எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 23 பிப்ரவரி, 2011

நானும் ஒரு ப்லாகர்தாம்லேய்..


எப்ப பார்த்தாலும் நடுநிலைமையா எழுதி போரடிக்குது.. நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லுனு சொல்லிட்டு என் ப்லாக் பக்கம் கொஞ்ச நாள் வர்றவங்க கொஞ்ச நாள்ல கார சார பதிவு பக்கம் போயிடுறாங்க.. இதுக்கெல்லாம் யார் காரணம்னு பார்த்தா ஒருத்தங்க.. லேய் நானும் ஒரு ரவுடிதாம்லேன்னு தன் இடத்தை நிரூபிச்சவங்க.. சரி அவங்க கூட கூட்டணியா இன்னும் ரெண்டு பேரை சேர்த்துகிட்டா கொஞ்சம் கித்தாய்ப்பா இருக்கும்னு இன்னும் ரெண்டு பேரு.. மொத்தம் மூணு பேரு.. சரி நம்ம ரேஞ்சுக்கு இவங்கள எதிர்த்து எதிர் இடுகை போட்டு ஃபேமஸ் ஆகிடலாம்னு.. வேற யாரையாவது சொல்லி கொத்துப்பரோட்டாவாவோ., ரத்தக்களறியாவோ ஆனா ப்லாக் எல்லாம் ஷட்டர் போட வேண்டியதுதான்னு இவங்கள தேர்ந்தெடுத்தேன்.

என்னம்மா இது உப்பு சப்பில்லாம.. ஒரு மொக்கை பதிவு.. யாரையாவது திட்டி எழுதி இருக்கீங்களான்னு என் பசங்களும்., சர்ச்சையில வாய் கொப்புளிச்சு இருக்கீங்களா... நீங்களாம் ப்லாகரா இருக்குறதே வேஸ்ட்னும் என் அன்புத் தோழி வசுவின் கணவர்., முகப்புத்த நண்பர் செந்தில் வாசனும் சீண்டிவிட.. இயல்பான தமிழ் மறத்தி குணம் வந்து நாம தெகிரியமா செஞ்ச முதல் எதிர் இடுகை இது.. ( கொஞ்சம் நடுங்குதுன்னாலும் ஸ்டடியா நின்னு சமாளிச்சுற வேண்டியதுதான்..)

ஏதோ நாமளும் ஒரு பத்ரிக்கையில ஃப்ரீலான்சரா இருக்கோமேன்னு படமெடுக்குறது. பாம்பு இல்லங்க நானு.. காமிராவுலதான். அதுல ஆனா., ஆவன்னா கூட தெரியாது. லைட்ஸ் ., காமிரா., ஆக்‌ஷன்ல இருக்குறத சுட வேண்டியது. சுட்டது நல்லா இருக்கா தீஞ்சு போய் இருக்கான்னு கூட பார்க்காம பத்ரிக்கைக்கு அனுப்புறது., ப்லாக்குல போடுறது., ஃபேஸ் புக்குல போடுறதுன்னு நாம உண்டு நம்ம இம்சை உண்டுன்னு போயிக்கிட்டு இருந்தா நேத்து ஒருத்தங்க மலை எல்லாம் ஓடுற காருல இருந்து சுட்டுகிட்டு வந்து போட்டு இருக்காங்க பாருங்க சூப்பரா இருந்துச்சு.. சூப்பர் மேன் கூட இந்த மாதிரி பறந்துகிட்டே பர்ஃபெக்டா சுட முடியாது.. இதுல இவங்க காமிரா உமன் மாதிரி வேற அற்புதமா எடுப்பாங்களா..( மிஷ்கின்., சேரன் கவனத்துக்கு).. ஸ்டில் போட்டோகிராஃபி அற்புதமா செய்வாங்க.. சரி நாமளும் சூப்பரா ரெண்டு படம் மூவிங்ல எடுத்து பேர் வாங்கிறனும்னு ஒரு ஆசை.. ஆசை யாரை விட்டது.. அது இப்போ உங்களைதான் விபரீதமா இந்த இடுகையில கடிக்குது..

