எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
திங்கள், 21 ஜூலை, 2025
புதன், 28 ஆகஸ்ட், 2024
குறள் இனிது & சபாஷ் சாணக்யா சோம வீரப்பன்
குறள் இனிது & சபாஷ் சாணக்யா சோம வீரப்பன்
குறள் என்றாலோ, சாணக்யன் என்றாலோ சமீபகாலமாக எனக்கு நினைவு வரும் பெயர் திரு சோம வீரப்பன் . குறள் இனிது என்றும் சபாஷ் சாணக்யா என்றும் அற்புதமான இரு நூல்களைப் படைத்திருக்கிறார். இவை இரண்டும் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் பெற்றுள்ளது சிறப்பு. பிள்ளையார்பட்டிப் பிச்சைக் குருக்கள் வெளிநாட்டில் இருக்கும் தன் மாணக்கர்களுக்குப் பரிசளிக்க சுமார் 150 நூல்கள் வாங்கியுள்ளார் என்பதே இவரது எழுத்தின் சிறப்பு. பணி ஓய்வுக்குப் பின்னான காலகட்டத்தை இவர் தன் இலக்கியப் பணி மற்றும் மாணவர்களை நெறிப்படுத்துவது போன்ற விஷயங்களில் செலவிடுவது வியப்புக்குரிய விஷயம்.
வியாழன், 30 மே, 2024
ரியல் எஸ்டேட்டில் சாதித்து வரும் எல்.எஸ்பி.ராகவன்
ரியல் எஸ்டேட்டில் சாதித்து வரும் எல்.எஸ்பி.ராகவன்
காரைக்குடியில் பாரம்பரியமான சிவ.மெ.(வெ.ராம) இல்லத்தைச் (லட்டு வீடு) சேர்ந்தவர் எல்.எஸ்பி. ராமசாமி என்கின்ற ராகவன். கோயில், இளையற்றாங்குடி/ கழனிவாசல் பிரிவு. இவரது பெற்றோர்கள் - L.சுப்பிரமணியன் செட்டியார் -மீனாட்சி ஆச்சி. மனைவி-ஆத்தங்குடி முத்துப்பட்டிணம் PR.லெட்சுமணன் செட்டியார் -திருநெல்லை ஆச்சி மகள் அங்கயற்கண்ணி. இவருடைய ஒரே மகள் மீனாட்சியை நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்த சிங்கப்பூரில் வசிக்கும் வெ.ராமநாதன் (தினேஷ்)க்கு மணமுடித்து, அவந்திகா, தர்ஷனா என்ற இரண்டு பேத்திகள்.அனைவரும் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்கள்.
புதன், 10 ஏப்ரல், 2024
51 வருடப் பாரம்பர்யமிக்க லெட்சுமி மெட்டல்ஸ் திரு. அழகப்பன்
51 வருடப் பாரம்பர்யமிக்க லெட்சுமி மெட்டல்ஸ் திரு. அழகப்பன்
காரைக்குடி முத்துப்பட்டிணத்தில் பெயர் பெற்ற குடும்பம் வெள்ளைக் குதிரை சுப்பிரமணியம் செட்டியார் வீடு. 1972 இல் ஃபேன்ஸி மெட்டல்ஸ் ஆரம்பித்து வீட்டின் பின்புறத்திலேயே பட்டறையும் வீட்டின் முன்பக்கம் சில்வர் கடையும் நடத்தி வந்தவர் திரு. சுப்பிரமணியம் செட்டியார். இவர்கள் மனைவி திருமதி. மெய்யம்மை ஆச்சி. இவர்கள் தேவகோட்டை திரு. டி.வி.வெங்கடாசலம் செட்டியார், திருமதி .உமையாள் ஆச்சி தம்பதிகளின் புதல்வர் திரு.இராதாகிருஷ்ணன் அவர்களை அழகப்பன் என்ற பெயரில் 1986 இல் சுவீகாரம் செய்து கொண்டார்கள்.
