எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஏப்ரல், 2020

வட்டாரப் பழமொழிகள் - 6.

1476. இருக்குற விட்டுட்டுப் பறக்குறதப் பிடிச்ச கதையா

1477. நாளைக்குக் கிடைக்கப்போற பலாக்காயை விட இன்னிக்குக் கிடைக்கிற களாக்காயே மேல்

1478. நமக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவாயில்லை . அடுத்தவீட்டுக்காரனுக்கு ஒரு கண்ணாவது போகோணும்.

1479. ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடுற மாட்டை பாடிக்கறக்கணும்.

1480. இருக்குறவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்குப் பல வீடு

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

வட்டாரப் பழமொழிகள் - 5.

1456. இரும்பு பிடிச்ச கையும் செரங்கு பிடிச்ச கையும் சும்மா இருக்காது

1457. அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும்

1458. இரையெடுத்த பாம்பு மாதிரி சுருண்டு கிடக்கான்

1459. குருடனைப் போய் ராஜபார்வை பாருன்னா எப்பிடிப் பார்ப்பான்

1460. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

2561.CITY OF FLORENCE

2562. டிடிஸி


2563. நாம பெரிய ஃபோட்டோகிராஃபர்ல.. நம்ம கோச்ல உக்காந்து வானவில்லைக்கூடப் படம் பிடிப்பம்ல.. :)

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

ரைன் நீர்வீழ்ச்சி.மை க்ளிக்ஸ். RHINE/RHEINFALL.MY CLICKS.


75 அடி உயரத்தில் இருந்து பாயும் அருவியைத் தூரத்தே இருந்து பார்த்தால் அவ்வளவு உயரம் தெரிவதில்லை. ஆனால் இதன் அருகே படகுச் சவாரி செய்யும்போது தெரியும் இதன் உயரம்.  490 அடி அகலம் இருக்கிறது என்பதும் இதன் சிறப்பம்சம். தூரத்தே தெரிவதுதான் வொர்த் கேஸில் எனப்படும் வியூ பாயிண்ட். இங்கிருந்து ரைன்நதியைப் பார்வையிடலாம்.

வியாழன், 23 ஏப்ரல், 2020

வட்டாரப் பழமொழிகள் - 4.

1436. தனக்குத் தனக்குன்னா எல்லாம் பதக்குப் பதக்குங்குது.

1437. எனம் எனத்தோட சேரும், வெள்ளாடு குட்டியோட

1438. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடிச்சுப் பார்த்தானாம்

1439. ஆக்கப் பொறுத்தவள்/ன் ஆறப் பொறுக்கணும்

1440. ஆக்கம் கெட்ட கூவை

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

2541. பாலங்களுக்குள் பாத்திகள். பாத்திகளில் பூச்செடிகள். ஹைதை ப்யூட்டி

2542. ஊரே புகைமயமா இருக்கே.. தெர்மல் பவர் ஸ்டேஷனாம். ரெய்ச்சூர் அட்ராசிட்டீஸ் :) #ஹைதை.

திங்கள், 20 ஏப்ரல், 2020

தமுஎசவின் மகளிர் தினத்தில் வாழ்த்துரை.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் காரைக்குடி கிளையில் மார்ச் 7 ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதில் திருமதி கலைவாணி தலைமையேற்க செல்வி சோனிய வரவேற்புரை வழங்க கவிஞர் மு கற்பகம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். அந்நிகழ்வில் சிலர் வாழ்த்துரையும் சிலர் கவிதைச் சரமும் வழங்கினோம்.

கிட்டத்தட்ட பதினாறுபெண்களுக்கு மேல் அந்நிகழ்வில் பங்கேற்றது சிறப்பு.

வியாழன், 16 ஏப்ரல், 2020

பெண்கள்தினத்தில் மூன்று கருத்துக்கள்.

