எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 மார்ச், 2011

பங்குச் சந்தையும் மற்ற முதலீடுகளும்.. (3)..

1. நான் சில பிரசித்தி பெற்ற கம்பெனிகளின் பங்குகளை வாங்கி வைத்து இருந்தேன்..அது தற்போது விலை இறக்கமாக உள்ளது .. இன்னும் விலை இறங்கி விடலாம் என நினைப்பதால் வைத்துக் கொள்ளலாமா, அல்லது விற்றுவிடலாமா..?

பதில்:- இது வாங்கியதைப் பொறுத்தது.. 15 இல் இருந்து 20 பர்செண்ட் ரிடர்ன் வருதுன்னா விக்கலாம்.. இப்ப மார்க்கெட் ஏற்ற இறக்கம் ரொம்ப இல்லாம இருக்கு.. நாம எப்ப எண்டர் பண்ணி இருக்கோம் என்றும் பார்க்கணும்.. (PPF என்றால் 8 % வங்கி என்றால் 5 - 6 % .. இது சேஃப் இன்வெஸ்ட்மெண்ட்..) . எனவே ரிடர்ன்ஸ் இருந்துச்சுன்னா விக்கலாம்.. பொதுவா ஏற்ற இறக்கம் இல்லாத சூழலில் விக்கக் கூடாது.. ட்ரேடிங்க் ரேஞ்ச் .. ரிடர்ன்ஸ் இருந்தா விக்கலாம்..

செவ்வாய், 29 மார்ச், 2011

திங்கள், 28 மார்ச், 2011

சிங்கையில் குருக்ஷேத்திரம். (24 Hours of Anger) எனது பார்வையில்..

Singaiyil Gurushetram

பல நூற்றாண்டுகளுக்கு முன் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய சென்றவர்கள் இன்று எந்த நிலையில் இருப்பார்கள் என நினைத்ததுண்டா நீங்கள்.. நன்கு செட்டிலாகி நல்ல நிலைமையில் இருப்பார்கள் என நினைப்பீர்கள்தானே.. அதில் ஒரு பகுதி மக்களின் அதிர்ச்சியூட்டும் இன்றைய நிலையை இதில் பாருங்கள்..

வலசை சென்ற மக்களில் சிலர் வாழும் வாய்ப்புக்களற்று திசை மாறி முறையற்ற வழியில் திடீர் பணக்காரராக வேண்டும் என்று போதை மருந்து கடத்தும் தொழிலில் ஈடுபட்டு தங்களுக்குளே போராடி தங்களையே அழித்துக் கொண்ட கதை இது.. என்னை அதிர வைத்த படம்.

வெள்ளி, 25 மார்ச், 2011

ஷாஜியின் எனக்கு பிடித்த பதிவுகள். ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் மலேஷியா வாசுதேவன்.

ஒருநாள் ஷாஜியின் இசை பற்றிய பதிவு ஒன்றைப் படித்தேன் . ஷாஜியை பற்றி அதிகம் தெரியாது எனினும் அவரது http://musicshaji.blogspot.com படித்திருக்கிறேன்.. இசை விமர்சனக் கட்டுரைகளில் மிகுந்த அதிர்ச்சி அலை ஏற்படுத்துபவர் என்று பலராலும் சொல்லக் கேட்டே படித்தேன்.

ஒவ்வொருவரின் கருத்தும் ஒவ்வொரு விதம் என நினைப்பேன்.. அதில் ஷாஜி சொல்லும் விதம் அவர் பாணி.. அவருக்குப் பிடித்ததை., அவரை ஈர்த்ததை அவர் பாணியில் எழுதி இருக்கிறார்.

இதில் எனக்கு பிடித்த இரண்டு கட்டுரைகள் ஏ. ஆர். ரஹ்மான் : ஆர். கெ. சேகர் முதல் ஆஸ்கர் வரை. இன்னொன்று மலேஷியா வாசுதேவன் பற்றியது.

http://musicshaji.blogspot.com/2009/02/blog-post.html. ..

இதில் ஷாஜி ரஹ்மான்., “ பாடுவதற்கு தேர்ந்த குரல்கள் தேவையில்லை. இயல்பான பிசிறோடு ஒலிக்கும் குரல்களை சேர்க்க விரும்புவார் புதிதுபுதிதான குரல்களை அறிமுப்படுத்தியவர்” என குறிப்பிட்டு இருந்தார்.

