எனது பதிநான்கு நூல்கள்

வெள்ளி, 31 ஜூலை, 2020

நகுலன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – ஒரு பார்வை.

நகுலன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – ஒரு பார்வை.


பூமிச்செல்வம் அவர்கள் நகுலனின் 16 கதைகளைத் தேர்ந்தெடுத்து நேர்த்தியாக அளித்துள்ளார். நகுலனின் கதைகளில் நாம் ஆத்ம தரிசனத்தை அடையலாம். இயற்கையின் மீதான காதல், சுசீலா என்ற அரூப ரூபத்தின் மேலுள்ள ப்ரேமை, தனிமை, உள்நிறைவுடன் விலகி இருத்தல், குதியாட்டம்போடும் மனது, மன விசாரங்கள், பிரமை அல்லது சித்தப் ப்ரமை எனக் குறிக்கப்படும் விஷயம் குறித்தான விவாதம், வாழ்க்கையை அதன் போக்கில் கடந்து செல்லும் ஞானம், வெறுமே அமர்ந்து மரத்தைக் காணும் காற்றை உணரும் மனம் எனக் கலவையாக இருக்கிறார் நகுலன்.

தெருவின் கதை ஆத்மவிஞ்ஞாபனம். சவப்பெட்டி தயாரிப்பவன் அதற்கும் சலுகைகள் கொடுப்பதும் ஏமாந்துவிடாமல் இருக்கச் சொல்வதுமான இவரது எள்ளல் பிடித்திருந்தது. சிதம்பர ரகசியத்தை யாரும் தெரிந்து கொள்வதில்லை. ஏனெனில் திரை விலகுவதில்லை என முத்தாய்ப்பாகக் கூறுகிறார். உண்மைதான் இல்லாவிட்டால் கோடீஸ்வரனோ, தெருவில் நிற்பவனோ இவ்வளவு பாடுகளும் ஏது ?

வியாழன், 30 ஜூலை, 2020

மாயக்குதிரை - ஒரு பார்வை.

மாயக்குதிரை - ஒரு பார்வை. 


தமிழ்நதியின் கதைகள் மனதோடு பேசும் ரகம். அவருடைய கதாநாயகிகள் வித்யாசமானவர்கள். யதார்த்தமானவர்கள். அப்பட்டமாய்த் தங்கள் நிறைகுறைகளைப் போட்டுடைப்பவர்கள். சிலர் வெகு கம்பீரமானவர்கள். அதனாலேயே அவர்கள் வெகுஜனத்தைக் கவர்கிறார்கள். 

பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்.

2721. ப்லாகர் டாஷ்போர்ட், ஃபேஸ்புக் ஹோம்பேஜ் இதெல்லாம் மாத்துறேன் மாத்துறேன்னு ஏன் அப்பப்போ குடைச்சல் குடுக்குறாங்க. இருக்கதே நல்லாத்தானே இருக்கு. எழுதவே நேரம் கிடைக்கலியாம். இது வேற இம்சை

2722. நாளும் கிழமையும் நலிந்தோருக்கு இல்லை. விடுமுறை நாளும் வலைப்பதிவருக்கு இல்லை. 

2723. விவசாயக் கடனை தள்ளுபடி செய்யலாம். அது இயற்கைப் பேரிடரினால் மீளமுடியாதது.

கல்விக்கடனைக் கட்டாமல் இருப்பது நியாயமா? பெற்று வளர்த்த பெற்றோரைப் புறக்கணிப்பது போன்றது அது.

வீட்டுக்கடனை வட்டியோடு மூன்று மாதம் தள்ளுபடி செய்யச் சொல்வதும் சரிதானா? அந்தப் பணமே பலர் போட்ட டெபாசிட்டிலிருந்து கடன் கொடுப்பதுதான். அப்போ அவர்களுக்கும் ( ஏற்கனவே 5.5 பர்சண்ட் ஆகக் குறைந்து விட்டது வட்டி ) மூன்று மாதம் வட்டி தர முடியாது என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா ?

