எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 28 ஆகஸ்ட், 2024

குறள் இனிது & சபாஷ் சாணக்யா சோம வீரப்பன்

 குறள் இனிது & சபாஷ் சாணக்யா சோம வீரப்பன்

குறள் என்றாலோ, சாணக்யன் என்றாலோ சமீபகாலமாக எனக்கு நினைவு வரும் பெயர் திரு சோம வீரப்பன் . குறள் இனிது என்றும் சபாஷ் சாணக்யா என்றும் அற்புதமான இரு நூல்களைப் படைத்திருக்கிறார். இவை இரண்டும் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் பெற்றுள்ளது சிறப்பு. பிள்ளையார்பட்டிப் பிச்சைக் குருக்கள் வெளிநாட்டில் இருக்கும் தன் மாணக்கர்களுக்குப் பரிசளிக்க சுமார் 150 நூல்கள் வாங்கியுள்ளார் என்பதே இவரது எழுத்தின் சிறப்பு. பணி ஓய்வுக்குப் பின்னான காலகட்டத்தை இவர் தன் இலக்கியப் பணி மற்றும் மாணவர்களை நெறிப்படுத்துவது போன்ற விஷயங்களில் செலவிடுவது வியப்புக்குரிய விஷயம்.

திரு சோமவீரப்பன் தேவகோட்டையில் பிறந்தவர்கள். சென்னை மயிலை விவேகானந்தர் கல்லூரியில் கணிதம் பயின்றவர்கள். பின்னர் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்கள். இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்பும் பயின்றவர்கள்.

1977 ல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதிகாரியாய்ச் சேர்ந்து, தனது நேர்மையினாலும் கடின உழைப்பினாலும் படிப்படியாய்ப் பதவி உயர்வுகள் பெற்று ,2012 ல் பொது மேலாளராக, அதாவது  General Manager ஆகப் பணி நிறைவு செய்தவர்கள்.

இளவயது முதலே தமிழிலும் திருக்குறளிலும் தணியாத ஆர்வம் கொண்ட இவர்கள், தமிழ் இந்து நாளிதழில் 125 வாரங்களாகத் தொடர்ந்து ' குறள் இனிது' எனும் கட்டுரைகள் எழுதி வந்தார்கள். பின்னர் 'சபாஷ் சாணக்யா' எனும் தொடரை  101 வாரங்கள்  எழுதி நிறைவு  செய்தார்கள். இந்நூலிலும் பல குறட்பாக்களை மேற்கோள் காட்டியுள்ளார்கள். இவை நூல்களாக வெளிவந்து உலகெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

கடந்த  5 ஆண்டுகளில் குறள் இனிது நூலின் 6 பதிப்புகளும், கடந்த 4 ஆண்டுகளில் சபாஷ் சாணக்யா நூலின் 4+3 பதிப்புகளும் வந்துள்ளன. இவை அமேசான்,பிளிப்கார்ட் உட்பட 15 இணைய தளங்களில் விற்பனையாகின்றன இந்நூல்கள் சிங்கப்பூர் தேசிய நூலகத்திலும், கொழும்பு மற்றும் யாழ்ப்பான போது நூலகங்களிலும் இடம் பெற்றுள்ளன. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தினர் தமதுபள்ளி மாணவர்களுக்கு ' குறள் இனிது  ' நூலின் சிறப்புப் பதிப்பின் 3500 பிரதிகள் வாங்கி அளித்துள்ளனர்

அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழ் நாடு அரசின் இலக்கியப் பட்டறை, சென்னைப் புத்தகக் கண்காட்சி,தென்காசி திருவள்ளுவர் கழகம் போன்ற இடங்களில் " நான் அறிந்த உரைகளிலே " எனும் தலைப்பில் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்கள். இந்த உரை நியூ ஜர்சி தமிழ்ச் சங்க ஆண்டு மலரில் கட்டுரையாகப் பதிவிடப் பட்டுப் பெரிதும் பாராட்டப் பட்டது. ஹூஸ்டன் நகரில் திருமதி மாலா அவர்கள் நடத்திய  *" தந்தையர் தினம்"*, *"குறள் ஓவியப் போட்டி",* *"குறள் கூடல்"* போன்ற விழாக்களில் சோம வீரப்பன் அவர்கள் இணைய வழியில் கலந்து கொண்டுள்ளார் 

அமெரிக்காவில் உள்ள *நியூஜெர்சி தமிழ்ச் சங்கம்* அண்மையில் ஒரு தமிழ்ப் புத்தகக் கண்காட்சி நடத்தியது. எழுத்தாளர் மாலன் அவர்களும் முனைவர் வாசு அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அதில் சுமார் 300 தமிழ் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. விற்பனை அமோகமாக இருந்தது.  சோம வீரப்பன் எழுதிய  " குறள் இனிது " , "சபாஷ் சாணக்கியா பாகம்-1 "  ,  "சபாஷ் சாணக்கியா பாகம்-2 " ஆகிய நூல்கள் இதில் இடம் பெற்று விற்றுத் தீர்ந்தன.

கொரியா தமிழ் நண்பர்களின் மின் இதழிலும் இவரது குறள் கட்டுரைகள் வெளியாகி உள்ளன. இவர்கள் ஹூஸ்டன் நகரில் உள்ள தமிழ் நாடு அறக்கட்டளைக்கும், லண்டன் நகரத்தார் சங்கத்திற்கும் குறள் பற்றிய வினாடி வினா நிகழ்ச்சி நடத்தி உள்ளார்கள். அண்ணா பல்கலைக்கழகம் சென்னை, திருச்சி தேசிய தொழில் நுட்பக் கல்லூரி ( NIT ) , சாஸ்த்ரா தஞ்சாவூர், GRT கல்லூரி திருத்தணி, ராமகிருஷ்ணா கல்லூரி திருச்சி போன்ற கல்லூரிகளில் மாணவர்களுக்கு " வள்ளுவர் காட்டும் மேலாண்மை " எனும் தலைப்பில் பாடங்கள் நடத்தி உள்ளார்.

இவர்கள் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த எழுத்தாளர் எனத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். கள்ளக்குறிச்சி கல்லைத் தமிழ்ச் சங்கத்தி னர் இவருக்குக் " குறள் மணம் " விருது வழங்கியுள்ளனர். தமிழ் நாடு அரசு இவர்களுக்கு 2020 ஆண்டிற்கான திருச்சி மாவட்டத்திற்கான ”தமிழ்ச் செம்மல் விருது”” வழங்கி கௌரவித்தது.

சோம வீரப்பனின் சபாஷ் சாணாக்கியா நூலின் ஆங்கில வடிவம் தற்போது *" Life lessons from Chanakya"* எனும் தலைப்பில் தற்பொழுது வெளிவந்துள்ளது. இந்நூலை KSL MEDIA LTD ( இந்து தமிழ் திசை) வெளியிட்டுள்ளது. விலை ரூ 200/-

தற்போது இவர் குறளைக் கல்லூரிகளில் மேலாண்மை ( BBA / MBA ) மற்றும் பொருளாதாரம் ( BA / MA  Economics ) வணிகப் ( B Com / M Com ) பாடத் திட்டங்களில் சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறார்

தொடர்பிற்கு...

சோம வீரப்பன்,
101, விக்னேஷ் அஞ்சிதா ,
வீரேஸ்வரம் அணுகு சாலை ,
திருவரங்கம்,
திருச்சி 620 006
+919444428000
somaiah.veerappan@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...