பல்வேறு இசைப்பாணிகளை படைப்பூக்கத்துடன் சோதனை செய்வது., மின் பொறியியலில் ஆர்வம்., எளிய இனிய இசை என சேகருக்கும் ரஹ்மானுக்கும் ஒற்றுமையாகக் குறிப்பிட்டு இருந்தார்.

வியாழன், 24 மார்ச், 2011

நம்பிக்கை நட்சத்திரம். திருஷ்காமினி.. போராடி ஜெயித்த பெண்கள் (6).M.D. திருஷ்காமினி.. இந்திய மகளிர் கிரிக்கெட்டர்., ஓபனிங்க் பாட்ஸ்உமன்., ஆல் ரவுண்டர். இளம் சாதனையாளர். 8 வயதிலேயே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தவர். கிரிக்கெட் விரும்பிகள் அனைவருக்கும் இவரை தெரிந்திருக்கும். ஆண்களுக்காக மட்டுமே சிறப்பாய் விளம்பரப்படுத்தப்படும் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஒரு பெண் நட்சத்திரத் தாரகை .. இவர்.

புதன், 23 மார்ச், 2011

குழந்தைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.. டாக்டர் வசந்தி பாபு.
ஒரு இல்லம் இனிய இல்லமா அமையுறது பெற்றோரால்தான்.. அந்த இனிய இல்லத்தை அமைக்க பெற்றோர் குழந்தைகள் உறவு இனிமையா இருக்குறது முக்கியம்.. பெற்றோர்தான் எனவும்., பிள்ளைகள் தான் எனவும் குற்றம் சாட்டிக் கொள்வோம். அந்த உறவு என்றும் நீடிச்சு இருக்க குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது பற்றி., அவங்க பிரச்சனைகளை களைவது பற்றி ஹோம் ஸ்வீட் ஹோம் என்ற வெப்சைட்டையும் ., ஆர் ஏ புரத்திலும்., ராயப்பேட்டையிலும் கிளினிக்கும் நடத்திவரும் டாக்டர் திருமதி வசந்திபாபுவை சந்தித்து நம் வாசகியருக்காக ஆலோசனை தந்துதவுமாறு கேட்டோம்.

திங்கள், 21 மார்ச், 2011

தேனிரும்பு..

ஒளிய முடியாமல்
பால் ப்ரகாசம்
வழிந்து வழிந்து

மேகமாய் மரமாய்
கிளையாய் இலையாய்
நதியாய்.. நீளமாய்..

சனி, 19 மார்ச், 2011

வாழும் வரை போராடு..மணிமேகலை..போராடி ஜெயித்த பெண்கள் ( 5).


"வெறும் வேடிக்கை மனிதரைப் போலே நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ..” என்ற பாரதியின் வரிகள் மணிமேகலை அவர்களுக்குத்தான் பொருந்தும் .. சாஸ்திரி பவனில் ஆடிட்டராகப் பணிபுரியும் இவர் எட்டிய உயரம் டென்சிங் சிகரம்.

வியாழன், 17 மார்ச், 2011

புகைப்பூக்கள்..

புன்னகையை மட்டும் கண்டிருக்கும் பெண்களின் இதழ்களில் புகைப் பூக்களைப் பார்த்தால் எவ்வளவு அதிர்ச்சியாயிருக்கும்..
அமிதிஸ்டில் காபி அருந்தச் சென்ற என் அன்புத் தங்கை கயல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக சிகரெட் பிடித்த இரு பெண்களைக் கண்டு என்னிடம் பகிர்ந்த வருத்தம்தான் இந்த புகைப்பூக்கள்.

புதன், 16 மார்ச், 2011

மார்ச் மாத லேடீஸ் ஸ்பெஷலில் ஸாதிகா., சாருமதி., தமிழரசி.,வெங்கடேசன்., திருஷ்காமினி மற்றும் நான்..:)

மகளிர் சுய தொழில் கருத்தரங்கம்., கடன் உதவி விண்ணப்பம்னு கை கொடுத்து உதவிக்கிட்டு இருக்கு மகளிருக்கு நம்ம லேடீஸ் ஸ்பெஷல்.. இந்த மார்ச் மாதத்தில் மகளிர் சுய தொழில் பக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கு.. மகளிர் தின ஸ்பெஷலாச்சே..

செவ்வாய், 15 மார்ச், 2011

சனி, 12 மார்ச், 2011

கடல் உள்ளும் வெளியேயும்..


