எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 மார்ச், 2012

ரத்தநிறம்..

ரத்தநிறம்:-
 *****************
 ஒருவன் இருந்தபோது
சுழற்றிக் காண்பித்த வாளை
அவன் இறந்தபின்னும்
இறக்குவதில்லை இவர்கள் .

நிறங்களைத் தீட்டியவன்
தூரிகையில்
இனங்கள் அடிக்கப்பட்டன.


வேர் இங்கிருக்க.,
எங்கோ கிளைத்து
கொடிக்கம்பாய் ஒடிக்கப்பட்டு
மடிந்தான் அவன்.

கேளிக்கைக்காரனை எல்லாம்
கலகக்காரனாகக் காட்டுகின்றன
வண்ணங்கள்..

கலங்கிக் கிடக்கும் நிறங்களை
அசூயையாய்ப் பார்த்தபடி
கடந்து செல்கிறோம் நாம்.

நிறங்கள் நம்மைக்
கறையாக்கி விடக்கூடாது
என நினைத்தபடி..,
எச்சரிக்கையாய்...

யாரும் நம்மேல்
வாரி வீசி விடாதபடியும்.,
பயந்தபடியும்..

இடிப்பது.,
காவலனைக் கொல்வது.,
நாடுவிட்டு நாடு
ஓடச் செய்வதுமான நிலையில்

வேற்றுமையில் ஒற்றுமை
என சகிப்புத்தன்மையான
முகம் ஒன்றை மாட்டித் திரிந்தபடி..

 நம் ஒவ்வொருவர்
முகத்தின் உள்ளும்
உண்மையான உணர்வு
தற்காத்தபடி ஒளிந்திருக்கிறது.,

ரத்த நிறம் அப்பி
நேரம் வாய்க்கும் போது
வெளிவர..

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 ஜூலை முதல் வார உயிரோசையில் வெளிவந்தது.


9 கருத்துகள்:

  1. உண்மையான உணர்வு
    தற்காத்தபடி ஒளிந்திருக்கிறது.,

    ரத்த நிறம் அப்பி
    நேரம் வாய்க்கும் போது
    வெளிவர..
    வரிகள் அழகு...

    பதிலளிநீக்கு
  2. உண்மையான உணர்வு
    தற்காத்தபடி ஒளிந்திருக்கிறது.,

    ரத்த நிறம் அப்பி
    நேரம் வாய்க்கும் போது
    வெளிவர..

    உண்மை வரிகள்...

    பதிலளிநீக்கு
  3. //கலங்கிக் கிடக்கும் நிறங்களை
    அசூயையாய்ப் பார்த்தபடி
    கடந்து செல்கிறோம் நாம்.//

    s colour of the poem is good...vaalththukkal

    பதிலளிநீக்கு
  4. //கலங்கிக் கிடக்கும் நிறங்களை
    அசூயையாய்ப் பார்த்தபடி
    கடந்து செல்கிறோம் நாம்.//

    s colour of the poem is good...vaalththukkal

    பதிலளிநீக்கு
  5. //கலங்கிக் கிடக்கும் நிறங்களை
    அசூயையாய்ப் பார்த்தபடி
    கடந்து செல்கிறோம் நாம்.//

    s colour of the poem is good...vaalththukkal

    பதிலளிநீக்கு
  6. //நம் ஒவ்வொருவர்
    முகத்தின் உள்ளும்
    உண்மையான உணர்வு
    தற்காத்தபடி ஒளிந்திருக்கிறது.,//

    உண்மையான வார்த்தைகள் தேனக்கா..

    பதிலளிநீக்கு
  7. நன்றி இளங்கோ

    நன்றி சரவணன்

    நன்றி மணிகண்ட வேல்

    நன்றி சாந்தி

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...