எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

செலவழிப்பது எப்படி ? HOW TO SPEND IT.

என்னது செலவழிப்பது எப்படியா.. ஆமாங்க ஆமாம் அதை சொல்லித்தருது ஃபைனான்ஷியல் டைம்ஸ் பேப்பரோட வர்ற இந்த இலவச மேகஸின். யூரோப் முழுக்க வர்ற மேகஸீன் இது. இன்னும் இதில் என்னென்ன இருக்கு, எப்பிடி எல்லாம் செலவழிக்கலாம், எதிலெல்லாம் செலவழிக்கலாம்னு பார்க்கலாம் வாங்க. !


புக்கே ரெண்டு ஏ ஃபோர் ஷீட்ஸை இணைச்ச பிரம்மாண்ட சைஸில் இருக்கு. சொல்லப்போனா பேப்பரை மடிச்சா இருக்கும் சைஸ். இதுல உலகளாவிய பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களோடு அவை எதனால் எந்தெந்த நிகழ்வுகளை/ விளையாட்டுக்களை/ போட்டிகளை நடத்துகின்றன, எப்படிப் புகழ் பெற்றனன்னும் தெரிய வருது.


பயணங்கள், ஹோட்டல்கள், லக்ஸுரி வீடுகள் ( பங்களாக்கள், அரண்மனைகள், வில்லாக்கள் ) , ரெஸார்ட்டுகள், தீவுகள், ப்ரைவேட் ஹோம்ஸ், எஸ்டேட்ஸ், ரியால்டர்ஸ்,  க்ளப்ஸ், வங்கிகள், உணவுகள், உடைகள் ( காண்டினெண்டல் க்யுஸைன்ஸ் ) , ரியல் எஸ்டேட்ஸ், இன்வெஸ்ட்மெண்ட்ஸ், சுற்றுலாக்கள், ஓவியங்கள், தொப்பிகள், நகைகள், கூலர்ஸ், செருப்புகள், டவல்ஸ், டீ டவல்ஸ், ஸ்வெட்டர்ஸ், ட்ராக் சூட்ஸ், காஷுவல்ஸ் , சூட்கேஸுகள், சோஃபாக்கள், கவுச்சுகள், படுக்கைகள், செல்ஃபோன்கள், மது பானங்கள், பர்ஃப்யூம்ஸ், கார்ஸ் , ஆண்டிக்ஸ், ஸ்கல்ப்சர்ஸ்,  கோல்ஃப், ஸ்பா , காஃபி மெஷின், ஆகியன புத்தம்புது மாடல்களைக் கொண்டு விளம்பரப்படுத்தப்படுகின்றன. மினிமம் 45 டாலரில் இருந்து ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள பொருட்கள் ( வைரங்கள், ரோலக்ஸ் வாட்சுகள் ) விளம்பரப்படுத்தப்படுகின்றன.இவைபோக சிற்பங்கள், ஓவியங்களும் மற்ற கலைகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

ஃபேஷன் டிவிக்களில் அறிமுகப்படுத்தும் உடைகளை யார்தான் உடுத்துவார்களோ என எண்ணியதுண்டு. இங்கே யூரோப் முழுவதும் அம்மாதிரி டிசைனர் வேர் உடைகளையே விரும்பி அணிகிறார்கள். விதம் விதமான இண்டீரியர் டெகரேஷன்களைக் காட்டி அவ்விதம் வாழத் தூண்டுகிறது இந்தப் புத்தகம்.

யாட்ச் எனப்படும் பாய்மரப் படகுப் போட்டிகளை நடத்திப் பரிசுகளை வழங்குவதே ரோலக்ஸ் வாட்ச் கம்பெனிதான். 1958 இல் நியூயார்க் யாட்ச் க்ளப்புடன் தொடங்கியது ரோலக்ஸின் வெற்றிப் பயணம். தண்ணீரில் நனைந்தாலும் கெடாது என்று  சர்ஃபிங் , ஸ்கீயிங் ஆகியன செய்யும் மாடல்கள் இக்கைக்கடிகாரங்களை அணிந்து போஸ் கொடுக்கிறார்கள் ! யாட்ச் போட்டிகளும் மொனோக்கோ யாட்ச் ஷோக்களும் கூட அறிவிக்கப்பட்டுள்ளன.