கடற்கரையோரம்
செல்லும் போதெல்லாம்
சுனாமியும்
சர்வதேச எல்லையுமே
நினைவை உறுத்தி..

வெள்ளி, 11 மார்ச், 2011

எது என் எல்லை.. யுகமாயினி கவிதை..


கிறுக்கல்களும்.. கறைகளும்..
ஓலங்களும் நிறைந்த
சுவரருகே நிற்கிறேன்..
உத்தப்புரமோ.. பெர்லினோ..
உடைத்துத் தூளாக்க தூளாக்க..
வேறொரு புரம் வளர்ந்து நிற்கிறது..

புதன், 9 மார்ச், 2011

செவ்வாய், 8 மார்ச், 2011

திங்கள், 7 மார்ச், 2011

இஸ்திரிக்காரரின் மகள்..


இஸ்திரிக்காரரின் மகள்..:-
********************************

வீடு வீடாய்ச் சென்று படியேறி
உடுப்பு சுமந்து சுமந்து

பழுக்காய்கள் நீக்கி
வெள்ளாவி வைத்து

உவர்மண்ணில் துவைத்து
கரை மண்ணில் உலர்த்தி

பெட்டி போட்டுக்
காய்ப்பேறிப் போன கைகளை
நீவி விட்டுக் கொள்கிறாள்..

உடுப்பெடுக்கச் சென்ற
மாடி வீட்டு அம்மாவின்

வேலையற்றுச் சிவந்திருந்த
ரோஜாப்பூக் கரங்களைப்
பார்க்கும்போதெல்லாம்..

அப்போதெல்லாம்
அவள் கண்கள் கனலும்
இஸ்திரிப்பெட்டியின் கங்குகளாய்..

அதிகச் சூட்டில் தீய்ந்த
ஓட்டையாய்.. துளையிட்டுச்
செல்லும் பார்வையோடு..

சென்ற பின்னும் உடுப்புக்களில்
கறுப்புத் தீற்றலாய்..

அங்குமிங்கும் பறந்து கிடக்கிறது
அவள் கோபத்தின் சாம்பல்..


சனி, 5 மார்ச், 2011

குழுமக்கூட்டு....

குழுமக்கூட்டு:-
*****************************
வீட்டுக் கூட்டாயினும்
நாட்டுக் கூட்டாயினும்
பச்சைப் பயி(றா)ராய்க் கிடந்தாலும்
செம தாளிப்புதான்..

கூடா இடத்தில் கூடினால்
சீட்டும் அம்பேல்தான்
குறுகிக் குந்தவேண்டி வரும்..

வெள்ளி, 4 மார்ச், 2011

பூவாய் நீ...

சின்னஞ்சிறு பூக்களாய் விரிந்து கிடக்கிறது நினைவு.. உன்னையும் ஒரு பூவாய்த்தான் பார்த்தேன்.. முள்ளோடு கூடிய பூ.. அதற்குத்தானே கிராக்கி அதிகம்.. நீ புன்னகைத்ததை விட குத்தி காயமாக்கியதே அதிகமாய் இருக்கும்..

அடர் வனமொன்றில் கேட்பாரற்று அலையும் யானையைப் போலிருந்தேன்.. எனக்கு மதம் கொண்டதென்று எதிர் வரவில்லை யாரும்.. நீ வந்தாய் ஒரு தேனீயாகவோ குளவியாகவோ கவனம் சிதைத்தாய்.. உன்னைத் தும்பிக்கையில் வசமாக்கிவிட வீசித் துரத்த வைத்து.. கண்மண் தெரியாமல் காடுகரை மேடு எல்லாம் ஓட வைத்து., களைத்து நான் அமரும் போது காதுக்கருகே வந்து “நொய்ங்ங்” என்கிறாய்..

வியாழன், 3 மார்ச், 2011

செவ்வாய், 1 மார்ச், 2011

சத்யமும்.. யுத்தம் செய்யும்.. கலைஞர் தொலைக்காட்சியில் ..

நண்பர் சேரனின் யுத்தம் செய்.. திரைப்படம் பற்றி பெண்கள் கருத்து மற்றும் கலந்துரையாடல் ஒன்று கலைஞர் தொலைக்காட்சிக்காக சென்னை சத்யம் தியேட்டரின் மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Related Posts Plugin for WordPress, Blogger...