எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 26 பிப்ரவரி, 2011

தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி..?

தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி அக்கா.. ? இது எனக்கு முகப் புத்தகத்தில் உள்டப்பியில் வந்த கேள்வி.. பார்த்தவுடன் அரண்டு போய் விட்டேன்..

என்ன இது ? எதற்காக எனப் புரியவில்லை.. இந்த மனநிலை வரக் காரணம் என்ன..? தனிமையா.. வியாபார போட்டியா..? தொழில் நஷ்டமா.? குடும்ப தகராறா.. ? காதல் தோல்வியா.. என்னவென்று தெரியவில்லை..எதாக இருந்தாலும் பேசி பகிர்ந்து தீர்வைத் தேட வேண்டுமே தவிர எதற்கு இந்த கோழைத்தனமான முயற்சி..ஆனால் மன அழுத்தம் கூடின நிலை கட்டாயம் பார்க்கப்படவேண்டும்.. வேலைப்பளு.. , எதையும் சரிவர செய்ய முடியாத நிலை., நிலை கொள்ளாமை., வெறுப்பு., விரக்தி போன்றவை சரி செய்யக்கூடியவை.

எத்தனையோ கோடி உயிரணுக்களில் ஒற்றை உயிரணுவாய் நாம் மட்டுமே தப்பி தாயிடம் புகுந்து உயிர்த்துள்ளோம். எத்தனை போராடி இத்தனை வயது வரை வளர்ந்திருப்போம்.. திடீரென இப்படி எல்லாவற்றையும் விட்டு விட்டு போவது என்பது பிரச்சனையின் தீவிரமாய் இருக்கலாம். ஆனால் ஒரு கணமாவது யோசிக்க வேண்டும்.. இதற்கெல்லாம் மாற்று என்ன என்ன செய்யலாம் என.

பணப்பிரச்சனை., கடன் பிரச்சனை என்றால் தான் மட்டுமில்லாமல் மொத்தக் குடும்பத்தையுமே விஷக் குளிர்பானம் கொடுத்துவிட்டு தானும் குடித்து மரிப்பது என்பது சரியான தீர்வல்ல.

முதலில் உங்கள் குடும்பத்தரோடு மனம் விட்டுப் பேசுங்கள். நிலைமை எடுத்து சொல்லுங்கள். அவர்கள் உதவியோடு பிரச்ச்னையிலிருந்து வெளியேறுங்கள். பல வருடங்கள் உழைத்தும் நாம் இப்படியே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோமே என எண்ணாமல் உண்மையான உழைப்புக்கு என்றாவது பலன் கிடைக்கும் என எண்ணுங்கள்.

நல்ல புத்தகங்கள்., நல்ல பொழுதுபோக்குகள்., நல்ல நண்பர்கள் நம்மை புதுப்பிக்கிறார்கள். இவற்றை கைக் கொள்ளுங்கள். மனம் சோகமுறும் போதெல்லாம் பிடித்த இசையை கேளுங்கள். யாருடனாவது உங்கள் பிரச்சனைகளை மனம் விட்டுக் கூறுங்கள்.. தீர்வு கிடைக்கா விட்டாலும் கொஞ்சம் தெளிவாவது கிடைக்கும்.

ஒரு பேப்பர் எடுத்து உங்கள் பிரச்சனைகளை எழுதி பாருங்கள் .. அனேகமாக அனைத்தும் சரி செய்யப் படக்கூடியவையே.. முயற்சியும் காலமும் பயிற்சியும் தேவைப்படும். அவ்வளவுதான்.

உங்களுக்காக என தினமும் அல்லது வார இறுதி நாட்களில் நேரம் ஒதுக்குங்கள்.. நான் ஏன் இப்படி இருக்கிறேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது.. இதற்கு முடிவே இல்லையா என நெகடிவ்வாக எண்ணாமல்.. நான் இன்னும் மேலே முன்னேறுவேன்., எனக்கும் காலம் வரும். ஜெயிப்பேன்., இதல்லாம் தற்காலிகம்தான்.. இதுவும் கடந்து போகும் என பாசிடிவாக நினையுங்கள்.

தற்கொ்லை எண்ணங்கள் தீவிரப் படும்போது ஒரு டாக்டரைப் பார்ப்பது அவசியம். நிலைமையின் தீவிரம் குறைந்து மனம் சமனப்படும் வரை முயற்சி எடுத்து வெளியில் வரவேண்டும்.

வேறு உறவினருடன் அல்லது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள., வெளிப்படுத்த விரும்பாவிட்டாலும்.. இந்த எண்ணம் ஏற்பட்டவுடன் இதை நீக்க நீங்கள் இந்த எண்களுக்கு டயல் செய்யலாம்..

இதற்காக ஜஸ்ட் டயல் மூலம் நான் சேகரித்த எண்கள்.

ஜஸ்ட் டயல் எண் :- 044 26444444.

1. INTERNATIONAL ASSOCIATION FOR SUICIDE PREVENTION :- 04428229635
NUNGAMBAKKAM HIGH ROAD.,
NUNGAMBAKKAM ,
CHENNAI .- 600 034.

