எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 30 ஜூலை, 2022

வெண்கலம் ( விகடன்)

 வெண்கலம்

கொழந்த வேலா பொளந்த வாயான்னு பகல்முழுக்கத் தூங்குவான் என் பேரப்பய. ராத்திரி எந்திரிச்சான்னாத்தான் வெங்கலத்தொண்டை. அழுதழுது ஆல்வீட்டுல இருக்குற எலி பெருச்சாளியெல்லாம் வெரட்டிப்பிடுவான்.” என்று பிள்ளையைப் பார்க்கவந்த பக்கத்துவீட்டு சாரதாச்சியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் உண்ணாமலை ஆச்சி.

“பய ராத்திரில பொறந்தானா, பகல்ல பொறந்தானா “ என்று கேட்டார்கள் சாரதாச்சி.

“ராத்திரிலதான் ஆச்சி “ என்றாள் உண்ணாமலை.

“அடி ராத்திரில பொறந்தபய ராத்திரிலதாண்டி முழிப்பான். ஆமா பாண்டியக்கா குளியாட்ட வர்றாளாமே” என்று கேட்ட சாரதாச்சியிடம் “ஆமா ஆயா. அக்கா ஒவ்வொரு நாளும் குளியாட்டினவோடனே பயலுக்குக் கோமயம், பேர்சொல்லாதது, ஆடுதோடா இலை, துளசி, மாசிக்காய், சங்கு, அப்பிடின்னு ஏதாவது கொண்டாந்து ஒரசி வடிகட்டிக் கொடுக்கும்.” என்றாள் நாகு.

“அடி சங்கு குடிச்சிருக்காண்டி ஒன் பேரன். அதுதான் வெங்கலத் தொண்டையாயிருச்சு. நல்லா இருக்கட்டும்போ “ என்று கிளம்பினாக எண்பது வயது சாரதாச்சி.

“ஆச்சி நாளன்னைக்கு மிட்டாய்த்தட்டு வைக்கிறோம். ரொட்டி மிட்டாய் எடுத்துக்க வாங்க “ என்றாள் உண்ணாமலை.

செவ்வாய், 26 ஜூலை, 2022

ஆயிரம் பிறவிகள் எடுத்த காகபுஜண்டர்

 ஆயிரம் பிறவிகள் எடுத்த காகபுஜண்டர்


ஒருவர் எத்தனை பிறவிகள் எடுக்கிறார் என்பது அவரது கர்மவினைப் பயனைப் பொறுத்தது. குருவை மதிக்காத சித்தர் ஒருவர் பெற்ற சாபம் என்னவென்றால் அவர் இப்பூலோகத்தில் பத்தாயிரம் பிறவிகள் எடுக்க வேண்டுமென்பது. இத்தனைக்கும் அவர் நற்பவி எனப் பெயரெடுத்தவர். அவர் மேல் இரக்கப்பட்ட குரு அவருக்காக வேண்டியபின் அது ஆயிரம் பிறவியாகக் குறைந்ததாம். அவருக்கு சாபமிட்டவர் யார்? ஏன் சாபமிட்டார்? அவரின் குரு யார் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

தேவலோகத்தில் அன்று ஒரு நடன நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பாடலின் தாளத்துக்கு ஏற்ப தேவகணங்களும் பூதகணங்களும் ஆடத் தொடங்கின. அங்கே இருந்த அன்னப்பறவைகளும் தம்மை மறந்து ஆட்டத்தில் கலந்து கொண்டன. மகிழ்ச்சி வெள்ளம் பொங்கிக் கொண்டிருந்த வேளையில் சிவனாரின் தலையில் சூடிய சந்திரகலையில் இருந்து ஒரு காகம் உருவெடுத்துப் பறந்து போய் ஒரு அன்னபட்சியுடன் நடனமாடியது.

வெள்ளி, 22 ஜூலை, 2022

யூ ட்யூபில் 101 - 110 வீடியோக்கள்.

 101.சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் துதி l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/BimZrcWTzXo

#சமயபுரம்ஸ்ரீமாரியம்மன்துதி  #தேனம்மைலெக்ஷ்மணன்

#SAMAYAPURAMSRIMARIYAMMANTHUTHI #THENAMMAILAKSHMANAN102.ஸ்ரீ துர்க்கை அம்மன் துதி l  சிவகங்கை l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/6aEPg2cgHjc

#ஸ்ரீதுர்க்கைஅம்மன்துதி  #சிவகங்கை  #தேனம்மைலெக்ஷ்மணன்

#SRIDURGAIAMMANTHUTHI #SIVAGANGAI #THENAMMAILAKSHMANAN103.ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் துதி l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/h1QVmTpeY3A

#ஸ்ரீவில்லிப்புத்தூர்ஆண்டாள்துதி  #தேனம்மை லெக்ஷ்மணன்

#SRIVILLIPUTHURAANDALTHUTHI #THENAMMAILAKSHMANAN

புதன், 20 ஜூலை, 2022

யூ ட்யூபில் 91 - 100 வீடியோக்கள்.

