எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வியாழன், 9 மே, 2013
புதன், 6 பிப்ரவரி, 2013
தானாய் நிரம்பும் கிணற்றடி ..அய்யப்பமாதவனின் சிறுகதைத் தொகுதி எனது பார்வையில் .
தானாய் நிரம்பும் கிணற்றடி ..அய்யப்பமாதவனின் சிறுகதைத் தொகுதி
சுயகம்பீரத்தோடு ஆரம்பிக்கும் இந்தத் தொகுதி சுய எள்ளல் ,சுய விமர்சனம் எல்லாம் கலந்து செல்கிறது. ஏதோ ஒன்றைத் தேடுதல், கிடைத்ததை வைத்து திருப்தி அடைதல் என்ற மத்தியதர மனப்பான்மை பல கதைகளில் காணக் கிடைக்கிறது.
மொத்தம் பத்துக் கதைகள். எல்லாமே பொதுவாக மனம் சார்ந்தவைதான். மிகப் பெரும்பாலும் ஒரு ஆணின் பார்வையிலும் ஓரிரு கதைகள் மட்டும் பெண்களின் பார்வையிலும் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் வரும் கதைகள் எல்லாம் விசித்திரம் நிரம்பியவை. யாராலும் புரிந்து கொள்ள முடியாத மந்திரப் பேழை போல அவ்வப்போது திறந்து மூடும் கனவுகள் நிரம்பியவை. யதார்த்த உலகை மறுப்பவை. இவற்றையும் பதிவு செய்திருக்கும் அய்யப்ப மாதவனுக்கு வாழ்த்துக்கள்.
வெள்ளி, 18 ஜனவரி, 2013
சிங்கப்பூரில் தமிழ் தமிழர் எனது பார்வையில்.
சிங்கப்பூரில் தமிழ் தமிழர்
சீனர் தமிழர் மலேய மக்கள் ஒற்றுமையாக அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர். என்று ஒரு படத்தில் ரஜனிகாந்த் பாடுவார். அது உண்மை எனச் சொல்கிறார் திருமதி சௌந்தரநாயகி வைரவன் தன்னுடைய சிங்கப்பூரில் தமிழ், தமிழர் என்ற தன்னுடைய புத்தகத்தில்.
2010 ஏப்ரலில் இருந்து டிசம்பர் வரை குமுதம் தீராநதியில் வெளிவந்த இவருடைய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். முனைவர் சுப திண்ணப்பன், இராம. கண்ணபிரான் , இலியாஸ், சாந்து ஆகியோரின் துணையுடன், அவர்களின் நூலின்/இணையங்களின் துணையுடன், இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களை சேகரித்ததாகக் கூறுகிறார்.
வெள்ளி, 27 ஜூலை, 2012
குழுமங்களும் பக்கங்களும்..
இந்த சூழலில் முதல் முதல் கம்ப்யூட்டரில் மெயில் அனுப்பத் துவங்கும்போது நாம் தனிப்பட்ட மெயில் அனுப்பத் துவங்குகிறோம். பின்னர் நம் ஐடியை யார் யாரோ சேர்த்து க்ரூப் மெயில்களாக அனுப்பும்போது கொஞ்சம் சிரமத்துக்கு ஆளாகிறோம்.
வியாழன், 26 ஜூலை, 2012
புலம் பெயர்ந்த பெண்களின் மன அழுத்தம் தீர
கிட்டத்தட்ட
நான் கல்லூரிக்கு வந்த முதல் வருடத்தில் இருந்து ஈழப்பிரச்சனைகளை உணர ஆரம்பித்திருக்கிறேன். தஞ்சாவூரில் எங்கள் அத்தை வீட்டில் ஒரு ஈழப்பெண் வேலை செய்து வந்தார். ஒரு கலியம் பெட்டி நிறைய ஈழத்தில் உபயோகப்படுத்திய சாமான்களைக் கொண்டு வந்திருந்தார். அவர்கள் தமிழ் பேசுவதைக் கேட்க இனிமையாய் இருக்கும். அதிகம் படிக்காததால் தன் குடும்பத்தேவைகளுக்காக வீட்டு வேலை செய்து வந்தார். நன்கு படிக்க வைக்கப்பட்டிருந்தால் அவர் ஏதாவது அலுவலகங்களில் வேலை பார்த்து வந்திருக்கக்கூடும். திரும்ப த் தன் நாட்டுக்குச் செல்லும் ஆவலோடு இருந்தார் அவர். இருட்டில் படகில் அதிகமாகப் பணம் கொடுத்து இந்தியா வந்து சேர்ந்ததாகச் சொன்னார்.