2. FOR PRIVACY LOG ON TO http://privacy.justdial.com/.

3. SNEHA SUICIDE PREVENTION HELPLINE :- 044 24640050
04424640060.
NO. 11, NEAR CORPORATION COMMUNITY HALL.,
PARK VIEW ROAD.,
R.A. PURAM,
CHENNAI :- 600 028.

4. JEEVAN SUICIDE PREVENTION HOTLINE,
04426564444,
04426564333,
04426565452.
NO171, GOLDEN GEORGE NAGAR,
NERKUNDRAM,
AMBIKA STREET,
KOYAMBEDU.
CENNAI - 600 107.

வாழ்வது ஒரு முறை.. எவ்வளவு துயரம் வந்தாலும் போராடி வாழ்ந்து பார்ப்பதுதான் மனிதருக்கு அழகு.. விட்டு விட்டு ஓடுவதல்ல.. எனவே ஒரு முறை தீர யோசித்து தீர்வை கண்டுபிடித்து பிரச்சனைகளில் இருந்து மீண்டு வாழுங்கள்..

21 கருத்துகள்:

 1. அருமையா அட்வைஸ் பண்ணிருக்கீங்க....

  பதிலளிநீக்கு
 2. காலத்திற்குத் தேவையான தகவல்கள்.
  நெகடிவ் எண்ணங்கள் இருட்டில் வலுப்பெறும், வெளிச்சம் வந்தபின் தனனம்பிக்கை வரும்.. பாசிடிவவாக சிந்திக்கவேண்டும் என்று அழகாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்

  பதிலளிநீக்கு
 3. யாரது கொஞ்சம் அட்ரஸ் குடுங்க..!! சந்தோஷ நிமிடங்கள் வாழ்வில் எத்தனையோ இருக்கே..!! அதுக்குள்ளேயேவா ?

  பதிலளிநீக்கு
 4. //வாழ்வது ஒரு முறை.. எவ்வளவு துயரம் வந்தாலும் போராடி வாழ்ந்து பார்ப்பதுதாம் மனிதருக்கு அழகு.. விட்டு விட்டு ஓடுவதல்ல//

  மனசு தளரும்போதெல்லாம் இதை தனக்குள்ள சொல்லிக்கிட்டாங்கன்னா, அப்புறம் அந்த உணர்வுகள் ஏன் தலைதூக்கப்போவுது!!! எல்லாமே ஒரு கண நேரத்தில் ஏற்படும் பித்தம்தான்.

  பதிலளிநீக்கு
 5. அந்த நண்பர் தற்போது தன் மனநிலையை மாற்ற ஜோக்குகள் படித்துக் கொண்டிருக்கிறார்..

  தற்கொலை என்பது முடிவல்ல.. மற்றவர்களுக்கு நாம் கொடுக்கும் துன்பத்தின் ஆரம்பம்.

  பிடித்தவர்களை விட்டு செல்வது என்பது கோழைத்தனம் என்பதை விட நம்மை விட்டு அவர்கள் தவிக்கட்டும் என்ற சுயநலமே ஆகும்.

  பதிலளிநீக்கு
 6. அருமையான தகவல்கள். எப்படி நிறுத்துவது என்ற எண்ணமே நல்ல தொடக்கம்தான்.

  பதிலளிநீக்கு
 7. அருமையான தகவல்களை தந்து இருக்கின்றீர்கள் தேனம்மை

  பதிலளிநீக்கு
 8. சமூக சிந்தனையுள்ள பதிவு... சூப்பர்

  வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
  கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

  பதிலளிநீக்கு
 9. மிகவும் அருமையாக சொல்லி இருக்கீங்க....

  குறிஞ்சி குடில்

  பதிலளிநீக்கு
 10. பலரையும் சென்றடையவேண்டிய பதிவு அக்கா !

  பதிலளிநீக்கு
 11. நல்ல பயனுள்ள பகிர்வு.

  அனைவருக்கும் தேவையானதும் கூட‌

  பதிலளிநீக்கு
 12. மிக அவசியமான பகிர்வு.அந்த நிமிட மன்நிலை மாறினாலே மீண்டும் துணியமாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 13. நன்றி மனோ.,

  நன்றி மாதவி.

  நன்றி ஜெய்..அவர் இப்போ சரியா ஆகிட்டார்..

  நன்றி சாரல்..


  நன்றி செந்தில்..

  நன்றி ஸ்ரீராம்..

  நன்றி கலாநேசன்..

  நன்றி ஸாதிகா..

  நன்றி ஜமால்.,

  நன்றி தமிழ்வாசி..

  நன்றி குறிஞ்சி

  நன்றி ஹேமா

  நன்றி ராமலெக்ஷ்மி.,

  நன்றி டகால்டி

  நன்றி அக்பர்.,

  நன்றி குமார்.

  நன்றி இராஜராஜேஸ்வரி..

  நன்றி ஆர் ஆர் ஆர் ..:))

  பதிலளிநீக்கு
 14. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...