எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

ஏஜண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா - சினிமா விமர்சனம்.

RILIGIOUS CRIMES.

இதை துப்புத் துலக்குவதுதான் இந்தப் படம். அதற்கு நகைச்சுவை முலாம் பூசி அழகாகக் கொடுத்திருக்கிறார்கள்.ஹீரோ & ஹீரோயின் இளமை ததும்புகிறார்கள். அதுவும் ஹீரோவின் புன்னகையும் ஹீரோயின் சினேகாவின் உருளும் கிண்டல் விழிகளும் செம.

மற்ற துப்பறியும் படங்கள் போல லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது. ஒரு டிடக்டிவ் (கணேஷ் ) வசந்த பாணியில். அவருக்கு ஒரு பெண் உதவியாளர். இவர்கள் இருவரும் சேர்ந்து மதச் சடங்குகள் என்று கூறி நிகழும் குற்றங்களை ஆய்ந்து கண்டுபிடிக்கிறார்கள்.


சுமார் ஒன்றரைக் கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் மிக நல்ல வசூலைத் தந்திருப்பதாகக் கேள்வி.


நவீன் பாலிஷெட்டி இதன் ஹீரோ ஏஜண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா , ஓபனிங் சீனிலேயே இவரும் இவரது உதவியாளர் ஸ்நேகா என்ற ச்ருதி ஷர்மாவும் ரிப்பன் வெட்டி ஒரு அறையைத் திறந்து ஒரு கொலையை துப்புத் துலக்குகிறார்கள். பின் தொடர்ந்து வந்து முறைக்கும் போலீசாரிடம் எஃப் பி ஐ என்கிறார்கள். மிரண்டு போகிறது போலீஸ். அதன் எக்பான்ஷன் என்ன எனக் கேட்கும்போது ஃபாத்திமா பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் என்று ஹீரோ சொல்ல இருவரையும் தூக்கிக் கடாசுகிறது போலீஸ். இப்போது புரிந்திருக்குமே இது ஒரு காமெடி த்ரில்லர் என்று :)

இருந்தும் தன்னார்வலர்களாக இருவருமே இதுபோல் கேஸ்களை எடுத்துத் துப்புத் துலக்கி வருகிறார்கள். எதேச்சையாக மாருதி ராவ் என்பவரை ஒரு லாக்கப்பில் சந்திக்கும் ஹீரோ அவர் கூறும் கதையை நம்பி ஒரு பெண்ணைத் தேடப் போக வேறு ஒன்றில் வந்து முடிகிறது கதை.  அஜய், ஹர்ஷா, வசுதா ஆகியோர் அப்பெண் இறப்பில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஹீரோ நினைக்க வேறொரு கோணத்தில் வேகமெடுக்கும் கதை, முடிவில் இந்தியர்களின் பழமை, மற்றும் மூடப் பழக்கவழக்கங்களை லிஸ்ட் போடுகிறது. அதே போல் அவர்கள் ஆத்மநம்பிக்கையுடன் செய்யும் செயலை வியாபாரமாக்கிக் கொழிக்கும் பல்வேறு வியாபாரிகளின் முகங்களையும் தோலுரிக்கிறது.

இதில் பல்வேறு கேள்விகள் எழுந்தாலும் எடுத்துக்கொண்ட சப்ஜெக்ட் வித்யாசமான ஒன்று என்பதால் பாராட்ட நினைக்கிறேன். ஆதம்பாக்கம், கூட்ஸ்வண்டி, அடையாளம் தெரியாத பிணங்கள், ஒரு என் ஜி ஓவின் முத்திரை, எனக் கண்டுபிடித்து இவற்றில் ராஜஸ்தானிலிருந்து காசிக்குச் செல்ல  சென்னையின் பக்கமிருக்கும் ஆதம்பாக்கமா புகைவண்டி வழி என விழிபிதுங்க வைக்கிறார்கள். எந்தப் போராட்டமும் சண்டையும் விசாரிப்பும் இல்லாமல் ராஜஸ்தானுக்கு ஒரே ட்ரெயினைப் பிடித்து நேரே குற்றவாளியின் இருப்பிடத்துக்கே சென்று பிடித்து விடுகிறார்கள். நோ டிஷ்யூம் டிஷ்யூம்.

