எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 12 அக்டோபர், 2011

ஏற்றுமதி ஆலோசனைகள் சேதுராமன் சாத்தப்பன்.

வெற்றிகரமான ஏற்றுமதியாளராவது எப்படி? பணம் காய்க்கும் மரம். ஏற்றுமதியில் சந்தேகங்களா., பாகம் 1, 2. இவை மூன்றும் திரு சேதுராமன் சாத்தப்பன் அவர்களின் நூல்கள். முதலீடு சம்பந்தமாக ஏகப்பட்ட ஆலோசனைகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.. ஆனால் ஏற்றுமதி சம்பந்தமான ஒரு வலைப்பூவை இவர் நடத்துகிறார் என்பது ஆச்சர்யமாய் இருந்தது. ஏற்றுமதியும் இறக்குமதியும் நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கின்றன.

இவர் செட்டிநாட்டின் நெற்குப்பையை சேர்ந்தவர். வெளிநாட்டு வங்கியொன்றின் இந்தியப் பொது மேலாளராகமும்பையில் பணியாற்றுகிறார். மிக அருமையான தகவல்கள் இவர் வலைப்பூவில் கொட்டிக் கிடக்கின்றன. ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்களின் கேள்விகளுக்கும் இவர் பதில் அளிக்கிறார்.

இறக்குமதி பற்றிக் கூறும் போது,
” இறக்குமதியாளரை இனம் காணுங்கள். பின்னர் அவரை பற்றிய நன்னம்பிக்கை அறிக்கையை இசிஜிசி, மீரா இன்பார்ம், டன் அண்ட் ப்ராட்ஸ்டீரிட் ஆகிய நிறுவனங்கள் மூலம் பெறலாம். இதை வைத்துக் கொண்டு ஏற்றுமதி செய்யலாமா வேண்டாமா என்று முடிவு செய்யலாம்.” என்றும் ”அலங்கார மீன்கள் (கொய் மீன்கள்) இறக்குமதி செய்ய வேண்டுமென்றால இது ஒரு ரெசிடிரிக்டெட் இறக்குமதி. டைரக்டர் ஜெனரல் ஆப் பாரின் டிரேட் அவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் செய்ய முடியும். ” என்றும் கூறுகிறார்.

ஏற்றுமதியில் என்னென்ன முக்கியமான டாக்குமெண்ட்கள் தேவை :-
ஏற்றுமதியில் முக்கியமான டாக்குமெண்ட்கள் என்று பார்க்கபோனால் இன்வாய்ஸ், பில் ஆப் லேடிங் அல்லது ஏர்வே பில் ஆகியவை மிகவும் முக்கியமான டாக்குமெண்ட்களாக கருதப்படும். மற்ற டாக்குமெண்ட்கள் தேவையெனில் கொடுத்தால் போதும். அவை, சர்ட்டிபிகேட் ஆப் ஆர்ஜின், இன்ஸபெக்ஷன் சர்ட்டிபிகேட், வெயிட் சர்டிபிகேட், பில் ஆப் எக்சேஞ்ச், இன்சூரன்ஸ் டாக்குமெண்ட் போன்றவை ஆகும். எல் சி படி தவறில்லாமல் இருக்க வேண்டும். என ஏற்றுமதி செய்வதற்கு தேவையான தகவல்களைக் கூறுகிறார்.

இந்தியா உலகளவில் 20 இடத்தில் இருக்கிறதாம். ஏற்றுமதி இறக்குமதி செய்ய நிறுவனத்தின் பெயரில் ஐ இ சி கோட் ( IEC) தேவை என்கிறார். கடல் பொருட்கள், உருளைக்கிழங்கு, பனைவெல்லம், வெங்காயம். கைவினைப் பொருள், தோல் பொருட்கள். ஏலக்காய், நெய் மாம்பழம் புண்ணாக்கு, கார்மெண்ட்.மெஷினரி, எலக்ட்ரானிக், ஆட்டோமொபைல்ஸ், கன்சல்டன்சி, ட்ரெயினிங், ஆகியன ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பேரீச்சை இறக்குமதி செய்யப்படுகிறது.

மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான பணப் பரிவர்த்தனைக்கு டாலர் மற்றும் ரூபாயின் மதிப்பு மாறும்போது பார்வேர்ட் காண்ட்ராக்ட் போடுவது சிறந்தது என்கிறார். ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு வெப்சைட் அவசியம் என்கிறார்.

பங்களாதேஷுக்கு ஏற்றுமதி செய்து பணம் பெற தாமதமாவது ஏன்? வர்த்தகக் கண்காட்சிகளின் தேவைகள் இந்திய அரசு வர்த்தகப் பொருட்களை சேமிப்பதற்கான கிடங்குகள் அமைத்து விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளருக்கு உதவ வேண்டும் என்பது பற்றியெல்லாம் விரிவாக அலசி இருக்கிறார்.

இது ஏற்றுமதி செய்ய விரும்புவர்களுக்கான இவருடைய இணைய தளம். என்னென்ன பொருட்கள் ஏற்றுமதிக்கு தேவையா இருக்கிறது.என அறியலாம்.

மேலும்சிறப்பாக சொல்ல வேண்டுமென்றால் இவர் சிறந்த எழுத்தாளரும் கூட. உயிர்மையில் கதைகள் எழுதி இருக்கிறார். இவர் தனது சைக்கிள் பற்றி உயிரோசையில் எழுதி இருந்த கதை சைக்கிள் நேசர்களுக்கான ஒரு கவிதை..ஆச்சி வந்தாச்சு, நகரத்தார் மலர் போன்ற இதழ்களில்மிகச் சிறப்பான கட்டுரைகள் எழுதி வருகிறார். நகரத்தார் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள், பற்றி எழுதும்போது ஏ. கே . செட்டியார் பற்றியும் சிறப்பாக எழுதி இருந்தது கவனத்தைக் கவர்ந்தது. இவர் பற்றி அதிகம் பேருக்குத்தெரியாது. ஆனால் பயண நூல்களின் முன்னோடி ஏ. கே. செட்டியார். என குறிப்பிட்டிருந்தார்.

சேதுராமன் சாத்தப்பன் அவர்களின் இந்த வெப்சைட்டையும் பார்த்து பயன் பெறுங்கள். மிக அருமையான தகவல்களை பயனுற பகிரும் திரு . சேதுராமன் சாத்தப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

டிஸ்கி 1 .:- இண்டி.காம் ப்லாகர்கள் சந்திப்பில் பெண்ப்லாகர்களை ( லஷ்மி தவிர) அழைத்திருந்தார்களா.? மற்றும் அங்கு தமிழ் வலைப்பதிவர்க்கு உதவுவது தொடர்பான சர்ச்சைகளை கேபிள் சங்கர் ப்லாகில் படித்தேன். மிக அதிகமாக எழுதி வாசிப்படும் தமிழ் வலைப்பதிவர்களுக்கு இண்டி போன்றவை என்ன உதவி செய்ய முடியும்.?

டிஸ்கி 2. :- இது எனக்கு இன்று வந்த கருத்துரை. இது அனைவருக்கும் உபயோகப்படும் என்பதால் இங்கு சேர்த்திருக்கிறேன்..

////sethu உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"ஏற்றுமதி ஆலோசனைகள் சேதுராமன் சாத்தப்பன்.":

