எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 18 நவம்பர், 2014

வழித்துணையும் சுமைதாங்கியும்.

தலைக்குமேல் ஒரு கூரை
பக்கவாட்டு வெய்யில்
சல்லடைத்துளி மழை
ஒரு முழம் துணி
எப்போதோ ஒரு தீபமும்
பிள்ளைகள் சூழ்ந்து ஆடும் போதில்
சிதறிய தேங்காத்துண்டுகளும்.
இதற்குமேல் ஆசைப்படுவதில்லை
எங்கள் தெருவோரக் கடவுள்..
போகும் திசைக்கெல்லாம்
கைபிடித்துக் கூடவே வருவதும்
ஓய்ந்தமர்ந்த நேரங்களில்
எங்கள் திட்டைப் பெற்றுக்கொள்வதும்
அவர் பொழுதுபோக்கு.

திங்கள், 17 நவம்பர், 2014

கணவன் அமைவதெல்லாம்..

61. சகோ எல்லாரும் பிறந்த வருஷத்த இங்க எழுதுங்க.. யார் அண்ணன், யார் தம்பின்னு தெரியல.. ( நேத்துதான் காலேஜ் படிக்கிற மாதிரி இருந்த ஒரு தம்பிக்கு காலேஜ் போற மக இருக்கான்னு தெரிஞ்சுச்சு.. ! )

*******************************************

62. எது ரொம்பப் பிடிக்குதோ அதே ஒரு சமயம் வெறுக்குது. எது ரொம்ப வெறுக்குதோ அதே ரொம்பப் பிடிக்குது.. ஹாஹா கொழப்பமா இருக்கா எனக்கும்தான் :)

******************************************

63. முன்ன பத்துமணியானா பக்கத்துவீட்டுல கொஞ்சநேரம் அரட்டை அடிப்போம். இப்ப ஃபேஸ்புக்குல.. மனுஷ சுபாவம் மாறவே இல்ல.  :)

******************************************

64. இனிப்பு சீடை விக்குது., பட்சணமெல்லாம் விக்குது., பிரியாணி கூட விக்குது.. கொழுக்கட்டையும் ., சர்க்கரைப் பொங்கலும் கூட வித்தா நல்லா இருக்கும்.. :) :) :)

******************************************

65. மிட்நைட்ல முழிப்பு வந்தாலும் ஃபேஸ்புக்கை எட்டிப் பார்க்கலாமான்னு நெனைக்கிறது எத்தனை பேரு. :)

********************************************

66. வெளியே ஒரே மழை.. ஜன்னலோரம் உக்கார்ந்து கல்கியோட ஒரு புத்தகமும் வேகவைச்ச சோளக்கருதும்.. எது டேஸ்டுன்னு சொல்ல முடியல.. :)

********************************************

67. புயலுக்குப் பின்னே அமைதி என்பது இதுதானா.. நிசப்தம் கூடக் காதை அறைகிறது. பக்கத்துணையாக பக்கத்துக் காம்பவுண்டில் ஒரு சின்ன நாய்க்குட்டி பிஞ்சுக்குரலில் கத்திக் கொண்டே இருக்கிறது. எடுத்து வளர்க்கிறாங்களா.. அல்லது அம்மாவைப் பிரிந்த துயரமா தெரியலை.. என்னவோ போல இருக்கு..

சனி, 15 நவம்பர், 2014

பத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள் பாகம் 2வள் புதியவளுக்காக விஐபியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் அதைப் பற்றிய விவரத்தை அனுப்பினால் புடவை பரிசு  என்று அறிவித்திருந்தார் மை பாரதிராஜா. உடனே எங்கள் முகநூல் நண்பர்( இயக்குநர் & நடிகர்  சேரன் பாண்டியன் ) சேரன் அவர்களை  நாங்கள் எங்கள் அன்பு ராஜிக்கா சிங்கப்பூரிலிருந்து வந்தபோது பார்க்கச் சென்றோம். அப்போது எடுத்த புகைப்படத்தைக் குறிப்போடு எழுதி அனுப்பினேன். உடன் புடவைப் பார்சல் வந்துவிட்டது.
 