திரு அழகப்பன் 1963 டிசம்பர் 8 ஆம் தேதி பிறந்தவர். சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் இளங்கலை கணிதம் பயின்றவர். பிள்ளை வளர வந்த இடத்தில் குடும்பத் தொழில் என்பதால் ஃபேன்ஸி மெட்டல்ஸ் மற்றும் சில்வர் பட்டறைத் தொழிலில் ஈடுபாடு கொண்டார். இவருக்குப் பிறந்த இடத்தில் ஒரு சகோதரரும் இரு சகோதரிகளும் உண்டு. மனைவி கானாடுகாத்தான் திரு. ராமனாதன் செட்டியார் அவர்களின் புதல்வி விசாலாக்ஷி. பிள்ளைகள் மூவர். இரு பெண் குழந்தைகள், ஒரு பையன். இவர்களுக்குத் திருமணமாகிப் பேரன் பேத்தி எடுத்து விட்டார்கள்.
செவ்வாய், 2 ஏப்ரல், 2024
சென்னை ஆவடியில் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் திரு. வெங்கடாச்சலம் பழனியப்பன்
சென்னை ஆவடியில் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் திரு. வெங்கடாச்சலம் பழனியப்பன்
ஆவடியின் ட்ராஃபிக் சிக்னலில் இருக்கும் காவலரோடு தேவைப்படும்போதெல்லாம் தோள்கொடுத்து சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவார். ஆவடிப் பகுதியில் மின்சாரம், சாலை வசதி போன்றவற்றுக்காக உரிமைக் குரல் எழுப்புவார். உரிய தகவல்களோடு பெட்டிஷன், மகஜர், கடிதங்கள் அனுப்பி அவை சீர் செய்யப்படும்வரை ஓயாமல் பாடுபடுவார். ஓரிரு முறை இலவச மருத்துவ முகாம் நடைபெற தனது இல்லத்தை ஒழுங்குபடுத்தி வழங்கியுள்ளார். இரத்ததானமும் சிலமுறை செய்துள்ளார். துப்புரவுப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டி அவர்களையும் கொண்டாடுவார். இவர்தான் சென்னை ஆவடியில் வசித்து வரும் காரைக்குடி ஆலங்குடியார் வீதியைச் சேர்ந்த வெங்கடாச்சலம்.
தனி மனிதனாகவும் குழுவாகவும் சமூகசேவையில் நாட்டம், கொரோனா காலத்தில் மற்றும் பேரிடர் காலங்களில் இடர்ப்பட்டோருக்கு இயன்ற உதவிகள், பல வருடங்களாக பாதயாத்திரை சென்று வரும் பக்தர்களுக்கு மிக்ஸர் போன்ற உணவுப் பொருட்கள் வழங்குதல் ஆகியன செய்து வரும் வெங்கட் அவர்களிடம் அவர்களின் குடும்பம், சமூக நல நாட்டத்துக்கான தேட்டம் பற்றிக் கேட்டபோது அவர் ,”பிறந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்பதற்கு நமக்கு 6 அறிவு தேவையில்லை. கொஞ்சமாவது நமது ( Foot Prints ) கால் தடங்களை இந்த பூமியில் பதித்துவிட்டு இந்த பூ உலகை விட்டு நாம் பிரிய வேண்டும்.
வியாழன், 29 பிப்ரவரி, 2024
”நீங்களும் செல்வந்தர் ஆகலாம்” எனக்கூறும் ஸ்டேட் எக்ஸ்ப்ரஸ் திரு இராமநாதன்.
