எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 அக்டோபர், 2013

டைனிங் டேபிள் மேட்டுகளும் டெலிஃபோன் மேட்டுகளும்.

க்ரோஷா வேலைப்பாடுகள் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்.

உல்லனிலும், க்ரோஷா ஒயர்களிலும், க்ரோஷா நூலிலும்  செய்யப்படும் இந்த வேலைப்பாடுகள் மிகுந்த அழகானவை.இது கட்டையில் ஆணி அடித்து அதில் உல்லன் நூலைச் சுற்றிக் கோர்த்துச் செய்யப்பட்டது.

புதன், 30 அக்டோபர், 2013

சங்கிலித்தொடர்..:-

 சங்கிலித்தொடர்..:-
*****************************
தாய் தந்தையுடன்
விடுமுறைக்கு உறவு வீடுகளுக்கு
வரும் குழந்தை அடம் பிடிக்கிறது.,
நினைத்ததைச் செய்ய.

அது சொல்பேச்சு கேக்க
கையைப்பிடித்தபடி
தாயோ, தந்தையோ,பின்புயத்தில் 
லேசாய் நிமிண்டுகிறார்கள்.

திங்கள், 28 அக்டோபர், 2013

கைபேசியும் ,இணையமும், பெற்றோருடன் இணைக்கிறதா.

கைபேசியும் ,இணையமும், பெற்றோருடன் இணைக்கிறதா.

கண்போன போக்கிலே கால் போகலாமா.. என்றொரு பாட்டு உண்டு. அதில் மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா என்று ஒரு வார்த்தை வரும். இன்று மனம் போன போக்கில்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். மேலும் பிள்ளைகளையும் வளர்த்துகிறார்கள்.

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

ராகுல்.. ஒரு நாயகன் உதயமாகிறான்.


/////ஹாய்,எனக்கு தெரிஞ்ச என் குடும்பத்தில் ஒருவர் அதற்கு மேல சொன்னா என் பையன்..ராகுல் என்பவரை பற்றி ஒரு சிறு அறிமுகம்..

தன்னம்பிக்கை,விடாமுயற்சி,அயராத உழைப்பு வெற்றிக்கான இலக்கை தொட..இந்த வார்த்தைகளை நினைத்தாலே என் மனதில் தோன்றும் முகம் ராகுல் தான்..

சனி, 26 அக்டோபர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர். டெய்சி எட்வின் டாடி செல்லமா, மம்மி செல்லமா..

டெய்சி எட்வின் இவர் என் முகநூல் செல்லத் தங்கைகளில் ஒருவர். இவர் லண்டன் வானொலியில் ANCHOR AND RJ.  இவரது காதலா காதலா என்ற தலைப்பில் வரும் கவிதைகளும் குறும்பு கொப்பளிக்கும் ஸ்டேடஸ்களும் சோ ஸ்வீட். இவரிடம் நம்ம வலைப்பதிவின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி. 

டெய்சி நீங்க அப்பா செல்லமா.. அம்மா செல்லமா. 

வியாழன், 24 அக்டோபர், 2013

அக்கா வனம் புதிய தரிசனத்தில்..

பட்டாம்பூச்சிகளாய்ப்
பறந்து திரிந்தோம்
அக்கா வனத்தில்.

இறக்கைகள் தடவி
காற்றாய்ப் பின் தொடர்ந்து
சிரிப்பாள் அக்காளும்.

அவள் கலகலத்துக்
கொத்துக் கொத்தாய்ச்
சிரிப்பதைப் பூக்கள் என்பார்கள்,

புதன், 23 அக்டோபர், 2013

மஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.

கீழா நெல்லி
மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூறு உட்புகுந்திருக்கிறது என்பதன் அறிகுறியே அது. கணையம், பித்தநீர் நாளம், புற்று, பித்தக் கற்கள், கல்லீரல் அட்டைப் புழுக்கள் , அழற்சி, நீர்க்கட்டிகள் ஆகியனவும் இன்னும் பலவும்  காரணமாகும்.

செவ்வாய், 22 அக்டோபர், 2013

எல்லாப் பிறப்பும் புதிய தரிசனத்தில்.

எல்லாப் பிறப்பும்..:-
**************

வாஸ்துவுக்காய்
வைத்திருக்கும் தொட்டியில்
அழகு மீன்கள்
சுவாசிக்கமுடியாமல்
மரிக்கின்றன.

இலைகள் விழுகின்றன என
என் வீட்டு மரத்தின்
கிளைகளைக் கோபமாய்
வெட்டுகிறார்கள்
அண்டை வீட்டார்,

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

ஒளி காட்டும் வழி.

