எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 30 செப்டம்பர், 2020

எதிஹாடில் பதிநான்கு மணிநேரம்

 ஜெர்மனிக்கு இந்தியாவில் இருந்து செல்லப் பல்வேறு விமானங்களும் பல்வேறு விமானத்தளங்களும் இருந்தும் நாங்கள் பெங்களூருவைத் தேர்ந்தெடுத்தோம். ஏனெனில் அங்கே எங்கள் பெரிய மகன் வேலை செய்து வருகிறார். 

அபுதாபி வழியாகச் செல்லும் எதிஹாட் ஏர்லைன்ஸில் டிக்கெட்டும் வாங்கியாச்சு. விசா, டிக்கெட், இன்சூரன்ஸ் எல்லாம் உட்பட ஒரு நபர் சென்று வர ஒன்றரை முதல் இரண்டு லட்சம் வரை செலவானது. சின்ன மகன் அழைத்துச் சென்றார் என்பதால் எனக்கு இதன் செலவு விபரங்கள் எல்லாம் சரியாகத் தெரியாது :) :) :)  


ஜெர்மனி சென்றாச்சு. இருமாதம் தங்கி ஐரோப்பா டூர் எல்லாம் முடித்து ஜெர்மனியில் இருந்து திரும்பும்போது எதிஹாடில்  ஏறியபோது எடுத்த படம் இது. 

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

பூரங்கழித்தலும் பெண் எடுக்கிக் காட்டுதலும்.

 1601. கழுத்துருவுக்குப் பொன் தட்டல் :- கல்யாணம் பேசி முடித்துக் கொள்ளும்போது ஆசாரியிடம் பவுன் காசைக் கொடுத்து சாஸ்திரத்துக்கு மூன்று முறை தட்டச் சொல்லி வாங்கிக் கொள்வார்கள். பெண்வீட்டார் ஏற்கனவே கழுத்துரு செய்துவைத்துவிடுவதால் இந்தப் பொன் தட்டுதல் சாஸ்திரத்துக்குத்தான். பெண்வீட்டாருக்கு மாப்பிள்ளைவீட்டார் தோதுக்குத் தகுந்தாற்போல 1, 3, 5, 7, 9, 11, 16 என்ற அளவில் பவுன் காசு கொடுப்பார்கள்.

1602. பூரங்கழித்தல் :- திருமணத்தன்று காலை நடைபெறும் முதல் நிகழ்ச்சி இது. பெண்ணைக் காக்கும் பூரம் என்னும் காவல் தெய்வத்திடம் பெண்ணைக் காக்கப் புருஷன் வந்துவிட்டார் அதனால் நீ நீங்கிக் கொள்வாயாக என்று செய்யப்படும் சடங்கு. ( இதுவே பெண் பூப்படையும்போதும் பூரம் என்னும் தெய்வத்தைக் காவலாக நியமிப்பதுபோல் அமையும் ) அதிகாலையில் தலைக்கு நீராடச் செய்து திருமணப் பெண்ணைச் சாமி வீட்டின் எதிரில் போடப்பட்ட பாப்பாரக் கோலத்தின்மேல் தடுக்குப் போட்டுக் கிழக்குப் பார்த்து நிற்கச் செய்து அத்தை, மாமி உறவுடைய பெண்கள் பூரம் கழிப்பார்கள். இதற்காகப் பெண்ணின் உடலில் ஏழு இடங்களில் ( தலை, தோள்பட்டை, மடித்த முழங்கைகள்/இடுப்பு, இரண்டு மேற்பாதங்கள்) வேப்பிலை வைத்து அதன்மீது அடை அல்லது பிஸ்கட்டை வைத்து இரும்புச் சத்தகத்தாலோ நொச்சி அல்லது வேப்பங்குச்சியாலோ தட்டி விடுவார்கள். இதன் பிறகு விநாயகபூசை, வர்ணபூசை செய்து புரோகிதர் பூரம் கழிப்பார்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

எனது இருபத்தி ஏழாவது மின்னூல், “ விவ..சாயம்”

 எனது இருபத்தி ஏழாவது மின்னூல். “விவ..சாயம்”. அமேசானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 49/-


///சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கவிதைகள். வ(ள)ரும் தலைமுறையினரின் எதிர்காலத்துக்குச் சேமித்து வைக்கவேண்டிய இயற்கைவளம்.கொஞ்சம் சுயமும்.///

விவ..சாயம்

https://www.amazon.in/dp/B08GJ5BST1

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் 

இந்த நூலுக்கான அட்டையை வடிவமைத்த எனது மகன் சபாலெக்ஷ்மணனுக்கு நன்றிகள். 

