எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

முதலாம் சந்திப்பில்..

2010  மே 29, லாமிக்கிள் ஹோட்டலில் முதல் முகநூல் தோழிகள் & நண்பர்கள் சந்திப்பு. இதற்கு முன்பே கயலை மட்டும் நான் சந்திருக்கிறேன். அதாவது முதன் முதலில் எங்கள் வீடு தேடி வந்து என்னை சந்தித்த முகநூல் தங்கை அவர்தான். அது பற்றி தனியா ஒரு போஸ்ட் போடுவேன். 

கயல், செல்வா, செல்வாவின் மனைவி ஜெயந்தி, தம்பி அன்பு, தங்கை தமிழ்ச்செல்வி, அவரின் அழகு மகள் மது , இவர்களோடு பாகி என்று நாங்கள் பாசத்துடன் அழைக்கும் பா கிருஷ்ணன் சார், செந்து என்று நான் அழைக்கும் நண்பர் சொக்கலிங்கம் செந்தில்வேல்,  இவர்களோடு இயக்குநர், நடிகர் சேரன் அவர்களையும் சந்தித்தோம். 

நண்பர் கா வா அவர்களின் பிறந்தநாள் என நினைக்கிறேன். கயலும் தமிழும் தேனும் :) 

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

முத்தாயி.

முத்தாயி:-

பள்ளிக்கூடம் விட்டுப் பிள்ளைகளுடன் ஆடிக்கொண்டே வந்தாள் முத்தாயி. வீட்டின் எதிரேதான் பள்ளிக்கூடம். அவளுடன் அஞ்சாப்பு படித்த ரேவதியும் காமாட்சியும் தோளில் கைபோட்டு ஒஞ்சரிச்சுச் சாய்ஞ்சபடி வந்தார்கள்.

சனி, 29 ஆகஸ்ட், 2020

வெக்கை – ஒரு பார்வை

 வெக்கை – ஒரு பார்வை.இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

குவாலியர் சூரியனார் கோவிலில் சூரிய காந்தி.

குவாலியர் சூரியனார் கோவிலில் கோவிலே சூரியனின் ரதம் போல் அமைந்திருக்கும் அதிசயத்தோடு பல ஏக்கர் தூரத்துக்கு தோட்டமாய்க் காட்சி அளிக்கிறது. அங்கே யோகாப்யாசம், நடைப்பயிற்சி, தியானம் செய்பவர்களை அதிகாலையில் அதிகம் காணலாம். 

குவாலியர் நகரில் மொரார் என்னுமிடத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில். அதன் முன்புறம் இது. உள்ளே நீள் நடையில் சென்றால் பக்கவாட்டில் கோவில் இருக்கிறது. சுற்றிச் சென்று மேலேறினால் சூர்யப் ப்ரகாசத்தில் செந்நிறமாய் ஜொலிக்கிறது கோவில்.

எதிரே பசுமையாய் தோட்டம். லேசாய் வெம்மையோடு இருக்க மயில்களும் புறாக்களும் அகவுகின்றன, ஊடுகின்றன. 


செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

கலைக்கண் !

 கண்கள் என்று தலைப்பிட்டு நான் எடுத்த முக்கியப் படங்களைத் ( !) தொகுத்திருந்தேன். கொரோனா காலத்தில் அவற்றை எல்லாம் ப்லாகில் போட்டுவிட்டு லாப்டாப்பை கனம் நீக்கும் முயற்சியா இங்கே பகிர்ந்துள்ளேன். 100 ஜிபி சேர்ந்தா திரும்ப இந்த லேப்டாப்பும் கோவிந்தாவாகிவிடுமே :) 

அம்மா வீட்டில் இருந்த பானை ஒன்று என் கலைக்கண் பட்டு உங்கள்முன் காட்சிப் பொருளாகிறது. இதைப் பார்த்தவுடன் பூங்காவில் குடத்தில் நீர் ஊற்றும் பெண் சிலை ஞாபகம் வருகிறதல்லவா. 


சூரிய அஸ்தமனம். 

சனி, 22 ஆகஸ்ட், 2020

லூசன் ஸ்வான் லேக்கும் லயன் மான்யுமெண்டும்.

ஸ்விட்ஜர்லாந்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது லூசன் ஏரி. இது இங்கிருக்கும் ஏரிகளில் நான்காவது மிகப் பெரிய ஏரியாகும்.

ரோலக்ஸ் வாட்சுகள், கிச்சன் கட்லெரி செட், சாக்லேட்டுகளுக்குப் புகழ்பெற்றது ஸ்விட்ஜர்லாந்த். ரோஜர் ஃபெடரர், ஃபாண்டு சீஸ், ஜீன் ஜாக்கஸ் ரூஸோ என்னும் தத்துவஞானி, பௌதீக விஞ்ஞானி ஆல்பர்ட் ஈன்ஸ்டின், ஆல்ப்ஹார்ன் எனப்படும் நீளக் கொம்பு வாத்தியம், பனிச்சறுக்கு விளையாட்டு எல்லாமே இங்கே ஸ்பெஷல்.

