எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

காரைக்குடிச் சொல்வழக்கு. பொன்னுளியும் விராகனும்.


1321. இன்னம்புட்டு - இன்னும் கொஞ்சம். இன்னம் இம்புட்டு. இன்னம் இவ்வளவு. 

1322. கிண்டிக் கிழங்கெடுத்துப்புடுவாக - ஒருவர் ஒரு விஷயத்தைப் பற்றித் துருவித் துருவிக் கேள்வி கேட்டால் அதை கிண்டிக் கிழங்கெடுத்துப்புடுவாக என்று சொல்வது வழக்கம். கிழங்கை அகழ்ந்தெடுப்பதுபோல் விஷயத்தைத் (தோண்டி வெளியே எடுத்து விடுவார்கள் ) வாங்கி விடுவார்கள்.  

1323. பொறமாட்டாதவள் - பெண்கள் தான் ஆசைப்பட்ட ஒரு விஷயம் நடக்காவிட்டால் நான் என்ன பொறமாட்டாதவளா என்று ஆதங்கத்திலோ ஆத்திரத்திலோ கேட்பதுண்டு. அல்லது ஒரு விஷயத்துக்கு அல்லது தகுதிக்கு ஒருவர் லாயக்கில்லாவிட்டாலும் அவ பொறமாட்டாதவ என்று சொல்வதுண்டு. எதற்கும் அவசரப் படுபவர்களையும், பொறுக்காதவர்களையும் கூட சமயத்தில் பொறமாட்டாதவள் என்று குறிப்பிடுவதுண்டு. 

1324. அரிச்செடுத்துப்புடுவா - தான் விரும்பிய விஷயம் நடக்க வேண்டி தொணதொணத்தோ, தொடர்ந்து சொல்லியோ, அனத்தியோ அதை செயல்படுத்திக்கொள்பவர்களை அரிச்செடுத்துப்புடுவா என்று சொல்வதுண்டு. தான் நினைத்தது நடக்க வேண்டி ஆசிட் ஊற்றினால் அரித்தெடுப்பது போல் தொடர்ந்து கோபித்தோ கொந்தளித்தோ பேசுதல். 

சனி, 28 செப்டம்பர், 2019

சூலாட்டுக்குட்டி.

சூலாட்டுக்குட்டி.

ல்லிகைப்பூ வாசம் மூக்கைத் துளைத்தது. அதையும் மீறி அடித்துக்கொண்டிருந்தது மூத்திர நாற்றம். மப்ளரைச் சுற்றியபடி கதவைத் திறந்து பார்த்தவர் வாக்கிங் போகும் எண்ணத்தைக் கைவிட்டு கைப்பிடியில் மாட்டியிருந்த மல்லிகைப்பூப் பையை எடுத்து அவசரமாகத் தாழ் போட்டார்.

’திரும்பவும் ஒண்ணுக்குப் போயிட்டாளா’. யோசனையாய் படுக்கை அறைக்கு வந்தவர் போர்த்திப் படுத்திருந்த மனைவியின் முகத்தில் அரை டம்ளர் தண்ணீரை ஊற்றினார். மப்ளரைக் கழட்டி வீசினார்.

துபாய் டால்ஃபின் ஷோ -1. DUBAI DOLPHIN SHOW.

துபாய் டால்ஃபின் ஷோ -1. DUBAI DOLPHIN SHOW. 



வெள்ளி, 27 செப்டம்பர், 2019

ஜெர்மனியின் செந்தேன் மலர்கள். மை க்ளிக்ஸ், FLOWERS AT GERMANY. MY CLICKS.

ஜெர்மனி மக்களுக்குப் பூக்களின் மேல் வெகு காதல். வீட்டின் முன்புறம் இருக்கும் சிறு பகுதிகளிலும் சரி, ஃப்ளாட் வீடுகளின் பால்கனிகளிலும் சரி கொத்துக் கொத்தாக அடர் நிறத்தில் பூக்கள் வளர்த்து மகிழ்வார்கள்.

வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே இங்கு வேனிலும் பூக்கும் காலமும். மற்ற எட்டு மாதங்களில் குளிரும் பனியும் மூடிக்கிடக்கும். இருந்தும் ஒவ்வொரு வீட்டுக்காரர்களும் தங்கள் தோட்டத்தை வெகு சிரத்தையாக பூச்செடிகள் வைத்துப் பராமரிக்கிறார்கள். ஜன்னல்களில் பூந்தொட்டிகள் வைத்து அலங்கரித்து மகிழ்கிறார்கள். இந்தச் செடிகள் மரங்களிலும் ஒரு விநோதம். கொடும் பனியில் இலைகள் உதிர்ந்து குச்சியாக  (ஹைபர்நேட்)  ஆனாலும் மிகுந்த வீர்யத்துடன் அடுத்த வேனிலில் உயிர் பெறுகின்றன !.

சிறு சிறு ப்ரைவேட் தோட்ட ஏரியாக்களில் பகுதி பகுதியாக சிலர் வாங்கி தேவையான காய் கனி பூக்களை விளைவித்துக் கொள்கிறார்கள். மெட்ரோ அல்லது ட்ராமில் டூயிஸ்பர்க்கில் இருந்து டுசில்டார்ஃப் செல்லும்போது காணக் கிடைக்கும் கண்கொள்ளாக் காட்சிகள் நிறைய.

எங்கள் மகன் வசிக்கும் ஃபிஷர் ஸ்ட்ராஸேயில் கீழே பூராவும் கடைகள் என்பதால் அங்கே நோ பார்க்கிங். சைக்கிளிலில் செல்லலாம் அல்லது நடந்து செல்லலாம். ஒவ்வொரு கடையின் முன்பும் சதுரம் அல்லது வட்ட அளவிலான பகுதிகள் ஒதுக்கப்பட்டு அவற்றில் பல்வேறு வகையான பூச்செடிகள் வளர்க்கப்படுகின்றன. அது காணவே கண்கொள்ளாக் காட்சியாக  இருக்கும்.

பூக்களை வளர்ப்பதில் மட்டுமல்ல . அவற்றைப் பரிசளிக்கவும் விரும்புவார்கள். ஜெர்மானியர்களின் கலாச்சாரத்தில் பூக்கள் முக்கியத்துவம் வகிக்கின்றன. தென்மேற்கு ஜெர்மனியின் மைனாவ் ஐலாண்ட் என்ற தீவு பூக்களின் தீவுன்னு அழைக்கப்படுது. ஈஸ்டருக்கு முன்னான வாரங்களில் ஸ்ப்ரிங் ஃப்ளவர்ஸ் எனப்படும் பூக்கள் ஈஸ்டர் மரத்தின் பக்கவாட்டுகளில் வைக்கப்படுகிறது.

சூரியகாந்திப் பூவுக்கும் ரோஸுக்கும் இங்கே முக்கியத்துவம் உண்டு. கலர் செவ்வந்திகள், துலிப்ஸ், லில்லிப்பூக்கள், ஆகியவற்றோடு கார்னேஷன் எனப்படும் வெள்ளை, சிகப்பு, பிங்க் நிறப் பூக்களிலாலான பூங்கொத்து ரொம்பவே விசேஷம்.

பூங்கொத்தாகவும் பூந்தொட்டியாகவும் இங்கே ரெவே, ஐடில் ( REWE , IDIL ) ஆகிய கடைகளில் கிடைக்கும். எவ்வளவு பூக்கள் இருந்தாலும் கார்ன்ஃப்ளவர் எனப்படும் வயலட்/பர்ப்பிள் நிறப் பூதான் இங்கே தேசிய மலர் !.



நண்பரின் இல்லத் தோட்டத்து மலர்.

புதன், 25 செப்டம்பர், 2019

சுப் சிப் ஆனந்தம்.

சுப் சிப் ஆனந்தம்.

அந்த வேகன் ஆர் வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. வளைவுகளில் அபாரமாகத் திருப்பிய கவிதாவுக்கு இருபத்திமூன்று வயது.