புதன், 23 செப்டம்பர், 2020

ஓபர்ஹௌஸனில் ஒரு விருந்து

ஓபர்ஹௌஸனில் இருக்கும் திரு கந்தையா முருகதாசன் சார் அவர்கள் தங்கள் இல்லத்துக்கு விருந்துக்கு அழைத்திருந்தார். அவரும், அவர் மனைவி லைலாவும் மிகவும் தன்மையானவர்கள். முதல் முறை என்னைப் பார்க்க வரும்போதே அவர் எங்களுக்கு இனிப்புகளும் வடையும் கொண்டு வந்திருந்தார்கள். தங்கள் வீட்டுக்கும் அழைத்துச் சென்றார்கள். 

நான் இந்தியா திரும்பும் நாள் நெருங்க நெருங்க மகனிடம் அவர் இல்லத்துக்குச் சென்று வர வேண்டும் எனக் கேட்டேன். தினமும் இருவரும் நடைப்பயிற்சி செல்வோம். ஆரோக்கிய உணவுகள், திருப்புகழ் பாராயணம், சாய் வரலாறு படித்தல்,மகனுக்குப் பிடித்த உணவு வகைகளைச் செய்து கொடுத்தல், அளவளாவுதல், ஹம் காமாட்சி அம்மன் கோவில், மகனது நண்பர்களின் வீட்டில் விருந்து, சாய் பூஜைகள், பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி சார், நிம்மி சிவா,  சந்திரகௌரி சிவபாலன் வீட்டிற்குச் சென்றது என நாளும் பொழுதும் ஓடி விட்டது. இவர்கள் எல்லாருமே தங்கள் அன்பினால் எங்களை மூழ்கடித்து விட்டார்கள். 

எனவே ஊருக்குச் செல்வதற்கு  முந்தைய வாரத்தில் செப்டம்பர் முதல் வாரத்தில்   ஓபர்ஹௌஸன் சென்று லைலா மேடத்தின் விருந்தில் களித்து அவர்கள் என் மகனுக்காகச் செய்து அனுப்பிய இனிப்பு பான்& இனிப்பு சிப்ஸ் ஆகியவற்றை வாங்கி வந்தோம். கீழிருந்து மேலாக ஃபோட்டோக்கள் அப்லோடியதால் உங்களுக்கும் லைலா மேம் கொடுத்த பான் & சிப்ஸ். எடுத்துக்கொள்ளுங்கள். 

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

அரசாணிக்கால் ஊன்றுதலும் மாத்துக் கட்டுதலும்.

 1591. அரசாணிக்கால் ஊன்றுதல்:- திருமணத்துக்கு முதல் நாள் பங்காளி வீட்டு ஆண்கள் அரசாணிக்கால் கட்டுவார்கள். உள்ளூர்த் திருமணமாக இருந்தால் மாப்பிள்ளை வீடு, பெண் வீடு இரண்டிலுமே அரசாணிக்கால் கட்டுவார்கள். வெளியூர்க் கல்யாணமாக இருந்தால் பெண் வீட்டில் மனைபோடும் இடத்தில்,, மனைக்கு எதிரில் (சாமி வீட்டின் எதிரே) அரசாணிக்கால் ( கறுப்புநிற – கிரானைட் கல்லில் படி வைத்துக் குழியுடன் இருக்கும் ஒரு கனமான சதுரக் கல்) வைத்து அதில் சிறிது பால் ஊற்றிப் பவளம் போடுவார்கள். இதில் ஒரு நீண்ட குச்சியை வைத்து அதில் கிளுவை பாலை மரக் கம்புகளை உத்தரத்தின் வளையத்தையும் இணைத்து சேர்த்துக் கட்டுவார்கள். இதில் மாவிலைகளையும் அரச இலைகளையும் சுற்றிக் கட்டி அழகுபடுத்துவார்கள். வீட்டார் சங்கு ஊத இதைப் பங்காளி வீட்டு ஆண்கள் வந்திருந்து ஊன்றுவார்கள். அரசன் ஆணை பெற்று அதன் அடையாளமாக அரசாணிக்கால் ஊன்றி இத்திருமணம் நடைபெறுவதாக ஐதீகம்.  