ஒளி காட்டும் வழி.
********************
 கிடைத்ததைப் பகிர்ந்து கொடுத்து
கிட்டாதோரையும் களிப்பாக்கிச் செல்வதே
மனிதமெனும் ஒளி காட்டும் வழி.

உயிர் வாழும் நாளெல்லாம் உண்டி கொடுத்து
உயிரற்றபோது உடலுறுப்பைத் தானம் கொடுப்பதே
இன்னொருவர் வாழ்வின் ஒளி காட்டும் வழி.

நேயமிக்க உறவு மட்டுமல்ல
பிரபஞ்சம் முழுமைக்கும் அன்பு செலுத்துவதே
படைத்தவனின் பேரருள் பெறும் ஒளி காட்டும் வழி .

சனி, 19 அக்டோபர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர். ராமலெக்ஷ்மி ராஜனின் காமிரா காதலும் பள்ளிக்கூட நட்பும்.

பெண் பதிவர்களில் முக்கியமானவர், புகைப்படப் பதிவுகளுக்காக சிறப்பாக அறியப்பட்டவர் என்னுடைய தோழி ராமலெக்ஷ்மி ராஜன். கவிதை, கதை, கட்டுரைகள்ல அசத்தினாலும் இவரோட புகைப்படங்கள் ஒவ்வொண்ணும் கல்லில் வடித்த சிற்பங்கள் மாதிரி. பார்த்துப் பார்த்துச் செதுக்கி இருப்பார். இவர்கிட்ட நம்ம குண்டக்க மண்டக்க கேள்வி எல்லாம் கேக்கமுடியாது . அதே சமயம் நம்ம டாபிக்கை தொடவும் வேணும். எனவே இப்பிடி ஒரு கேள்வி கேட்டு பதிலை வாங்கினேன். :)
காமிராவை எப்போலேருந்து காதலிக்க ஆரம்பிச்சீங்க.. இது நடக்கும்னு நினைச்சீங்களா..?


வீட்டில பெரியவங்க பலரும் படமெடுப்பதில் ஆர்வமுள்ளவங்களா இருந்ததால இயல்பாவே எனக்கும் அந்த ஆர்வம் வந்திருக்கும்னு நினைக்கிறேன். அவங்கல்லாம் எடுத்த படங்களே எனக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தது. +1 படிக்கும் போது யாஷிகா-D-யில் படமெடுக்க ஆரம்பிச்சேன். 120 ரோல் ஃப்லிமில் 12 படமே எடுக்க முடியும். அதுல ஒவ்வொரு படமும் எடுத்து முடிச்சதும் அடுத்த படம் எடுக்க ரோலை திருப்பணும். ஆரம்பத்துல அதுல தப்பு விட்டே 12-ல 4 கதை கந்தலாயிடும்:)!  

சனி, 12 அக்டோபர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர். சதீஷ் சங்கவியின் காதலா காதலா.

”இதழில் எழுதிய கவிதைகள் ” அப்பிடின்னு தில்லா புத்தகம் போட்டவர் நம்ம வலை உலக சகோ சதீஷ் சங்கவி.  ( மனைவி விமலா ரொம்ப ரொம்ப நல்லவங்க .. ) சங்கவிகிட்ட  உங்க முதல் காதல் எதுன்னு  கேள்வி கேட்டு பதில் வாங்கிப் போட்டுருக்கேன். என்ன அக்குறும்புன்னா புள்ளயோட அப்பிராணி மாதிரி போஸ் கொடுத்துட்டு இருக்கிற சங்கவி ஒரு புள்ளய சுத்திச் சுத்திக் காதலிச்சுருக்காரு. இப்ப இல்ல.. அட அது சின்ன வயசுலப்பா..

வெள்ளி, 11 அக்டோபர், 2013

நடுவீட்டுக் கோலமும் பூக்களும் எம்பிராய்டரியில்.

வாசலில் போடும் பொடிக் கோலங்களையும் மாக்கோலங்களையும் துணியில் போட்டால் எவ்வளவு அழகாக இருக்கும். இதை என் மாமா மகள் வள்ளிக்கண்ணு செயல்படுத்தி இருக்கிறார். அவரது ஒவ்வொரு புடவையும் டிசைனர்வேர்தான். அவரே டிசைன் செய்தது.

அவர் அணிந்து வரும் புடவைகளையும் ரவிக்கைகளையும் பார்த்து வியந்ததுண்டு. விதம் விதமான எம்பிராய்டரிகளில் அசத்தி இருக்கிறார்.