வங்கிகளை திவாலாக்கி விடாதீர்கள். ஏற்கனவே நன்றாக சேவை செய்த பல வங்கிகள் மெர்ஜ் ஆகிவிட்டன.

ஞாயிறு, 26 ஜூலை, 2020

நீரின்றி அமையாது உலகு - 1.

நீரின்றி அமையாது உலகு. உண்மைதான். நதிக்கரையோர நாகரீகம் மட்டுமல்ல. இன்றைய மெட்ரோ சிட்டி வாழ்விலும் கூட புழல் நிரம்பியதா வீராணம் வருமா என்றெல்லாம்தான் யோசிக்க வேண்டி இருக்கு. எனவே பயணப் பொழுதுகளிலும் ஆன்மீகத் தலங்களிலும் நான் பார்த்த புஷ்கரணி, தீர்த்தங்கள், நீர் நிலைகள், கம்மாய்கள், ஊருணிகள், நதிகள், கடல் இவற்றை ( பம்ப்செட், கிணறு கூட வரலாம். ) ஆகியவற்றைக் க்ளிக்கி இங்கே பகிர்ந்துள்ளேன். 

இது வைவரன் கோவில் புஷ்கரணி. வைரவ தீர்த்தம். தீர்த்தக் கரைதனில் ஐந்து ரிஷபங்கள் காவல் வேறு. இதுவே அழகாக இருந்ததால் இப்படி எடுத்துள்ளேன். 

நிலமெலாம் முள் மரங்கள் - ஒரு பார்வை.நிலமெலாம் முள் மரங்கள் .

சமீபத்தில் நான் வாசித்த நூல்களில் என்னை மிகவும் கவர்ந்தது இந்நூல். எளிய மனிதர்களின் அவசத்தை இதைவிடச் சிறப்பாக எந்த நூலும் கூறியிருக்க முடியாது. எளிமையான வார்த்தைகளில் மண்ணின் மணம் வீசும் இயல்பான கதைகள். 

சனி, 25 ஜூலை, 2020

எங்கே செல்லும் இந்தப் பாதை - 1.

"LIFE IS A JOURNEY WITH PROBLEMS TO SOLVE AND LESSONS TO LEARN BUT MOST OF ALL EXPERIENCES TO ENJOY. "

பயணங்கள் பலவிதம். நீரின் பயணத்தைப் பற்றி ஒரு பாடல்வரும். அனைவரும் கேட்டிருப்பீர்கள். “தீம்தனனா தீம்தனனா.. நதியே நதியே..”. அதேபோல் சேதுவில் வரும் இப்பாடலும் ”எங்கே செல்லும் இந்தப் பாதை.. யாரோ யாரோ அறிவார்..” பிடிக்கும். ஹைவேஸ், பைபாஸ் சாலைகள் ஓரளவு பரவாயில்லை. ஊருக்குள் செல்லும் மற்ற சாலைகள் எல்லாம் ஒன்னும் சொல்லிக்கிறமாதிரி இல்லை.

அவ்வப்போது பயணங்கள் மேற்கொள்ளும்போது எடுத்த படங்கள் என் கமெண்ட்ஸுடன் உங்கள் பார்வைக்கு. முடிந்தவரை சென்ற பாதைகளை அடையாளப்படுத்த முயல்கிறேன். ( வலைத்தளம் ஆரம்பித்ததே நம் பாதைகளை ஒழுங்குபடுத்தி எழுத்துப் பாதையில் செல்லத்தானே. :) ! இதை வலைப்பதிவர் அனைவரும் ஒப்புக் கொள்வீர்களென நினைக்கிறேன்.


காரைக்குடி டு குன்றக்குடி. பைபாஸ் வழியாக சென்றபோது எடுத்தது.

புதன், 22 ஜூலை, 2020

நூற்றாண்டுகள் கடந்த அலங்கார விதானம் . மை க்ளிக்ஸ். DECORATIVE CEILING. MY CLICKS.

