எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 10 அக்டோபர், 2011

விஜய் டிவியின் நீ்யா நானாவில் நாங்கள்.

ஏப்ரல் 14 அன்று தமிழ் புத்தாண்டுக்கான ஸ்பெஷல் நீயா நானாவில் பங்கேற்கும் சந்தர்ப்பம் அமைந்தது. அது சம்பந்தமாக ஃபோனில் சுதா பேசியபோது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபின் டிவியில் தொடர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டார். நான் தொடர்களே பார்ப்பதில்லை என்பதால் அது பற்றிய சில கருத்துக்களைச் சொன்னேன். மெயினாக அதுக்கு அடிக்ட் ஆனவங்க பலபேரை பார்த்ததினால் அது பற்றியும் சொன்னேன். இந்தக் கருத்துக்களை நீயா நானா நிகழ்ச்சியில் சொல்ல முடியுமா, கலந்து கொள்ள விருப்பமா என கேட்டார். ஒப்புக் கொண்டேன். ( தொலைக்காட்சி சீரியல் கில்லர்களைப் பற்றி தெளிவுறுத்துவது என் கடமை என்பது போல:))அங்கு சென்றபின் ( அதற்கு தமிழரசி, தமிழ்ச்செல்வி இரு பெண் பதிவர்களும் நன்றாக பேசக்கூடியவர்கள் என பரிந்துரைத்திருந்தேன். மிக அருமையான கருத்துக்களை எடுத்து வைத்தார்கள். கவிதைச் சங்கமத்தில் ஏற்பட்ட இம்ப்ரஷ்ன் அது) பதிவர் ஜாக்கி சேகரும் அழைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இவரும் மிக அருமையான கருத்துக்களை கோர்வையாக கூறினார்.

நிகழ்வுக்கு முன் ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டி சென்றபோது அங்கே சின்னத்திரையில் எல்லா சீரியல்களின் பிரபலங்களும் இருப்பதை பார்த்தேன்.

ராகவி, வடிவுக்கரசி, நிஷா, விமல், தீபக், காவ்யா .. அவ்வளவுதான் நாம அவுட் என நினைத்தேன். நீயா நானா நிகழ்ச்சி துவங்கிய பின் தான் சரியாக தெரிந்தது தலைப்பு சீரியல்கள் பற்றி மட்டுமல்ல. தொலைக்காட்சி பார்ப்பது குறித்தான நன்மை தீமை பற்றி என. பின்ன என்ன.. நாம் கூறிய கருத்துக்களில் சில மட்டுமே வந்தன. தொலைக்காட்சிக்கு நாங்கள் எதிரி அல்ல தொலைக்காட்சித் தொடர்களுக்கு மட்டுமே. அவை மக்களுக்கு அடிமை மனப்பான்மையை ஊட்டுகின்றன என்ற கருத்தை சொல்லி நடிகை வடிவுக்கரசியின் கோபத்தை சம்பாதித்ததுதான் மிச்சம்.( பின் ஒரு பேட்டிக்காக அணுகியபோது ரொம்ப கோபப்பட்டார். பலமுறை தொடர்பு கொண்டபின் சமாதானமாகி பேட்டி கொடுத்தார். )


எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் தினமும் ஒன்றரை மணி நேரம் இரவு தொடர்கள் பார்ப்பதாகவும் வீட்டில் உள்ளோர் பார்க்க விடவில்லை என்றும் சொன்னாள். அக்கா நான் நிம்மதியா இந்த சீரியலை எல்லாம் பாத்து அழக்கூட எங்க வீட்டில் விடமாட்றாங்க. என்பையன் இந்த மூணு சீரியல்லயும் ஒரே மாதிரிதானே வருது. எங்கே கதையை சொல்லுங்க அப்புறம் நான் உங்களுக்கு அந்த சீரியலை போடுறேன் என்று ரிமோட்டை தரமாடேங்குறான். கிரிக்கெட் பார்த்துகிட்டு என்றாள்.