“ஃபாஸ்டா கத்துக்கிட்டே. குட் ட்யூட் ! “ வியந்த ப்ரசன்னாவுக்கு வயது முப்பது. இருவரும் லீடிங் ஜர்னலில் ஃப்ரீலான்சிங் ஜர்னலிஸ்ட்ஸ். ஆன்மீகம் அரசியல் என்று எல்லா அக்கப்போரையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்து ரவுண்டு கட்டி கட்டம் போட்டு நியூஸ் அனுப்புவார்கள்.

”ஆட்டோ கியர் . ஜஸ்ட் லைக் டூவீலர்ஸ். என்ன லெஃப்ட் அண்ட் ரைட் சைஸ் கொஞ்சம் பெரிசு. ரோட் கான்ஷியஸ் கொஞ்சம் இருந்தா போதும். ஓட்டிறலாம்.”

“ட்ரை பண்றியா “ கேட்டுக்கொண்டே அந்தப் பத்ரிக்கை அலுவலகத்துக்குள் நுழைந்து சர்ரென்று வளைத்துக் காரை நிறுத்தினாள் கவி என்ற கவிதா.

”புது அசைன்மெண்ட்.. கொஞ்சம் கேபினுக்கு வா.": .. மேலதிகாரி விட்டலிடமிருந்து ஒரு மெசேஜ் ஒளிர்ந்தது.

”எனக்கும் சேர்த்து ஒரு சாண்ட்விச் காஃபி ஆர்டர் பண்ணு . ஃபைவ் மினிட்ஸ்ல வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்”. என்றவள் மூடத்துவங்கிய லிஃப்டில் தாவினாள்.

”அது என்ன காலா ரெக்கையா. இப்பிடிப் பறக்குது “ நினைத்துக்கொண்டே ப்ரசன்னா கேண்டீனுக்குத் திரும்பினான்.

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

கவனமின்மையால் துன்புற்ற சகுந்தலை. தினமலர் சிறுவர்மலர். 34,

கவனமின்மையால் துன்புற்ற சகுந்தலை.
வீட்டிற்குப் பெரியவர்கள் வரும்போது அவர்களைப் பார்த்துச் சிரித்தாலே வாங்க என்று வரவேற்றுவிட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள் இன்றைய சில இளையவர்கள். சிலரோ தங்கள் அறைக்குள் சென்று விடுகிறார்கள். சிலரோ கைபேசியில் விளையாடிக் கொண்டு யாரையும் சட்டை செய்வதில்லை. இப்படி கவனக் குறைவாக வீட்டிற்கு வந்த ஒரு முனிவரை வரவேற்காததால் சகுந்தலை என்ற பெண்ணுக்கு சாபம் கிடைத்தது. அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
விசுவாமித்திர முனிவருக்கும் மேனகை என்ற அப்சரஸுக்கும் பிறந்தவள்தான் இந்த சகுந்தலை. தந்தையோ முனிவர் அதனால் அவர் சகுந்தலை பிறந்ததும் தன் தவம் எல்லாம் அழித்துவிட்டதாகக் கருதித் தவம் செய்யச் சென்றுவிட்டார். தாயோ தேவலோகத்தின் அப்சரஸ். நாட்டிய தாரகை. அதனால் அவளும் குழந்தையை ஒரு வனத்தில் விட்டுச் செல்கிறாள்.
அக்குழந்தையின் குரல் கேட்டுப் பறவைகள் சூழ்ந்து கானம் பாடுகின்றன. குழந்தைக்குரலும் பறவைக்குரலும் கேட்ட கண்வ மகரிஷி இவளை எடுத்து வளர்க்கிறார். பறவைகளால் பாதுகாக்கப்பட்ட குழந்தை என்ற அர்த்தத்தில் ”சகுந்தலை” என்று பெயரிட்டு வளர்க்கிறார்.

திங்கள், 23 செப்டம்பர், 2019

பவன்குமாரனின் பலம் தெரிவித்த ஜாம்பவான். தினமலர் சிறுவர்மலர். 33.

