எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
குவாலியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குவாலியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 செப்டம்பர், 2020

குவாலியர் கோட்டையில் கோட்டீஸ்வரும் சாஸ்பகு மந்திரும் குருத்வாராவும்.

ரெட் சாண்ட் ஸ்டோன் எனப்படும் செந்நிறக் கற்களால் கட்டப்பட்டது குவாலியர் கோட்டை. ஜெயின் ராக் கட் கல்சர் எனப்படும் வர்ணக் கற்களை வெட்டி ஒட்டி அழகு படுத்தப்பட்ட கோட்டை இது.

மன் மந்திர் என்னும் மகாலை ராஜா தோமர் மான்சிங் பதினாலாம் நூற்றாண்டில் கட்டினார். அந்த மன் மந்திரை ஒட்டிய இப்பகுதி பின்னாட்களில் ராஜரீகக் கைதிகளை அடைத்து வைக்கும் இடமாக இருந்திருக்கிறது. மேலே மூன்று உப்பரிகைகள். ராஜா, மந்திரி, தளபதிக்கான இடமோ அல்லது ராஜா ராணி இளவரசருக்கான இடமோ தெரியவில்லை. 



வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

குவாலியர் சூரியனார் கோவிலில் சூரிய காந்தி.

குவாலியர் சூரியனார் கோவிலில் கோவிலே சூரியனின் ரதம் போல் அமைந்திருக்கும் அதிசயத்தோடு பல ஏக்கர் தூரத்துக்கு தோட்டமாய்க் காட்சி அளிக்கிறது. அங்கே யோகாப்யாசம், நடைப்பயிற்சி, தியானம் செய்பவர்களை அதிகாலையில் அதிகம் காணலாம். 

குவாலியர் நகரில் மொரார் என்னுமிடத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில். அதன் முன்புறம் இது. உள்ளே நீள் நடையில் சென்றால் பக்கவாட்டில் கோவில் இருக்கிறது. சுற்றிச் சென்று மேலேறினால் சூர்யப் ப்ரகாசத்தில் செந்நிறமாய் ஜொலிக்கிறது கோவில்.

எதிரே பசுமையாய் தோட்டம். லேசாய் வெம்மையோடு இருக்க மயில்களும் புறாக்களும் அகவுகின்றன, ஊடுகின்றன. 


வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

குவாலியர் கோட்டை - சிற்பக் கதவும், சிற்பச் சாளரங்களும் சுரங்கங்களும்

கிட்டத்தட்டப் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இக்கோட்டை. இதன் ராக் கட் எனப்படும் மார்பிள் வெட்டு ஒட்டு சிற்ப வேலைப்பாடுகளால் புகழ்பெற்றது இக்கோட்டை. 

 ஜைன தீர்த்தங்கரர் சிலைகளும் இன்னொரு பக்கம் அலங்கரிக்கின்றன. குஜரி மஹால்,மன் மந்திர், கரன் மகால் ஆகியனவும் உண்டு.  14 ஆம் நூற்றாண்டில்  மன் மந்திர் மன்னர் மான்சிங் தோமரால் கட்டப்பட்டது. 

பதினைந்தாம் நூற்றாண்டு வரை தோமர் மன்னர்கள் வசம் இருந்த இக்கோட்டை அதன் பின் முகலாயர் வசம் கைமாறியது. பான் ,பானி பனீர் என இது பற்றி ஒரு கட்டுரை எழுதி அது புதிய பயணி இதழிலும் வெளியானது. 


உருவாஹ் கேட், ஆக்ரா கேட் எனப் பல சுரங்கப் பாதைகளும் ராஜ பாட்டைகளும் உள்ளன.
Related Posts Plugin for WordPress, Blogger...