இவள் புதியவளில் வலைப்பூக்களில் கலக்கிவரும் புயல் பூக்கள் அறிமுகத்துக்குப் பின் கவிதைகள் கட்டுரைகள் வெளிவரத் துவங்கின. கோதை, ஆண்டாள், வெங்கட் சபா, தேனு, தேனம்மைலெக்ஷ்மணன் என்று புனை பெயரிலும் சொந்தப் பெயரிலும் எழுதத் துவங்கினேன். சில சமயம் என்னுடைய கட்டுரைகளும் வாங்கிக்கொடுத்த கட்டுரைகளுமாக 6, 7 கூட இடம்பெறத் துவங்கின காலம் அது.அந்த கால கட்டத்தில் இரு கவிதைகளை என் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார்கள். !

சாட்டர்டே ஜாலி கார்னர். பத்மஸ்ரீ விஜயகுமாரும் அகஸ்தியர் கூடமும்.

என் முகநூல் சகோதரர் பத்மஸ்ரீ விஜயகுமார். பத்மஸ்ரீ என்பது அவரின் கடைப் பெயர். ( பேரோடு சேர்ந்து ஒலிக்கும்போது விருதுப் பெயர்போல் இருக்கிறதே  என்று நினைத்தேன்) . எனவே மனைவியோ, தாயோ என்ற குழப்பம் வேண்டாம். :)

இவர் சென்ற இதழ் சக்தி விகடனில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தில் இடம் பெற்றிருந்தார். ஆச்சர்யமாக இருந்தது. சின்ன வயதிலேயே ஆன்மீகத் தேடல் அதிகம் உள்ள சகோதரர்.

{இங்கே ஹைதையில் பௌர்ணமி அன்று சத்குரு கலந்துகொள்ளும் நிகழ்வுக்கு நான் சென்று வரவேண்டும் என்று கூறி விபரங்கள் அனுப்பினார். ஆனால் என்னால் சென்று வர இயலாத அளவு வீட்டிலும் விசேஷங்கள். :) திடீரென்று லீவ் கிடைத்து கணவர் , குழந்தைகள் எல்லாரும் ஒண்ணா இருந்தாலே விசேஷம்தானே :) }

விஜய் கோவையை இருப்பிடமாகக் கொண்ட மெக்கானிக்கல் இன்ஜினியர். இளம் வயதுதான் என்றாலும் ராம்சுரத் குமார், சத்குரு ஜக்கிவாசுதேவ், அகத்தியர் படங்களைத் தன் முகப்புப்படமாக வைத்திருப்பார்.

மலை சார்ந்த புகைப்படங்கள் அடிக்கடி இடம் பெறவே அவரிடம் மெசேஜ் செய்து கேட்டதில் மலைப்பயணங்களில் (அதுவும் மனிதர்கள் அதிகம் பயணித்திராத மலைப் ப்ரதேசங்களுக்குச் செல்வதில் ) அதி விருப்பம் எனச் சொன்னார். அவர் பயணித்த ஒரு மலைப் பயணத்தைப் பற்றிக் கேட்டவுடன் குறுமுனி அகத்தியர் உறைந்திருக்கும் பொதிகை மலை பற்றியும் அங்கே பயணம் செய்து வந்தது பற்றியும் எழுதி அனுப்பினார்.

///விஜய் நீங்கள் சென்று வந்த ஒரு மலைப்பயணத்தைப் பற்றி சும்மாவின் வாசகர்களுக்குக் கூறுங்கள். ? (என்னென்ன இடையூறுகளைக் கடந்தீர்கள் ? மேலும் மலையேற்றம் செய்ய விரும்புபவர்கள் கைக்கொள்ள வேண்டியது என்ன. ?உங்கள் அனுபவங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம்)  ///

பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல் ....

மேற்கு மலை தொடரில் தமிழக கேரள எல்லை பகுதியில், பல அரிய உயிரினங்களின் வாழ்விடமாக இருக்கும் செங்குத்தான மலை மலையின் உச்சியில் வீற்றிருக்கும் அகத்திய மாமுனியை காண பயணமானோம்.. நண்பர்களுடன்.

பல மூலிகைகளை தழுவி வந்து நம்மை வருடி செல்லும் மெல்லிய தென்றல்...