பவன்குமாரனின் பலம் தெரிவித்த ஜாம்பவான்
எந்தச் செயலைச் செய்வதற்கும், “உன்னால் முடியும் தம்பி” என்று ஒருவர் சொன்னால் அதை நம்ப வேண்டும் அப்படித் தன் மறந்து போன திறமையை ஒருவர் ஞாபகப்படுத்தியவுடன் தன்னால் முடியும் என்று விண்ணிலே பறந்த ஒருவரைப் பற்றிப் பார்க்கப் போகிறோம் குழந்தைகளே.
கேசரி அஞ்சனை ஆகியோருக்கு வாயுபுத்திரரின் அருளால் பிறந்தவர் ஹனுமன். இவர் சிறு வயதில் மிகுந்த சுட்டிக் குழந்தையாய் இருந்தார். ஒருமுறை தாய் ஏதோ வேலையாக இருக்கும்போது இவருக்குப் பசி எடுத்துவிட வானில் தோன்றிய சூரியனைப் சிவப்புப்பழம் என நினைத்துத் தாவிப் பிடிக்கப் போனார். அதைக் கண்டு பதறிப்போன  இந்திரன் சின்னக் குழந்தையான அனுமனைத் தாடையில் அடிக்க அவர் மயக்கமுற்று விழுந்தார்.
இதனால் வாயு பகவான் கோபப்பட்டுத் தன் இயக்கத்தை நிறுத்த அனைத்து உயிர்களும் காற்றில்லாமல் தவித்தன. உடனே சூரியன் முதலான தேவர்கள் அனுமனை மயக்கம் தெளிவித்துப் பல்வேறு வரங்கள் வழங்கினார்கள். அணிமா மஹிமா லகிமா ஆகிய சித்திகளும், காற்றில் பறக்கும் சக்தியும் பெற்றார் அனுமன்.

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

மாஃபியாக்கள் நிறைந்த ஊரும் மனித நேயப் பண்புகளும்.

2341. ஜெர்மனி வாழ் ஈழத்தமிழர்களிடம் நான் வியந்த விஷயம் அவர்களின் தன்னம்பிக்கை, மன உறுதி விடா முயற்சி வித்ஸ்டாண்டிங். தொடர்ந்த உழைப்பு, தமிழ் சேவை.

2342.
வீடுகள் அடர்ந்த சாலைகள் - சிறு வீதிகள் இப்படி அமைக்கப்படுகின்றன.
முதியோர்கள், குழந்தைகள் குடியிருக்கும் பகுதி என்பதால் சத்தம் குறைவாக இருக்க வேண்டும். ஹார்னே உபயோகிக்கக் கூடாது.

வண்டி வாகனங்கள் இதில் செல்லும்போது மிக மிக மெதுவாகத்தான் செல்லமுடியும், இல்லாவிட்டால் லடக் லடக் என்று சீக்கிரம் டயர் தேய்ந்துவிடும். செங்கல் சைஸில் சுட்ட கற்களை அடுக்கி அமைக்கப் பட்டுள்ளது.

மழைநீர் சேகரமாகும். நீர் நிற்காது வழிந்தும் ஓடிவிடும். நிலம் கொஞ்சம் ஏற்ற இறக்கமாக இருப்பதால் கான்வாஸ் ஷூ, லெதர் ஷூ போட்டுச் செல்பவர்களுக்கும் வண்டி ஓட்டிகளுக்கும் கூட வழுக்காது !.
அழகுக்கு அழகும் கூட..

குடியிருப்புப் பகுதிகளில் இப்படிச் சாலைகள் அமைத்தது முன்னெச்சரிக்கை என்பதா கருணை என்பதா காருண்யம் என்பதா. :) <3 p="">
#இத்தாலி.. மாஃபியாக்கள் நிறைந்த ஊர் மட்டுமல்ல மனிதமும் நிறைந்த ஊர்தான்.

சிறந்ததை அளித்த அதிபத்தர். தினமலர் சிறுவர்மலர் - 32.

