எங்கே டால்ஃபினின் ஓவியம், குரல், ட்ரெயினரை சுமந்த சவாரி என்றெல்லாம் கேட்கின்றீர்களா அதெல்லாம் பார்ட் 2, பார்ட் 3 இல் வரும் :)
துபாய் டால்ஃபின் ஷோ -1. DUBAI DOLPHIN SHOW.
டால்ஃபின் ஷோக்களை துபாயிலும் சிங்கப்பூரிலும் பார்த்திருக்கிறேன். சிங்கையில் திறந்தவெளி நீச்சல் குளம்.
ஆனால்
துபாயில் மிகப்
ப்ரம்மாண்டமான மூடிய
அரங்கினுள் அமைக்கப்பட்ட நீச்சல் குளம்.
டால்ஃபின் என்னவெல்லாம் செய்யும் ? நீந்தும் சொன்னபடி எல்லாம் வழுக்கி பல்டி
அடிக்கும் , பந்தைத் தூக்கி
பௌல்
செய்யும், உயரே
இருக்கும் வளையங்களில் துள்ளிப் பாய்ந்து வெளிவரும். இதை
எல்லாம் விட
அவை
வரைந்த
ஓவியமும், ட்ரெயினரை இரு
டால்ஃபின்கள் சுமந்து நீந்தி
வந்ததும் மறக்க
முடியாதது. அவற்றின் குரல்
எழுப்பும் சத்தம்
மிக
பெகுலியரான ஒன்று
விளக்குகளின் மூலம்
வண்ணம்
மாற்றிக் கொண்டே
இருக்கிறார்கள் நீச்சல்குளத்தின் மீது.
தூரே
தெரிவதுதான் டால்ஃபின்களின் அரங்கம். அருகே
தெரிவது அவற்றின் வாழ்விடமான நீச்சல் குளம்.
ஆண்
பெண்
இரு
ட்ரெயினர்கள். இருவருமே அயல்நாட்டவர்கள். இதற்கென தனிப்படிப்புப் படித்தவர்கள். ஸ்பெஷல் ஸ்கில்
உள்ளவர்கள். டால்ஃபின்களைப் பழக்குதல், சொன்னபடி கேட்க
வைத்தல், அவற்றிற்கு உணவு
ஊட்டுதல், அவை
வாழும்
தொட்டியை சுத்தம் செய்தல் இவர்கள் பணி,
நீச்சல் பயிற்சி, ஸ்கூபா
டைவிங்,
அவசர
மருத்துவ உதவி
இதெல்லாம் எக்ஸ்ட்ரா.
இவர்களுக்கு 18,000 யூரோவிலிருந்து 40,000 யூரோ வரை
சம்பளம்.
பாருங்கள் ட்ரெயினர் கூப்பிட்டவுடன் ஓடி
வந்து
குழந்தைகள் போலக்
குதூகலிக்கின்றன. முதலில் வாயில்
வளையங்களை வைத்துச் சுற்றிக் காட்டுகின்றன.
அடுத்து வண்ணப் பந்துகள். அவற்றைத் தூக்கிப்போடப் போட அவை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கின்றன.
இப்போது மூன்று டால்ஃபின்கள் வளையங்களை உயரே தூக்கிப் போட்டு விளையாடுகின்றன. என்னா வேகம்.. என்னா ட்விஸ்ட் என்னா ட்ரில்..
அடுத்து 4 வால்ரஸ் சீல்களும் கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றன. நான்குக்கும் நான்கு ஸ்டூல் போன்ற சீட்டிங் வேறு !
வால்ரஸ்களுக்கு உணவளிக்கிறார். மீன்தான். அதன்பின் அனைத்தும் இசைக்கு நடனமாட ஆரம்பமாகிறது கோலாகலம்.
டால்ஃபினின் சேட்டையைப் பாருங்களேன். தரையில் அதன் வடிவழகு செம இல்ல. வால்ரஸுகள் தங்கள் வால்த்தனத்தைக் காண்பிக்கின்றன.
வண்ணப் பந்துகளும் வால்ரஸுகளும். அஹா என்ன ஒரு கண் கொள்ளாக் காட்சி. டால்ஃபினும் ட்ரெயினரும் முத்தமிட்டுக் கொள்கிறார்கள்.
ஸ்டூலில் அமர்ந்தபடியே வால்ரஸ்கள் வித்தை காண்பிக்க, டால்ஃபின்களோ நீரில் நின்று எக்கி ஏங்கிப் பார்க்கின்றன.
எங்கே
டால்ஃபினின் ஓவியம்,
குரல்,
ட்ரெயினரை சுமந்த
சவாரி
என்றெல்லாம் கேட்கின்றீர்களா அதெல்லாம் பார்ட்
2, பார்ட்
3 இல்
வரும்
:)
2008ல் துபாய் சென்றிருந்தபோது பார்த்திருக்கிறோம்
பதிலளிநீக்குஅஹா அருமை பாலா சார் !
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!