இந்தமுறை பக்திப்பரவசத்தில் சாமி பாடல்கள் பாடி யூ ட்யூபில் அப்லோட் செய்துள்ளேன். 


91.குமரகுருபரர் அருளிய சகலகலாவல்லி மாலை l தேனம்மை லெக்ஷ்மணன் l சரஸ்வதி துதி

https://www.youtube.com/watch?v=grdWokO4I4w

#குமரகுருபரர்அருளியசகலகலாவல்லிமாலை #தேனம்மைலெக்ஷ்மணன் #சரஸ்வதிதுதி

#SAGALAKALAVALLIMALAI #THENAMMAILAKSHMANAN #SARASWATHITHUTHI


92.திருமண பதிகம் l திருவேதிகுடி l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=tRsFx-vbbIc

#திருமணபதிகம்  #திருவேதிகுடி  #திருஞானசம்பந்தர் #தேனம்மைலெக்ஷ்மணன்

#THIRUMANAPATHIGAM #THIRUVEDHIGUDI #THIRUGNANASAMBANDHAR #THENAMMAILAKSHMANAN


93.திருமண பதிகம் l திருஞான சம்பந்தர் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=8TZvSA9Hhrc

#திருமணபதிகம்  #திருஞானசம்பந்தர்  #தேனம்மைலெக்ஷ்மணன்

#THIRUMANAPATHIGAM #THIRUGNANASAMBANDHAR #THENAMMAILAKSHMANAN

செவ்வாய், 19 ஜூலை, 2022

100 நூல்கள்.

 தமுஎச மாநில மாநாட்டில் வழங்கிய நூல்கள் ( மே ஒன்றாம் தேதி ) 

எனது நூல்கள் 21.மற்றவை நண்பர்களின் நூல்கள் மற்றும் சென்னை டிஸ்கவரி & புக் ஃபேர்களில் வாங்கியவை. 


நூல் – ஆசிரியர் – பதிப்பகம் - பக்கம் – ஆண்டு - விலை

1.நீயின்றிப் பிறிதொன்றில்லை – ராஜி வாஞ்சி, வாஞ்சி கோவிந்த், ரத்னா வெங்கட், மதுரா, விஜயலெட்சுமி வெங்கட் – கலையரசி பதிப்பகம் – பக்கம் 128 – ஆண்டு 2019 – விலை ரூ. 150/-

2.தானாய் நிரம்பும் கிணற்றடி - அய்யப்ப மாதவன் -  தமிழ்வனம் பதிப்பகம் – பக்கம் 110 – ஆண்டு 2009 – விலை ரூ. 50/-

3.தலைப்பு இழந்தவை – ஈழவாணி – தகிதா பதிப்பகம் – பக்கம் 60 – ஆண்டு 2010 – விலை ரூ. 40/-

4.இதழில் எழுதிய கவிதைகள் – சங்கவி – அகவொளி பதிப்பகம் – பக்கம் 96 –
2012 – விலை ரூ. 70/-

ஞாயிறு, 17 ஜூலை, 2022

பியான்வென்யூ - ப்ரெஞ்ச் அகாடமிக்கு வரவேற்கும் மாலதி சுப்பு

கோவையில் ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் நடத்தி வருகிறார் திருமதி மாலதி சுப்ரமணியம். இவரது தந்தையார் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் திரு. வெ. லெ. இராமநாதன் செட்டியார், தாயார் திருமதி. லலிதா ராமநாதன் ஆச்சி. இவருடைய சகோதரி திருமதி சீதாலெக்ஷ்மி குழந்தைவேலன், சகோதரர் திரு ஆர் எம் வெங்கடேஷ். சகோதரர் அட்வகேட்டாக இருக்கிறார். இவரது மாமனார் பள்ளத்தூரைச் சேர்ந்த எமரால்டு திரு. லட்சுமணன் செட்டியார், மாமியார் திருமதி. விசாலாட்சி ஆச்சி.


இவரது கணவர் திரு லெ. சுப்ரமணியன் செட்டியார். இவரது மாமனார் கோயம்பத்தூர் கணபதியில் ஆரம்பித்து வைத்த இன்ஜினியரிங் கம்பெனியை இவரது கணவரும் அவருடைய தம்பி திரு லெ. இராமநாதனும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். அதில் அவர்கள் screws மற்றும் ரிவெட்டுகளை தயாரித்து வருகிறார்கள்.

வியாழன், 14 ஜூலை, 2022

தினமலரில் நன்னெறிக்கதைகள் அறிமுகம்.

 தினமலர் சென்னைப் பதிப்பில் படிக்கலாம் வாங்க என்ற தலைப்பில் நூல் அறிமுகம் வெளியாகிறது. ( ஒவ்வொரு செவ்வாய் அன்றும் என நினைக்கிறேன் ) 


12 ஏப்ரல், 2022 அன்று இப்பகுதியில் சீத்தலைச் சாத்தன் என்ற நூல் விமர்சகர் என்னுடைய ”நன்னெறிக் கதைகள்”  என்ற நூல் பற்றி மிக அழகான பார்வையை முன் வைத்துள்ளார். 