சரின்னு காமிராவை தூக்கிகிட்டு ..( ஒண்ணும் பெரிசில்லங்க சும்மா LUMIX 10 MEGA PIXEL தான்) ஒரு பேட்டி ப்ளீஸ்னு ஒரு இடத்துக்கு போனமா. வர்ற வழியெல்லாம் மலை வரலை.. சிலையா வந்துச்சு. அண்ணல்., கண்ணகி., எம்ஜியார்., அண்ணா., பிடி தியாகராஜர் .. சரி நமக்கு வாய்ச்சதை எடு்ப்போம்னு எடுக்க ஆரம்பிச்சா முதல் கவர் .,அப்புறம் இன்னொரு கவர்லருந்து காமிராவை எடுக்கும் போது ஒரு சிலை கடந்துருச்சு. அடுத்த சிலை தங்க கலர்ல தெரிய ஆரம்பிக்கும் போதே ஒரு ஆள் ரோடை கிராஸ் செய்ய அந்த ஆள் மறைச்சு எடுக்க முடியலை.. அடுத்த சிலை வந்த போது காமிராவை ஆன் பண்ணா அது போட்டோவை பார்க்கும் ஸ்டேடசில் இருக்கு. அதை எடுக்கும் நிலைக்கு ஆன் பண்ணி மாத்தும் போது அது போயிருச்சு.. போஸ் கொடுத்தும் விட்டுட்டியே மக்(கா) குங்குற மாதிரி.
விடாது கருப்பு மாதிரி அடுத்த சிலைக்கு வெயிட்டிங் .. ஏன் சிலைன்னா அதுதானே மலை மாதிரி அசையாது.. இதை போட்டா யாராவது அதுக்கு பூர்வபுராணம் எல்லாம் சொல்வாங்கல்லன்னு நப்பாசைதான். அடுத்த சிலை வந்த போது கண்ணகி . நாம எடுக்க முயற்சி பண்ணும்போதெல்லாம் எல்லாரும் என்ன பண்ணுறாங்கன்னு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.. ஏதோ ஃபேமஸ் ஃபோட்டோகிராஃபர் மாதிரி போஸெல்லாம் பார்த்து சுட்டு முடிக்கிறதுக்குள்ள கை மட்டும்தாம் கம்பி கேப்ல கிடைச்சுது.. இதுதான் கண்ணகின்னு நான் கையை மட்டும் காமிச்சா நம்பவா போறீங்க.. சரி விடுங்க மக்கா. எதுக்கு எனக்காக வருத்தப் படுறீங்க..

ஸ்டாப் தெரியாம எங்காவது போயிறப் போறம்னு கண்டக்டர் கிட்ட சொல்லி வச்சமா.. அவர் பக்கத்துல டிக்கட் கொடுக்க வரும் போதெல்லாம் ஸ்டாப்போன்னு நினைச்சு நினைச்சு பாதி பொழுது போயிருச்சு. அதுவேற ஒரு காரணம். சரியா ரன்னிங்கல எடுக்க முடியாததுக்கு..
சரின்னு போயே போய் சேர்ந்தாச்சு நம்ம பேட்டி ஸ்பாட்டுக்கு.. சரி போனா போகுது போன்னு நாம போன இடத்துல ஒரே ஒரு சிலை நம்மை பார்த்து எடுக்குறியா இல்லையான்னு கத்தி கபடாவோட போஸ் கொடுத்துச்சா.. நாம போன வேலையை மறந்துட்டு சுத்தி சுத்தி போட்டோ எடுத்தோம்ல.. ரன்னிங்ல. பொழச்சுட்டுப் போன்னு போஸ் கொடுத்த சிலைக்கு நன்னி நன்னி நன்னி.. சரி இது என்னன்னு யாராவது விக்கி பீடியா பார்த்து லிங்க் கொடுத்தாலும் சந்தோஷந்தான்..

