எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 அக்டோபர், 2021

சில பார்வைகள்.. விமர்சனங்கள்.. பாராட்டுக்கள்.

 யூ ட்யூபில் என்னுடைய நூல் பார்வை குறித்தும், நூல் அறிமுகம் குறித்தும் மேலும் அமேஸானில் வெளியாகியுள்ள என்நூல்கள் குறித்தும் நண்பர்கள் சிலரின் பார்வைகளை இங்கே அறியத்தருவதில் மகிழ்கிறேன். 

1. செவ்வரத்தை என்ற நூல் பார்வை ஒன்றை யூ ட்யூபில் வெளியிட்டு இருந்தேன். 50 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு அது. முழுக்க முழுக்க ஈழம் வாழ் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அடங்கியது. அதில் 15 கதைகள் பரிசு பெற்றவை.  அதற்கு பொதி என்பவர் வான் அவை குழுமத்தில் வெளியிட்ட கருத்து இது. நன்றி பொதி சார். 


#செவ்வரத்தை#நூல்பார்வை#தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=NX_AwgcJmMU&t=8s

செவ்வாய், 24 டிசம்பர், 2019

மழையில் நனையும் வெய்யில் - ஒரு பார்வை.


மழையில் நனையும் வெய்யில் – ஒரு பார்வை

மழையில் நனையும் வெய்யில்

இந்தியாவின் முதல் கலாம் வகுப்பறை ஆசிரியரான திருமதி. பா. லெட்சுமி மிகச் சிறந்த பேச்சாளர். பல்வேறு விருதுகள் பெற்றுள்ள அவர் காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியின் தூண்களுள் ஒருவர். 

முப்பெரும் சகோதரிகள் இணைந்து பணியாற்றும் சிறப்புடைய பள்ளி காரைக்குடி மகர்நோன்புப் பொட்டலில் நூற்றாண்டு காலமாக ( அவர்களது தாத்தா, அப்பா ஆகியோர் பராமரித்து வந்த ) இருக்கும் கார்த்திகேயன் பள்ளி. அப்பள்ளியிலே சகோதரிகள் மூவரின் நூல்களும் வெளியாகி உள்ளன.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

நெஞ்சுக்குள்ளே நீ ஒளிந்திருந்தாய். - ஒரு பார்வை.


நெஞ்சுக்குள்ளே நீ ஒளிந்திருந்தாய்

அழகான நாவல் ஒன்று படித்தேன் சமீபத்தில். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வாட்ஸப் , ஃபேஸ்புக் உலகத்தில் பெரும்பாலும் ஷேர்ஸ் செய்தே வாழும் இளையதலைமுறையினர் நடுவில் லெக்ஷ்மி கருப்பையா என்ற இளவயது எழுத்தாளர் மிக அருமையான நாவல் ஒன்றைப் படைத்துள்ளார். ஆன்லைனிலும் இந்நாவல் படிக்கக் கிடைக்கிறது.

திங்கள், 29 டிசம்பர், 2014

அகநாழிகை இதழ் -7 ஒரு பார்வை.

அகநாழிகை இதழ் -7 ஒரு பார்வை. 

அகநாழிகை இதழ் -7 

அகநாழிகை இதழ் -7 ஒரு பார்வை.

ராஜ சுந்தரராஜனின் கேளாரும் வேட்ப மொழி இலக்கிய இலக்கண ஆராய்ச்சி செய்கிறது. எது ரியலிஸம், மார்டனிஸம், போஸ்ட் மார்டனிஸம், ரொமாண்டிசிஸம், நியோ ரொமாண்டிசிஸம், பற்றி விவரிக்கிறது.கவிதையின் கணங்களை பிரித்துக் காட்டுவது எனவும் சொல்லலாம்.

வியாழன், 25 டிசம்பர், 2014

சுசீலாம்மாவின் யாதுமாகி :-



சுசீலாம்மாவின் யாதுமாகி :-

குழந்தைகள் உங்கள் மூலமாக உலகத்துக்கு வந்தார்கள் ஆனாலும் ஆனால் அவர்கள் உங்களை முழுமையாகச் சார்ந்தவர்கள் அல்ல என்ற கலீல் கிப்ரானின் வாசகம் நினைவில் ஆடியது. யாதுமாகியில் சாரு என்ற மகளின் கதாபாத்திரம் வழியாக தேவி என்ற தாயின் இறந்தகால நிகழ்கால சரிதம் எடுத்தியம்பப்படுகிறது.

முழுக்க முழுக்க ஒரு மகளின் பார்வையில் தாயின் கடந்தகாலமும், அது சார்ந்த நிகழ்வுகளும் சுற்றிச் சுற்றிச் சுழன்றடிக்கிறது நம்மை. குழந்தைத் திருமணம் ஆகி பால்ய விதவையாகும் 1900களின் ஆரம்பக் கட்டத்தில் கல்வியின் இன்றியமையாமையும் பெண்களின் நிலமையையும் ஏன் ஆண்களின் கட்டுப்பெட்டித்தனமான நிலைமையையும் விவரிக்கும் இக்கதை அங்கங்கே நம்மை உறைய வைக்கிறது.