சிறந்ததை அளித்த அதிபத்தர்.
மனிதர்கள் பொதுவா தனக்கு எந்த விதத்திலும் தேவைப்படாது என்று கருதும் பொருளையே பிறருக்கு எந்தத் தயக்கமுமில்லாமக் கொடுப்பாங்க. எவ்வளவு இருந்தாலும் தனக்கு தனக்கு என முடிந்துவைத்துக் கொள்வார்கள். அப்படி இல்லாமல் மீன் பிடிக்கும் தொழிலைச் செய்து வந்த ஒருவர் மிகச் சிறந்ததையே கொடுக்கும் வழக்கமுள்ளவராக இருந்தார். அப்படி அவர் கொடுத்த மிகச் சிறந்த பொருள் எது, அதை யாருக்குக் கொடுத்தார்னு பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
சோழநாட்டில் நாகப்பட்டினம் என்ற ஒரு ஊர் உள்ளது. இந்த ஊர் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இதன் பக்கமுள்ள நுழைப்பாடி என்ற இடத்தில் பரதவர் பலர் வசித்து வந்தார்கள். அவர்களின் தலைவரான அதிபத்தர் என்பாரும் அங்கேயே வசித்து வந்தார். அவர் சிவனின் மேல் பக்தி கொண்டவர்.
தினந்தோறும் மீன் பிடிக்கச் செல்கையில் முதலில் பிடிக்கும் மீனை சிவனுக்கு என்று சொல்லிக் கடலிலேயே விட்டுவிடுவார். இப்படி ஒரு நாளில் எத்தனை மீன் கிடைத்தாலும் சரி அல்லது ஒரு மீன் மட்டுமே கிடைத்தாலும் சரி அந்த முதல் மீனை சிவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு மீதி மீன்களை விற்றுத் தன் அன்றாட செலவுகளைச் செய்து வாழ்ந்து வந்தார்.

புதன், 18 செப்டம்பர், 2019

ரியாத் தமிழ்ச்சங்கப் போட்டியில் சூலாட்டுக்குட்டிக்கு ஊக்கப்பரிசு.

மகிழ்வுடன் பகிர்கிறேன். மூன்றாவது முறையாக ரியாத் தமிழ்ச் சங்கத்தால் தொடர்ந்து என் கவிதைகளும் சிறுகதையும் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த வருடம் ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் எனது கதையான “சூலாட்டுக்குட்டி “ ஊக்கப் பரிசு பெற்றிருக்கிறது.

திங்கள், 16 செப்டம்பர், 2019

வாசகசாலை கவிதை இரவு - 200.



முகநூலில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பக்கம் வாசகசாலை. தினமும் கவிதை இரவில் கவிதை வாசிப்பு , மாதத்தில் ஒருநாள் நூல் விமர்சனம் . சிறுகதை, நாவல் விமர்சனம் ஆகியவற்றை முன்னெடுத்து அனைவரின் வாசிப்புத் திறனையும் மேம்படுத்துகிறது. இதுவரை 200 க்கும் மேற்பட்டவர்களின் கவிதைகளைத் தினந்தோறும் வாசித்துப் பல்வேறு கவிஞர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அதில் என் கவிதைகளும் 28 ஆம் நாளில்  இடம்பெற்றிருப்பது மகிழ்வு. 

தங்கள் அன்றாடக் கடமைகளோடு ஒவ்வொரு கவிஞரின் கவிதைகளையும் தேர்ந்தெடுத்து அவற்றை முகநூலில் சரியாக இரவு பத்துமணிக்கு ரசனையான கருத்துக்களுடன்/விளக்கங்களுடன் இனிமையான குரலில் வாசகசாலைக் குழுவினர் பதிவு செய்து வருகிறார்கள். டெக்னிகல் டிஃபெக்ட் ஆன சில சமயங்கள் தவிர மற்ற நாட்களில் ஒளிபரப்பாகியே வருகிறது. 

சனி, 14 செப்டம்பர், 2019

ஸோலிங்கனில் ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர் கௌசியுடன் ஒரு சந்திப்பு.

பிரபல வலைப்பதிவர், எழுத்தாளர், மூன்று நூல்களின் ஆசிரியை, ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர், யேர்மனி தமிழ்க் கல்விச்சேவை இருபத்தியைந்தாம் ஆண்டு மலர் உறுப்பினர், வெற்றிமணி பத்ரிக்கையின் கட்டுரையாளர், அன்புத்தோழி கௌரி சிவபாலன் ( கௌசி ) அவர்களை சந்திக்கும் பாக்யம் கிட்டியது. :) இப்போது அமேஸானிலும் நூல்கள் வெளியிட்டு வருகிறார்.