தேனம்மை அவர்களே அன்பு வணக்கம்.
திரு சாத்தப்பன் அவர்களை பதினோரு வருடங்களாக எனக்கு பரிட்சயம் . அவர் தினமலரில் எழுத துவங்கி பதினோரு ஆண்டுகள் ஆகி விட்டது. சிறு தொடராக ஆரம்பித்தார். இன்று விருட்சம் போல வளர்ந்துள்ளது அவரது ஏற்றுமதி தொடர்.
தமிழ் நாட்டில் பல ஆயிரங்கள் பணம் வாங்கி சொல்லி தரும் ஏற்றுமதி படங்களை அவர் இலவசமாக நடத்தி தருகிறார். எந்த நேரம் செல் போனில் அழைத்தாலும் ஏற்றுமதி ஆலோசனைகளை இலவசமாய் வழங்குகிறார்.
அவரின் ஆலோசனையால் ஏற்றுமதியாளர் ஆனவர்கள் அதிகம். தினமலரில் ஈரோடு, சேலம், கரூர், வேலூர் , திருப்பூர் போன்ற இடங்களில் ஏற்றுமதி நிகழ்ச்சி நடத்தி உள்ளார்.
எழுத்து பணி தாண்டி , பழகுவதற்கு நல்ல பண்புள்ள மனிதர். நேர்மை தவறாதவர்.
அன்புடன் சேது
செய்தியாளர், தினமலர் /////

நன்றி திரு சேது. எனக்கு அவர் தினமலரில் எழுதி வரும் விபரம் தெரியாது. தற்போது தெரிந்து கொண்டேன். நன்றி.

33 கருத்துகள்:

 1. தொழில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள பகிர்வு தான். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. ஹ்ம் ஏற்றுமதி பணம் காய்க்கும் மரம் தான்.சரியா ஏறி பறிக்கனும்.இல்லனா வழுக்கி விட்டுடும் ஜாக்கிரதை!!!

  அப்புறம் இண்டி ப்ளாக்கர் சந்திப்பு பற்றியெல்லாம் யோசிப்பது தேவையில்லாமல் மன உளைச்சலைத்தான் தரும்.தமிழ் மொழி உலகம் முழுதும் பரவி கிடக்கிறது.பணத்திற்காக யாரும் ப்ளாக் எழுதவில்லை.அதை எதிர்பார்க்கவும் இல்லை.அதோடு அவர்கள் அந்த பலகையில் பெரிதாக தவறாக எதுவும் எழுதியாக எனக்கு தோன்றவில்லை.

  பதிலளிநீக்கு
 3. பகிர்வுக்கு நன்றி! நட்பு வட்டத்தில் சேர்ந்தாச்சு!

  பதிலளிநீக்கு
 4. ஆர்வம் உள்ளோருக்கு அவசியமான பகிர்வு.பகிர்வுக்கு நன்றி தேனு.

  பதிலளிநீக்கு
 5. தேனம்மை அவர்களே அன்பு வணக்கம்.
  திரு சாத்தப்பன் அவர்களை பதினோரு வருடங்களாக எனக்கு பரிட்சயம் . அவர் தினமலரில் எழுத துவங்கி பதினோரு ஆண்டுகள் ஆகி விட்டது. சிறு தொடராக ஆரம்பித்தார். இன்று விருட்சம் போல வளர்ந்துள்ளது அவரது ஏற்றுமதி தொடர்.
  தமிழ் நாட்டில் பல ஆயிரங்கள் பணம் வாங்கி சொல்லி தரும் ஏற்றுமதி படங்களை அவர் இலவசமாக நடத்தி தருகிறார். எந்த நேரம் செல் போனில் அழைத்தாலும் ஏற்றுமதி ஆலோசனைகளை இலவசமாய் வழங்குகிறார்.
  அவரின் ஆலோசனையால் ஏற்றுமதியாளர் ஆனவர்கள் அதிகம். தினமலரில் ஈரோடு, சேலம், கரூர், வேலூர் , திருப்பூர் போன்ற இடங்களில் ஏற்றுமதி நிகழ்ச்சி நடத்தி உள்ளார்.
  எழுத்து பணி தாண்டி , பழகுவதற்கு நல்ல பண்புள்ள மனிதர். நேர்மை தவறாதவர்.
  அன்புடன் சேது
  செய்தியாளர், தினமலர்.