வெள்ளி, 14 நவம்பர், 2014

அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

41. யாருடைய அங்கீகாரத்துக்காகவும் பூ மலர்வதில்லை. அது போல யாருடைய அங்கீகாரத்துக்காகவும் பெண்கள் எழுதுவதில்லை. இதுதான் எழுத்து என்று யாரும் சட்டமும் கட்டமும் போட்டுவிட முடியாது. தன்னுடைய கருத்தை தான் வாழும் சூழலில், தனக்கு ஏற்படும் அனுபவங்களில், தன் முன் நடக்கும் நிகழ்வுகளில் தன்னைக் கடக்கும் நிகழ்வுகளை, தான் வெளிப்படுத்த முடிந்த மொழியில் , நடையில் கதையாகவோ கவிதையாகவோ கட்டுரையாகவோ படைக்கிறார்கள். இதற்குப் பகடி எதற்கு.

***************************************************

42. படைப்பாளர்கள் வேறு அவர்களின் படைப்புகள் வேறு என்பது வாசக மனநிலைக்குப் புரிவதில்லை. சிலர் மட்டுமே விதிவிலக்காக இருக்கலாம்.

படைப்பவர்களின் படைப்பு மட்டுமே வாசகருக்கு நெருக்கமானதாக இருக்கிறது. பெரும்பாலான சமயங்களில் அது மட்டுமே போதும்.

மிகத் தீவிரமான ரசிக மனநிலையில் ஒரு படைப்பாளியை ( எழுத்தாளர்/ நடிகர்/ இயக்குநர் ) நேரில் சந்திப்பதோ உரையாடுவதோ அதீத வெறுப்பைக் கொடுத்து விடுகிறது.

சில சமயங்களில் அவர்களின் பிற்போக்குத்தனமான , நயமற்ற பகிர்தல்களால் அவர்களைப் பற்றி நாம் கட்டமைத்த பிம்பம் கலைந்துவிடுகிறது. அந்தப் படைப்பு அதன் பொலிவை இழக்காவிட்டாலும் ஒரு கசப்பு அடித்தங்கி விடுகிறது.

வியாழன், 13 நவம்பர், 2014

ஒற்றைச்சூரியனாய்...

1.ஒற்றைச்சூரியனாய்
நீ பிறந்தாய்.
சந்தோஷ மழையில்
வீடே வானவில்லானது. 

2. முத்துக்களைப் போல
உருள்கிறது உன் புன்னகை
பார்வையால் கோர்த்து
ரசிக்கிறேன் நான்.

3. என்னைத்தவிர நீ
யாருக்கும் கொடுப்பதில்லை
உன் எச்சிலிட்ட முத்தம்.

4. சாமானைப் பரப்பி
ஜலதரங்கம் செய்வாய்
கூசும் காதுகளோடு ரசிப்பேன் நான்.

5. கடவுள் நம்பிக்கை
இல்லாதிருந்தேன்
மகளெனும் தேவதையைப்
பார்க்கும்வரை.

செவ்வாய், 11 நவம்பர், 2014

அதிர்ஷ்டப் புல்அதிர்ஷ்டப் புல்.


வீட்டில் அதிர்ஷ்டத்துக்கு எத்தனையோ வளர்ப்பாங்க. மீன், மணி ப்ளாண்ட் அப்பிடின்னு. இப்ப நிறையப் பேர் மூங்கில் வளர்க்கிறாங்க அதுதாங்க ட்ராகேனா ப்ரவுனி ( DRACAENA BRAUNII) அப்பிடிங்கிற புல் வகையைச் சார்ந்த மூங்கில். பொதுவா மூங்கில் அல்லது பிரம்புல பின்னின கூடைசேர், சோஃபாதான் பார்த்திருப்போம். இத சாண்டர்னு ஒரு தோட்டக்காரர் பேரோட சேர்த்து ட்ராகேனா சாண்டரியனான்னு அழைக்கப்படுது.