சனி, 5 அக்டோபர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர். திருமதி நாஞ்சில் மனோவின் மனம் விரும்புதே உன்னை..


நாஞ்சில் மனோ. ப்லாக் உலகில் ப்ரபலமான பெயர். என் வலை உலக சகோதரர். இவர்கிட்ட நம்ம ப்லாகுக்காக ஒரு கேள்வி கேட்டேன் மனுஷன் ஆடிப் போயிட்டார். எங்கே வீட்டுல திருப்பாச்சி அருவாளைத் தீட்டிடுவாங்களோன்னு. கொழுமோர் காய்ச்சிக் கொடுக்காத குறையா சமாதானப்படுத்தி பதில் வாங்குறதுக்குள்ள உஸ்ஸ்ஸ் அப்பாடா. ( ஆமா மிஸஸ் மனோ நீங்கன்னா அவருக்கு அவ்ளோ டெரர் ஆ :)

வெள்ளி, 4 அக்டோபர், 2013

என் சமையலறையில் உப்பும் சர்க்கரையும்.:-

என் சமையலறையில் உப்பும் சர்க்கரையும்.:-

1. எந்த ஜூஸ் கலந்தாலும் இரண்டு ஸ்பூன் சர்க்கரையுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தினால் சுவை அதிகம்.

2. காரக்குழம்பு புளிக்குழம்பு வத்தக்குழம்பு வைக்கும்போது வறுக்கும் சமயம் ஒரு ஸ்பூன் சீனி சேர்த்து வறுத்து குழம்பு வைத்தால் ருசியும் கூட. குறைந்த அளவு எண்ணெய் போதும். எண்ணெயும் சீக்கிரம் பிரிந்து விடும்.

3. ஊறுகாய்களை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை போட்டு ஃப்ரிஜ்ஜில் வைத்து உபயோகப்படுத்தினால் மிகக்குறைந்த அளவு  உப்பு போட்டாலே போதும். ( காய்கறிப் பொரியல்களுக்குப் போடுவது போல)

4. உப்பு அதிகமானால் ரத்தக் கொதிப்பு வரும்.  குறைவாக போட்டால் தசை இயக்கத்துக்கும் காரணம் அதுவே என்பதால் சோர்வை உண்டாக்கும். அளவான உப்பு வளம் சேர்க்கும்.

5. இனிப்பு வகைககளை விட காஃபி டீயினால்தான் அதிகமாக சீனி உடம்பில் சேருகிறது. குறைந்த அளவு சீனி சேர்த்துக் கொள்ளப் பழக வேண்டும்.

6. குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் ஒரு டம்ளர் காய்ச்சி ஆற்றிய தண்ணீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரையும், ஒரு சிட்டிகை உப்பும் கலந்து கொடுக்கவேண்டும். இது டாக்டரிடம் செல்லும் வரை  உடம்பில் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்கும். வாந்தியையும் வயிற்றோட்டத்தையும் நிறுத்தும்.

7. ப்யூட்டி பார்லர் செல்ல இயலாத சமயம் பார்ட்டி, விருந்து விசேஷங்களுக்குச்  செல்லும் சமயம் ஒரு ஸ்பூன் சீனியை முகத்திலும் கழுத்து கைகளிலும்  லேசாக ஸ்க்ரப் செய்து  தேய்த்துக் கழுவினால் மென்மையாகவும் பளிச்சென்றும் இருக்கும்.

8. அரிவாள்மனை. பித்தளை விளக்கு ஆகியவற்றை சுத்தம் செய்யும்போது புளியுடன் உப்பையும் சேர்த்துத் தேய்த்தால் பளிச்சென்று இருக்கும்.

                      
    ************************************************************

1. அகத்திக் கீரை அல்லது சுக்குடிக் கீரை ( மணத்தக்காளிக் கீரை) யை ஒரு ஸ்பூன் எண்ணெயில் சின்ன சீரகம் ஒரு ஸ்பூன், சின்ன வெங்காயம் 10 உரித்துப் போட்டு வதக்கி அரிசி களைந்த திக்கான தண்ணீர் விட்டு வேகவைத்து கால் கப் தேங்காய்ப் பால் ஊற்றி  சாப்பிட வாய்ப்புண் வயிற்றுப் புண் ஆறும்.

2. கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினாவை வெங்காயத்தை வதக்கி உப்பு, புளி ,மிளகாயோடு அடிக்கடி துவையல் செய்து சாப்பிட்டால் இரும்புச் சத்து. முடியும் செழித்து வளரும்.