இதற்குப் பக்கத்தில் உயரம் குறைவான ஒரு ஸ்டூலில் சரவிளக்கை ஏற்றி வைக்க வேண்டும். அந்தக்காலத்தில் சரவிளக்கைத் தொங்க விடுவார்கள்.

1592. மாத்துக் கட்டுதல்:- சிலப்பதிகாரத்தில் இந்த மாற்றுக் கட்டுதல் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. மாலைகள் தொங்கும் உச்சியைக் கொண்ட வயிரமணித் தூண்களை உடைய மண்டபத்தில் நீல மேற்கட்டியின் கீழ் அமைந்த அழகிய முத்துப் பந்தலில், (“நீலவிதானத்து நித்திலப்பூம்பந்தர்க் கீழ் ” என்ற வரியின் மூலம் புலப்படுகிறது.) திருமணம் நடந்ததாம்.

சனி, 19 செப்டம்பர், 2020

சாட்டர்டே போஸ்ட். தென்றல் சாயின் வாசல் பள்ளி.

 காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியின் ஆசிரியையான தென்றல் சாய் இந்தக் கொரோனா தினத்திலும் தன் மாணவர்களை எப்படிச் சந்தித்தார் எனச் சொல்கிறார் . அண்ணஞ்சார் பள்ளி என நூறாண்டுகளுக்கும் மேலாய் காரைக்குடியில் நடத்தப்பட்டு வரும் ( இவரது தாத்தா ஆரம்பித்துத் தந்தையும் நடத்தி வந்த பள்ளி ) கார்த்திகேயன் பள்ளியில் சுவேதா, லெக்ஷ்மி, தென்றல் ஆகிய மூன்று சகோதரிகளும் ஆசிரியப் பணி புரிகிறார்கள். இந்தப் பள்ளியின் தூண்களே இவர்கள்தான் என்றால் மிகையில்லை. 

எழுத்துப் பணியிலும் சக்கைப்போடு போட்டு வரும் இம்மூவரும் சென்ற ஆண்டு ஒரே தினத்தில் நந்தவனம் பதிப்பகம் மூலம் நூல் வெளியிட்டு உள்ளார்கள். இவர்களில் ஸ்வேதா முதல்வராக இப்பள்ளியைக் கட்டிக் காக்கிறார். லெக்ஷ்மி அப்துல் கலாமின் கனவுப் பள்ளிக்கூடத்தை இப்பள்ளியிலேயே நிகழ்த்துகிறார். தென்றலோ ஒருபடி மேலே போய் இந்தக் கொரோனா காலத்திலும் மாணவர்களை அவர்கள் இல்லங்களிலேயே சென்று சந்தித்துப் பாடம் நடத்தி வருகிறார். 

வாட்ஸப்பில் தேவதைக்கூட்டம் என்று ஆரம்பித்த அவர் லாக்டவுன் பின்னும் தொடரவே வாசல் பள்ளி என்று தன் மாணவர்களைச் சந்தித்து அவர்கள் அறிவுக்கண்ணைத் திறந்துள்ளார். எட்டு பத்து மாதங்கள் இவர்கள் வீட்டிலேயே இருந்து விட்டால் கற்றுக்கொள்வதில் இடர்  அவர்களுக்கு மட்டுமல்ல. ஆசிரியர்களுக்கும் அவர்களைப் புரிந்து கொள்ள வைப்பதில் தடை ஏற்பட்டு விடும். எனவே அந்த இடைவெளியைப் போக்க அவர் என்னென்ன செய்தார் எனப் பார்ப்போம் வாங்க. 