நூறாண்டுகளுக்கு மேலாக ஒரு வீட்டின் விதானம் அன்று வைத்த மேனிக்கு அழிவில்லாமல் அப்படியே இருக்க முடியுமா. இருக்கும் என்று நிரூபித்திருக்கிறது சாமி வீட்டில் காணப்படும் இந்த விதானம்.


ஒருமுறை படைப்பு சமயம் சாமி வீட்டிற்குச் சென்றபோது மதிய வேளையில் உணவுக்குப் பின் படுத்திருந்து மேல்நோக்கிப் பார்த்தவாறு பேசிக்கொண்டிருந்தேன் உறவினரோடு. அப்போது இந்த  விதானம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.

திங்கள், 20 ஜூலை, 2020

பிதார் - மூன்றடுக்கு அகழியும் இரண்டடுக்குக் கோட்டைச் சுவர்களும்.

ஏழு தர்வாஜாக்கள் அமைந்திருக்கும் பிதார் கோட்டையில் நாம் இப்போது ஏழாவது தர்வாஜாவிலிருந்து திரும்பி முதல் தர்வாஜா வரை வரப்போகிறோம். முன்பே தர்வாஜாக்களைப் (வாயில்கள் )  பார்த்துவிட்டதால் இப்போது அங்கே மினி கோட்டைகளைப் போலக் காட்சி அளிக்கும் களஞ்சியங்களை, கருவூலங்களைப் பார்வையிட்டு வருவோம்.

மண்டூ தர்வாஜா, கல்மகடி தர்வாஜா, டெல்லி தர்வாஜா, கல்யாணி தர்வாஜா, கர்நாடிக் தர்வாஜா எனச் சில வாயில்களுக்குப் பெயர். இவற்றில் நாம் கர்நாடிக் தர்வாஜா பகுதியிலிருந்து திரும்பி மண்டூ தர்வாஜா வரப்போகிறோம் .

இங்கே காபா முறையில் கட்டப்பட்ட மினி கோட்டை ஒன்று காட்சி அளிக்கிறது.

இக்கோட்டையில் மூன்றடுக்கு அகழியும் இரண்டடுக்குக் கோட்டைச் சுவர்களும் நான் கண்ட வித்யாசமான காட்சி.


பாஸ்டியன்ஸ் எனப்படும் மதிற்சுவர்கள். டைனோஸரின் முதுகெலும்பு போல மிக விரிவானவை, அடுக்கடுக்கானவை.

ஞாயிறு, 19 ஜூலை, 2020

மிளகாய் காந்தாரியும் மல்லிகை மாலதியும்.


கொஞ்சம் ஹெல்த் டிப்ஸ். எனவே மருத்துவ உணவுகள் பற்றி. 

1. மிளகாய் , காந்தாரி :- அதிகம் உண்டால் வயிற்றுப் புண், குடற்புண் வரும்.காலராவுக்கு :- 4 மிளகாய் மண்சட்டியில் போட்டு நெய்விட்டு வறுக்கவும். புளியங்கொட்டை அளவு கற்பூரம் போட்டு 500 மிலி நீர் விட்டு 50 கிராம் நெற்பொரி போட்டு நன்கு காய்ச்சவும். இந்த குடிநீரை 5 – 10 மிலி அளவு மூன்று வேளையும் குடிக்க வாந்தி பேதி குணமாகும்.

திங்கள், 13 ஜூலை, 2020

கனவான் பாக்ஸர்ஸும் மிடில்க்ளாஸ் முதியவர்களும்.

2701.மகிழமரமொன்று காவலாய் நிற்கிறது. வீசும் காற்றில் உயர்ந்து வளைந்து ஆடும்போதுதான் கவனித்தேன். அதேபோல் இன்னும் சிலவும் சாலை எங்கும். வாசனையாய் நிரம்பிக் கிடக்கிறது மனிதம் தீண்டாத காற்று.