3.”நீங்களும் செல்வந்தர் ஆகலாம்” எனக் கூறும் ஸ்டேட் எக்ஸ்ப்ரஸ் திரு இராமநாதன்
தேவகோட்டையைச் சேர்ந்தவர்கள் திரு. இராமநாதன். இளமைப்பருவத்தில் கடின உழைப்பால் உயர்ந்தவர்கள். இன்றும் தன் கொள்கைப் பிடிப்போடு நேர்மையாகச் செயல்படுபவர்கள். பி டி எம் ( பால தண்டாயுதபாணி மலர் ) என்றும் பி டி எம் எம் ( பால தண்டாயுதபாணி மங்கையர் மலர் ) என்றும் வாட்ஸப்பில் ஈ மேகஸீனை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பவர்கள்.
இவரது மனைவி லலிதா ஆச்சியும் மகள்கள் மாலதி சுப்பு, மற்றும் சீதாலெக்ஷ்மியும் இணைந்து நிர்வகிக்கும் பி டி எம் எம் மூலம் கவிதாயினிகளும், சிறந்த பேச்சாளர்களும் இனம் காணப்பட்டனர். இன்னும் பல மேடைகளில் அவர்கள் சிறப்பிடம் பெற்று வருகின்றனர். திரு இராமநாதன் அவர்களின் மகன் வெங்கடேஷ் சிறந்த வக்கீல் மட்டுமல்ல நூறு முறைக்குமேல் ரத்ததானம் செய்தவர் என்பதும் சிறப்பு.
தேவகோட்டை பாலதண்டாயுதபாணி சாரிட்டபிள் ட்ரஸ்ட் என்னும் அமைப்பை 2001 இல் நிறுவி அதன் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கல்வி நிதி உதவியையும், மற்றும் பலருக்குத் திருமண உதவியையும் வழங்குகிறார்கள். வருடந்தோறும் பிரபலங்களை அழைத்து நகரத்தார் சான்றோர்களைப் பாராட்டி ”மாமணி” விருது வழங்கி விழா எடுப்பவர்கள். அந்த ட்ரஸ்ட் இப்போது வெள்ளிவிழா விளிம்பில் உள்ளது. அண்ணன் அவர்கள்தான் அதன் மேனேஜிங் ட்ரஸ்டி.
புதன், 20 டிசம்பர், 2023
வெள்ளி, 3 நவம்பர், 2023
வாழ்க்கைக்குப் பொருள் வேண்டும், வாழ்வதிலும் பொருள் வேண்டும் எனக் கூறும் திரு. லயன் வெங்கட்.
வாழ்க்கைக்குப் பொருள் வேண்டும், வாழ்வதிலும் பொருள் வேண்டும் எனக் கூறும் திரு. லயன் வெங்கட்.
காரைக்குடியைக் கல்விக்குடியாய் மாற்றியதில் வள்ளல் அழகப்பரின் பங்கு அளப்பரியது. அதேபோல் காரைக்குடியில் 21 ஆண்டுகளாய்ப் புத்தகத் திருவிழா நடத்தி அறிவுச் சுடரேற்றி வருபவர்கள் காரைக்குடிப் புத்தகத் திருவிழாக் குழுவினர். இவர்களுள் லயன் வெங்கட் என்று நண்பர்களால் அழைக்கப்படும் திருமிகு.வெங்கடாசலம் அதன் பொருளாளராய் இருந்து திறம்படத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
இது மட்டுமல்ல வாழ்வியல் நெறிகளை அழகுறத் தரும் திருக்குறள் கழகம், மெய்யியல் நெறியைப் பரப்பும் இந்து மதாபிமான சங்கம், இசைத்தமிழுக்கென்று உருவான தமிழிசைச் சங்கம், தனவணிகர் மரபுக்கேற்ற காரைக்குடி தொழில் வணிகக் கழகம் எனக் காரைக்குடியின் பாரம்பரியச் சங்கங்கள் பலவற்றுக்கு இவர் அர்ப்பணிப்பு உணர்வோடு சேவையாற்றி உள்ளார். உலகளாவிய அரிமா சங்கத்தின் காரைக்குடி மாவட்ட வட்டாரத் தலைவராகவும் பல்வேறு தொண்டுகள் புரிந்துள்ளார். எப்படி இவ்வளவையும் திறமையாக, சரிவர நிறைவேற்ற முடிகிறதென்று பார்க்கும்கணம் தோறும் என்னை ஆச்சர்யப்பட வைப்பவர் இவர். சுறுசுறுப்பானவர். எப்போதும் பளிச் தோற்றம் கொண்டவர். இவரைப் பார்த்தாலே நம்மையும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். இந்த மனம் ஒரு நந்தவனம், சுவாமி சிவானந்தரின் பொன்மொழிகள் போன்ற நேர்மறை எண்ணங்கள் கொண்ட புத்தகங்களை அனைவருக்கும் பரிசாக வழங்கி மகிழ்பவர்.