3. ஃப்ரிட்ஜை வாரம் ஒரு முறை டீஃப்ராஸ்ட் செய்ய வேண்டும். மாதம் ஒரு முறை அனைத்துப் பொருட்களையும் வெளியே எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். மாவு., தயிர் போன்றவற்றை அவ்வப்போது சிறிய பாத்திரங்களில் போட்டு டைட்டாக மூடினால் ஃப்ரிட்ஜில் புளித்த வாசம் வராது. ஒரு கப்பில் கடுகும் தண்ணீரும் போட்டு ப்ரிஜ்ஜில் வைத்தால் கெட்ட வாடை இருக்காது.

டிஸ்கி :-

 முதல் டிப்ஸ் இங்கே.

இரண்டாம் டிப்ஸ் இங்கே

மூன்றாம் டிப்ஸ் இங்கே.

வியாழன், 3 அக்டோபர், 2013

7 ஆம் அறிவும், நான் அறிந்து கொண்டதும்..

Fifth element, The Sixth Sense, இதுபோல ரிதமிக்கா இருக்கு 7 ஆம் அறிவு.

முதல்ல என் அறிவுக்குப் புரிஞ்சது கொஞ்சம்..:)

1. போதிதர்மரின் இன்னொரு பெயர் தாமு

2. சீனர்களுக்கு குங்ஃபூவைக் கத்துக் கொடுத்தவர் போதி தர்மர்.

3. சர்க்கஸ்ல வேலை பார்க்கிறவங்களுக்கு எல்லாம் குங்ஃபூ தெரியும்.

நன்றி வாழ்த்துக்களுக்கும் புகைப்படங்களுக்கும்..


Nesamithran Mithra

தாழ் பயிரின் நிறைகனம் எப்போதுமிருக்கும் செல்வத்து பாரம் ,
நாள் சுடர்த்தும் கதிர் போல் ஒளி கூடிய நல்லாயுள் பல்கிப் 
பெருகட்டும் . எந்த கோளும் இணங்கிச் சுழல்க !

வருஞ்சிறப்பும் செல்லும் துயரும் சலனிக்காதிருக்கட்டும் திண்மனதை

துணிந்தே எண்ணுவதும் எண்ணித்துணிவதும் நல்விளைவே
 தந்துவக்கட்டும்

வாழிய பல்லாண்டு ! பிறந்த நாள் நல் வாழ்த்துகள் !
Kumaresan Asak 

புதன், 2 அக்டோபர், 2013

கல்யாணத்திலே இத்தனை சடங்கா.. ?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

 நகரத்தார் திருமணம்.

செட்டிநாட்டுத் திருமணங்களில் சில சிறப்புகள் உண்டு. சீர்வரிசை சாமான்கள், செட்டிநாட்டு சமையல் போன்றவை ஸ்பெஷல் . இதில் மாப்பிள்ளை சாமான், பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டில் பரப்பும் சாமான், மாமியார் சாமான், பெண்ணுக்குத் தாய்வீட்டில் செய்யும் சீர்வரிசை சாமான் என நிறைய உண்டு. அதேபோல்  காலை, மதியம், மாலை, இரவு என வகைவகையான வண்ணமயமான ருசியான உணவுகள் உண்டு. பொதுவாக பெண்ணுக்குத் தாய் வீடு கொடுக்கும் சீர் வரிசையில் ( வசதிக்கேற்றபடி ) குண்டூசியில் இருந்து கப்பல் வரை வைப்பார்கள் என்று சொல்லப்படுவதுண்டு.

செவ்வாய், 1 அக்டோபர், 2013

எந்தன் முதல் கவிதை.. காவிரி மைந்தனுக்காக..

காவிரி மைந்தன் கண்ணதாசனின் தாசர்.. அவர் என் சகோதரனுக்கும் நண்பர். கண்ணதாசனைப் பற்றிப் பக்கம் பக்கமாக சொற்சுவையோடும் பொருட்சுவையோடும் பொருத்தி சிலாகித்து எழுதவும் பேசவும் ஆர்வமுள்ளவர். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க என் முதல் கவிதையை அனுப்பினேன்.

என் முதல் கவிதை கிட்டத்தட்ட 12 வயதில் எழுதி இருப்பேன். அது என் அப்பாவின் பிறந்த நாளுக்கான ஒரு வாழ்த்துப்பா.. அது எங்கள் பெரிய வீட்டின் சாமி அறையில் ஃப்ரேம் செய்து மாட்டப்பட்டிருக்கு. அதன் வார்த்தைகள் சரிவர ஞாபகமில்லாததால் இதை அனுப்பினேன்..
Related Posts Plugin for WordPress, Blogger...