எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

ஏலையாவில் தமிழீழ தேசியத் தலைவரின் பேட்டி !!!

1994 இல் இருந்து 2000 ஆண்டுவரை ஏலையா என்ற சிற்றிதழ் வெளியாகி இருக்கிறது. இதனை வெளியிட்டவர் திருமிகு கந்தையா முருகதாசன் அவர்கள்.

















ஏலையாவில் தமிழீழ தேசியத் தலைவரின் பேட்டி !!!

1994 இல் இருந்து 2000 ஆண்டுவரை ஏலையா என்ற சிற்றிதழ் வெளியாகி இருக்கிறது. இதனை வெளியிட்டவர் திருமிகு கந்தையா முருகதாசன் அவர்கள்.

அனைவரும் ஒருங்கிணைந்து சுதந்திரமானதும் அமைதியுள்ளதுமான எதிர்காலத்தை நோக்கிஎன்று கேப்ஷனோடு வெளியாகி இருக்கிறது 2000 ஆம் ஆண்டு இதழ். இது கலை, இலக்கிய சமூக, பொருளாதார, விஞ்ஞான இதழ் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

தமிழ் ஆலயத்தின் வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்டது குறித்து வெளியான இதழ் இது . தமிழ்க் கல்வி ஜெர்மனி முதலாய அனைத்து  யூரோப்பிய நாடுகளிலும்  1989 களில் இருந்து ஆரம்பித்து தொடர்ந்து வருகிறது.

ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் த்மிழ்ப் பத்ரிக்கை எப்படி வெளியிட முடிந்தது என்று கேட்டபோதுகரிதாஸ் என்ற நிறுவனத்தார் இந்த இதழ்களை எல்லாம் அச்சிட்டுக் கொடுத்ததாக”  திருமிகு கந்தையா முருகதாசன் சொன்னார்கள்.

1994
ஆம் ஆண்டு  ஐப்பசி இதழில் தமிழீழ தேசியத் தலைவரின் பேட்டி வெளியாகி உள்ளது

இந்த இதழில்தான் தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பேட்டி வெளியாகி உள்ளது.

பேட்டி எடுத்தவர் லண்டன் பிபிசி தமிழோசை செய்திச் சேவையைச் சேர்ந்த திருமதி ஆனந்தி சூரியப் ப்ரகாம்  .  13. 8. 94 இல் எடுக்கப்பட்ட பேட்டி இது.

ஆளும் அரசு பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் மேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்பதே அவரது கோரிக்கையாய் இருந்திருக்கிறது.

சிங்கள அரசு, சிங்கள மக்கள், தமிழ் அகதிகள், யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் ஆகியோர் பற்றிய அவரது நிலைப்பாடு இந்தப் பேட்டியில் தெளிவாகி உள்ளது.


டிஸ்கி:- இந்த சிற்றிதழ்களை வெளியிட்டதோடு அல்லாமல் பாதுகாத்து வைத்து இருப்பதற்கும் ஏலையாவின் ஆசிரியர் திருமிகு கந்தையா முருகதாசன் அவர்களுக்கு நன்றி.

3 கருத்துகள்:

  1. தகவலுக்கு மிக்க நன்றி திருமிகு கந்தையா முருகதாசன் சார்.

    ///Kandiah Murugathasan ஒரு விளக்கம்: ஏலையா என்ற சஞ்சிகை 1988 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.ஒரு வருட காலம் கந்தையா சிவராசசூரியர் அவர்கள் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார்.அவர் அதனை விட்டு விலகியதன் பின்னரே நான் ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டேன்.ஏலையா வெளிவந்த காலம் 1988 - 2000.திருமதி.ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள் இலங்கைக்கு சென்ற போது இலண்டன் தமிழோசைக்காக தமிழீழத் தேசியத்தலைவரை பேட்டி எடுத்திருந்தார்.அதனையே நாம் மீள்பிரசுரம் செய்திருந்தோம்.///

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...