அப்புறம் சிலை அழகா கலை அழகான்னு எல்லாம் நாம கேக்க மாட்டோம் .. அங்க ஒரு ஆளு பனை மரத்து மேலே மேகத்துல மறைஞ்சு வந்தாலும் நான் தான் அழகுன்னு சொல்லிக்கிறாப்புல.. அப்புறம் நாமளும் கேக்கப் போயி யாராவது கலைன்னு பேர் உள்ள ஆள் வந்து எல்லாரும் என்னதான் அழகுன்னு சொல்றாங்கன்னு சொல்லிப்புடாம..


நன்றி ஹுசைனம்மா., ராமலெக்ஷ்மி., கதிர்..:))

42 கருத்துகள்:

 1. புது விதமாய் அறிமுகம்.

  புது முயற்சி அருமை தேனம்மை.

  பதிலளிநீக்கு
 2. அக்கா, நிஜமா எனக்கு புரியல...

  பதிலளிநீக்கு
 3. ஆகா... ஆம்புலன்ஸ்க்கே ஆக்ஸிடெண்டா. நீங்களும் உஜாலாவுக்கு மாறீட்டீங்களா !!!!

  பதிலளிநீக்கு
 4. ஹய்யோ...ஹய்யோ...!
  பச்ச மண்ணுங்க நீங்க?!
  நீங்க குடுத்த Build-Up ல நாங்களும் ரொம்ப ஆர்வமாகி, யாரையோ பயங்கரமா தாக்கி எழுதப்போறீங்கன்னு பாத்தா சிலை, போட்டோ, மலை ன்னு எதோ ஐராவதம் ஸ்ரீனிவாசன் மாதிரி எழுதிகிட்டு இருக்கீங்க?!
  உங்க கிட்டு இருந்து நாங்க இன்னும் எதிர் பாக்கிறோம்!
  நாளைக்கு அந்த சர்ச்சை BLOG வரும் இல்லே????

  பதிலளிநீக்கு
 5. கொஞ்சம் நடுங்குதுன்னாலும் ஸ்டடியா நின்னு சமாளிச்சுற வேண்டியதுதான்..)
  நல்லாவே சமாளிச்சு இருக்கீங்க

  பதிலளிநீக்கு
 6. தேனூ..எனக்கு ஒண்ணுமே புரியலே..ஆனாலும் சிரிச்சிகிட்டேன்

  பதிலளிநீக்கு
 7. அடடா, முழுசா படிக்காம பின்னூட்டம் போட முடியாது போல இருக்கே,..

  பதிலளிநீக்கு
 8. புரிஞ்சிருச்சு,.. எடுத்த போட்டவையும் போட்டிருந்தா நல்ல இருந்திருக்கும்

  பதிலளிநீக்கு
 9. எக்கா, சூப்பர்க்கா!! இனி உங்களை நான் குருஜினுதான் சொல்லணும்!!

  //ஸ்டாப் தெரியாம எங்காவது போயிறப் போறம்னு கண்டக்டர் கிட்ட சொல்லி வச்சமா.. அவர் பக்கத்துல டிக்கட் கொடுக்க வரும் போதெல்லாம் ஸ்டாப்போன்னு நினைச்சு நினைச்சு //

  ROTFL!! அக்கா, நீங்கதாங்கக்கா ரவுடி கூட்டத்து தலைவி!!

  பதிலளிநீக்கு
 10. //போஸ் கொடுத்த சிலை ... என்னன்னு யாராவது//

  அவ்வ்வ்வ்... அப்ப அது கண்ணகி இல்லியா..?

  (கருப்பா, பொண்ணு மாதிரி, கையில எதாவது வச்சுகிட்டிருந்தா உடனே கண்ணகியான்னு அடிக்க வரப்படாது. எல்லாம் குருவுக்கு சமர்ப்பணம்!!) ;-)))))

  பதிலளிநீக்கு
 11. போங்க அக்கா நான். குடுத்த பில்டப்ப பார்து நானும் என்னவோ ஏதோனு நினச்சுட்டேன்...
  ஹா..ஹா..ஹா..