2702. திரும்பவும் ஒரு தாது வருடப் பஞ்சத்தை எதிர்பார்க்கலாம். உத்தரகாண்டில் வெள்ளம். அடுத்து இங்கே பயிர்பச்சை எல்லாம் தண்ணீரின்றிக் காயும். ஹ்ம்ம். அரிசி விலை உயர்வு. சாதாரணத் தக்காளி 60 ரூபாய் கிலோ, காய்கறி வாங்கவே சம்பளம் பத்தாது போல. கிலோ கணக்கில் வாங்கிப் பொறித்தவர்கள் இப்போ கிராம் கணக்கில் சுருக்கிக் கொண்டிருக்கிறோம். அடுத்த தலைமுறை காய்கறி மாத்திரை சாப்பிடுவார்கள்...

2703. சீட்டு விளையாட்டைவிட சுவாரஸ்யம் தீராமலே இருக்கிறது முகநூல் விளையாட்டு

2704. The wise man seeks little joys, knowing that life is long and that his quota of great joys is distinctly limited. -William Feather.

2705. இன்பாக்ஸ் மைண்ட்வாய்ஸ் நு நினைச்சு சிலர் அவுட்பாக்ஸிலேயே பாக்ஸிங் போடுறாங்க.

#கனவான்_பாக்ஸர்ஸ் 

ஞாயிறு, 12 ஜூலை, 2020

விதுரநகரா என்ற மஹமூதாபாத் என்ற பிதார்.

கர்நாடகாவில் அமைந்துள்ள கவின்மிகு கோட்டைகளுள் ஒன்று பிதார். ஹைதையிலிருந்து 130 கிமீ தூரத்திலும் குல்பர்காவிலிருந்து 116 கிமீ தூரத்திலும் உள்ளது. பஹாமனி மன்னர்களின் ஆட்சியில் செழித்துத் தழைத்தோங்கிய கோட்டை இது. சுல்தான் அஹமது வால் என்பவரால் பதினாலாம் நூற்றாண்டில் தக்காணப்பீடபூமியில் கட்டப்பட்டது இக்கோட்டை.  17 ஆம் நூற்றாண்டில் அஹமது ஷா பஹாமனி என்ற அரசர்தான் இதை விரிவுபடுத்தியவர்.

இதுபற்றிப் பல்வேறு இடுகைகள் வெளியிட்டுள்ளேன். 5.5 கிமீ சுற்றளவு உள்ள மதிலால் சூழப்பட்டது இக்கோட்டை.  சிதைந்த கோட்டையே பொக்கிஷம் என்றால் முழுமையான கோட்டை எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் !.

பாரசீக இஸ்லாமியக் கட்டிடக் கலையின் உச்சம் இக்கோட்டை.சோலா கம்பா மாஸ்க், தாரகேஷ் மஹால், முகல் கார்டன், கல்வீணை, ஏழு வாயில்கள், எண்ணற்ற சுரங்கங்கள் , கரேஸ் என்ற நீர்வரத்து முறை கொண்டது இக்கோட்டை. 15 ஆம் 16 ஆம் நூற்றாண்டுகளில் செழித்துக் கிடந்ததுதான் இன்று சிதைந்திருக்கும் இக்கோட்டை.

மஹமூதாபாத் என்று பஹாமனி சுல்தான்களின் காலத்தில் பெயர்பெற்ற இந்நகரம் மகாபாரதத்தில் விதுரர் இங்கே வாழ்ந்ததால் விதுரநகரா எனப் பெயர் பெற்றிருக்கிறது.  ராஜ பீமா மன்னரின் மகளான தமயந்தியும் நளனும் கூட இங்கேதான் சந்தித்துக் கொண்டார்கள் என்று இன்னொரு கதை சொல்கிறது. பித்ரி வேலைப்பாடுகள் என்று சொல்லப்படக்கூடிய உலோகச் சித்திரக் கைவேலைப்பாடுகள் இங்கே ஸ்பெஷல் என்பதால் இந்நகரம் பிதார் என்று அழைக்கப்படுகிறது. !வியாழன், 9 ஜூலை, 2020

அம்மா இல்லாத திண்ணை. - நூல் முகம்.