திங்கள், 10 நவம்பர், 2014

நான் படித்த புத்தகங்கள். - பாகம் 1.1. புதுமைப்பித்தன் - சிறுகதைத் தொகுப்பு
2. லா ச. ரா.
3. சுந்தர காண்டம் – ஜெயகாந்தன்
4. அன்பே ஆரமுதே – தி. ஜா
5. மரப்பசு – தி. ஜா.
6. விமோசனம் – அசோகமித்திரன்
7. தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி
8. புளியமரம் – சுந்தர ராமசாமி
9. ஜே ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
10. சந்தனக் காடுகள் – வாஸந்தி
11. வீடு – இராஜம் கிருஷ்ணன்
12. மனிதர்கள் பாதிநேரம் தூங்குகிறார்கள் – வாஸந்தி
13. நளபாகம் – தி. ஜா.
14. காகிதச் சங்கிலி – சுஜாதா
15. சுருதி பேதங்கள். – வாஸந்தி
16. இடைவெளிகள் தொடர்கின்றன – வாஸந்தி.
17. இரவீந்திரன் கதைத் திரட்டு – தண்டலம் நா. குமாரஸ்வாமி
18. பாதையோரப் பூக்கள் – வாஸந்தி
19. அனுமானங்கள் நம்பிக்கைகள் – வாஸந்தி. 
20. நம்பமாட்டேளே – ஜெயகாந்தன்
21. கலைக்கமுடியாத ஒப்பனைகள் – வண்ணதாசன்
22. ஜீவனாம்சம் – சி. சு. செல்லப்பா.
23. சிறுகதைத் தொகுதி 1 – சி. சு. செல்லப்பா
24. சிறுகதைத் தொகுதி 2 – சி. சு. செல்லப்பா
25. கிழக்கு வெளுத்தது – வை. மு. கோதைநாயகி அம்மாள்

சனி, 8 நவம்பர், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். இராஜேஸ்வரி ஜெகமணியும் ஜெகத்ரட்சகர்களும்.

இராஜேஸ்வரி ஜெகமணி. முதலிடம் பெற்ற வலைப்பதிவர். எனக்குத் தெரிந்து சித்ரா சாலமனுக்குப் பிறகு பின்னூட்டமிடுவதில் அதிக வலைப்பதிவுகளில் முதலிடம் பெற்றிருப்பார். பின்னூட்டமே இப்படி என்றால் இடுகைகள் பற்றிக் கேட்கவும் வேண்டுமோ. கிட்டத்தட்ட 1500 இடுகைகளும், 7 லட்சம் பார்வைகளும் கடந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது இவருடைய மணிராஜ் வலைப்பூ. இதில் என்ன சிறப்பு என்றால் இவர் இதில் பதிந்திருப்பது அனைத்தும் கோயில்களும் ஆன்மீகமும் பற்றியே. தமிழ் இந்துவில் போனவாரம் இவரது 4 கட்டுரைகள் வந்துள்ளன. இது போல லேடீஸ் ஸ்பெஷல் போக இன்னும் பல பத்ரிக்கைகளிலும் இவரது பங்களிப்பைப் பார்க்கலாம். மிகச் சிறப்பான இடுகைகளுடன் அது சம்பந்தப்பட்ட  படங்களும் அதிகம்  இடம் பெற்றிருக்கும் .வலைச்சரத்திலோ வேறு எங்குமோ நம்முடைய பதிவு அல்லது அதற்கான இணைப்பைப் பார்த்தால் உடனே வந்து இவரும் திண்டுக்கல் தனபாலன் சகோவும் தெரிவிப்பார்கள். நம்மைப் பற்றி அக்கறை கொண்டவர்களைப் பார்த்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்தானே. . 

மிகப் பெரும் வலைப்பதிவரான தாங்கள் என் வளர்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறீர்கள். அதற்கு நன்றி .

யாவரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்பதற்கிணங்க செயல்படும் இவரிடம் இவருக்கு ஈடுபாடு உள்ள ஆன்மீகம் பற்றி ஒரு கேள்வி கேட்டேன் .


////  எத்தனையோ கோயில்களுக்குப்போயிருப்போம். அத்தனையும் இப்படி ஞாபகம் வைத்து எப்படி எழுத முடிகிறது.உங்களை ஆன்மீகத்தின் பக்கம் இழுத்தது எது.உங்களுக்கு மிகப் பிடித்த ஆன்மீகத் தலம் எது . ?///


இராஜேஸ்வரி ஜெகமணி :-

நலம் நலமே மலர்க. மிகப் பெரும் வலைப்பதிவரான தேன்போல் இனிமையான தாங்கள் என் வளர்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறீர்கள். அதற்கு நன்றி .

சமுத்திரம் பெரிதா தேன்துளி பெரிதா என்றால் 
தேன் துளியே வெற்றிபெறும்..!