எல்லா நாட்டு மக்களும் அணிய வேண்டும் என்பதற்காகவே எல்லா நாட்டு மாடல்களையும் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். கறுப்பு, சிவப்பு மாடல்கள் எல்லாமே எல்லா வகை மக்களின் அபிமானத்தையும் பெறத்தான். எலக்டிபிள்ஸ் என்ற பக்கம் உயர்தர மக்களுக்காகப் பொருட்களைப்  பரிந்துரைக்கிறது. அதிகமில்லை ஜெண்டில் மேன் சுமார் 300 யூரோவில்  இருந்து 130,000 யூரோ வரைதான்.

ட்ராவலிஸ்டா, டெக்னோபோலிஸ், ஈ எடிட், WRY SOCIETY , தெ கேனட், தெ காப்லெட், கிஃப்ட் கைட் ஆகியன ரெகுலர் பக்கங்கள்.

வாலெட்டுகள், மணிபர்சுகள், கைப்பைகளுக்கு  எட்டிங்கர், லூயிஸ் வுட்டன், டாட்ஸ் ( இதற்கு அழகான சைனீஸ், ஃப்ரெஞ்ச் மாடல்கள் ! ) , அஸ்பினால், க்யுச்சி, பர்பெரி, ஜியார்ஜியோ அர்மானி.

கண்ணாடிகளுக்கு லிண்ட்பர்க் ஃபர்னிச்சர்களுக்கு ரொனால்ட் பிலிப்ஸ், ஜெம்ஸ் ஸ்டோனுக்கு ஃபேபெர்ஜ், டோலிஸ் & கேபன்னா.

வாட்சுகளுக்கு ப்ரிமாண்ட், ரோலக்ஸ், ஹாரிஸ் வின்ஸ்டன், ப்ரைட்லிங், பேடெக் ஃபிலிப் ஜெனிவே, ( வைரங்கள் பதித்த கைக்கெடிகாரங்களும்  உண்டு ! ) , வாச்செரன் காண்ஸ்டாண்டின், ஒமேகா, வில்லியம் & சன், ஜெய்கர் லீகோட்டர் போலாரிஸ், ஜேகப் & கோ, உலிஸீ நார்டின்,  பிவிஎல்காரி ரோமா, பேஜட்.

வைரங்களுக்கு சௌமெட், பிவிஎல்காரி ரோமா, கிராஃப், ஜியார்ஜ் ஜென்சன், கசெண்ட்ரா கோட், சோப்பேர்ட், டீபீர்ஸ், எலிஸபெத் கேஜ், கிகி மெக்டோனோஹ், நிக்வெஸா, பூடில்ஸ், டயர், ஹாரி வின்ஸ்டன், லூயிஸ் உட்டன், சேனல், டிஃபானி, ஒமேகா, வான் க்ளிஃப் & ஆர்ப்பெல்ஸ், மௌஸாயிஃப், புச்செரர், பேஜட், போக்ஹோஸெய்னா.

உடைகளுக்கு லோரோ பியானொ, மைக்கேல் கோர். எர்மானோ செர்வினோ, ரிச்சர்ட் மில்லே பொடிக், சேனல், லோரோ பியானா.

ஹோட்டல்களுக்கு ஓபராய்கள், சவோய், மாண்ட்ரியன் ஓரியண்டல், பாரமவுண்ட் ஹவுஸ் ஹோட்டல், ரோக்கோ ஃபோர்ட் ஹோட்டல்ஸ்.