அதோடு அன்னங்கள் மிதக்கும் ஏரி, சிங்க நினைவுச் சின்னம் , ஏரியை ஒட்டிய மிகப்பெரும் ஹாலில் இசை நிகழ்ச்சி ஆகியனவும் ரோட்டோர பொம்மலாட்டமும் இசை நிகழ்ச்சியும் கண்டு களித்தோம்.

இந்த நாட்டுக் கொடியில் இருக்கும் ரெட் கிராஸ்தான் ரெட் கிராஸ் அமைப்பினர் கொடியிலும் இடம்பெற்றுள்ளது.


யூரோப் டூரின் இரண்டாம் நாள் ரைன் நீர்வீழ்ச்சியைப் பார்த்துவிட்டு லூசன் நகரை நோக்கித் தொடங்கியது எங்கள் பயணம். எங்கள் கோச்சின் சாரதி மைக்கேல். கோச்சின் மேனேஜர் பெயர் சந்தோஷ் ராகவன். என்னதான் அவசரம் என்றாலும் 100 கிமீ வேகத்துக்குமேல் ஓட்டமாட்டார் எங்கள் கோச் கேப்டன். இது ஒரு நிரந்தர விதி :)

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

இனிய நந்தவனத்தில் என் ஸ்விஸ் பயணக் கட்டுரை.

 மகிழ்வுடன் பகிர்கிறேன். ஆகஸ்ட் 2020 ஸ்விட்சர்லாந்து சிறப்பிதழில் “ ஐநா சபையும், மலர்க்கடிகாரமும் உடைந்த நாற்காலியும் என்ற என்னுடைய பயணக் கட்டுரை இடம் பெற்றுள்ளது”. புதன், 19 ஆகஸ்ட், 2020

எங்கே செல்லும் இந்தப் பாதை -3

பழனி போன்ற மலைகளில் ஏறுவது ஆறுமுகவேலவனைத் தரிசிக்கத்தான் என்றாலும் வழிப்பயணம் நமக்கு பல ஆன்மீகப் பாடங்களைப் போதிக்கும்.

அதேபோல்தான் ஒவ்வொரு பயணமும். பஸ்/ட்ரெயின்/கார்/ஃப்ளைட்டில் நாம் சென்று அடையும் ஊரில் பார்க்கும் விதம் விதமான இடங்கள் மால்கள், கோவில்கள், தீம் பூங்காக்கள் போல நாம் பயணம் செய்யும் சாலையும் சிறப்பு வாய்ந்ததே. பயணியர், வியாபாரியர், நடைப்பயணம் செல்வோர், விவசாயிகள் வண்டி வாகனங்கள் பறவைகள் கால்நடைகள் எனச் சாலைகளிலும் உயிரோட்டமுள்ள வாழ்வு நிறைந்துள்ளது.

நகருள் அன்றாடப் பணியில் ஈடுபடும் மனிதரையும் கடைகளையும் ஊர் முடிந்ததும் வரும் ஆறு குளம் ஏரி போன்றவையும் மரம் செடி கொடிகளையும் வானத்தையும் பூமியையும் பாறைகளையும் மலைகளையும் பார்க்கும்போது மனம் உற்சாகமடைவதை உணரலாம்.

சூரியன் நம்மோடு ஓடி வருகிறதோ இல்லையோ சந்திரன் கட்டாயம் இரவுப்பயணத்தில் கூடவே ஓடிவரும்.  இன்னும் சில பயணப் பாதைகளைப் பார்க்கலாம் வாங்க.

இது சென்னை டி நகரில் போத்தீஸுக்குச் செல்லும் சாலை. மேலே மேம்பாலத்தில் போனால் பனகல் பார்க் போகலாம். அதிகாலைப் போதில் பிகேஆர் ஹோட்டலில் இருந்து இந்தப் பார்க்குக்கு நடைபழகச் சென்றோம். அப்போது எடுத்தது. பகல் என்றாலோ இரவென்றாலோ கூட்டத்தில் எள் போட்டால் எண்ணெய் ஆகிவிடும்.


இது ஹைதையில் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கொண்டாப்பூர் மாதாப்பூர் செல்லும் வழியில் உள்ள ஒரு மேம்பாலம். ஓவியப் பாலம் :)

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

டிட்லிஸ் - ஐஸ் ஃப்ளையர் & க்ளிஃப் வாக்.

