எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 24 நவம்பர், 2021

யார் முதலில் ?

யார் முதலில் ?

எந்த ஒரு விஷயத்தைச் செய்தாலும் பதறாமல் செய்தால் நிச்சயம் அதை முழுமையாய்ச் செய்யலாம். அதன் மூலம் பல்வேறு நன்மைகளையும் அடையலாம். நமக்கெல்லாம் தெரிந்த ஔவைப்பிராட்டி இப்படி ஒருமுறை ஒரு காரியத்தைப் பதற்றத்தோடு செய்து அதன் பின் நிதானமாக அதைப் பூர்த்தி செய்து கைலாயமே சென்றாராம். அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
கொன்றை வேந்தன் ஆத்திச்சூடி ஆகியன எழுதியவர் ஔவைப்பிராட்டி. பழம்நீயப்பா ஞானப் பழம்நீ அப்பா இந்த சாதாரண மாம்பழம் உனக்கு கிட்டவில்லையே என்று எதற்குக் கோபம் நீயே ஒரு ஞானப் பழம்தானே என்று முருகனை ஆற்றுப்படுத்தியவள். அதே முருகன் சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்டபோது சுடாதபழம் வேண்டும் எனச் சொல்லி முருகன் உலுக்கிய நாவல் பழத்தைப் பொறுக்கி ஊதித்தின்றவர். என்ன பாட்டி பழம் சுடுதா என்று முருகன் சிரித்தபடி கேட்ட கேள்வியில் முருகனின் தமிழ்ப் புலமை கண்டு வியந்தவள்.

திங்கள், 22 நவம்பர், 2021

”பெண்”களை இயக்கிய சுகாசினி மணிரத்னம்

 ”பெண்”களை இயக்கிய சுகாசினி மணிரத்னம்

”பருவமே புதிய பாடல் பாடு..” நெஞ்சத்தைக் கிள்ளாதேயில் விஜியாக சுகாசினி மோகனுடன் மெல்லிய பனி படர்ந்த சோலையில் ட்ராக்சூட் அணிந்து குதிரைவால் கொண்டை ஆட ஒரு ஜாகிங் செல்வார். குதிரையின் லாடச் சத்தம் போல் மனதைத் தாளமிட வைக்கும் சந்தம்.

’பூந்தோட்டத்தில் ஹோ காதல் கண்ணம்மா’ ,’தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ’ என்று மனதையும் அசைத்த காதல். சோலை, சாலை என்று இப்படி ஓடிக் கொண்டே இருக்கமாட்டோமா என்று தோன்ற வைத்த பாடல்

ஷூக்கள் சப்திக்கும் மியூசிக்கில் என் பதின்பருவத்தில் கேட்ட லயமான பாடல் இது.. இப்போது கேட்டாலும் தண்ணென்று இருளும் குளிரும் பனியும் சூழ்ந்த மரங்களின்மேல் வெள்ளிக்கீற்றாய் சூரியன் கோலமிடும் பூஞ்சோலை என் நினைவுகளில் பூத்தெழும். சிறுபிள்ளையாய் ஆக்கும் என் மனமும் அதோடு சேர்ந்து பாடத் துவங்கிவிடும்.



இப்படி எண்பதுகளில் பள்ளிப்பருவத்தைக் கடந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் சுகாசினியோடு ஒரு ஒட்டுறவு உண்டு. எளிய பக்கத்து வீட்டுப் பெண் தோற்றம். நிறையப் பேருக்கு அவர் அறிவுஜீவி அக்கா மாதிரி. என் நாத்தனார், பெரியம்மா பெண் போன்ற சிலருக்கு அவர்களேதான் சுகாசினி 
J

ஞாயிறு, 14 நவம்பர், 2021

ஆண்கள் எதிர்கொள்ளும் அக நெருக்கடிகள்.

ஆண்கள் எதிர்கொள்ளும் அக நெருக்கடிகள்.

பெண்கள் தினம் என்றால் மார்ச் 8 என்று கூறிவிடுவோம். அதென்ன ஆண்கள் தினம் ? அப்படி ஒரு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது ? பெண்களுக்கான அக புற நெருக்கடிகளே அவர்களை முன்னேறவிடாமல் இன்னும் தடுக்கும்போது ஆண்களுக்கும் அக நெருக்கடியா?