ஞாயிறு, 17 ஜூலை, 2022
பியான்வென்யூ - ப்ரெஞ்ச் அகாடமிக்கு வரவேற்கும் மாலதி சுப்பு
கோவையில் ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் நடத்தி வருகிறார் திருமதி மாலதி சுப்ரமணியம். இவரது தந்தையார் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் திரு. வெ. லெ. இராமநாதன் செட்டியார், தாயார் திருமதி. லலிதா ராமநாதன் ஆச்சி. இவருடைய சகோதரி திருமதி சீதாலெக்ஷ்மி குழந்தைவேலன், சகோதரர் திரு ஆர் எம் வெங்கடேஷ். சகோதரர் அட்வகேட்டாக இருக்கிறார். இவரது மாமனார் பள்ளத்தூரைச் சேர்ந்த எமரால்டு திரு. லட்சுமணன் செட்டியார், மாமியார் திருமதி. விசாலாட்சி ஆச்சி.
இவரது கணவர் திரு லெ. சுப்ரமணியன் செட்டியார். இவரது மாமனார் கோயம்பத்தூர் கணபதியில் ஆரம்பித்து வைத்த இன்ஜினியரிங் கம்பெனியை இவரது கணவரும் அவருடைய தம்பி திரு லெ. இராமநாதனும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். அதில் அவர்கள் screws மற்றும் ரிவெட்டுகளை தயாரித்து வருகிறார்கள்.
புதன், 6 ஜூலை, 2022
நமது செட்டிநாடு & தனவணிகன் இதழ்களில் எனது 15, 16, 17, 18, 19 வது நூல் வெளியீடுகள்.
இந்த வருடப் புத்தகத் திருவிழாவில் எனது மூன்று நூல்களை ( வளையாபதி & குண்டலகேசி - மூலமும் உரையும், நாககுமாரகாவியம் - புதினம், நீலகேசி - புதினம் ) வெளியிட்டமைக்கு நன்றி பாரதி பதிப்பகம், அதன் நிர்வாக இயக்குநர் செல்வி நித்யா இராஜேந்திரன், திரு. ஞானசம்பந்தன் சார், வானதி பதிப்பகம் திரு. இராமு சார்.
வெள்ளி, 15 ஏப்ரல், 2022
மகாகாலேஷ்வர்,ஓம்காரேஷ்வர்,சோம்நாத்,நாகேஷ்வர் ஜோதிர்லிங்க தரிசனம்.
மகாகாலேஷ்வர்,ஓம்காரேஷ்வர்,சோம்நாத்,நாகேஷ்வர் ஜோதிர்லிங்க தரிசனம்.
மஹாகாலேஷ்வர், ஓம்காரேஷ்வரர்/மமலேஷ்வரர், சோம்நாத், நாகேஷ்வர் ஆகிய நான்கு ஜோதிர்லிங்கத்தையும் துவாரகை கிருஷ்ணன், உஜ்ஜயினி மஹாகாளியையும் தரிசனம் செய்து நாளாகிவிட்டது ஆனால் இப்போதுதான் பதிவு செய்கிறேன். குஜராத், & மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள கோயில்கள் இவை.