கண்டினியுட்டி இருந்தாலும் பல்வேறு இடங்களில் குறும்படம் அல்லது டிவி சீரியல் பார்க்கிறோமோ என்ற அளவிலும் டிடெக்டிவ் எல்லா இடத்திலும் தன்னை உதவியாளரிடம் ஏஜண்ட் என்று கூறும்படி சொல்வதும் அதையே காமடியாக்கியும் அவரின் பேச்சுக்களை அங்கங்கே காமடியாக்கியும் நம்மை சிரிக்க வைக்கிறோம் என்று கொஞ்சம் சொதப்புகிறார்கள். புதிதாய் வரும் பாபி என்ற புது டிடெக்டிவும் இந்த டிடெக்டிவின் பாணியில் உலகை உலுப்பப் போவதாகக் கூறி சிரிக்க வைக்கிறார்.

காசியில் இறந்தவர்களுக்கு ஈமக் கிரியை செய்வதை இந்துக்கள் புனிதமாக நினைக்கிறார்கள். ஆனால் அதையே ஒரு பிஸினஸாக ஒரு கும்பல் செய்து ( செய்யாமல் காசு வாங்கிப் )  பிழைக்கிறது. மேலும் இறந்தவர்களின் கைரேகையை எடுத்து பல்வேறு கிரிமினல் குற்றங்களுக்கு வழங்குகிறது என்பது அதிர்ச்சிச் செய்தி.

அஸ்தியை காசியில் கரைப்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப் படத்தில் இறந்தவர்களின் உடல்களையே அனுப்புகிறார்கள். அவை  கூட்ஸ் வண்டியில் கொண்டு செல்லப்பட்டு ரயில்வே ட்ராக்கில் விழ வைக்கப்படுகின்றன. ஹீரோவின் தாயும் உடல்நலக்குறைவால் இறந்தபின்  இம்மாதிரி அனுப்பப்பட்டவர் என்பதால் ஹீரோவோடு நாமும் மிகுந்த மனவருத்தம் அடைகிறோம். அடையாளம் தெரியாத பிணங்கள் என்பதால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு அவை சில நாட்களுக்குப் பின் யாரும் உரிமை கோரி வராததால் எரியூட்டப்படுகின்றன.

பக்தியின் பெயரால் மண்டையில் தேங்காய் உடைப்பது, குழந்தைகளை உயரத்தில் இருந்து தூக்கித்  கீழே துணியின் மேல் போடுவது, மிருகங்களை விட்டு மிதிக்கச் செய்வது போன்ற மூட நம்பிக்கைகளைச் சாடுகிறார்கள். ஆமா சொல்ல மறந்துட்டேன். இது  டங்க் சிக் டங்க் சிக் என்றோ டக்குட்டா டக்குட்டா என்றோ ஹீரோவும் ஹீரோயினும் ஆடிப்பாடாத முதல் தெலுங்குப் படம். !!!

மொத்தத்தில் வித்யாசமான யதார்த்தமான படம். அநேக இடங்களில் லாஜிக் இல்லாவிட்டாலும் சொல்ல வந்த விஷயத்தின் வீர்யம் பெரிது. அதுனால  பாருங்க.

இந்தப் படத்துக்கு என் ரேட்டிங் நாலரை ஸ்டார் *****

5 கருத்துகள்:

  1. அட தெலுங்கு/தெலுகு படமா.... நான் வரல விளையாட்டுக்கு..... முழு நீள தெலுகு படம் பார்க்க ரொம்பவே பொறுமை வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாருங்க படம் கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும் 30Minite அப்புறம் படம் வேகம் குறையாது

      நீக்கு
  2. பிரைமில் இருக்கிறது. புரியாதோ என்று இன்னும் பார்க்கவில்லை. சில படங்கள் தமிழ் டயலாக்கில் வரும். அப்படி வந்தால் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. தெலுங்கு படமா சப்டைட்டிலுடன் அதுவும் தமிழில் வந்தால் நன்றாக இருக்கும். ஆனால் காமெடி என்றால் ஒரிஜனல் புரிய வேண்டுமே.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  4. இல்லை வெங்கட் சகோ இந்தப் படம் நல்லாருக்கு :)

    பார்க்கலாம் ஸ்ரீராம்

    உண்மைதான் பெயரில்லா

    சப்டைட்டில் இருக்கு துளசி சகோ. அதுனாலதான் பார்த்தோம் நெட்ஃப்ளிக்ஸ்ல.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...