நன்னெறிக் கதைகளின் வரிசையில் வந்த அடுத்த நூலுக்கும் ஜூன் 9,2022 இல் மதிப்புரை வெளியாகி உள்ளது. 


நன்னெறிக் கதைகள் என்ற வரிசையில் வெளியான என் இரண்டு நூல்களுக்கும் தினமலர் சென்னை எடிஷனில் நூல் மதிப்புரை வந்துள்ளது.
9.6.2022 இன்று வெளியான நூல் மதிப்புரை இது. அழகான நூல் பார்வை கொடுத்த சீத்தலைச் சாத்தன் அவர்களுக்கு நன்றி. தினமலர் சென்னை எடிஷனுக்கும் இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்பிய என் சகோதரன் அருணாசலத்துக்கும் நன்றி

திங்கள், 11 ஜூலை, 2022

யூ ட்யூபில் 81 - 90 வீடியோக்கள். நூல் பார்வைகள்.

 81.வளையாபதி, குண்டலகேசி - மூலமும் உரையும் l நூல் அறிமுகம் l தேனம்மை லெக்ஷ்மணன்.

https://www.youtube.com/watch?v=MMn4iy6yc3s

#வளையாபதி_குண்டலகேசி #நூல்அறிமுகம் #தேனம்மைலெக்ஷ்மணன்

#VALAIYAPATHI #KUNDALAKESI #BOOKINTRO #THENAMMAILAKSHMANAN

பாரதி பதிப்பகம், விலை ரூ. 110/-


82.திருக்கைலாயத் திருவலம் l நூல் அறிமுகம் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=X_uJ9e8cdAo

#திருக்கைலாயத்திருவலம், #நூல்அறிமுகம், #தேனம்மை லெக்ஷ்மணன்

#THIRUKAILAYATHIRUVALAM  #BOOKINTRO #THENAMMAILAKSHMANAN

வெள்ளி, 8 ஜூலை, 2022

லேடீஸ் ஸ்பெஷலின் ஸ்ரீசக்தி விருது - 2022.

 லேடீஸ் ஸ்பெஷலின் ஸ்ரீசக்தி விருது - 2022. 

இந்த வருடம் மகளிர் தினத்தை லேடீஸ் ஸ்பெஷலின் ஆசிரியை திருமதி . கிரிஜா ராகவன் மேடம் லேடீஸ் ஸ்பெஷல் சார்பில் மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.  


25 ஆம் ஆண்டை எட்டும் லேடீஸ் ஸ்பெஷல் இதழுடன் ரோட்டரியும் ( இன்னர்வீல் டிஸ்ட்ரிக்ட் 323 இணைந்து பெண் சக்தியின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக தினமும் ஸ்ரீசக்தி & யுவசக்தி என இரு விருதுகளை அளித்தார்கள். 

புதன், 6 ஜூலை, 2022

நமது செட்டிநாடு & தனவணிகன் இதழ்களில் எனது 15, 16, 17, 18, 19 வது நூல் வெளியீடுகள்.

 இந்த வருடப் புத்தகத் திருவிழாவில் எனது மூன்று நூல்களை ( வளையாபதி & குண்டலகேசி - மூலமும் உரையும், நாககுமாரகாவியம் - புதினம், நீலகேசி - புதினம் ) வெளியிட்டமைக்கு நன்றி பாரதி பதிப்பகம், அதன் நிர்வாக இயக்குநர் செல்வி நித்யா இராஜேந்திரன், திரு. ஞானசம்பந்தன் சார், வானதி பதிப்பகம் திரு. இராமு சார்.வெள்ளி, 1 ஜூலை, 2022

நிலவறைக் குறிப்புகள் – ஒரு பார்வை

நிலவறைக் குறிப்புகள் – ஒரு பார்வை


ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் எல்லாப் படைப்புகளும் துயருறும் மனித ஆன்மாவினைப் பற்றியே பேசுகின்றன. இப்பூவுலகில் வாழ அதன் மனிதர்களோடு ஒத்திசைவோடு நடக்க அவரின் கதாபாத்திரங்கள் பெரும் ப்ரயத்தனம் செய்கிறார்கள். இயல் வாழ்விலும் மனதுக்குள் எப்போதும் ஒரு பயணத்தைச் செய்து கொண்டே இருப்பார்கள் ஃபியோதரின் கதாபாத்திரங்கள்.

ஆழ்ந்த அறவழியில் தம் மனதை நேர்மையாகப் படைக்கும் பாத்திரங்கள் அவர்கள். தம் இழிமை, கயமை, எதையும் மறைப்பதில்லை. இக்கதையின் நாயகன் தன்னைப் பற்றியே தள்ளி நின்று ஆய்ந்து எழுதி உள்ளமை நம்மை நாமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தக் கோருகிறது. சராசரிக்கும் மேலான சத்தியத்தின் பால் நம்பிக்கை உள்ள சமூகத்தின் மதிப்பீடுகளால் இடர்ப்பட்டு நொந்து போகும் அபூர்வமனிதனைக் கான்வாஸில் வரைந்தது போன்ற சித்திரங்களே இவரின் பாத்திரங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...