பேசுங்க... சகோதரிகளே பேசுங்க!!!
Raise your voice and make others to raise...!ari

#IWD2020 #EachforEqual #HappyInternationalWomensDay

It is time we encourage women to pursue their dreams, uplift their self-esteem, and celebrate all their talents. Click the below link and submit your video wishes and voice your views to celebrate women's achievement. Join together to raise awareness against bias and to take action for equality.

இது ஃபிப் 29, 2020, சனிக்கிழமை ரெக்கார்ட் செய்யப்பட்டது. இப்போது என்றால் இன்னும் சிலதைச் சொல்லி இருக்கலாம். பெண்கள் தினத்தில் பெண்கள் அனைவரையும் அரவணைக்கிறேன். உங்கள் உடல் மனப் பிரச்சனைகளைக் கடக்க மானசீகமாக உடன் நிற்கிறேன். மீண்டெழுந்து வாருங்கள். நீங்களும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி உங்கள் கருத்துக்களை வீடியோவில் தெரிவிக்கலாம்.

#இனிய_பெண்கள்_தின_நல்வாழ்த்துகள். அன்பும் அணைப்பும் கண்மணிகளே. <3 nbsp="" p="">
https://www.thereviewclip.com/review/International_Womens_Day_2020/nwx8aAPe

https://www.thereviewclip.com/profile/International_Womens_Day_2020?fbclid=IwAR0xy-wkGdd-s8zNkrcwE8vteEjYX0EP3lSrm_JhtLccUk6K6YnUeJ2nMv0


இந்தக் கருத்துக்களைக் கேட்டுட்டு உங்க பதிலையும் சொல்லுங்க மக்காஸ். 

புதன், 15 ஏப்ரல், 2020

வட்டாரப் பழமொழிகள் - 3.

1416. ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சுக் கடோசீல மனுஷனையே கடிச்சிச்சாம்

1417. ஆட்டைத் தூக்கி மாட்டுல போட்டு மாட்டைத் தூக்கி ஆட்டுல போட்டுருவாள்/ன்

1418. ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்

1419. எள்ளு எண்ணெய்க்குக் காயுது எலிப்புழுக்கை எதுக்குக் காயுது.

1420. ஆடு பகை குட்டி ஒறவா?

திங்கள், 13 ஏப்ரல், 2020

கருங்கானகமும் குக்கூ கடிகாரமும்.

ஜெர்மனிக்குச் சென்றுவந்தால் குக்கூ க்ளாக் வாங்காமல் வருவாங்களா.அதுவும் யூரோப் டூரில் முதல்நாள் ப்ரஸ்ஸில்ஸ், இரண்டாம் நாள் ப்ளாக் ஃபாரஸ்ட். இதுதான் குக்கூ கடிகாரத்தின் தோன்றிடம். விதம் விதமான குக்கூ கடிகாரங்கள் 150 யூரோவிலிருந்து 3000 யூரோ & அதற்கு மேலும் உள்ள கடிகாரங்கள் காட்சிக்கு உள்ளன.  தென்மேற்கு ஜெர்மனியில் ப்ளாக் ஃபாரஸ்ட் என்னுமிடத்தில் கிடைக்கும் மரத்தின் மென்மையான துண்டுகளைக் கொண்டு 1600 ஆம் ஆண்டுகளில் இருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது குக்கூ கடிகாரங்கள். வருடத்தின் எட்டு மாதங்கள் குளிரும் பனியும் உறையும் பகுதி இது. உறைபனியில் வெளியே அதிகம் சென்று பணியாற்ற இயலாது. எனவே வீட்டில் அமர்ந்து செய்யும் தொழிலான குக்கு கடிகாரங்கள் தயாரிக்கும் பணி இங்கே உள்ள மக்களுக்கு அமோக வருமானத்தைத் தருகிறது.