தாயுமானவன்.
தன் முகத்தில் தாயின் முகமும் மகள் முகத்தில் தன் முகமும் காண விழையும் தாயுமானவன் இக்கவிதைகளின் நாயகன். ஆண்டுகள் பலவானால் என்ன கவிஞன் என்பவன் உணர்வுபூர்வமாய் உள்மனதிலேயே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான். காகிதத்திலோ கணினியிலோ இறக்கி வைக்காவிடினும் காலம் கனியும்போது அவன் தன் மன இச்சைகளையும் இற்றைகளையும் கவியாக்கிக் கனியத்தருவான் என்பதற்கு இத்தொகுப்பு ஒரு சான்று.
எண்பதுகளில் உள்ள இளமனதைப் புதுப்பித்ததோடு இன்றைய இளசுகளின் உள்ளக் கிடக்கையையும் வரைந்து காட்டுகின்றன கவிதைகள். விவசாயம், பாழாகும் இயற்கை, உணவு, உறவு, ஊர் நிலைமை, அரசு யந்திரத்தின் மெத்தனம், அறியாமையை எள்ளல், காதல், தந்தைமை, தாய்மை என ஒன்றையும் விட்டுவைக்காமல் ஹைக்கூ, க்ளெரிஹ்யூ, புதுக்கவிதைகள் எனப் படைத்திருக்கிறார் கவிஞர்.
பூக்களை உதிர்க்கும் காற்றைப் படிக்காத அறிவிலியாக்குதல் கவிஞருக்கே சாத்தியம். கிளி ஜோதிடம் பற்றி நல்ல எள்ளல். ”ஒற்றைமணி நெல்லுக்குக் கூட்டில் அடைபட்ட கிளிப்பிள்ளை பற்றியெடுக்கும் அச்சடித்த தலைவிதிப் பாட்டுச் சீட்டினை” அறியாமையின் தலையில் இடிவிழ வைத்த இக்கவிதை யதார்த்த இழிவரல்.

சனி, 4 ஜூலை, 2020

கல்புராகி புத்தவிஹார், பிதார் அம்ரித்குண்ட். GULBARGA BUDDHA VIHAR, BIDAR AMRITGUNT.

குல்பர்காவின் எல்லா சாலைகளும் மாபெரும் புத்தவிஹாரை நோக்கியே செல்கின்றனவாம். இந்த புத்தவிஹார் 75 ஏக்கர் நிலத்தில் பரந்து விரிந்திருக்கிறது. குல்பர்கா செடாம் செல்லும் ஹைவேஸ் சாலையில் சென்றால் இதை அடையலாம்.

ஒரு பொன்னிறமாலையில் கல்புராகியின் ( குல்பர்கா ) கந்தூர் மாலின் மதுரா இன்ன் ஹோட்டலில் இருந்து இந்த விஹாரைப் பார்க்கப் புறப்பட்டோம். 

மிகப் பிரம்மாண்டமான புத்தவிஹாரத்தின் முன்னால் அம்பேத்காரின் தம்மகிரந்தி யாத்ராவைச் சித்தரிக்கும் சிலைகள் கொள்ளை அழகு. புத்த விஹாரை நோக்கி அண்ணல் அம்பேத்கார் செல்வது போலும் அவரைப் பின்பற்றி அவருக்கு நெருக்கமான அநேக தலைவர்கள் புத்தமதத்தைத் தழுவச்செல்வது போலும் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அம்பேத்கார் சிலை செம்பிலும் மற்றையோர் சிலை சிமிண்டிலும் அமைக்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் 14, 1956 இல் நாக்பூரில் நடைபெற்ற தம்ம கிராந்தி யாத்ராவை நினைவூட்ட அமைக்கப்பட்டுள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...