விமானப் பயணங்களுக்கு நெட்ஜெட்ஸ், லூனா ஜெட்ஸ். இதில் லூனா ஜெட்ஸுக்கு விளம்பரமாக பிஸினஸ் க்ளாஸில் இரண்டு நாய்களை அமர்த்தி இருக்கிறார்கள். செல்பவர்களையா அல்லது நாய்களையும் கூட அசங்காமல் கொண்டே விடுவோம் என்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

அவ்வளவு ஏன் கறை பிடிக்காத கார்ப்பெட்டுகளுக்கு பெரின்னியல்ஸ் கார்ப்பெட் மேலே ரெட் ஒயினைக் கொட்டி ஒட்டாது என்கிறார்கள் !

வைரநகையை ஒரு பெண் தானே டிஸைன் செய்து எங்கள் பட்ஜெட்டுக்குள் வாங்கவே சிக்கன டிஸைன்களையும் புதுமாடல் டிஸைன்களையும் வாங்குகிறோம் என்கிறார்.

எப்படி செலவழிக்க வேண்டும் என howtospendit.com வெப்சைட் போட்டுச் சொல்லித்தருகிறார்கள். ! ஐந்து கடல்கள், ஏழு கண்டங்களுக்கு ஒரே பயணமாக தெ வேர்ல்ட் என்னும் யாட்சில் - மாபெரும் கப்பலில் சென்று சுற்றிப் பார்ப்பதைச் சிலாகிக்கிறார்கள் !

நூறு வருடங்களாக ஒரே மாதிரி வெள்ளை டீஷர்ட்டுகளை உற்பத்தி செய்யும் சன்ஸ்பெல் என்ற கம்பெனியும் இருக்கிறது !. தெ காப்லெட்டில் விதம் விதமான குடி வகைகள், விதம் விதமாகப் பதப்படுத்தப்பட்டு விதம் விதமான முறையில் பரிமாறப்படுகின்றன.

WRY SOCIETY  துர்க்கிஷ் ஹமாம், வாட்ஸப் க்ரூப் அட்ராசிட்டீஸ், தெ நியூ ஆல்ஃபா மேல், என அனைத்தையும் கிண்டலடிக்கின்றது. !

நம்ம ஜெய்ப்பூர், கேரளாவெல்லாம் கூட இந்த புத்தகத்தின் சுற்றுலா லிஸ்டில் இருப்பது பார்த்துப் பெருமையாயிருந்தது.

மொத்தத்தில் செலவு செய்ய நீங்க தயாரா.. இல்லாட்டி இந்த புத்தகங்களை எல்லாம் ஒரு புரட்டு புரட்டுங்க. வாழ்க்கை வாழ்வதற்கேன்னு கடன் ( லோன் )  வாங்கிக் கூட செலவு செய்யக் கத்துக் கொடுக்கும். பண வீக்கத்தைத் தடுக்கும், பொருளாதாரத்தைப் பாதுகாக்கும், மணி ரொட்டேஷன்கிறது இம்மாதிரி ஷாப்பிங்குகளினாலும் பெருகுதுன்னு சொல்றாங்க. எப்பிடியோ செலவு செய்யணும்கிற முடிவை இந்தப் புத்தகம் ஏற்படுத்திரும். பின்னே வாரம் ஒண்ணு வருதுல்ல, தொடர்ந்து ஞாபகப் “ படுத்த “  :)

எங்கே கிளம்பிட்டீங்க. ரியல் ஷாப்பிங்குக்கா, விண்டோ ஷாப்பிங்குக்கா, இல்ல அமேஸான்லேயே ஆர்டர் கொடுக்கப் போறீங்களா :) 

3 கருத்துகள்:

 1. செலவு செய்வது எப்படி - ஹாஹா... எத்தனையோ வழிகள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன. இணையதளம் பார்க்க ஆவல். பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. சிந்திக்க வைக்கும் சிறப்பான பதிவு

  பதிலளிநீக்கு
 3. நன்றி வெங்கட் சகோ

  நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...