//வாசல் பள்ளி

***************

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்த முதல் நாளில் பட்டாம்பூச்சிகளாய்க் குழந்தைகள் பள்ளியில் கூடியதும் தான் எங்களுக்குப் புதிய கல்வியாண்டும் மகிழ்ச்சியும் பிறக்கும்.
இந்த ஆண்டு கோவிட்19 நோய்த்தொற்று பரவல் காரணமாகப் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில்
மனம் தவிப்பிற்கு உள்ளானது.

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

எனது சில நூல்கள் பற்றி திரு துரை அறிவழகன் அவர்களின் பார்வை.

அன்புள்ள தேனம்மை அவர்களுக்கு,

வணக்கம்.

தங்கள் எழுத்துக்களை வாசித்த வரையிலான கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் : குழந்தைகளின் கதை கேட்கும் ஆர்வத்தைப் புரிந்து ஆத்திச்சூடி அறநெறியை கதைவடிவில் குழந்தைகளுக்காகப் படைத்துள்ளீர்கள். மாத்திரையை தேனில் குழைத்துக் கொடுக்கும் குழந்தை வளர்ப்பு, பெண் என்பதையும் தாண்டி இலக்கிய வடிவில் இயங்கும் தன்மை சிறப்பு. குழந்தைகளின் உரையாடல் அவர்கள் மொழியிலேயே அமைந்துள்ளது.

வியாழன், 17 செப்டம்பர், 2020

ஓபல் இன்னில் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம்.

2010 ஜூலை 14 என் பிறந்தநாள் அன்று ஓபல் இன்னில் என்னவர் என் நட்புக்களுக்கு ஒரு மதிய விருந்து அளித்தார். அதன் படங்கள் இங்கே. வாங்க நீங்களும் உணவருந்திச் செல்லலாம். 

ரோஷிணியின் ஓவியங்களும் முபின் ஸாதிகாவின் உரையும்

 2761. நேற்றைக்கு வாங்கின ரோஜாச்செடி. பூத்ததும் பரவஸித்து அவசரத்தில் முள்ளின் முத்தமும் வாங்கினாய்.அனுமதித்தும் நீ பறித்தது வலித்தது அதற்கும். பேச வாயற்றுப் பொறுமை காத்தது. வெட்டின வெட்டில் மொக்குகளும் மரித்துப் போயின. நேற்றையமுன் தினம் எப்படி இருந்ததோ அப்படியே இருக்கப் போகிறது உன் வீடு வாசமற்ற சுவாசத்தோடு. . வெளியேற்று தொட்டிச் செடியை.  தலையைச் சுற்றித் தூக்கித்தூரப் போடு. விட்டு விடுதலையாகு.

2762. ஓடம் கடல் ஓடும்..:) ( இது வட்டு/பரிசல்னு தெரியும்.. சும்மா பாடினேன்.


2763. துங்கபத்ரா.


வியாழன், 10 செப்டம்பர், 2020

நடந்தாய் வாழி காவேரி - 1

ஆடி பதினெட்டை ஒட்டிக் காவிரியைக் கடக்க நேர்ந்தது. 

யாருமில்லாமல் காவிரி ஓடியது அன்றுதான் பார்த்தேன். 

ஆதிமந்தி ஆட்டனத்திதான் என் நினைவுக்கு வருவார்கள் ஆதி பதினெட்டென்றால். கரூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் பாதி தூரம்  கூடவே ஓடிவருகிறது காவிரி. இராமகிருஷ்ணா மடம், பள்ளிகள் எனத் தொடர்ந்து காவிரியின் அரசாட்சிதான். 

திட்டுத் திட்டாகப் புதர்கள் முளைத்திருக்க அவற்றைச் சுற்றிச் சுழித்துக் கொண்டு ஓடியது காவிரி. 

சனி, 5 செப்டம்பர், 2020

தினமலர், தினமணி, குமுதம் வாசகர் கடிதங்கள்.