புதன், 25 ஜூலை, 2012
மனித ஆயுதம்.. ”உலோகம்” . ஒரு பார்வை
மனித ஆயுதம்.. ”உலோகம்”
ஜெயமோகன் அவர்களின் ”உலோகம்” த்ரில்லர் நாவல் என்ற பெயரில் டிஸ்கவரி புத்தக நிலையத்தில்பார்த்ததும் வாங்கி வந்தேன். மூன்று மாதமிருக்கும்.
இன்றைக்குத்தான் படிக்க அமர்ந்தேன். 4 மணி நேரங்களில் கீழே வைக்க முடியாமல் படித்த ஒரு மனித ஆயுதம் பற்றின கதை அது.இது இலக்கிய நயம் வாய்ந்த சாகசப் புதினம்.
ஈழ மொழியில் புனைவுத்தியில் சொல்லப்பட்டிருக்கும் கதை அது. எப்போதும் கிடைக்கும் சுஜாதா., ராஜேந்திர குமார்., ராஜேஷ் குமார் நாவல்கள் போலில்லாமல் வேறோரு மனம் சார்ந்த மொழியிலான த்ரில்லர்.
ஞாயிறு, 10 ஜூன், 2012
உருவ பொம்மைகளால் புகையும் பெருநகரம்:-
எரித்துத் தீர்த்தாயிற்று
பட்டாசுகளாய்.,
மயானக்கரையாப்
புகைவெள்ளத்தில்
பெருநகரம்..
மிச்சமிருப்பதையும்
சொக்கப்பனையாய்..
சனி, 9 ஜூன், 2012
இரண்டு மட்டுமே..
இருந்தது என நம்புகிறேன்.
இரண்டில் பலகூடி இருந்தாலும்..
இரண்டாக மட்டுமே
நம்புகிறாய் ஒன்றாக
இருந்தாலும்.
இரண்டும் ஒன்றாவதில்லை
வெவ்வேறு கூறுகளின்
கூட்டணியோடு.
வியாழன், 17 மே, 2012
பொய்சாட்சி...
நகத்தையும்
வேறொரு பெயர் சொல்லிப்
புதைக்கிறேன்.
தீர்ப்பு நாளில்
சாட்சி சொல்லக்கூடுமோவென்ற
பயத்தோடு.
புதன், 16 மே, 2012
காபந்து..
போர்த்தி வைப்பது
தூசியாவதில் இருந்து
காப்பாற்றுகிறது.
தூசி அடைவதில்
அதற்கு மெத்த மகிழ்ச்சி
என எண்ணி
காபந்து பண்ணுகிறோம் அதை.
அதால் சுவாசிக்க
முடியாத அளவு
முடிச்சை இறுக்கிக் கட்டுகிறோம்.
திங்கள், 14 மே, 2012
பின் சுழற்சி..
***************
ஆட்டோக்காரர்
வண்டி விட்டிறங்கி
இளநி அருந்தி
களைப்புத்தீர்கிறார்.
இளநி வெட்டியவர்
அரிவாளைப் போட்டுவிட்டு
பக்கத்து மாவுக்கடை
பெஞ்சில் அமர்கிறார்.
சனி, 12 மே, 2012
பயணம்..
***********
தன்னைத் தானாய்
புதுப்பிக்க நேர்ந்தது.
நானும் அவளும்
பயணத்தில் இருந்தோம்.
தோணிகள் வெவ்வேறு.
ராமன்கள் கூட..