மகாகாலேஷ்வர். மிகவும் பந்தோபஸ்துடன் அமைந்த கோவில் இது. முதல்நாளே ரேஷன்கார்டு, பான்கார்டு , வோட்டர் ஐடி ,ஆதார் போன்ற அடையாள அட்டைகளில் ஏதோ ஒன்றைக் காண்பித்துப் பதிவு செய்துகொள்ளவேண்டும். மறுநாள் விடியற்காலையில் உள்ள ஸ்பெஷல் பஸ்மாஹாரத்தி எனப்படும் மயானபூஜையைப் பார்க்கவே இது.
சனி, 5 பிப்ரவரி, 2022
செட்டிநாட்டு வீடுகளை ஜொலிக்கச் செய்யும் லெக்ஷ்மி ராமசாமி!
செட்டிநாட்டு வீடுகளை ஜொலிக்கச் செய்யும் லெக்ஷ்மி ராமசாமி!
லெக்ஷ்மி ராமசாமி பள்ளத்தூரைச் சேர்ந்தவர். சென்னையில் வசிக்கிறார். கணவர் திரு சபாபதி நாராயணன், மகன் செழியன் நாராயணன் என்று கட்டுச்செட்டான குடும்பம். கணவர் PAYHUDDLE என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது மகன் செழியன் பன்னிரெண்டாம் வகுப்புப் படித்து வருகிறார்.
க்ளோரோஃபில் ஃபேஷன்ஸ் என்ற டைலரிங் யூனிட் நடத்தும் இவர் ஒரு இன்சூரன்ஸ் முகவராகவும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வெளிநாட்டுக்கெல்லாம் சென்று வந்திருக்கிறார். மகனது பள்ளியில் சந்தித்த தோழிகளோடு இணைந்து மாதவி மாஸ்டரிடம் குச்சுப்புடி கற்றுப் பல்வேறு அரங்கங்களில் நிகழ்ச்சி நடத்தி உள்ளார். ஆளுயர ஃபர் பொம்மைகள் எனப்படும் கைவினைப் பொருட்கள் செய்வதிலும் சமர்த்தர். இவை எல்லாவற்றையும் மிஞ்சும் விதமாகத் தனது சகோதரருடன் இணைந்து பழைய செட்டிநாட்டு வீடுகளைப் புதுப்பித்து வருகிறார்.
இவரது குடும்பம், தாயாரின் குடும்பம், கணவரின் குடும்பம் என அனைவருமே இவர் புரியும் அனைத்துத் தொழில்களிலும் மிகவும் ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்து வருகிறார்கள். இது அவருக்கு மேலும் ஊக்கத்தை அளிப்பதால் தனது எண்ணப்படித் தான் ஈடுபட நினைத்த துறைகளில் எல்லாம் வெற்றியே ஈட்டி வருகிறார்.
தையற்கலையில் ஆர்வம் வந்தது எப்படி என்று கேட்டபோது ”ஒரு தொழில் ஆரம்பிக்கப்படுகின்றது என்றால் ஒன்று ஒரு பெரிய இடைவெளி இருக்கும் இல்லையேல் இருக்கும் தீர்வுகள் நன்றாக இருக்காது அல்லது விலை உயர்ந்ததாக இருக்கும். நான் தொழில் ஆரம்பித்ததற்கு இரண்டாவதே காரணம். எனக்குச் சிறு வயதில் இருந்தே பேஷன் டிசைனிங்கில் ஆசை இருந்தாலும் என்னால் அதைப் பயில முடிய வில்லை. பிறகு என்னுடைய தேவைகளுக்காக நான் பல டிசைனர்களைச் சார்ந்திருந்தேன். எனக்கு அது மிகவும் திருப்திகரமாக இல்லை.