வெள்ளி, 7 நவம்பர், 2014

தேனே உனை நான் தேடியலைந்தேனே..231. ஓ வசந்த ராஜா. – தேன் சுமந்த ரோஜா

232. நான் மாந்தோப்பில் – அவன் பூவிருக்கும் தேனெடுக்க

233. தேனே தென்பாண்டி மீனே – இசைத்தேனே இசைத்தேனே

234. வானிலே தேனிலா ஆடுதே

235. பாடு நிலாவே தேன் கவிதை – பூ மீது தேன் தூவும் காதல் வரம்

236. கண்மணி நீ வரக் காத்திருந்தேன். – தேன் நான்

237. தட்டிப் பார்த்தேன். – தேனாக நெனைச்சுத்தான்

238. தேன் சிந்துதே வானம். –

239. பூவே இளைய பூவே – தேங்கும் தேனே. இனிக்கும் தேனே.

240. காத்திருந்து காத்திருந்து – தேன் வடிச்ச பாத்திரமே.

241. என்னோடு பாட்டுப் பாடுங்கள் – தேன் நிலா நாளிலே தாரகைப் பூ

242. மானே தேனே கட்டிப்புடி – பூவோடு தேன் பாயுது. தேனோடு தேன் சேருது.

243. வான் நிலா நிலா அல்ல – தேன் நிலா எனும் நிலா

244. பார்த்தேன் சிரித்தேன் – உனைத்தேன் என நான் நினைத்தேன்

245. வாலிபமே வா வா – தேனிசையே தா தா

வியாழன், 6 நவம்பர், 2014

ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

நகரத்தார் சொல் வழக்கு:- 1.
****************************
45. உறவு முறைச் சொற்கள்.

நிறைய வழக்குச் சொற்கள் வழக்கொழிந்து போய் விட்டன.. மிச்சமிருக்கும் இவற்றை பதிவு செய்யவே இது..

உறவுமுறைச் சொற்கள் முதலில்  கொடுத்துள்ளேன்.


1. அப்பச்சி - தந்தையை அழைக்கும் சொல்

2. ஆத்தா -  தாயை அழைக்கும் சொல்.

3, ஐயா  - அப்பாவை பெற்ற தாத்தா அல்லது அம்மாவைப் பெற்ற தாத்தா.

4. அப்பத்தா - அப்பாவை பெற்ற அம்மா..(பாட்டி)

5. ஆயா-   அம்மாவைப் பெற்ற அம்மா..( பாட்டி)

படுக்கைப் பூக்களும் பட்டாம் பூச்சிகளும்.

இரவு உடையில் வண்ணத்துப் பூச்சிகள்

குழல் சுழல கதை கேட்டுக்

கண் விரித்தபடி காத்திருக்கும்

படுக்கைப் பூக்களில்.

செவ்வாய், 4 நவம்பர், 2014

தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

81. மனோபலமே நம்மை முன்னேற்றுகிறது.

******************************************

82. ஃபேஸ்புக்குக்கு வெளியேயும் ஒரு உலகம் இருக்கு.. ஆனா கொஞ்சம் மழை., கொஞ்சம் குப்பை., கொஞ்சம் கச்சடா.. இருந்தும் சோ ஸ்வீட்ட்ட்ட்..

*****************************************

83. பக்கத்து வீட்டில் விடாமல் ஃப்ளூட்டை தாறுமாறாக ஊதும் பையன்., கைக்குழந்தை சாப்பிட இருக்கும் 20 வண்டிகளின் ஹாரனையும் அமுக்கிக்கொண்டே இருக்கும் அவன் பாட்டி., பால் குக்கரை வைத்துவிட்டு அது விசில் அடிக்கும் சமயம் வெளியூர் போனதுபோல காணாமல் போய்விட்ட கீழ்வீட்டம்மா இவர்களை எல்லாம் என்ன செய்யலாம்..

*****************************************

84.  சபலங்கள் சருகாகிக் கொண்டிருக்க  சத்யம் ஒளிர்ந்து நிற்கின்றது.

**************************************************

85. வீடுபேறு ஏகும்வரை கடனாளியாக்குகிறது வீடு.****************************************************

86. மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டத் தெரிந்தவர்கள் எங்கேயும் ஜீவிக்கலாம்.***************************************************

திங்கள், 3 நவம்பர், 2014

சாதனை அரசிகள் என்னுரை :-

வாசகர்களுக்கு ,

வணக்கம்.