முகநூலில் உள்டப்பியில் வந்திருக்கிறேன் என்று தெரிவித்த உடனே தனது ஸோலிங்கன் இல்லத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். என் சின்ன மகன் ஜெர்மனியில் இருக்கிறான். அவனுடன் அவர்கள் இல்லத்துக்குச் சென்றபோது ரயில்வே ஸ்டேஷனுக்கே அவரது கணவர் சிவபாலன் அவர்கள் கார் எடுத்துக்கொண்டு அழைத்துச் செல்ல வந்துவிட்டார்.

இதுதான் கௌசியின் நூலகம். இதன் எதிரில்தான் அவரது மடிக்கணனியும் இருக்கிறது.  அவரது மூன்று நூல்களை எனக்குப் பரிசாக அளித்தார்.  முக்கோண முக்குளிப்புகள், வெள்ளை உடைக்குள் கரையும் பருவம், என்னையே நானறியேன்.

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

ஏலையாவில் தமிழீழ தேசியத் தலைவரின் பேட்டி !!!

1994 இல் இருந்து 2000 ஆண்டுவரை ஏலையா என்ற சிற்றிதழ் வெளியாகி இருக்கிறது. இதனை வெளியிட்டவர் திருமிகு கந்தையா முருகதாசன் அவர்கள்.



புதன், 11 செப்டம்பர், 2019

யேர்மன் தமிழ்க் கல்விச் சேவை :-


யேர்மன் தமிழ்க் கல்விச் சேவை :-

ஜெர்மன் கல்விச் சேவையின் பதினைந்தாம் & இருபத்தியைந்தாம் ஆண்டு மலர்கள் வாசிக்கப் பெற்றேன். படிக்கப் படிக்கப் பேரானந்தம் பெருகியது. கிட்டத்தட்ட 31 ஆண்டுகளாக ஜெர்மனியில் தமிழ்க்கல்விச் சேவை சாதித்து வருகிறார்கள் யேர்மன் தமிழ்க் கல்விச் சேவை அமைப்பினர். 

செவ்வாய், 10 செப்டம்பர், 2019

ஏலையா பத்ரிக்கையின் ஆசிரியர் திருமிகு கந்தையா முருகதாசன் அவர்கள்.

ஏலையா என்றொரு பத்ரிக்கையின் ஆசிரியராய் இருந்து நடத்தி வந்தவர் மட்டுமல்ல. இன்றளவும் இராவணன் என்ற புனைபெயரிலும் தன் அசல் பெயரிலும் வெற்றிமணி, தமிழ் டைம்ஸ், அகரம் ஆகிய இதழ்களில் பல்வேறு கட்டுரைகள் எழுதி வருபவர் திருமிகு கந்தையா முருகதாசன் அவர்கள். பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் சங்கத் தலைவர்,  ஐடிஎன் தொலைக்காட்சியின் ப்ரைம் நிகழ்ச்சிகள் நடத்துபவர் என்று பல்வேறு முகங்கள் கொண்டவர் இவர். இவரை ஜெர்மனி சென்றபின் சந்தித்தேன். புதியவர்கள் என்று கருதாமல் தம் குடும்பத்தில் ஒருவர் போல இவர்கள் குடும்பத்தினர் எம்மை நடத்தினார்கள். மிகுந்த மகிழ்வாய் இருந்தது.

2014 இல் முதன்முதலில் நண்பரானதும் உலக பெண்கள் தினத்துக்காக திருமிகு கந்தையா முருகதாசன் அவர்கள் எம்மிடம் கேட்டதும் நான் உடனே இன்பாக்ஸில் இதை எழுதி அனுப்பினேன். ((அந்த வருடம் நிகழ்ந்த ஹம் காமாட்சி அம்மன் திருவிழாவில் எங்கள் சின்ன மகன் சபாரெத்தினம் திருமிகு முருகதாசன் அவர்களையும் திருமிகு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி அவர்களையும் சந்தித்து அளவளாவி மகிழ்ந்தான். ))

ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தினருடன் ஒரு சந்திப்பு.

