எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சூரியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூரியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 2 ஏப்ரல், 2020

சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒளி கொடுத்தவர். தினமலர் சிறுவர்மலர் - 58.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒளி கொடுத்தவர்
சூரியனும் சந்திரனும்தான் ஏற்கனவே ஒளியோடு உலாவருகிறார்களே இதென்ன புதுக்கதை என்கிறீர்களா குழந்தைகளே. ஆம் புதுக்கதைதான். ஏற்கனவே ஒளியோடு இருந்த சூரியன் ஒளியிழந்தது எப்படி என்பதையும் அவன் திரும்ப ஒளி பெற்றதையும் பார்ப்போம். அதே போல் சந்திரன் ஒளிவீசித் திகழ்வது எப்படி என்பதையும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
பிரம்மதேவரின் மானஸபுத்திரர்களுள் ஒருவர் அத்திரி மகரிஷி. இவருடைய மனைவி அனுசூயாதேவி. யாரிடமும் அசூயை இல்லாமல் கோபப்படாமல் பழகுவதால் அனுசூயாதேவி அனைவராலும் விரும்பப்பட்டவளாகத் திகழ்ந்தாள்.
அதேபோல் அத்திரி முனிவரும் அனைவராலும் விரும்பப்பட்டார். ஆயுர்வேத மருத்துவம், ஜோதிட சாஸ்த்திரம் ஆகியவற்றில் கரை கண்டவர். இந்த உலகம் தோன்றியபோது இவரும் அவதரித்தார். பல்லாயிரம் குழந்தைகள் பெற்றார். அவர்களுள் பதஞ்சலி, தத்தாத்ரேயர் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
அத்திரி முனிவர் தெளிந்த மெய்ஞானம் கொண்டவர். ஈரேழு பதினாலு லோகத்திலும் அவர் புகழ் பரவிக் கிடந்தது. அவரை மனதில் தியானித்து அவரது மனைவி அனுசூயை மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கியதும் பின் முப்பெரும் தேவியரின் வேண்டுகோளின்படி அவர்களைத் திரும்ப மும்மூர்த்திகளாக்கியதும் நாம் அறிந்ததே.

செவ்வாய், 4 ஜூன், 2019

துடுக்குத்தனத்தால் ஒளியை இழந்த சூரியனும் சோமனும். தினமலர் சிறுவர்மலர் - 18.

துடுக்குத்தனத்தால் ஒளியை இழந்த சூரியனும் சோமனும்
எப்பவும் எங்கயும் நம்ம துடுக்குத்தனம் செல்லுபடி ஆகாது. அகந்தையும் ஆணவமும் விளைவிக்கும் அவமானத்தை துடுக்குத்தனமும் விளைவிக்கும். சாதாரண மக்கள் மட்டுமில்ல. இந்த உலகத்துக்கே ஒளி கொடுக்குற சூரியனும் சோமனும் கூட துடுக்குத்தனமா செயல்பட்டதால தங்களோட ஒளியை இழந்தாங்க. அப்புறம் தவறை உணர்ந்து திருத்திக்கிட்டதால திரும்ப ஒளி பெற்றாங்க. அது என்ன கதைன்னு பார்ப்போம் குழந்தைகளே.
காசியப முனிவர் அதிதி தம்பதிகளின் புதல்வர்தான் சூரியன். இவருடைய ரதத்தை அருணண் என்பவன் செலுத்தி வந்தான். ஆனால் இவன் அங்கஹீனம் உள்ளவன். அதே சமயம் அன்பும் பக்தியும் கொண்டவன்.
இவன் ஒரு முறை சூரியனிடம் கைலாயம் சென்று சிவனை தரிசிக்க வேண்டும் என்ற தன்னுடைய நியாயமான கோரிக்கையைத் தெரிவித்தான். அதற்காக சூரியனிடம் அனுமதி கேட்டான். ஆனால் சூரியனோ அருணனின் உடற்குறையைச் சொல்லி கிண்டலடித்து ”நீயெல்லாம் எங்கே கைலாயம் செல்லப் போகிறாய், சிவனை தரிசிக்கப் போகிறாய்” என்று எள்ளினான்.