புதன், 8 ஜனவரி, 2014

பாராவின் கருவேல நிழலும் மண்டூகம் துப்பும் மொழியும்.

பாராவின் கருவேல நிழலும் மண்டூகம் துப்பும் மொழியும்

சிவகங்கைச் சீமையில் கருவை மரங்கள் அதிகம். அதன் நிழல் என்று ஏதுமில்லை. அதன் நிழலில் யாரும் அமர முடியாது. வெக்கையும் புழுக்கமும் நிரம்பிய கரம்பைக் காட்டில் அடர்ந்து முளைத்திருக்கும் கருவைகள்.

வெட்டிய யாருக்கும் முள் குத்தாமல் இருந்திருக்க முடியாது.அந்தக் கருவேல நிழல் தலைப்பில் தொகுக்கப்பட்ட வலையுலக நண்பர் ராஜாராம் அவர்களின் கவிதைத் தொகுப்புப் படித்துப் பலகாலம் ஆயிற்று.

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

சுஜாதா நினைவுப் புனைவு 2009 எனது பார்வையில்..

சுஜாதா நினைவுப் புனைவு 2009

அறிவியல் புனைகதைகள் என்றாலே மிக ஆழமாக நம்முள் பதிந்து போயிருக்கும் பெயர் சுஜாதா. அவரின் எழுத்தை மீறி நம்மால் எதையும் ரசிக்க முடியுமா என்ற சந்தேகத்தோடே இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.

உண்மையிலேயே மிக அருமையான கதைகளைப் போட்டியின் மூலம் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கி இருக்கிறது ஆழி பதிப்பகம். இதன் தொகுப்பாசிரியர் சந்திரன் , இரா. முருகன் அவர்களின் துணையோடு தேர்வு செய்திருக்கிறார்.

செவ்வாய், 16 ஜூலை, 2013

தேவந்தியும் நானும்.. ஒரு மகளின் பார்வை.

தேவந்தியும் நானும்.. ஒரு மகளின் பார்வை.

அம்மாவை விமர்சிக்கலாமா.. உள்ளும் புறமும் அறிந்த அம்மாவாய் இருப்பின் விமர்சிக்கலாம் என்றே தோன்றுகிறது. பிடித்தது பிடிக்காதது எல்லாம் அவர்களுக்குத் தெரிந்தாலும் மகளாய் இங்கே ரசனைப் பார்வை மட்டுமே மிச்சமிருக்கிறது.. அம்மாக்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட தேவதைகள் என்பது இன்னொரு முறை நிரூபணமாகி இருக்கிறது.

வியாழன், 4 ஜூலை, 2013

பணம் செய்ய விரும்பு...

பணம் செய்ய விரும்பு...

அறம் செய விரும்பு என சொல்லி இருக்காங்க பெரியவங்க.. ஆனா இந்த கார்ப்பரேட் உலகத்துல நாம பணம் செய விரும்பணும்னு நாணயம் நாகப்பனும் புகழேந்தியும் சொல்றாங்க. நாணயம் நாகப்பன் சென்னை பங்குச் சந்தை இயக்குநர். புகழேந்தி பொறியாளர்.

ஒரு நாட்டோட பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் விஷயங்களில் பங்குச் சந்தை முக்கியமானது. தனி மனிதன் உயர்வதற்கும் நாட்டை உயர்த்துவதற்கும் கூட பொருளாதாரம் இன்றியமையாதது. பணத்தைப் பணத்தால் பெருக்கும் உபாயத்தை இதில் சொல்லி இருக்காங்க. நம்ம நாட்டுல இரண்டு சதவீதம் மக்கள்தான் பங்குச் சந்தையில் ஈடுபட்டு இருக்காங்கன்னு சொல்லி இருக்காங்க இவங்க.

புதன், 26 ஜூன், 2013

அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின.?..



அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின.?..


நாம் சின்னப் பிள்ளையில் அம்புலிமாமா, கோகுலம், பாப்பா மலர், பாலமித்ரா,அணில், முயல்  போன்ற புத்தகங்கள் படித்திருக்கிறோம்.   அழ. வள்ளியப்பாவின் குழந்தைக் கவிதைகளும், வாண்டுமாமாவின் கதைகளும் என்றால் நேரம் காலம் தெரியாமல்  படித்து ரசித்திருக்கிறோம்.

இதுபோக தாத்தா பாட்டி போன்றோரும் அம்மா, அப்பாவும் கதை சொல்லி ஊட்டி வளர்த்திருப்பார்கள். இன்று நகரங்களில் வாழும் ஏன் கிராமங்களில் வாழும் குழந்தைகளுக்குக் கூட கல்வியைத் தாண்டி ஏதும் சிந்திக்க முடியவில்லை.