  பதிலளிநீக்கு
 12. //அக்கா, நிஜமா எனக்கு புரியல..//எனக்கும் தான்...

  பதிலளிநீக்கு
 13. என்னமோ சொல்ல வர்றீங்க ஆனால் என்னன்னுதான் புரியலை.. :))

  பதிலளிநீக்கு
 14. பிரபல பதிவர் ஆகனும்னா இப்படி மூடாந்தரமா திட்டக்கூடாது.. கண்டபடி கோபப்படனும்.. உங்களுக்கு வர்லை.. எதுக்கு?ரிஸ்க்? விட்டுடுங்க.. ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
 15. டைட்டிலைப்பார்த்ததும் பயந்து போய் வந்தேன்..

  பதிலளிநீக்கு
 16. எப்படியாவது ஒரு படமாவது நீங்க எடுத்து அத கடைசியா வச்சிருப்பிங்கன்னு நம்பி படிச்சேன்... ம்ம்ம்ம்ம்.

  மேல இருக்கிற படமாவது நீங்க எடுத்ததா... இல்ல.... எங்கேணும் சுட்டதா.... என்னா படம் ரொம்ப தெளிவா இருக்கு!

  பதிலளிநீக்கு
 17. கதிர் அழகுன்னு சொன்னது பொறுக்கலையா.. அதுக்கு ஒரு மொக்கை இடுகையா :-)))))))

  பதிலளிநீக்கு
 18. நான் உங்கள் தளத்தில் இணைத்துக் கொண்டேன்.
  நீங்களும் என் தளத்தில் இனைந்து கொள்விர்களா ?

  நான் இதை ஏன் கேக்குறேன் என்றால் ரொம்ப பேரு நமக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டு போகுதுக..அதுனாலே ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டி இருக்கு.

  பதிலளிநீக்கு
 19. பழுவேட்டரையரின் ஒண்ணு விட்ட பேரனோட சித்தப்பா புள்ளைக்கு அத்தை மகனின் தாத்தாவோட ரெண்டு விட்ட பெரியப்பா மகன் படம்தானே அது?

  பதிலளிநீக்கு
 20. ம்...யாரையாவது அடிச்சாதான் பெரியாளா முடியும்..ஓக்கே ...ஓக்கே...டபிள் ரைட்ட்ட்ட்ட்ட்ட்ட் :-))

  பதிலளிநீக்கு
 21. வலைச்சரத்தில் லேடீஸ் ஸ்பெஷல்... உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

  http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_25.html

  பதிலளிநீக்கு
 22. ஆமாங்க எனக்கும் ஒன்னும் புரியலை

  பதிலளிநீக்கு
 23. நல்ல பதிவு.
  உங்களுக்கு இப்படியெல்லாம் எழுத வருமா?
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 24. கையை போட்டு இது யாரோட கை யின்னு போட்டி வச்சிருக்கலாமில்ல்..
  தவற விட்டுட்டீங்களே...

  பதிலளிநீக்கு
 25. நன்றி சௌந்தர்., !!

  நல்ல வேளை ரஜனி.. கொஞ்சம் கூட புரியலையில்ல அதுதான் வேணும்..:)

  நன்றி கோமதி..

  இது நானும் ஒரு ரவுடிதாம்லே என்றூ தலைப்பு கொடுத்த ஹுசைனம்மா ., மலைப் படங்கள் போட்ட ராமலெக்ஷ்மி., மற்றூம்அதில் பனை அழகா., பாயும் கதிர் அழகான்னு அவங்க கேட்ட கேள்விக்கு எல்லாரும் என்னைத்தான் அழகுன்னு சொல்றாங்க என்ற கதிர் மூவருக்கும் போட்ட மொக்கை எதிர்பதிவு சித்து..:))

  பதிலளிநீக்கு
 26. விஜயன்.. :))

  ராமலெக்ஷ்மி..:))


  ஆனந்தி..:))

  வாசன் என்ன கிண்டலா.. இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன்.. என்ன பயமே இல்லாம போச்சே யாருக்கும்.. ஹ்ம்ம்ம் :))

  நன்றி மஹி..

