எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 27 அக்டோபர், 2011

சேமிப்பாளர்களுக்கு மட்டுமே..

முதலீடு சம்பந்தமான என் கட்டுரைகள் அனைத்தும் சிறிய நடுத்தர அளவில் முதலீடு செய்ய விரும்பும் மக்களுக்கான ஆலோசனைகள் மட்டுமே. அஞ்சலக முதலீடு., இன்சூரன்ஸ்., வங்கி டெப்பாசிட்டுகள்., பாண்டுகள்., தங்கம்., இதுபோன்றதே என்னுடைய ம்யூச்சுவல் ஃபண்ட் பற்றிய கட்டுரைகளும், பங்குச் சந்தை முதலீடு பற்றிய கட்டுரைகளும், ஏற்றுமதி பற்றிய கட்டுரைகளும். யாரையும் கட்டாயமாக பங்குச் சந்தையில் ட்ரேட் செய்யுங்கள் என கான்வாஸ் செய்யவில்லை. நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யுங்கள் என நான் ஒரு கட்டுரையும் எழுதியதில்லை.

நம்பகத்தன்மை வாய்ந்த செபியின் பரிந்துரைப்படியான A++ கம்பெனிகளின் நம்பிக்கையான ஷேர்களையே., முதலீட்டில் ஒரு பாகமாக மட்டுமே செய்யும்படி ஆலோசனை மட்டுமே பகிர்கிறேன். இது யாருக்கும் கட்டாயமானதல்ல. தேவை ஏற்படின் உங்கள் பணத்தை முதலீடு செய்ய மட்டுமே இது பரிந்துரைக்கப்படுகிறது. ஏற்ற இறக்கங்கள் குறித்தான சிந்தனைகள் முதலீட்டாளர்களுக்கு அவசியம்.


ஜாபர்கள், ட்ரேடர்கள் , சூதாடிகளுக்காக ( GAMBLERS AND SPECULATORS) நான் எழுத வேண்டிய தேவையே இல்லை. ரியல் எஸ்டேட், தங்கம்., டெப்பாசிட்டுகள் போல இதுவும் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டதே. இதைத் தேர்ந்தெடுப்பது பணத்தை முதலீடு செய்பவர்களின் விருப்பத்தையும் தேவையையும் பொறுத்தது.

எங்கள் பங்குகள் ஏறுமா என யாரும் யாரிடமும் கேட்கவேண்டாம். கம்பெனிகள், நிறுவனங்கள் பற்றி அவர்களுக்காய் நன்கு தெரிந்து முதலீடு செய்தாலே போதும். காய்கறி சாப்பிடுபவர்கள் கசாப்புக் கடையையே பார்க்க மாட்டார்கள். ரத்தம் இல்லாமல் கசாப்பு கிடையாது. மீல் மேக்கர், காளானுக்கு மாறிக் கொள்ளலாம்.

ஒரு இலக்கியவாதியாக பங்குச் சந்தையைத் தெரிந்து கொள்ளவும்., தெரிந்ததைப் பிறருக்குச் சொல்லவுமே என்னுடைய கட்டுரைகள். எனக்குத் தெரியாத ஒரு விஷயம் இன்னொருவனுக்கு எப்படித் தெரியலாம்., அதனால் புழுதி வாரித் தூற்றுவேன். கீழே இருப்பவனைக் கேடயமாகவே பயன்படுத்திக் கொள்வோம், அவன் முன்னேறவிடமாட்டோம் என நினைப்பவர்கள்தான் இதை சூதாடிகளுக்கானது என் ப்ராண்ட் முத்திரை குத்துவார்கள்.

இது சேமிப்பாளர்களுக்கு மட்டுமே சில அறிவுரைகள்.. இது சூதாடிகளின் கான்வாசிங் அல்ல..


8 கருத்துகள்:

 1. ???? என்னங்க? என்ன ஆயிடுச்சு?

  பதிலளிநீக்கு
 2. நன்கு படித்த அறிவாளிகளே ஆழம் தெரியாமல் பங்குச்சந்தையில் மாட்டிக்கொள்வதுண்டு. ஒரு சிலர் அதிர்ஷ்டவசமாக பெரும் பணக்காரர்களாக ஆவதும் உண்டு.

