். மற்றவை கைவசம் ஓரிரு பிரதிகளே இருக்கின்றன. அடுத்து எனது சிறப்புரை. 


 

கவிதைப் போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்குதல். திருமதி மு.ஜெயமணி நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது. 

இங்கே உதவிப் பேராசியர்களாக உள்ள திருமதி இரா. கீதா, திருமதி ஜெயமணி ஆகியோரின் படைப்புக்களைப் பல்வேறு பத்ரிக்கைகளில் படித்து இருக்கிறேன். 

களப்பணியும் இலக்கியப் பணியும் சமூகப் பணியும் ஆற்றி மாணக்கர்களை நெறிப்படுத்தும் இந்தப் பேராசிரியர்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். 

இவ்விழாவுக்கு என் பெயரைப் பரிந்துரைத்த தங்கைகள் வடுகப்பட்டி அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி கலைவாணிக்கும், கார்த்திகேயன் பள்ளி ஆசிரியை திருமதி தென்றல் சாய் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...