அந்தக் கருத்தைக் கூறியபோது எதுக்கு இப்படி செய்யணும். ஒன்னரை மணி நேரம் அழறதுக்கு அதுல என்ன இருக்கும் என நான் கேட்டபோது , நீங்க சம்பளம் ஒழுங்கா தரீங்களா என படவா கோபி கேட்டார்.


பின் நான் தொலைக்காட்சி பிடிக்காது என சொல்லவில்லை. அதில் ட்ராவல் அண்ட் லிவிங், நேஷனல் ஜியாகரஃபிக், பாடல்கள், செய்திகள் பார்ப்பேன் என கூறினேன். பின் தொலைக்காட்சித் தொடர்கள் உறவுச் சிக்கல்களையும் உணர்வுச் சிக்கல்களையும் உண்டாக்குகின்றன என்ற கருத்தையும் பதிவு செய்தேன். அதற்கு கோபியும் தொலைக்காட்சித் தொடர்கள் உறவுச் சிக்கல் உணர்வுச் சிக்கல்கள் உருவாக்குவதாக இவங்க சொல்றாங்க என்று சொல்லி அதுக்கு கருத்துக் கேட்டபோது எதிர்வரிசையில் இருந்த பெண் நீங்க அதுல சமையல்குறிப்பு பாருங்க, வேறு நிகழ்ச்சி பாருங்க என்றார். என் கருத்து இல்லாமல் அவர் கருத்து மட்டும் ஒலிபரப்பில் பார்த்தோம். எடிட்டிங்கில் சென்று இருக்கலாம். ஒருவர் சொல்லும் ஒரு கருத்து மட்டுமே ஒலிபரப்பப்படும் என தெரிந்திருந்தால் இதை மட்டுமே சொல்லி இருக்கலாம்.

நிகழ்வு முடிந்து வெளியே வந்தபின் சுதா, கீதா, மஞ்சுவை பார்த்து( இந்த நிகழ்ச்சிக்கு அதிகமாக உழைக்கின்ற பெண்கள் இவர்களும் கூட) புகைப்படம் ஒன்று எடுத்து வந்தேன்.11 கருத்துகள்:

 1. நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்க தங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  எடிட் செய்யாமல் தங்கள் கருத்துக்களை ஒலிபரப்பியிருந்தால் நன்றாக திருப்தியாக இருந்திருக்கும்.

  அந்தக்குறை, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கே உணர முடியும். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. நல்ல பதிவு.
  அவர்களுக்கு சாதகமான செய்திகள் மட்டும் தான் போடுவார்கள்.
  வாழ்த்துக்கள் அம்மா.
  (ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் படத்தை போட்டது மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி)
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

  பதிலளிநீக்கு
 3. ஒருவர் சொல்லும் ஒரு கருத்து மட்டுமே ஒலிபரப்பப்படும் என தெரிந்திருந்தால் இதை மட்டுமே சொல்லி இருக்கலாம்.

  பாராட்டுக்கள்....

  பதிலளிநீக்கு
 4. ***எடிட்டிங்கில் சென்று இருக்கலாம். ஒருவர் சொல்லும் ஒரு கருத்து மட்டுமே ஒலிபரப்பப்படும் என தெரிந்திருந்தால் இதை மட்டுமே சொல்லி இருக்கலாம்.***

  இந்த எடிட்டிங், மாடரேஷன் என்பதெல்லாம் பெரிய பிரச்சினைக்கு உரிய விடயங்கள். sometimes "editing" and "moderation" can frustrate us and leave us without satisfaction. நம் தளம், நம் பதிவுலகம்தான் பெஸ்ட்டு, எல்லாவற்றையும் தெளிவாக சொல்வதற்கு- இங்கே நீங்கள் விளக்கியது போல! :-)

  பதிலளிநீக்கு
 5. நன்றி கோபால் சார்

  நன்றி சசி

  நன்றி ராஜா

  நன்றி ரத்னவேல் சார்

  நன்றி குமார்

  நன்றி ராஜி

  நன்றி கலாநேசன்

  நன்றி வருண்

  பதிலளிநீக்கு
 6. நல்ல பதிவு. தொடர்கள் பார்காத சங்கத்தில் நானும் உறுப்பினர் என்பதால் எம் போன்றவர்களை பிரதிபலித்ததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...