  பிறருக்கு நாம் இந்தப்பங்குச்சந்தை பற்றி எதுவும் பரிந்துரைக்காமல் இருப்பதே சாலச் சிறந்தது; இலாபமோ நஷ்டமோ நம்மோடு போகட்டும். பிறர் நம்மால் நஷ்டப்பட வேண்டாம்,என்பது எனது அபிப்ராயம்.

  தயவுசெய்து தவறாக நினைக்காதீர்கள். நான் ஒரு காலத்தில் இதில் மாட்டிக்கொண்டு கற்றுக்கொண்ட பாடங்களும், சுட்டுக்கொண்ட நஷ்டங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. நன்கு அனுபவித்தவன்.

  அந்த அனுபவத்திற்கு நான் தந்த விலை மிக மிக அதிகம். vgk

  பதிலளிநீக்கு
 3. யாரோ உங்களை காயப்படுத்தி விட்டார்கள் என்பது புரிகிறது தேனக்கா. கவலை வேண்டாம்! உங்கள் பணி தொடரட்டும்...

  பதிலளிநீக்கு
 4. சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!

  பதிலளிநீக்கு
 5. ”மிடியோக்ரிட்டி” என ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு; கீழ் தட்டு மக்கள் கீழ் தட்டு மக்களாகவே இருக்க வைப்பதற்கான எல்லா முயற்சிகலையும் சமூகம் செய்து வருகிறது. “ரிஸ்க்” எடுக்காதே; அய்யய்யோ அதெல்லாம் நமக்கு எதுக்கு, வேண்டவே வேண்டாம்; வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம், என திரும்பத் திரும்பப் பாடம் புகட்டப்பட்டு வந்திருக்கிறோம். படிப்பு ஒன்று போதும், நம்மைக் கரை ஏற்றிவிடும் என மெக்காலேயின் அடிமைக் கல்வியைக் கற்று வருகிறோம். என்றாவது ஒருநாள் விடிவு பிறக்கும் என ஏமாறுவது தெரியாமல் மயக்கத்தில் இருக்கிறோம்; எனவேதான் கடைசியில் ஓய்வு பெறும்போது விலைவாசியுடன் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறோம். அதனால்தான், 90 % க்கு மேல் மதிப்பெண் எடுத்த ”அதிபுத்திசாலி”, 50 % கூட எடுக்காத முதலாளிக்கு உழைத்துக் கொட்டிக் கூலிக்கு மாரடித்துக்கொண்டிருக்கிறான். முடிந்தவரை இவர்களை இப்படியே வைத்திருப்பதுதான் இவர்களின் ”தலைவர்க”ளுக்கு நல்லது. கீழே இருப்பவன் புத்திசாலி ஆனால், பனக்காரனாக ஆனால் தலைவனுக்கு ஏது மரியாதை? எனவே இவர்கள் இப்படியே “மிடியோக்கரா”கவே இருக்கட்டும். அதுதான் “ரிஸ்க்”கே இல்லாதது. சரியாகத்தான் சொன்னார் நாமக்கல் கவிஞர் “ வேப்ப மர உச்சியில் நின்னு, பேயொன்னு ஆடுதுன்னு, விளையாடப்போகையில சொல்லி வைப்பாங்க; உன் வேரத்தை முளையிலேயே கில்ளி வைப்பாங்க”. கீழ்தட்டு மக்கள் எல்லோரும் படிக்க வேண்டிய ஒன்று “கான்ஸ்பிரசி ஆஃப் தெ ரிச்சஸ்” - பணக்காரர்களின் சதி - என ராபர்ட் கியோசகி எழுதியுள்ளது....

  பதிலளிநீக்கு
 6. இதுபற்றிய பல விஷயங்கள் பலருக்குத் தெரிவதில்லை என்பதால் அவர்கள் தெரிந்து கொள்ள உங்கள் கட்டுரைகள் பயன்படும் என்பதில் சந்தேகமே யில்லை. நீங்கள் உங்கள் பணியைத் தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 7. ஒண்ணுமில்லீங்க ஸ்ரீராம். இது நாம ப்லாக்ல எழுதுறதுக்கான பின் வினை.:)

  உண்மைதான் கோபால் சார்

  நன்றி ரத்னவேல் சார்

  நன்றி கணேஷ்

  நன்றி ராஜி

  நன்றி நாகு மாமா

  நன்றி வியபதி.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...