எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 5 ஆகஸ்ட், 2024

சோகி சிவா சொல்வழக்கு - 6.

9.

உத்தரவு - சம்மதம். அனுமதி, ஆசி

பொங்கச்சீர் - பொங்கப்பானை கொடுத்தல்.

மொறைச்சிட்டைப்படி - பெண் பார்த்ததிலிருந்து அனைத்தும் மாப்பிள்ளை பெண் வீடுகளில் முறைச்சிட்டையில் குறித்தபடியே கொடுத்து வாங்கிக் கொள்வார்கள்.

எத்தைத்தண்டி - எவ்வளவு பெரிசு.

ரெட்டை வீடு - இரண்டு வீடுகள் இணைந்தது.

ரெட்டை வளவு - இரண்டு வீடு இணைந்து இருந்தால் இரட்டை வளவு என்பார்கள்.

மருகிக் கொண்டு - மனதில் கவலையை மறைத்துக் கொண்டு.

ஆத்தாப் பொண்ணு -மகளை தாய், தகப்பன், ஐயா, ஆயா, அப்பத்தா போன்றோர், நெருங்கிய உறவினர்கள் அழைக்கும் சொல்.

வளவு - வீட்டினுள் முதல் கட்டில் இருக்கும் வளைவான பகுதி. இது இரண்டாம் மூன்றாம் கட்டுக்களிலும் இருக்கும் பத்தி போன்ற பகுதிதான்.

சொட்டவாளங்குட்டி - மிக அழகாக இருப்பவர்களை சொட்டவாளங்குட்டி என்பார்கள்.

தலைப்பாக் கட்டுதல் - உருமால் கட்டுதல். சீர் செய்யும் போது தலைப்பாகை கட்டிக் கொண்டு கொடுப்பார்கள்.

கடகாம் - கொட்டான் போன்று வடிவமைக்கப்பட்ட பாத்திரம், இது வெள்ளியிலும் சில்வரிலும் இருக்கும், கெட்டியான பிரம்புக் கொட்டான்களையும் கடகாம் என்று சொல்வதுண்டு. 

தடுக்கு - அனுவல்களின்போது தரையில் அமர விரிக்கப்படுவது. இதில் அமர்ந்துதான் இரு சம்பந்தியாரும் இசைகுடிமானம் எழுதிக் கொள்வார்கள்.

உங்கப் பிடிக்கல - உண்கப் பிடிக்கவில்லை, சாப்பிடப் பிடிக்கவில்லை.

குறிச்சி - ஈஸி சேர், ஸோஃபா போல் மரத்தில் செய்து பிரம்பில் முடையப்பட்டது. இது பட்டாலையில் இருக்கும். வீட்டின் மூத்த ஆண்கள் பெரியோர் சாய்ந்து கொள்வார்கள்.

அப்பச்சி - தந்தை, தகப்பனார், அப்பா.

 

10.

ரத்தினக் கம்பளங்கள் - பின்னல் வேலைப்பாடு உள்ள கனத்த வெல்வெட் போன்ற கம்பளம். 

செவஞ்சொத்து - சிவன் சொத்து.

கெடை - உடல்நலக் குறைபாட்டினால் வீழ்ந்து கிடப்பது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...