ஜெர்மன் தமிழ் கல்விச் சேவை தலைவர் திரு அம்பலவன் புவனேந்திரன் அவர்களும், உபதலைவர் திரு சிறி ஜீவகன் அவர்களும் எங்கள் டூயிஸ்பர்க் இல்லத்துக்கு வருகை தந்து வாழ்த்தினார்கள். இந்தச் சந்திப்புக்கு வழிகோலிய அன்புத்தோழி ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் , மூன்று நூல்களின் ஆசிரியர், பிரபல வலைப்பதிவர் திருமதி கௌரி சிவபாலன்.  அவருக்கு முதலில் என் நன்றிகள்.



நிம்மிசிவாவின் வானில்..

2012 இல் அகநாழிகை பதிப்பகம் வெளியிட்ட 24 நூல்களில் எனது நூலும் நிம்மி சிவாவின் நூலும் இடம்பெற்றிருந்தன. அவரது ” என் வானிலே “ என்ற கவிதை நூல் பற்றி நான் எனது வலைத்தளத்திலும் விமர்சனம் எழுதி உள்ளேன். மிக மென்மையான மனதுக்கும் உணர்வுக்கும் சொந்தக்காரர் , அழகிய கவி உள்ளம் படைத்தவர் நிம்மி சிவா.

பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர் சங்கம் 2016 ஆம் ஆண்டு நடத்திய திருக்குறள் சிறுகதைப் போட்டியில் என்னுடைய சூலம் என்ற கதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது. அந்தப் போட்டியின் முடிவை ஜெர்மனியில் இருந்து எனக்கு உடனடியாக முகநூலில் இன்பாக்ஸில் அறிவித்தவர் என் அன்புத்தோழி திருமதி நிம்மி சிவா. அக்கணம் முதல் அவரோடு மிக நெருக்கமாகி விட்டேன். நிம்மிசிவாவின் வானில் நானும் உலாப் போய் வந்தேன். அவற்றைப் பகிர்ந்திருக்கிறேன்.



ஜெர்மனியில் பண்ணாகமும் நமது இலக்கும்..

ஜெர்மனிக்குச் சென்றதும் நான் தமிழர் என்று சந்தித்தது என்னுடைய ஈழத்தமிழ்ச் சொந்தங்களையே. இவர்கள் எல்லாம் முகநூல் நண்பர்கள் என்றபோதும் என்னைத் தங்கள் உறவினராக உணரச் செய்தார்கள். சென்றதில் இருந்து திரும்பி வரும் வரைக்கும் விருந்துகளாலும் பரிசுப் பொருட்களாலும் தங்கள் அன்பாலும் மூழ்கடித்தார்கள்.

ஜெர்மனியில் திருமதி நிம்மி சிவா அவர்கள் , திருமிகு முருகையா கந்ததாசன் சார் அவர்கள், திருமிகு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள், ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் திருமதி கௌரி சிவபாலன் அவர்கள் , ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திருமிகு அம்பலவன் புவனேந்திரன் அவர்கள், ஜெர்மனி தமிழ்க் கல்விச் சேவையின் தலைவர் திருமிகு சிறிஜீவகன் அவர்கள் ஆகியோரை சந்திக்கும் பொன்னான வாய்ப்புக் கிட்டியது. அவர்களின் அன்பும் கவனிப்பும் உபசரிப்பும் அவர்கள் தமிழ்நாட்டு எழுத்தாளராக எனக்கு அளித்த கௌரவமும்  ஈழத்தமிழ் நூல்களும் மறக்க இயலாதவை.

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

ஐரோப்பியத் தமிழ் சஞ்சிகைகள். - ஐபிசி தமிழ், அகரம், தமிழ் டைம்ஸ், வெற்றிமணி.

நான்கு ஐரோப்பிய தமிழ் சஞ்சிகைகள் வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. வெற்றிமணியின் ஆசிரியர் திருமிகு தவா அவர்கள் வெற்றிமணி, அகரம் ஆகியவற்றையும் பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் சங்கத் தலைவர் திருமிகு கந்தையா முருகதாசன் அவர்கள்  வெற்றிமணி, தமிழ் டைம்ஸ், அகரம் ஆகிய சஞ்சிகைகளையும் அளித்தார்கள்.