பனி படர்ந்த சிகரங்களுக்கு நடுவில் பறக்க வேண்டுமா, பனிச்சிகரங்களுக்கிடையிலான உயர்பாலத்தில் நடக்க வேண்டுமா ஸ்விட்ஜர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடருக்குப் போகலாம் வாருங்கள். அதன் சிகரங்களில் ஒன்றான டிட்லிஸில் இவை மட்டுமல்ல பனிக்கட்டிகளைத் தூவி விளையாடலாம். க்ளேஸியரில் பனிச்சறுக்குச் செய்யலாம்.

யூரோப் டூரின் இரண்டாம் நாள் ப்ளாக் ஃபாரஸ்டிலிருந்து எங்கள்பர்க் ஹெச் ப்ளஸ் ஹோட்டலுக்குச் சென்று தங்கினோம். பசுமையும் பனியும் படர்ந்த எங்கள்பர்க் நகரின் அழகைப் பருக இருகண்களும் போதவில்லை.

ஓப்வால்டன் & பெர்ன் ஆகிய இரு மண்டலங்களுக்கு இடையில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள சிகரமே டிட்லிஸ். இது கடல்மட்டத்திலிருந்து 3, 238 மீட்டர் உயரத்தில் ( 10623 அடி ) அமைந்துள்ளது.


நன்கு நெடிதுயர்ந்த மலைச்சிகரங்கள் கொண்டது ஸ்விட்ஜர்லாந்து. யூரோப் டூரில் நாங்கள் மிகவும் ரசித்த இரண்டு இடங்கள் ஸ்விட்ஜர்லாந்தும் ஃப்ரான்ஸும்தான். வீடுகள் அனைத்தும் மலைப்பாங்கான இடங்களிலேயே அமைந்திருக்கின்றன. பலவீடுகள் உச்சிச் சிகரங்களிலும் மேகமூட்டங்களிலும் கூட காட்சி அளித்தன. அவ்வளவு தூரம் தளவாடங்களைக் கொண்டு சென்று  எப்படித்தான் சாலைகளும் இல்லங்களும் சமைத்தார்களோ? சமதளம் என்றால் அது ஓரளவு ஹைவேஸ் சாலை மட்டும்தான்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

குவாலியர் கோட்டை - சிற்பக் கதவும், சிற்பச் சாளரங்களும் சுரங்கங்களும்

கிட்டத்தட்டப் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இக்கோட்டை. இதன் ராக் கட் எனப்படும் மார்பிள் வெட்டு ஒட்டு சிற்ப வேலைப்பாடுகளால் புகழ்பெற்றது இக்கோட்டை. 

 ஜைன தீர்த்தங்கரர் சிலைகளும் இன்னொரு பக்கம் அலங்கரிக்கின்றன. குஜரி மஹால்,மன் மந்திர், கரன் மகால் ஆகியனவும் உண்டு.  14 ஆம் நூற்றாண்டில்  மன் மந்திர் மன்னர் மான்சிங் தோமரால் கட்டப்பட்டது. 

பதினைந்தாம் நூற்றாண்டு வரை தோமர் மன்னர்கள் வசம் இருந்த இக்கோட்டை அதன் பின் முகலாயர் வசம் கைமாறியது. பான் ,பானி பனீர் என இது பற்றி ஒரு கட்டுரை எழுதி அது புதிய பயணி இதழிலும் வெளியானது. 


உருவாஹ் கேட், ஆக்ரா கேட் எனப் பல சுரங்கப் பாதைகளும் ராஜ பாட்டைகளும் உள்ளன.

பொன்னுச்சாமியும் ஃபிட்னெஸ் சிலைகளும்

2741. பாண்டி தண்ணீர்த் தொட்டி, ஹோட்டல் பொன்னுச்சாமியிலிருந்து.

2742. பூம்புகாரில் கடல் கொண்டு அழித்ததால் முன்னோர் தெற்கே வலசை வந்து பாண்டியனிடம் நிலம் கேட்டு இளையாற்றங்குடி முதலாய 9 நகரத்தார் கோயில்கள் கட்டினர். அதன்படி நீர் அழிக்க இயலாவண்ணம் ஒன்பது படிகள் உயரம் கொண்ட வீட்டை அமைத்தனர். :)

புதன், 12 ஆகஸ்ட், 2020

பவர் ஸ்டேஷனும் பருத்திக் காடும்.

ரெய்ச்சூர் தெர்மல் பவர் ஸ்டேஷன். மந்திராலயம் செல்லும் வழியில் இந்த ரெய்ச்சூர் தெர்மல் பவர் ஸ்டேஷனைக் கடக்க நேர்ந்தது.ஊர் ஆரம்பிக்குமுன்னே ஊர் பூராவும் புகை. ! செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

பாரம்பர்ய மருத்துவ உணவுகள் . (தானம் அறக்கட்டளைக்காக.)

