புதன், 19 அக்டோபர், 2011

தேவதை அனுப்பிய தேவந்தி.

என் தாய்மொழியெனும் தேவதை தேவந்தியாய் கிடைத்தது கைகளில். தேனுண்ணும் வண்டுகள் முரல்வதுபோல ஒரு மயக்கத்தோடு தொடங்கியது அந்தப் பூவுக்கு அருகிலான பயணம். தேனை சேமித்து சேமித்து கெட்டிப்பட்ட கல்பூவாய் ஆகியிருந்தது அந்தப் பூ. சுற்றிச் சுற்றிவந்த வண்டு தாபத்தோடு மயங்கத் தொடங்கியது, பூவைச் சுற்றி..


வண்டின் வருகைக்காய் காத்து காத்து நெருப்புத்தவம் செய்தபூ நெருப்பாகவே தகித்துக் கொண்டிருந்தது. வேதியல் இரண்டாமாண்டில் என்ன உணர்ந்தேனோ அதையே இன்றும் உணர்ந்தேன்., கண்ணகி, தேவந்தி, சீதை, நளாயினி, அகலிகை, மண்டோதரி, மீரா, சூர்ப்பனகை, தாடகை எந்த வடிவமாய் இருந்தாலென்ன புறக்காரணிகளுக்காக பூக்கள் வேஷமிடவேண்டியிருக்கிறது.

தாயென்பவளும் மகளென்பவளும் சகோதரி என்பவளும் அதிக பாசத்தோடு அல்லது குறைந்தபட்ச பாசத்தோடாவது கவனிக்கப்படுகிறார்கள். மனைவியென்பவள் ஒரு மனவிலாசம் கூட இல்லாதவளாகவே இருப்பதையே இந்த சமூகம் விரும்புகிறது. எழுத்துக்களில் கூட போலிப் போர்வை போர்த்தியபடியே இருப்பதை. மகள் என்னும் முக்காடு, அம்மா என்னும் முக்காடு, சகோதரி என்னும் மு்க்காடு, மனைவி என்னும் முக்காடு. இதில் மனைவிக்கான முக்காடு போர்வை போன்றது. மூச்சுவிடக்கூட அதில் திறப்புகள் கிடையாது.

ஒரு தொழிலை, ஒரு உத்யோகத்தை ஒரு பெண் எவ்வளவு கடினமாக செய்ய நிறைவேற்றவேண்டியிருக்கிறது. இதெல்லாம் தேவையா என்ற கேள்விக்குறிகளை எதிர்நோக்கியபடியே. எதெல்லாம் ஒரு பெண்ணுக்குத்தேவை என ஆணாதிக்க மனோபாவம் உள்ள மகானுபாவர்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளின் வழியே மூச்சை அளந்து விட்டபடியும் எடுத்தபடியும் ஒரு ஆக்சிஜனற்ற குகைக்குள்ளே செல்லும்படியாய் செல்லவேண்டியிருக்கிறது. தந்தைவழி சமூகம் விதித்த கட்டுபாடுகளை தாய்வழிசமூகம் பின்பற்றுகிறது. நம் மனோபாவங்களிலேயே இது இது ஆண் செய்யலாம் தப்பில்லை. பெண் செய்தால் தப்பு என புகுத்தப்பட்டிருக்கிறது. எல்லா விலங்குகளையும் களையக் களைய மனம்சிக்கிக் கொண்ட வலை மட்டும் இன்னும் அறுபடுவதில்லை.

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, பிடிக்காதவற்றை அங்கேயே கம்பீரமாக சுட்டிக்காட்டுதல் விலக்குதல், இன்று நான் கொண்டிருக்கும் பெண்ணியல் நோக்குகள் எல்லாம் கற்பித்தவர் என் அம்மா, என் தேவதை.