ஞாயிறு, 5 டிசம்பர், 2021
கல்வி அமைச்சரிடம் சாதனை விருது வாங்கிய பார்வதி சிவகுமார்
கல்வி அமைச்சரிடம் சாதனை விருது வாங்கிய பார்வதி சிவகுமார்
காரைக்குடியில் ஆவுடையான் செட்டியார் வீட்டில் பிறந்த பார்வதி தமிழ்த்துறை & தொல்லியல் துறை அமைச்சர் திருமிகு மாஃபா.க. பாண்டியராஜன் அவர்களிடம் தம் கல்விப்பணிக்காகச் சாதனைப் பெண் விருது வாங்கி இருக்கிறார். மழலையர்க்கான கல்விக் கூடத்தைத் தொடங்கிச் சிறப்பாக நடத்தி வருவதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. மதிப்புமிகு அவ்விருதுக்குப் பொருத்தமானவர் அவர். இவ்வாறு சிறப்புப் பெற்றவரிடம் அவரது பள்ளி குறித்துக் கேட்டு அறிந்ததை இங்கே கொடுத்துள்ளேன்.
இவரது கணவர் பெயர் சிவகுமார் இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மிரா கண்ணாத்தாள், ஐஸ்வர்யா. இவரது மாமியார் வீடு நாட்டரசன்கோட்டை.
திங்கள், 20 செப்டம்பர், 2021
சினேகா பொட்டீக்கும் அன்னபூரணி நாராயணனும்.
சினேகா பொட்டீக்கும் அன்னபூரணி நாராயணனும்
டிகிரி படித்துவிட்டு வீட்டில் இருக்கும், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இல்லத்தரசி அன்னபூரணி நாராயணன். இவர் பிறந்தது அழகான ஆத்தங்குடியில். வாக்கப்பட்டது பாசமான பள்ளத்தூரில். இவரது அன்புக் கணவர் திரு. நாராயணன், ஆசை மகள் சினேகவல்லி, அருமை மாப்பிள்ளை சுப்பையா, தங்கப் பேத்தி யாழினி, அறிவான மகன் அவினாஷ் குமரன் என்று கட்டுசெட்டான குடும்பம் இவருடையது.
ஞாயிறு, 27 ஜூன், 2021
இசையுரையரசி, இறைப் பாடகி நித்யா அருணாசலம் அவர்களுடன் ஒரு பேட்டி.
இசையுரையரசி, இறைப் பாடகி நித்யா அருணாசலம்அவர்களிடம் நமது செட்டிநாடு இதழுக்காக ஒரு பேட்டி.
1. உங்கள் குடும்பம் பற்றிக் கூறுங்கள்.
பிறந்தது பட்டமங்கலம் (சுப.இராம.நா. வீடு), புகுந்தது காரைக்குடி (சி.மெ. வீடு) பெற்றோர் - திரு.இராமசாமி செட்டியார், திருமதி.சிவகாமி ஆச்சி
மாமா, அத்தை - திரு.சிதம்பரம் செட்டியார் , திருமதி.செல்லம்மை ஆச்சி.
கணவர் திரு.அருணாசலம், மகன் - செல்வன்.சித்தார்த் சிதம்பரம்
ஞாயிறு, 28 மார்ச், 2021
நமது செட்டிநாட்டிலும் பண்ணாகத்திலும் ”பெண்ணின் மரபு”.
எனது பதினாலாவது நூலான பெண்ணின் மரபு இந்த ( 2021) வருடம் மார்ச் 8 ஆம் தேதி மதுரையில் உள்ள தானம் களஞ்சியம் அறக்கட்டளையால் வெளியிடப்பட்டது.
அந்த நூல் வெளியீடு பற்றிய சிறப்புச் செய்திகளைப் “பண்ணாகம்.காம்” இணையமும் நமது செட்டிநாடு 2021 மார்ச்/பங்குனி இதழும் வெளியிட்டு உள்ளன.


