ஜெர்மனி & யூரோப் பயண உணவுகள். மை க்ளிக்ஸ். GERMANY & EUROPE .CUISINES. MY CLICKS.

இவற்றைப் பற்றிய விவரணைகளை முன்பே எழுதி இருக்கிறேன். 

இது எதிஹாட் ஃப்ளைட்டில் ( பெங்களூர் - அபுதாபி )  கொடுத்த உணவு. ப்ரெட், லட்டு, ஆரஞ்ச் ஜூஸ், பனீர் புலவ். 




செவ்வாய், 3 செப்டம்பர், 2019

ஜெர்மனியில் தமிழும் தமிழர்களும்.

மதுரை மீனாட்சியும் ஹம் காமாட்சியும்.
ஜெர்மனியில் இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால் அவர்கள் பேசுவது இதுவாகத்தான் இருக்கும். ”ஜெர்மன் மொழி பேசிப் பழகியாச்சா. என்ன டைப் விசாவில் வந்திருக்கீங்க. எவ்வளவு வருடம் ஆனது ஜெர்மனி வந்து ? வேலை எந்த ஃபீல்டு , காண்ட்ராக்டா,” கடைசியாகப் படிக்கும் குழந்தைகள் இருந்தால் அவர்கள் பள்ளி மற்றும் படிப்புப் பற்றி விசாரிப்பார்கள்.
வருடத்தில் 8 மாதம் குளிர் வாட்டி எடுத்தால் கூட அதைப் பற்றிப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை அவர்கள். வீடு மற்றும் ரோடு ரூல்ஸ்தான் அதிகம் இங்கே. வீடு சுகாதாரம் என்றால் அது கழிவறை சுகாதாரத்தையும் பொறுத்ததே. கழிவறை சுகாதாரம் என்றால் துளிக்கூட ஈரமே இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீடு வாடகைக்குவிடும் அக்ரிமெண்ட் ரூல்ஸ் படி பராமரிக்காமல் கழிவறையில் பாசி படிந்ததால் அதை சுத்தமாக்கித் திருப்பி ஒப்படைக்க கிட்டத்தட்ட 3000 யூரோக்கள் வரைகூட செலவு செய்தார் ஒரு மாணவர் !.
இந்தோ ஜெர்மன் உறவு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. பதினெட்டாம் நூற்றாண்டிலேயே பார்த்தலோமா சீகன்பால்க் இந்தியா வந்து தொல்காப்பியத்தை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ் மொழியியல் ஆய்வு செய்து ஜெர்மன் தமிழியல் அளித்த சி எஸ் மோகனவேலு என்ற பேராசிரியரின் பணி சிறப்புக்குரியது.

திங்கள், 2 செப்டம்பர், 2019

டீன்ஸ்டாக் & டோனர்ஸ்டாக் மார்க்கெட் - DIENSTAG UND DONNERSTAG MARKT.

செவ்வாய் வியாழன் சந்தை இதுதான் டீன்ஸ்டாக் & டோனர்ஸ்டாக் மார்க்கெட் என்றால் அர்த்தம். :) டூயிஸ்பர்க்கில் இம்ஷ்லாங்கில் பிரதி செவ்வாய் & வியாழன் தோறும் காலை பத்து மணியில் இருந்து மாலை 4 மணி வரை ஃபிஷ்ஷர் ஸ்ட்ரீட்டில் இந்தச் சந்தை நடைபெறும்.

சல்லிசாக கேக்கிலிருந்து தொட்டிச்செடி, பழவகைகள், துணிமணிகள், புத்தகங்கள், செண்ட் பாட்டில்கள், வாட்சுகள் இன்னபிற சைவ அசைவ உணவு வகைகள் , ஐஸ்க்ரீம் வெரைட்டீஸ் எல்லாம் கொட்டிக்கிடக்கும் இங்கே.

வாங்க ஒரு உலா போய் வருவோம். ஊர்சுத்த ஏத்தமாதிரி கிளைமேட்டும் இதமா 72 டிகிரி,80 டிகிரின்னு இருக்கு.


Related Posts Plugin for WordPress, Blogger...