சென்றவாரம் வெள்ளிக்கிழமை மாலை (5 - 6 மணி) மதுரை தானம் அறக்கட்டளையின் களஞ்சியம் தொழிலகம் நடத்திய அறவழிபாட்டுக்கூட்டத்தில் பாரம்பர்ய மருத்துவ உணவுகள் குறித்து முக்கால் மணி நேரம் உரையாற்ற அழைப்பு வந்தது. 

அனைவரும் அறிந்த விஷயங்களை மறுநினைவூட்டிக் கொள்ளவும் இன்னும் நான் அறிந்த, சேகரித்த, பயன்பெற்ற விபரங்களைப் பகிரும் தளமாகவும் அது அமைந்தது. வாய்ப்புக்கு நன்றி தானம் அறக்கட்டளை, தனபாலன் சார், சாந்தி மேடம் & திருமலை சார்.  

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

பூப்பூக்கும் ஓசை..

பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை..

ஆனால் இந்தத் தடாகத்தில் தாமரைகள் எப்போது மலர்கின்றன. எப்போது கூம்புகின்றன என்பதே தெரியாது.. பூஜைக்கு மொக்காகவே பறித்து விரித்து வைப்பார்கள்.

தோராயமா ஒரு பதினைந்திலிருந்து இருபது மலர்களைப் பார்ப்போம் வாங்க.

1. தாமரை

சனி, 8 ஆகஸ்ட், 2020

நீரின்றி அமையாது உலகு - 2. தாமரைத் தடாகங்கள்.

நீரின்றி அமையாதுதான் உலகு. ஆனால் இதுபோல் கழிவுகளைக் கொட்டி ஆறு ஏரி ஏன் கடலைக் கூட மாசுபடுத்துகிறோமே இதெல்லாம் சரிதானா. 

ஹைதையில் உள்ள ஹுசைன் சாகர் ஏரியின் ஒரு பகுதிதான் இது. ப்ளாஸ்டிக் மிதக்கும் கழிவு நீராகி உள்ளது. நிறைய இடங்களில் சாக்கடையையும் கூட நதிகளில் ஏரிகளில் இணைத்துவிடுகிறார்கள். என்ன கொடுமை இது 

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

ஐநா சபையும் மலர்க் கடிகாரமும் உடைந்த நாற்காலியும்.

அதென்னவோ தெரியல இந்த ஸ்டார் டூர்ஸ் பாதி யூரோப்பியன் நாடுகளை அர்த்தராத்திரியிலேயே சுத்திக் காட்டுறாங்க. பாரிஸ் பை நைட், ரோம் பை நைட் இதெல்லாம் இரவுல சுத்திப் பார்க்கத் தனிக் காசு. ஆனா ஐக்கிய நாடுகள் சபை இருக்கும் ஜெனிவாவுக்கு நாங்க இரவுலதான் போய்ச் சேர்ந்தோம். பகலில் டூரிஸ்ட் பஸ் எல்லாம் அந்தப் பக்கம் உள்ள ரோட்டுல கூடப் போக முடியாது என நினைக்கிறேன்.


ஸ்விட்ஜர்லாந்தில் ஜூரிச்சுக்கு அடுத்தபடியாக அதிக பிரபல்யமான நகரம் இது. ரோலக்ஸ் கடிகாரங்கள் ஸ்விஸ் நாட்டின் சிறந்த தயாரிப்புகள். உலக அளவில் இவற்றுக்கு மார்க்கெட் இருக்கிறது.  நாங்கள் இறங்கிய இடத்திலேயே ரோலக்ஸ் கடிகாரத்துக்கான கட்டிடம் ஒன்றைப் பார்த்தோம்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

எங்கே செல்லும் இந்தப் பாதை - 2

பயணங்கள் நம்மைப் புதுப்பிக்கின்றன. பயணங்கள் முடிவதில்லை. எனவே வாங்க இன்னும் சில பயணங்களையும் பாதைகளையும், மேலும் கட்டிடக்கலையின் அதிசயமான  இருபக்கமும் ஒரே ஒரு தூணில் கட்டி நிறுத்திய பாலத்தையும் பார்ப்போம், ரசிப்போம்.

இது திருச்சி ரயில்வே ஸ்டேஷன். ஜங்ஷன் என்பதால் நிறைய தண்டவாளப் பாதைகள். இந்த மேம்பாலமும் ட்ரெயின் செல்லும் வரும் வழித்தடமும் அதன் மேல் பொன் நிறம் பூசும் மாலை வெய்யிலும் என்னை மயக்க இந்தப் புகைப்படம் எடுத்தேன்.
கோவை டாடாபாத்தின் ஆறுமுக்கு. ஆறு பிரிவாகப் பிரியும் பாதைகள் இங்கே வித்யாசம். அதில் ஒரு முக்கில் இந்த அம்மன் அருளாட்சி புரிகிறாள். கொள்ளை அழகு இல்ல :)
Related Posts Plugin for WordPress, Blogger...