காலம் கனியும் . என் மொழியை உருவாக்கிய தேவதையின் தேவந்திபோல இன்னும் பலர் வருவார்கள் . பெண்கள் வெறும் பாவை விளக்குகள் அல்ல என்பதை உணர்த்த. இதில் பென்னேஸ்வரனின், பாவண்ணனின், ஜெயமோகனின் அழகான வாழ்த்துரைகள் ஆசுவாசமளிக்கின்றன. வடக்குவாசல் இதை வெளியிட்டு பெருமையுற்றிருக்கிறார்கள். ஒரு மனுஷியின் , என் அம்மாவின் 30 ஆண்டுகால வாழ்க்கையின் அனுபவங்களின், அவற்றின் எதிர்வினைகளின் தொகுப்பு இது. அன்றிலிருந்து இன்றுவரை பெண்களுக்காக தன் குரலை எந்தப் பாசாங்குமில்லாமல் நேர்மையாக, நேர்த்தியாக பதிவு செய்திருக்கும் குரல் இது. தேவந்திக்கான முன்னுரை மட்டுமே இது, நேரம் கிடைக்குபோதெல்லாம் அவள் குரலை நான் இன்னும் ஓங்கி ஒலிப்பேன்.

டிஸ்கி..1:- வடக்குவாசல் பதிப்பகத்தின் தேவந்தி நூல். 36 கதைகள் அடங்கியது. விலை. ரூ 225. ஆசிரியர். முனைவர். திருமதி .எம். ஏ. சுசீலா.

டிஸ்கி 2. :- இவர் எழுதிய (பியோதர் தஸ்தாவ்யெஸ்கியின்) குற்றமும் தண்டனையும் குமுதத்தில் பெஸ்ட் செல்லராக அறிவிக்கப்பட்டிருந்தது.

டிஸ்கி 3 ;- இந்த டிசம்பருக்குள் வரவிருக்கும் இவரது இன்னொரு நாவல் அசடன். இடியட்டின் மொழியாக்கம். பாரதி பதிப்பகத்தில் முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

டிஸ்கி 4 ;- சகோ கணேஷ், நாஞ்சில் மனோ மற்றும் இந்தப் புத்தகம் வாங்க விரும்புவர்களுக்காக வடக்குவாசல் பதிப்பகத்தின் முகவரி மற்றும் தொலைபேசி எண்.
Vadakku Vaasal Publications.
5A/11032,Second Floor,
Gali No. 9, Sat Nagar,
Karol Bagh,
New Delhi. - 110 05.
Ph No. 91-11-25815476.
Mobile - 9910031958.
e-mail:vadakkuvaasal@gmail.com
Web site : www.vadakkuvaasal.com

12 கருத்துகள் :

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

நல்ல புத்தக அறிமுகம்

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று என் வலையில்

நடிகர் விஜய் பய(ங்கர) டேட்டா

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

The article is very Nice.
Best Wishes. vgk

ராமலக்ஷ்மி சொன்னது…

வடக்கு வாசல் பதிப்பகம் மூலமாகத் தொகுப்பை வாங்கி வைத்துள்ளேன். விரைவில் வாசிக்க வேண்டுமெனும் ஆவலைத் தூண்டும் விதமாக உள்ளது உங்கள் பகிர்வு. நன்றி தேனம்மை.

கணேஷ் சொன்னது…

வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடனே படிக்கும் எண்ணம் எழும் வண்ணம் எழுதியுள்ளீர்கள். வடக்கு வாசல் முகவரி கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். முடிந்தால் தாருங்கள் தேனக்கா...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான விமர்சனப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

புத்தகம் உடனே வாங்கி படிக்க தோணுது உங்க விமர்சனம் பார்த்துட்டு...!

middleclassmadhavi சொன்னது…

பிரமாதம்!

மதுரை சரவணன் சொன்னது…

NALLATHU PADICHCHIRUVOM...VAALTHTHUKKAL

ஹேமா சொன்னது…

புத்தகத்தை வாங்கத் தூண்டும் நல்ல அறிமுகம்.நன்றி தேனக்கா !

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ராஜா

நன்றி கோபால் சார்

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி கணேஷ், கொடுத்திருக்கிறேன்

நன்றி ராஜி

நன்றி மனோ

நன்றி மாதவி

நன்றி சரவணன்

நன்றி ஹேமா..

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...