  பதிலளிநீக்கு
 6. தேனம்மை அவர்களே அன்பு வணக்கம்.
  திரு சாத்தப்பன் அவர்களை பதினோரு வருடங்களாக எனக்கு பரிட்சயம் . அவர் தினமலரில் எழுத துவங்கி பதினோரு ஆண்டுகள் ஆகி விட்டது. சிறு தொடராக ஆரம்பித்தார். இன்று விருட்சம் போல வளர்ந்துள்ளது அவரது ஏற்றுமதி தொடர்.
  தமிழ் நாட்டில் பல ஆயிரங்கள் பணம் வாங்கி சொல்லி தரும் ஏற்றுமதி படங்களை அவர் இலவசமாக நடத்தி தருகிறார். எந்த நேரம் செல் போனில் அழைத்தாலும் ஏற்றுமதி ஆலோசனைகளை இலவசமாய் வழங்குகிறார்.
  அவரின் ஆலோசனையால் ஏற்றுமதியாளர் ஆனவர்கள் அதிகம். தினமலரில் ஈரோடு, சேலம், கரூர், வேலூர் , திருப்பூர் போன்ற இடங்களில் ஏற்றுமதி நிகழ்ச்சி நடத்தி உள்ளார்.
  எழுத்து பணி தாண்டி , பழகுவதற்கு நல்ல பண்புள்ள மனிதர். நேர்மை தவறாதவர்.
  அன்புடன் சேது
  செய்தியாளர், தினமலர்.

  பதிலளிநீக்கு
 7. தொழில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள பகிர்வு.

  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. நன்றி கோபால் சார்

  நன்றி மழை

  நன்றி மாதவி

  நன்றி ராஜா

  நன்றி ஸாதிகா

  நன்றி சேது

  நன்றி குமார்

  பதிலளிநீக்கு
 9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 10. ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலத்தில் தந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்

  பதிலளிநீக்கு
 11. ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலத்தில் தந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்

  பதிலளிநீக்கு
 12. ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலத்தில் தந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்

  பதிலளிநீக்கு
 13. ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலத்தில் தந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்

  பதிலளிநீக்கு
 14. நண்பரே, நம் தளத்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 15. நண்பரே, நம் தளத்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 16. sir enaku oru help na rompa pava patta payan enaku oru help pannunga sir enaku oru bussnas veanum so neenga than enaku sollanum unga numper thanga sir plz

  பதிலளிநீக்கு
 17. sir please ungaludaya contact number ?

  பதிலளிநீக்கு
 18. export business panna thudickum en pondravarkalucku ayya ungalin pakirvu megavum payanullathaga eruckum. nandri AYYA.

  பதிலளிநீக்கு
 19. அய்யா நான் மீனவர் குடும்பத்தைச் சார்ந்தவன்,தற்போது இளங்கலை வணிக ஆட்சியியல் பட்டபடிப்பை நிறைவு செய்ய இருக்கிறேன்.எங்கள் பகுதியில் மீன்,இறால்,நண்டு அதிகம் கிடைக்கும் ,எனவே கடல் உணவு ஏற்றுமதி பற்றி கூறுங்கள்.நன்றி

  பதிலளிநீக்கு
 20. அய்யா ECGC,BUYERS,PACKING,DOCUMENTS,C&F AGENT,PAYMENT. இதை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் . விளக்கம் கொடுங்கள்

  பதிலளிநீக்கு
 21. Mahendran : வெளிநாட்டு இறக்குமதியாளா் களை கண்டறிவது எப்படி கொஞ்சம் சொல்லுங்க சார்

  பதிலளிநீக்கு
 22. Ayya ennakku romba naala export and import seiya aarvam uladhu eppadi seivadhu endru ennakku thriyadhu ennakku soilithanga naan stainless steel velai parkkiren ennakku export and import 2 varudamma muyarchi panren mudiamadithu eppadi panradhu soilithanga please Ayya ennakku my number 9952213416,8220749063(k.Ramesh)