வாங்க ஒரு சுற்று பாடன் உ(ர்)ட்டம்பர்க் நகருக்கும் டிடிஸி ஏரிக்கும் அதைச் சுற்றியிருக்கும் கடைகளில் உள்ள குக்கூ கடிகாரங்களையும் , பீர், பிராண்டி, ரம், ஒயின்,ஸ்காட்ச் இன்னபிற குடி வகைகளையும், பதப்படுத்தப்பட்ட அசைவ உணவு வகைகளையும் பழங்களையும் கண்டு களிக்கலாம்.வியாழன், 9 ஏப்ரல், 2020

”பெண் அறம்” நூல் வெளியீட்டில் சில கலை நிகழ்வுகள்.

சர்வதேச மகளிதின விழாவை ஒட்டி ( மார்ச் 8, 2020 ஆம் ஆண்டு ) ஞாயிறு அன்று மதுரை தானம் அறக்கட்டளையின் களஞ்சியம் அமைப்பினர் மகளிர் தினம் கொண்டாடினர். அதில் எனது பதினொன்றாவது நூலான பெண் அறம் வெளியிடப்பட்டது.

தானம் அறக்கட்டளையும் ரிப்ளெக்‌ஷன் பதிப்பகமும் நமது மண்வாசமும் வெளியிடும் எனது மூன்றாவது நூல் இது.

உன்னத வளர்ச்சியில் ஒன்றிணைந்த பெண்கள் சக்தி என்பது இதன் தீம்.


முதலில் அறவழிபாடு.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

கம்பராமாயணம் – இராமாவதாரம்


கம்பராமாயணம் – இராமாவதாரம்


 ம்பராமாயணம் பாடல்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றை சென்னைக் கம்பன் கழகம் 1983 இல் வெளியிட்டுள்ளது. பைபிள் போல், பகவத் கீதைபோல் 1825 பக்கங்களில் கம்பராமாயணம் பாடல்கள் அனைத்தும் கொண்ட நூல் இது. விலையோ 100 /- ரூபாய்தான்.

சனி, 4 ஏப்ரல், 2020

ஒப்பிலாள் - பெண்களின் குரலில்.

ஒப்பிலாள்.

னா செட்டியார் கடுதாசில போட்டபடி நாளானைக்குக் கிளம்பி வாராகளாம். நாகப்பட்டினம் கப்பலடிக்குப் பிளைமவுத் கார் அனுப்பச் சொல்லித் தந்தி அடிச்சிருக்காக வெனையத்தாச்சி” என்றபடி தந்தி தபால் ஆபீசில் இருந்து வந்த ஊழியர் தந்தியை உடைத்துப் படித்தார். அரசப்பன் செட்டியாரின் ஆத்தா வெனையத்தாச்சி தபால்காரர் கையில் ஒரு ரூபாய் நோட்டைக் கொடுத்து "நல்ல சேதி சொன்னே தம்பி வைச்சுக்க" என்றார்கள்.

“அடி ஒப்பிலா. ஓசைமணி காளிக்குக் காசெடுத்து வையி. பாப்பாத்திக்குப் படைக்கோணும். முத்தாத்தாளுக்கு மாவெளக்கு வைக்கோணும்” என்றபடி தன் சேவல்கொண்டையைச் செருகிக்கொண்டே விபூதி பூசிக்கொண்டார் வினை தீர்த்தாள் ஆச்சி.

பிள்ளைகளுக்குத் தூக்குச் சட்டியில் பள்ளிக்கோடத்துக்குச் சாப்பாடு கட்டிக் கொண்டிருந்த ஒப்பிலா ஆச்சி ”அதான் தெரிஞ்ச விசயமாச்சே, மகனைக் காணமுன்னே ஆத்தா இந்தச் சத்தம் போடுறாக. மகனை கண்டுபிட்டா ஒரே ஆட்டபாட்டம்தான்” என மோவாயை இடித்தபடி உள்ளே சென்றாள்.