சொல்லப்போனால் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆண்களுக்கும் அக புற நெருக்கடிகள் நிறைந்த சூழல்தான் நிலவுகிறது. முன்புபோல் ஆண் வேலை செய்துவிட்டு வர பெண் வீட்டைக் கவனித்துக் கணவனையும் குடும்பத்தையும் மட்டுமே போஷித்துக் கொண்டிருந்த காலம் மாறி விட்டது. இன்றைய காலகட்டத்தில் பெண்ணும் வேலைக்குச் செல்வதால் ஆண் வீட்டில் சரிபங்கு வேலைகளையும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியதாகிறது.

சிறு வயதிலிருந்தே ஆண் என்றால் அழக்கூடாது. குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டும். தாயைக் கவனித்துக் கொள்ள வேண்டும். சகோதரிக்குச் சீர் செய்ய வேண்டும். நன்கு படித்துப் பெரிய வேலைக்குப் போக வேண்டும். உத்யோகம் புருஷ


லட்சணம் என்றெல்லாம் சொல்லிச் சுமையை ஏற்றி விடுகிறோம்.

வியாழன், 11 நவம்பர், 2021

காலங்களைக் கடந்து ஒளிரும் கமலா சினிமாஸ்.

காலங்களைக் கடந்து ஒளிரும் கமலா சினிமாஸ்


 

நெட்ஃப்ளிக்ஸ், அமேஸான் ஆகிய தளங்களில் இன்று சினிமா பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் மக்கள். சினிமா தியேட்டர்கள் எல்லாம் மால் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் தனது தனித்துவத்துடன் மக்கள் சேவை ஆற்றிவரும் கமலா சினிமாஸ் என்னை ஆச்சர்யப்பட வைத்துவிட்டது. டிக்கெட் விலை 95 ரூபாய்தான். உயர்தரமான ஸ்நாக்ஸும் ரீஸனபிள் விலையில். ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கும் அசத்தலாக இருக்கிறது. மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் இருக்கும் அத்தனை நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன்  சும்மா அதிர வைக்கிறது. 

 

ஐம்பது வருடங்களை எட்டப் போகும், மூன்று தலைமுறைகளாகப் பேரோடும் புகழோடும் இருக்கும், சென்னை வடபழனி கமலா சினிமாஸ் அதிபர் மீனாட்சி மைந்தர் திரு வி என் சிடி அவர்களின் மகன், திரு வி என் சிடி வள்ளியப்பன் அவர்களிடம் நமது ஸ்டார்ட் அப் & பிஸினஸின் ஐம்பதாவது இதழுக்காக ஒரு பேட்டி கேட்டிருந்தேன். 

வெள்ளி, 5 நவம்பர், 2021

யூ ட்யூபில் 51 - 60 வீடியோக்கள்.

 எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியாக என் நூல்கள் பற்றி நானே அறிமுகம் கொடுத்துள்ளேன். :)


51. ங்கா#நூல்அறிமுகம்#தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=0JBfSGXOB5A&t=4s


அமேஸானில் என் பதினான்காவது மின்னூல் “ ங்கா” வெளியாகி உள்ளது.


விலை ரூ. 50/-


செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.


இந்த இணைப்பில் சென்று வாங்கலாம். 


https://www.amazon.in/dp/B07PP4M44G


வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )


”ங்கா” எந்த மொழியிலும் இல்லாத வார்த்தை. எல்லா மொழியினருக்கும் புரிந்த வார்த்தை. குட்டிக் கவிதைகளில் தேனம்மை லெக்ஷ்மணனின் குழந்தைக் கவிதைகளும் ஆராதனா என்னும் கவிதைக் குழந்தையும் உங்களைச் சந்திக்க வருகிறார்கள். பேரன்போடு இருகைகளிலும் ஏந்தி மகிழுங்கள்.



52. #செவ்வரத்தை#நூல்பார்வை#தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=NX_AwgcJmMU&t=8s


#செவ்வரத்தை#நூல்பார்வை#தேனம்மைலெக்ஷ்மணன்#ஜெர்மனிதமிழ்ச்சங்கம்

Related Posts Plugin for WordPress, Blogger...