திங்கள், 29 ஏப்ரல், 2019

உயிர் ஒன்று உடல் இரண்டு. தினமலர் சிறுவர்மலர் - 14.

உயிர் ஒன்று உடல் இரண்டு.
அதென்ன உயிர் ஒன்று உடல் இரண்டு. அப்படி யாரும் இருக்க முடியுமா. இருந்தாலும் எப்படி வாழ முடியும். எப்படி இரு உடலில் ஒரு உயிர் இருக்கும், கேட்கவே விநோதமாக இருக்கிறதல்லவா குழந்தைகளே. அது எப்படி எனச் சொல்கிறேன் கேளுங்கள்.
மந்தார மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்த போது முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை ஈசன் உண்டு கண்டத்தில் நிறுத்தி உலகைக் காப்பாற்றினார்.
அடுத்து காமதேனு, கற்பக விருட்சம், லெக்ஷ்மி, சந்திரன், ஐராவதம், உச்சைசிரவஸ், அமிர்தம் போன்றவை வெளிப்பட்டன. இதில் அமிர்தம் கொண்ட கலசத்தை ஏந்தியபடி தன்வந்திரி வெளிவந்தார். இந்த அமிர்தம் சாகாவரம் கொடுக்கக் கூடியது. இதை வேண்டித்தானே அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள்.
அதனால் அமிர்தம் கிடைத்தவுடன் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் அதை அடையப் போட்டி ஏற்பட்டது. ஒரே களேபரம். பார்த்தார் விஷ்ணு . உடனே மோகினி அவதாரம் எடுத்து தன்வந்திரியின் கையில் இருந்த அமிர்த கலசத்தைத் தன் கையில் வாங்கி அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதாகக் கூறினார்.

புதன், 2 ஜனவரி, 2019

தந்தைக்கு நிகராக உயர்ந்த மைந்தன் க்ருதவர்மா. தினமலர். சிறுவர்மலர் - 50.

தந்தைக்கு நிகராக உயர்ந்த மைந்தன் க்ருதவர்மா:-
ருப்பாக இருக்கிறான் என்று ஒரு குழந்தையை அவனைப் பெற்ற தந்தையே வெறுக்க முடியுமா. ஆனால் வெறுத்துவிட்டாரே. அவர்தான் சூரிய பகவான். அதோ காலைச் சாய்த்து சாய்த்து மனவருத்தத்தோடு நடந்து செல்கிறானே ஒரு சிறுவன், அவன்தான் அவரது புத்திரன் க்ருதவர்மா என்ற சனி. தன்னை அடியோடு வெறுத்த தந்தையிடம் நற்பெயர் வாங்க அவன் பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா. அதனால் சூரியன் மனம் மாறினாரா எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
சூரியனின் மனைவி பெயர் உஷாதேவி. அவர்களுக்கு முன்று குழந்தைகள் பிறந்தபின்பு உஷாதேவியால் சூரியனின் வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. தன்னைப் போல உருவம் கொண்ட ஒரு பெண்ணைப் படைத்து அவளை சூரியனுடன் குடும்பம் நடத்தச் சொல்லிவிட்டு தவம் செய்யப் பூலோகம் சென்று விட்டாள். அவள்தான் சாயாதேவி.
சூரியனுக்கும் சாயாதேவிக்கும் இரண்டு குழந்தைகள் பிறக்கிறார்கள். அவர்கள் கிருதவர்மா என்ற ஆண் குழந்தையும் , தபதி என்ற பெண் குழந்தையும். உஷாதேவியின் நிழலிலிருந்து உருவானவர்தான் சாயாதேவி என்பதால் அவருக்குப் பிறந்த கிருதவர்மா என்ற சனீஸ்வரன் கருமை நிறமாகப் பிறக்கிறார்.

ஞாயிறு, 23 டிசம்பர், 2018

கடமை தவறியதால் அழகை இழந்த தர்மராஜன். தினமலர். சிறுவர்மலர் - 49.