  பதிலளிநீக்கு
 23. Ayya ennakku romba naala export and import seiya aarvam uladhu eppadi seivadhu endru ennakku thriyadhu ennakku soilithanga naan stainless steel velai parkkiren ennakku export and import 2 varudamma muyarchi panren mudiamadithu eppadi panradhu soilithanga please Ayya ennakku my number 9952213416,8220749063(k.Ramesh)

  பதிலளிநீக்கு
 24. Ayya ennakku romba naala export and import seiya aarvam uladhu eppadi seivadhu endru ennakku thriyadhu ennakku soilithanga naan stainless steel velai parkkiren ennakku export and import 2 varudamma muyarchi panren mudiamadithu eppadi panradhu soilithanga please Ayya ennakku my number 9952213416,8220749063(k.Ramesh)

  பதிலளிநீக்கு
 25. Good evening sir, i saw your web page. I just remember a Thiru Kural . . . . Eethu uvakkum inbam saandorkku . . . . & Payan thookaar seitha uthavee nayan thookin nanmai kadalir peridhu ! So, you are not expecting to money and anything,that is why this is the real scope to improve our Tamilians. HAVE A GREAT FUL HANDS UP FOR YOU. Pl call me my mob no: 94421 90850 / 98428 90850.

  பதிலளிநீக்கு
 26. ஏற்றுமதி இறக்குமதி பற்றி அறிந்தவர்கள் இன்னும் அதிகமாக அது பற்றி கட்டுரைகளும் அது பற்றி புத்தகங்களில் உள்ள செய்திகள் மற்றும் அது பற்றி இணைய தள முகவரி , ஏற்றுமதி யாளர் மற்றும் இறக்குமத்தியாளர் பற்றி நாம் எப்படி அறிந்து கொள்வது அவர்களில் நல்ல நிறுவனம் எது என்பதை அறிவது எப்படி அரசு சலுகைகள் அரசு மணியம் அரசு கடன் ஏவளவு முதலீடு இப்பொழுது இருக்கும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வாய்ப்பு பற்றி எழுதவும் நன்றி தொடர்புக்கு 9944299224

  பதிலளிநீக்கு
 27. ஏற்றுமதி இறக்குமதி பற்றி அறிந்தவர்கள் இன்னும் அதிகமாக அது பற்றி கட்டுரைகளும் அது பற்றி புத்தகங்களில் உள்ள செய்திகள் மற்றும் அது பற்றி இணைய தள முகவரி , ஏற்றுமதி யாளர் மற்றும் இறக்குமத்தியாளர் பற்றி நாம் எப்படி அறிந்து கொள்வது அவர்களில் நல்ல நிறுவனம் எது என்பதை அறிவது எப்படி அரசு சலுகைகள் அரசு மணியம் அரசு கடன் ஏவளவு முதலீடு இப்பொழுது இருக்கும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வாய்ப்பு பற்றி எழுதவும் நன்றி தொடர்புக்கு 9944299224

  பதிலளிநீக்கு
 28. global buyers online .com enra inaiyadhalathil irundhu enaku cal seidhu nangal ungaluku buyers contact seiya vaikrom .idharku premium katta solgirargal. idhanai nambalama.

  பதிலளிநீக்கு
 29. ஐயா நான் இப்பொழுது மலேசியாவில் வேலை செய்துவருக்குறேன், 6 மாதங்களுக்கு பிறகு தமிழகம் வந்து Clay and ceramic பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடலாம் என்று எண்ணியுள்ளேன், இப்பொருட்களை ஏற்றுமதி செய்ய எனக்கு தகுந்த ஆலோசனம் வேண்டும் ஐயா, எனது கைபேசி எண் 9843622966, 01117615853,
  Mail id , sscedpm@gmail.com

  பதிலளிநீக்கு
 30. நான் பனியன் வேஸ்ட் பிறித்து ஆட்டோ மொபைல் கடைகளுக்கு விற்பனை செய்கிறேன் வேஸ்ட் டை ஏற்றுமதி செய்ய முடியுமா

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...