எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 5 அக்டோபர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர். திருமதி நாஞ்சில் மனோவின் மனம் விரும்புதே உன்னை..


நாஞ்சில் மனோ. ப்லாக் உலகில் ப்ரபலமான பெயர். என் வலை உலக சகோதரர். இவர்கிட்ட நம்ம ப்லாகுக்காக ஒரு கேள்வி கேட்டேன் மனுஷன் ஆடிப் போயிட்டார். எங்கே வீட்டுல திருப்பாச்சி அருவாளைத் தீட்டிடுவாங்களோன்னு. கொழுமோர் காய்ச்சிக் கொடுக்காத குறையா சமாதானப்படுத்தி பதில் வாங்குறதுக்குள்ள உஸ்ஸ்ஸ் அப்பாடா. ( ஆமா மிஸஸ் மனோ நீங்கன்னா அவருக்கு அவ்ளோ டெரர் ஆ :) கேள்வி :- நீங்க வாங்கித் தந்ததிலேயே உங்க மனைவிக்குப் பிடிக்காத உடை எது. அதுக்காக அவங்க என்ன திட்டினாங்க உங்களை ?

பதில் : கல்யாணமான புதுசு, சர்பரைசாக இருக்கட்டுமேன்னு நைட் டியூட்டி முடிஞ்சதும், ஆட்டோ பிடிச்சு ஒரு துணிக்கடையில ஏறி "தொள்ளாயிரம்" ரூபாய்க்கு ஒரு சேலை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன்.

வாங்கிப் பார்த்தவள் "ஹை இது எனக்கா அத்தான் ? சூப்பராக இருக்கு" என்று அவசரமாக உடுத்தி கண்ணாடி முன்பு நின்றவளின் முகம் மாறத் தொடங்கியது.

"ஆமா இது எந்த கடையில வாங்கினிய ?"

"அந்தேரி ரூபம் டெக்ஸ்டைல்ல...என்னாச்சு ?"

"வாங்க இந்த கலர் எனக்கு பிடிக்கலை, உங்களுக்கு கலர் சென்சே இல்லை, வேற கலர் எடுத்துட்டு வருவோம் இதை கொடுத்துவிட்டு"

ஆஹா....ஏதாவது குண்டக்க மண்டக்க பேசினால், கிச்சனுக்கு கீழே அவள் காலடியில் எப்பவும் ரெடியாக இருக்கும் அவங்க வீட்டு சீதனமாகிய அருவாள எடுத்துறப்டாதே...

சரி வான்னு கூட்டிட்டு போனேம்ய்யா, எக்ஸ்ட்ரா ரெண்டாயிரம் ரூபாய பழுக்க வச்சதும் இல்லாம, நான்கு மணிநேரம் துணி செலக்ஷனுக்காக காத்து இருந்தேன் பாருங்க ஸ்ஸ்ஸ்ஸ் அபா.....முடியல....

செலக்ட் பண்ணிட்டு கடைசியில அவள் இதே இருக்கட்டும்ன்னு செலக்ட் பண்ணுனதும் அந்த சேலையைதான், பயபுள்ள வேறே எக்ஸ்ட்ரா சுடிதார் அது இதுன்னு எடுத்து என் பர்சை பழுக்க வைக்க பிளான் பண்ணிதான் சேலை பிடிக்கலைன்னு சொல்லி என்னை மறுபடியும் கடைக்கு கூட்டிட்டு வந்துருக்கு....!


---- ஹாஹா நன்றி நாஞ்சில் மனோ. சேலை செலக்‌ஷன்ல நொந்து நூடுல்ஸா போயிருக்கிற ஹஸ்பெண்ட்ஸ் குலத்தின் பிரதிபலிப்பா வாய்ஸ் கொடுத்ததுக்கு. :)

டிஸ்கி:- திருமதி லலிதா முரளியின் ஊட்டி வரை உறவு இங்கே. :)

8 கருத்துகள்:

 1. ஐயோ பாவம், அதுக்குதான் இந்த சர்ப்ரைஸ் எல்லாம் வேலைக்கு ஆகாது என்கிறது.

  தேனம்மை மேடம் பகிர்விற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. இப்புடீல்லாம்,பிரபல பதிவரை,பாஹ்ரன் கிங் ஐ அவமானப்படுத்தக் கூடாது,ஹூம்!!!

  பதிலளிநீக்கு
 3. என்னக்கா பிரபலப் பதிவர் எங்க அண்ணாச்சியை பிராபலத்துல மாட்டிவிட்டுட்டிங்களே... இனி ஊருக்குப் போகும்போது கண்டிப்பா அண்ணி அருவாளை எடுக்கப் போறாங்க....

  பதிலளிநீக்கு
 4. இப்பமாவது மனோவுக்கு -வீட்டு கார அம்மாவுக்கு எந்த கலர் பிடிக்கும் என்று தெரிந்து இருப்பார் -

  பதிலளிநீக்கு
 5. இதெல்லாம் அண்ணனுக்கு சர்வ சாதாரணம்...!

  பதிலளிநீக்கு
 6. இந்த துயரம் வருமென்றுதான் என்னவளையே எனக்கும் சேர்த்து எடுத்துவான்னு அனுப்பி விடுகிறேன் !

  பதிலளிநீக்கு
 7. கருத்துக்களுக்கு நன்றி கும்மாச்சி, சுப்ரமணியன் யோகிராசா, ஆமாம் குமார், டாக்டர் மனோ,

  நன்றி நாஞ்சில் மனோ,

  நன்றி தனபாலன் சகோ

  நன்றி பகவான் ஜி.. அப்பிடியா.. அதுதான் கரெக்ட். !.. :)

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...