சேதியைக் கேட்ட பிள்ளைகளுக்கெல்லாம் கொண்டாட்டம். அப்பச்சி வந்தா மலயா ரிப்பன், முட்டாயி, ரப்பர், ப்ளேடு, ஸ்டிக்கர், டேப்பு, வெளையாட்டுச் சாமான், கைக்கெடிகாரம், பிஸ்கட்டு டின்னு, துணிமணி அம்புட்டும் வருமே. கேக்கும்போதே மலயா வாசம் அடித்தது அவர்கள் மனசுக்குள்.

மலயாச் சாமான் வைச்சிருக்கிற வளவறைக்குள்ள ஆத்தா விடுறதேயில்லை என்ற ஏக்கம் அவர்கள் நெஞ்சுமட்டும் நிரம்பி இருந்தது. அப்பச்சி வந்தா ரொட்டி முட்டாய் வேஃபர்ஸ் கிடைக்கும் என்ற இனிப்புக் கனவோடு பள்ளிக்கு வேண்டாவெறுப்பாய்க் கிளம்பினார்கள்.

வியாழன், 2 ஏப்ரல், 2020

சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒளி கொடுத்தவர். தினமலர் சிறுவர்மலர் - 58.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒளி கொடுத்தவர்
சூரியனும் சந்திரனும்தான் ஏற்கனவே ஒளியோடு உலாவருகிறார்களே இதென்ன புதுக்கதை என்கிறீர்களா குழந்தைகளே. ஆம் புதுக்கதைதான். ஏற்கனவே ஒளியோடு இருந்த சூரியன் ஒளியிழந்தது எப்படி என்பதையும் அவன் திரும்ப ஒளி பெற்றதையும் பார்ப்போம். அதே போல் சந்திரன் ஒளிவீசித் திகழ்வது எப்படி என்பதையும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
பிரம்மதேவரின் மானஸபுத்திரர்களுள் ஒருவர் அத்திரி மகரிஷி. இவருடைய மனைவி அனுசூயாதேவி. யாரிடமும் அசூயை இல்லாமல் கோபப்படாமல் பழகுவதால் அனுசூயாதேவி அனைவராலும் விரும்பப்பட்டவளாகத் திகழ்ந்தாள்.
அதேபோல் அத்திரி முனிவரும் அனைவராலும் விரும்பப்பட்டார். ஆயுர்வேத மருத்துவம், ஜோதிட சாஸ்த்திரம் ஆகியவற்றில் கரை கண்டவர். இந்த உலகம் தோன்றியபோது இவரும் அவதரித்தார். பல்லாயிரம் குழந்தைகள் பெற்றார். அவர்களுள் பதஞ்சலி, தத்தாத்ரேயர் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
அத்திரி முனிவர் தெளிந்த மெய்ஞானம் கொண்டவர். ஈரேழு பதினாலு லோகத்திலும் அவர் புகழ் பரவிக் கிடந்தது. அவரை மனதில் தியானித்து அவரது மனைவி அனுசூயை மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கியதும் பின் முப்பெரும் தேவியரின் வேண்டுகோளின்படி அவர்களைத் திரும்ப மும்மூர்த்திகளாக்கியதும் நாம் அறிந்ததே.

புதன், 1 ஏப்ரல், 2020

”பெண் அறம் “ எனது பதினொன்றாவது நூல் வெளியீடு.

இன்று மதுரை தானம் அறக்கட்டளை சார்பில் எனது பெண் அறம் நூல் வெளியிடப்பட்டது. எட்டரை லட்சம் பெண்கள் கொண்ட சுய உதவிக் குழுக்களுக்காக நடத்தப்படும் நமது மண்வாசம் இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல்.

1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்பம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளது. இதை என் பதினொன்றாவது நூலின் அட்டைப்படமாகத் தேர்வு செய்த திரு ப. திருமலை சார் அவர்களுக்கும் நமது மண்வாசம் இதழுக்கும்,
பட்டறிவு பதிப்பகத்துக்கும் தானம் அறக்கட்டளைக்கும் நன்றி. இனிய பெண்கள் தின வாழ்த்துகள்.
Related Posts Plugin for WordPress, Blogger...