புதன், 9 மே, 2012
சுமந்தவள்..
************
அவள் கண்கலங்க அமர்ந்திருந்தாள்.
என்னைப் பிரியும் துயரம்.
முன்பே பிரித்திருக்கிறாள்.
பிரித்தபின் மகிழ்ந்திருக்கிறாள்.
எனக்கும் துயரம்தான்
இருந்தும் வலைபின்னிக்
கிடக்கிறது வலியப்
பிரியவேண்டிய வேலை.
செவ்வாய், 8 மே, 2012
நம்பர் ஒன்..
**************
பெட்டிகள் முடிவு செய்கின்றன..
நம்பர்களை..
பெட்டிங்குகள் தீர்மானிக்கின்றன.
காமிராக்களின் ஃப்ளாஷ்களில்
ஷாம்பெய்ன் திறப்பவரை..
சேணங்கள் மாட்டி
திப்புவின் காலத்தில்
போரிட்டவை இன்று
நாட்டியமும்., ஜட்காவும்
மூக்கணாங்கயிற்றில் மாட்டி.
திங்கள், 7 மே, 2012
கிடை போடுபவன்...
****************************
மொழி புரியாதவனிடம்
சொல்ல வேண்டியதிருக்கிறது
குடும்பத்தைப் பிரிந்து
கிடை போடும் கதையை..
உரிமங்களைப் பதுக்கி
விற்பவனிடம் மட்டும்
விளைந்து கிடக்கிறது
பணமும் ஏராளமாய்.
வியாழன், 26 ஏப்ரல், 2012
சிகண்டியின் சாம்பலும் அமிர்தமும்..
எளிதல்ல..
கொஞ்சம் குத்தும்
பார்வைகள் சேமிக்க வேண்டும்.
ஊசிகளில் உறைந்து
கிடப்பவனிடம் திரும்ப செலுத்த.
வெளுப்புக் கிரீமும்
வெண்மைப் பல்லும்
மயக்கம் தருகிறது
விடிந்ததும் விலகி
வெருண்டு செல்பவனுக்கு.
புதன், 25 ஏப்ரல், 2012
அந்த இரவு..
நேசிப்புக்கு உரியதாய் இருந்தது.
அவள் ஆடைகளைக் கழற்றாமலேயே
நிர்வாணமாகிக் கொண்டிருந்தாள்.
பூட்டிய பொக்கிஷ அறையை
வார்த்தைச் சாவியால் திறந்திருந்தாள்.
சுமக்க முடியா லட்சம் பொன்னை
பாதாள அறைகளில் அடைத்து வைத்திருந்தாள்.
செவ்வாய், 24 ஏப்ரல், 2012
மெழுகு..
***********
முதுமையுற்றவரின் கண்கள்
நீரால் நிறைந்திருக்கின்றன.
கசியக் கசியத் துடைத்துக்
கொண்டேயிருக்கிறார்.
பழுதடைந்த கண்களின்
பலவீனத்தாலும் இருக்கலாம்.
இந்தியாவின் காலடியில்
கேட்பாரற்றுக் கிடக்கும்
ரத்தச்சொட்டாய்த் துளிர்த்துக்
கொண்டேயிருக்கிறது அது.
அதைப்போலச் சுண்டி
எறியமுடியவில்லை இதை.
சனி, 31 மார்ச், 2012
ரத்தநிறம்..
*****************
ஒருவன் இருந்தபோது
சுழற்றிக் காண்பித்த வாளை
அவன் இறந்தபின்னும்
இறக்குவதில்லை இவர்கள் .
நிறங்களைத் தீட்டியவன்
தூரிகையில்
இனங்கள் அடிக்கப்பட்டன.
வெள்ளி, 30 மார்ச், 2012
காலசர்ப்ப தோஷம்
***********************************
நல்ல நட்சத்திரக்காரர்
நீங்கள் என்று
புகழப்படுகிறீர்கள்.
இது இதற்கு உகந்தது என்று
ஒரு சுபயோகக்காரனாகப்
பிறப்பித்திருக்கிறது அது உங்களை..