வாழ்வது ஒருமுறை. எதையாவது சாதித்துச் செல்லவேண்டும் என விரும்பினேன். இறைவன் அருளால் லேடீஸ் ஸ்பெஷல் கிரிஜா மேடத்தை சந்தித்தேன். அவரைப் போன்றே சாதனைப் பெண்களும் கிடைத்தார்கள் . இந்த சாதனை அரசிகளின் பின்புலத்தில் குடும்பத்தாரும், நண்பர்களும் உறவினர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.. என்னைத் தன்னம்பிக்கைப் பெண்ணாக வெளிவரச் செய்த கிரிஜாம்மாவுக்கும் , மனம் உணர்ந்து பணம் தந்து புத்தகம் வெளியிடச் சொன்ன அன்புக் கணவருக்கும்., இந்தப் புத்தகத்தை தங்கள் பெயரில் வெளியிட முன்வந்திருக்கும் என் தாய்தந்தையருக்கும், என் அன்புக் குழந்தைகளுக்கும், அணிந்துரை தந்த என் அன்புத் தமிழன்னை சுசீலாம்மா அவர்களுக்கும்,  நட்புரை தந்த  அன்புத் தோழி  ஃபாத்திமா பாபு அவர்களுக்கும்,  புத்தக அட்டைப்படம் வரைந்து தந்த ஜீவாநந்தன் அவர்களுக்கும், புத்தக வடிவமைப்பில் உதவிய செல்வகுமார் அவர்களுக்கும், புத்தகம் வெளியிடும் கரிசல் மீடியா மகேந்திரன் அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.

ஞாயிறு, 2 நவம்பர், 2014

மலேஷியாவில் உலகத் தமிழ் கவிதைப் பெருவிழா. ( 2015)

மலேஷியாவில் உலகத் தமிழ்க் கவிதைப் பெருவிழா நிகழ்ச்சி வரும் 2015ஆம் ஆண்டு ஜனவரி 24, 25 ஆகிய தேதிகளில் ஈப்போ நகரில் நடைபெறுகிறது. 

சனி, 1 நவம்பர், 2014

சாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுகுக் கொடியுடன் அருண் கருப்பையா. !முகநூலில் நட்பாகி அம்மா என்று அழைப்பவர் அருண் கருப்பையா. இவர் ஆஃப்கானிஸ்தான் மஸாரில் செஃபாக இருக்கிறார். குழந்தை போன்று நல்ல சிரித்த முகம். மனித நேயப் பகிர்வுகள்தான் அவர் பக்கம் முழுதும் இருக்கும். அதேபோல மருத்துவம், தாய் மீது அன்பும் பெற்றோரிடம் பாசம், குழந்தைத் தொழிலாளி எதிர்ப்பு, வேலைக்காரர்களை அடிமை போல் வேலை வாங்குவதற்கு எதிர்ப்பு உள்ள ஸ்டேடஸ்களைப் பகிர்ந்து இருப்பார். 

ஆஃப்கானிஸ்தானா.... அங்கே இருப்பது ரிஸ்க் இல்லையா .. அதோடு எப்படி வேலை செய்ய முடிகிறது என்று இன்பாக்ஸில் கேட்டிருந்தேன். பதில்களைப் படித்ததும் ஆடிப் போய்விட்டேன். வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிந்து பணம் சம்பாதிப்பது ஒன்றும் எளிதான காரியம் அல்லவே. ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல அருண் சொல்லிச் சென்றிருந்தாலும் பட்ட சிரமங்கள், தொடர் முயற்சி ஆகியன மிகவும் யோசிக்க வைத்தன. அவரிடம் கேட்ட கேள்வி இதுதான்  

/// ஆஃப்கானிஸ்தானில் செஃபாக இருக்கும் உங்கள் அனுபவங்கள், மற்றும் கேக் செய்ததில் ஏற்பட்ட வித்யாச அனுபவங்களை என்னுடைய வலைத்தளம் “சும்மா” வாசகர்களுக்காகப் பகிர்ந்துகொள்ளுங்கள். ///

வணக்கம் அம்மா என் அனுபவங்கள் ரொம்பக் கஷ்டமானது. இருந்தாலும் ரிஸ்க் எடுத்துத்தான் செய்கிறேன். என்னுடைய முழுப் பெயர் கே அருண்ராஜ். சொந்த ஊர் திருச்சியிலிருந்து 27 கிமீ தூரத்தில் உள்ள புலிவலம். நான் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் அங்கேதான். 

Related Posts Plugin for WordPress, Blogger...