 தினமலரில் இதுவரை 60 க்கும் மேற்பட்ட வாசகர் கடிதங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த இரண்டாண்டுகளாக கிட்டத்தட்ட 110 சிறுகதைகள் ( இதிகாச புராண கதைகள் ) எழுதும் வாய்ப்புப் பெற்றேன். அதற்காக திரு. தேவராஜன் ஷண்முகம் சார் அவர்களுக்கு நன்றி. அதற்கு ஓவியம் வரைந்து எழில் கூட்டிய ஓவியர்கள் திரு அஷோக் & திரு ரஜினி ஆகியோருக்கும் நன்றி. ! 

நான்கு சிறுவர் மலர்களில் அட்டைப்படமாக என்னுடைய கதைக்கரு இடம் பெற்றது குறித்தும் மகிழ்ச்சி. 

குமுதம் பக்தி ஸ்பெஷல், தினமணி ( வாடாமலர் மங்கை என்ற ஆறுதல் பரிசு பெற்ற கதைக்கான வாசகர் கடிதங்கள் ) தினமலர் திண்ணையில் இடம் பெற்ற விமர்சனம் ஆகியவற்றையும் இங்கே பகிர்வதில் பெருமையடைகிறேன். 


இதிகாச புராணக் கதைகள் நல்ல வழிகாட்டியாகத் திகழ்கின்றன என்று கூறிய மணச்சநல்லூர் வாசகி திரு பால அபிராமி அவர்களுக்கு மெத்த நன்றி. 

ஸோலிங்கன் டு இம்ஷ்லிங். SOLINGEN TO IM SCHLENK

எத்தனை முறை போஸ்ட் செய்தாலும் இம்ஷ்லிங்கில் இருந்து ஸோலிங்கனுக்குப் போகாமல் ஸோலிங்கனில் இருந்து இம்ஷ்லிங் வரையே அப்லோட் ஆகின்றன ஃபோட்டோக்கள். என்ன தலைகீழ் விகிதமோ. 

சரிவாங்க கௌசியின் வீட்டில் விருந்தை சுவைச்சிட்டு ஸோலிங்கனில் இருந்து இம்ஷ்லிங் போவோம். கிட்டத்தட்ட 36 கிமீ தூரம். 

ஸோலிங்கன் சென்றதும் தோழி கௌசியின் ( சிவகௌரி சிவபாலன் ) வீட்டில் சாப்பிட்ட உணவு வகைகள் இவை. நல்ல வெள்ளை வெளேரென்ற பொன்னி அரிசிச் சாதத்தோடு பரங்கிக்காய் கூட்டு, பருப்பு, கத்திரிக்காய் பால்கறி, வேப்பம்பூ வடை, பாகற்காய் சாலட், ஊறுகாய், ரசம், அப்பளம். 


கௌசியின் வீட்டருகில் உள்ள பஸ் ஸ்டாப். நாங்கள் கௌசியின் கணவரின் வருகைக்காகக் காத்திருந்தபோது எடுத்தது. மழையில் நனைந்த சாலைகள் துல்லியமான சுத்தத்தோடு திகழ்ந்தன. 

வியாழன், 3 செப்டம்பர், 2020

குவாலியர் கோட்டையில் கோட்டீஸ்வரும் சாஸ்பகு மந்திரும் குருத்வாராவும்.

ரெட் சாண்ட் ஸ்டோன் எனப்படும் செந்நிறக் கற்களால் கட்டப்பட்டது குவாலியர் கோட்டை. ஜெயின் ராக் கட் கல்சர் எனப்படும் வர்ணக் கற்களை வெட்டி ஒட்டி அழகு படுத்தப்பட்ட கோட்டை இது.

மன் மந்திர் என்னும் மகாலை ராஜா தோமர் மான்சிங் பதினாலாம் நூற்றாண்டில் கட்டினார். அந்த மன் மந்திரை ஒட்டிய இப்பகுதி பின்னாட்களில் ராஜரீகக் கைதிகளை அடைத்து வைக்கும் இடமாக இருந்திருக்கிறது. மேலே மூன்று உப்பரிகைகள். ராஜா, மந்திரி, தளபதிக்கான இடமோ அல்லது ராஜா ராணி இளவரசருக்கான இடமோ தெரியவில்லை. Related Posts Plugin for WordPress, Blogger...