கடமை தவறியதால் அழகை இழந்த தர்மராஜன்
ரு காலத்தில் மிக அழகாக இருந்த இளைஞன் ஒருவன் மிகப் பயங்கரமான உருவத்தை அடையும்படி நேரிட்டது. அந்த அழகு தர்மராஜனான அவனை அப்படிச் செய்தவர் கயிலைமலையில் வாழும் பரமேஸ்வரன்தான். அதுவும் தர்மராஜன் செய்துவந்த தொழிலின் நிமித்தம்தான். அது என்ன தொழில். ஏன் அவர் அழகை இழந்தார் எனப் பார்ப்போம் குழந்தைகளே.
ர்மராஜனின் கொள்ளுப்பாட்டன் மகாவிஷ்ணு. அவரது மகன் பிரம்மா தர்மராஜனின் பாட்டன். அவரது மகன் சூரியன் தர்மராஜனைப் பெற்றவர். சூரியனுக்கும் உஷாதேவிக்கும் பிறந்தவன் தர்மராஜன் எனப்படும் காலதேவன். இவனை யமா என்றும் அழைப்பார்கள். இவனுக்கு இவனது தாய் உஷாதேவி மூலம் மனு என்ற சகோதரனும், யமுனை என்ற சகோதரியும் உண்டு. உஷாதேவி உருவாக்கிய இன்னொரு தாயான சாயாதேவி மூலம் சனி, சாவர்ணி மனு என்ற சகோதரர்களும் தபதி என்ற சகோதரியும் உண்டு.
சிறுவயதில் சாயாதேவியைத் தன் தாய் என நினைத்து வந்த யமா ஒரு கட்டத்தில் அது தன் தாய் அல்ல, தாயின் சாயல் கொண்ட தாய் உருவம் எனப் புலப்படுகிறது. அதனால் தன் தந்தையைத் தாய் ஏமாற்றுவதாகக் குறை கூறி கோபத்தால் காலால் எட்டி உதைத்து விடுகிறான். சாயாதேவி உடனே கோபமுற்று அவனது கால் புண்ணாகும்படி சபித்துவிடுகிறார்.

வெள்ளி, 25 மே, 2018

சிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19.

சிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன்.
அத்தாணி மண்டபம். அத்தினாபுரத்து அரசிளங்குமரர்களான பாண்டவர்களும், கௌரவர்களும் கூடி இருந்தார்கள். அங்கே வில் வேல் வாளில் பயிற்சி பெற்ற இளையர்களின் திறமைக்கான போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.  ஒவ்வொரு போட்டியிலும் யாரோ வென்ற போது கூடியிருந்த சிற்றிளங்குமரர்கள் அவர்களை ஆரவாரத்துடன் கரகோஷம் எழுப்பிப் பாராட்டினார்கள்.
அர்ஜுனன் முறை வந்தது. அவர் அங்கே தொங்கவிடப்பட்டிருந்த பொம்மைக் கிளியின் கண்ணைத் தன் அம்பால் எய்தார். உடனே அவருக்குக் கரகோஷம் எழும்ப கூடியிருந்த சிற்றிளங்குமரர்கள் மத்தியிலிருந்து சூரியனைப் போலப் ப்ரகாசமான, தேஜசான ஒரு வீரன் எழுந்தான்.
“ இந்தக் கிளியின் ஒரு கண் என்ன , இரு கண்களையும் என்னால் குறிவைத்து அடிக்கமுடியும். “ என்று போட்டி மேடையில் ஏற முயன்றான்.
“நில்.. அரசிளங்குமரர்களுடன் போட்டியிட நீ தகுதியானவந்தானா. எந்த நாட்டு இளவரசன் நீ. ? “ என்று தடுத்து நிறுத்தினார் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் குருவான துரோணர்.
திகைத்து நின்றான் அந்த வீரன். இழிவரல் கொண்டு இறங்க முற்பட்டான். அப்போது அவனைத் தடுத்து நிறுத்தியது ஒரு குரல். அக்குரலுக்குச் சொந்தக்காரன் துரியோதனன்.

புதன், 13 ஜனவரி, 2010

சூரியப் பொங்கல்

அந்திக்கூட்டுக்குள்
விடியலின் சிறகு முளைக்க
சூரியன் பறந்து கிளம்பி ....

சூரியப் பொங்கலில்
வெளிச்சப் பால்
பொங்கி வழிந்து...

சூரியத்தண்ணீர்
மரத்தாமரை வழி சிதறித்
தரையில் முத்துக்களாய்.....
Related Posts Plugin for WordPress, Blogger...