  பதிலளிநீக்கு
 27. விஜயன்.. :))

  ராமலெக்ஷ்மி..:))


  ஆனந்தி..:))

  வாசன் என்ன கிண்டலா.. இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன்.. என்ன பயமே இல்லாம போச்சே யாருக்கும்.. ஹ்ம்ம்ம் :))

  நன்றி மஹி..

  பதிலளிநீக்கு
 28. ஸாதிகா சித்துவுக்கு சொன்னத படிச்சி பாருங்கப்பா..:)

  ஜோதி கிண்டலா.. எடுத்த போட்டோதான் மேலே இருக்குல்லா..:)

  ஹுசைனம்மா .. அட அப்ப நானும் ஒரு ரவுடிதாம்லயா.. ஹையா ஜாலி.. ஹுசைனம்மாவே சொல்லிட்டாங்க.. ஸ்வீட் ஆஃப் யூ ஹுசைனம்மா.. உம்மா.. இதெல்லாம் முகப்புத்தகத்துல சொல்றதுதுதான்..:))

  பதிலளிநீக்கு
 29. கனி..:)

  கீதா சித்துவுக்கு கொடுத்துள்ள விளக்கத்தைப் பாருங்க..:)

  பிரபா என்ன ஆச்சு ..? ஏன் முடியலை..:)

  மாணவன் அம்புட்டுக் குழப்பமாவா இருக்கு..:)

  செந்தில் அப்போ நான் பாஸ் பண்ணிட்டனா இல்லையா..?

  சாரல்..:)

  கருணா என்னது இப்பிடி கேட்டுப்பிட்டீங்க.. நமக்கு ஃபோட்டொ அப்லோட் பண்ணா ரெண்டு மெதட் தான் தெரியும் முதல்ல அப்லோட் பண்ணிட்டு இடுகையை எழுதுறது.. இல்லன்னா கடைசியா எல்லா ஃபோட்டோவையும் கும்பலா முதல்ல போடுறது.. நடுவில எடுக்கவோ., போடவோ ., மாத்தவோ தெரியாது..

  அதோஓஓ மேல தெரிதுல்லா அந்த போட்டோ நாம பிடிச்சதுதான்.. இது இந்த சிலை மேலெ சத்தியம்..:)

  பதிலளிநீக்கு
 30. சூரியனைப் பார்த்து சொல்றதெல்லாம் உங்களைப்பார்த்து சொல்றதாயிருமா கதிர்.. ஹிஹி எப்பிடியோ மொக்கை எதிர் இடுகை போடவாவது தில் வேணும்ல..

  குமார்..:)

  கருன்..:)

  அந்நியன் சேர்ந்த தளத்தையே படிக்க முடியலை.. எனவே டைம் கிடைக்கும் போது உங்க தளத்தையும் படிக்கிறேன்.. ஃபாலோயரா ஆனா தொடர்ந்து படிக்க முடியலை..நிறைய இடுகைகள் சேர்ந்து போயிடுது..

  பதிலளிநீக்கு
 31. மனோ..:)

  ஸ்ரீராம்.. அதெப்படி அம்புட்டு கரெக்டா சொன்னீங்க..:))

  ஜெய்..:)

  பிரபா நிச்சயம் உண்டு..:)

  வேலு சித்துவுக்கு கொடுத்த பதிலை படிங்க..:)

  நன்றி ரத்னவேல்..:)

  இராஜராஜேஸ்வரி.. இப்படி நல்ல ஐடியா எல்லாம் கொடுக்குறீங்களே வாழ்க வளர்க..:)

  பதிலளிநீக்கு
 32. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...